கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு
தேவிஸ்ரீதேவி தியேட்டரில் ‘கள்ளப்பருந்து’ என்ற பெயரில்
‘நல்லபடம்’ ஒன்று
போட்டார்கள்.
தியேட்டரை விட்டு, மக்களை
சந்துபொந்துகளில் ஓடவைத்த டைரக்டர் சாமியின் ‘சிந்து சமவெளி’க்கு
அப்புறம் வெளியாகியுள்ள கலாச்சாரக் கருத்து நிறைந்த படம் என்று இதைச்சொல்லலாம்.
மனைவியிடமும், இரண்டு
மகள்களிடமும் கறாராக இருக்கும் ஒரு கோடீஸ்வரத் தந்தை. அந்த
வீட்டுக்குள் அப்பாவி டிரைவராக நுழைந்து, முதலில் தங்கை,அடுத்து
அக்கா வை அடைந்து ,கடைசியாக
மம்மியையும் பிராக்கெட் போடுகிறான் ஒரு காமக் கயவன்.
எல்லாம் சுபமாக முடிந்தபிறகு, விசயம்
தெரிந்துகொள்ளும் கோடீஸ்வரர், தனது பிறந்த நாளன்று பால் பாயாசத்தை, பால்
பாய்சனாக்கி, மகள்களை,மனைவியை, டிரைவரை, அவனை
வேலைக்கு அனுப்பியவரை வரை கொன்று, அதை ஒட்டி ஏற்படும் விபத்தில் தானும்
செத்துப்போகிறார்.
நடிகர்கள். தொழில்
நுட்பம் எல்லாமே நாலாந்தரமாக இருந்தபோதிலும், இடைவேளையோடு
எழுந்துபோகாமல் தேன்குடித்த நரிபோலவே நம் நண்பர்கள் மீதிப்படத்தையும்
கண்டுகளித்தது வியப்பான விசயம்.
பல பலான காட்சிகள், இரட்டை
அர்த்த வசனங்கள் கொண்ட இப்படத்தில், கலைப்புலி ஜி.சேகரன்
பாடல் எழுதி , இசையமைத்து, நடித்து
என்று ஏகப்பட்ட இம்சைகளைக் கொடுக்கிறார்.
அவரை க்ளோஸப்பில் பார்க்க
நேரும்போதெல்லாம் ஏதோ புதுவிதமான கொலைமுயற்சியோ என்று அஞ்சத்தோன்றுகிறது.
விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அடுத்த
கூட்டத்தில், சேகரனுக்கு
சேதாரம் ஏற்படுத்தும் வகையில் ஏதாவது கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றும்படி, படம்
பார்த்து மூன்று நாட்களான பிறகும் காயாத, கண்ணீருடன்
கேட்டுக்கொள்கிறேன்.
பாரதி, இளைய
ராஜா கூட்டணியின் ‘என்
உயிர்த்தோழன்’[ 1990] வெளியான
சமயத்தில்,
ராஜாவின் குரலிலேயே
சதா உச்சரித்துக்கொண்டு திரிந்த பாடல் ‘மச்சி மன்னாரு, மன்சுக்குள்ள
பேஜாரு’. அப்போதே
வந்திருக்கவேண்டிய ‘மன்னாரு’ சுமார் 22 வருடங்கள்
தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார்.
’அழகர்சாமியின்
குதிரை’ படத்திற்காக
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டி தனி ஹீரோவாக சவாரி
செய்து வந்திருக்கும் படம்.
போஸ்டர் டிசைன்களை பார்க்கிறபோது, இந்த
மூஞ்சிக்கு இவ்வளவு லட்சணமான பொண்ணு ஜோடியா? கதை வெளங்குன
மாதிரிதான் என்ற எண்ணத்தில்தான் தியேட்டருக்குள் நுழைவோம்.
ஆனால் கதாநாயகன்,அப்புக்குட்டி, கதாநாயகி
ஸ்வாதி. ஆனால்
இவர்கள் இருவரும் காதலர்கள் இல்லை என்று ஒரு புதுவிதமான சுவாரசிய முடிச்சுடன் கதையைத்துவங்குகிறார்
புதுமுக இயக்குனர் ஜெய்சங்கர்.
ஸ்வாதியை, ரெஜிஸ்தர்
கல்யாணம் செய்யப்போகும் தனது நண்பனுக்கு சாட்சிக் கையெழுத்து போடப்போகிறார்
மூணாங்கிளாஸே படித்த அப்புக்குட்டி. கல்யாண ஜோடி பஸ்
பிடித்து கொடைக்கானலுக்கு தப்ப எத்தனிக்கும்போது, வில்லன் கோஷ்டி வந்துவிட, ஸ்வாதியையும்,அப்புக்குட்டியையும்
மட்டும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு ‘தப்பிச்சிப்போங்க.அடுத்த
பஸ்ல வந்துடுறேன்’ என்கிற
மாப்பிள்ளை வில்லன்களிடம் மாட்டிக்கொள்கிறார்.
இதையடுத்து, ஒரு
ரூம் எடுக்கிற சிரமத்தில் தொடங்கி, ஒரு பேச்சுக்காக புருஷன் -பொண்டாட்டி
என்று பொய்சொல்ல ஆரம்பிக்கும் அப்புக்குட்டி,ஸ்வாதி ஜோடி, தொடர்ந்து
அவ்வாறே பல நாட்களை கடக்கவேண்டிய சூழலில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் ‘மன்னாரு’
சமீபத்தில் வெளிவந்த ‘முகமூடி’ போன்ற
பெரும்பட்ஜெட் குப்பைகளோடு ஒப்பிட்டால், இவரு மச்சி மன்னாரு
என்றே சொல்லலாம்.
மற்றபடி, டெக்னிக்கலாக,’மன்னாரு’ ஒரு
இருபது வருடங்கள் பின் தங்கி இருப்பதை மறுக்கமுடியாது.
பஸ்ஸில் அப்புக்குட்டியை ஏற்றிவிட்ட
ஸ்வாதியின் காதலர், தானே
ஓடிப்போய் ஏறி இருந்தால், முதல்
ரீலிலேயே படத்தை முடித்து இன்னும் நல்லபெயர் வாங்கியிருக்கலாம்.
கிராமத்து தலைவராக வரும் தம்பி ராமையா
சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். தனது உதவியாளரான இயக்குனருக்கு பாடல்கள், வசனம்
எழுதி உதவி பல இடங்களில் சிந்திக்க வைக்கிறார். [என்னத்தை
சிந்திக்கவைத்தார் என்பது படம் பார்த்தால் ஒருவேளை விளங்கலாம்.]
கதையின் நாயகனாக அப்புக்குட்டி, அப்படிப்
பொருந்திப்போகிறார்.
‘ராட்டினம்’ நாயகி
ஸ்வாதி கொழுக்மொழுக்கென்று இருக்கிறார். இன்னும் கொஞ்சம்
நடிக்க வந்து, கைவசம்
அரையடி உயர ஹைகீல்ஸ்களை வைத்துக்கொண்டால் சின்னதாக ஒரு ரவுண்ட் வரும் வாய்ப்புண்டு.
கதாநாயக லட்சணங்கள் எதுவும் இல்லாத அப்புக்குட்டியை வைத்து, இயக்குனரு
மினிமம் பட்ஜெட்டில் மினிமம் சுவாரசியத்தோடுதான் கதையை சொன்னாரு. ஆனா
புதுசா என்ன பண்ணாரு என்று யோசிக்க ஆரம்பித்தால் அப்புறம் பேஜாருதான்.
விமரிசனம் அருமை...மன்னாரு.பேஜாரு இல்லை தானே...
ReplyDeleteஎதிர்பார்ப்பு இல்லாமல் போனால் கொஞ்சம் ரசிக்கலாம்தான்.
ReplyDeleteநல்லா வந்தா சரிதான்!!
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)