பொதுவாகவே தமிழ்சினிமா இசைக்கு இது போதாத காலம் போலிருக்கிறது.புரடியூசர் தொடங்கி புரடக்ஷன் பாய் வரைக்கும் பாட்டெழுதுகிறார்கள்,அடுத்து அவர்களே பாடுகிறார்கள்.
சற்று முன்னர்தான் புதிய ‘மலையூர் மம்பட்டியான்’பாடல்கள் கேட்டேன்.சிம்பு பாடியிருக்காக என்று ஏற்கனவே தெரியும்.பிரஷாந்தின் அப்பா தியாகராஜனும் பாடியிருக்காக என்று பாடல் கேட்டபிறகு தான் தெரிந்து நொந்தேன்.அதுவும் எந்தப்பாட்டு? ராஜாவின் குரலிலெ கம்பீரமாக தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஆண்டதே,’காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே’
ஆடியோ ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பு தான் ராஜாவுக்கு ‘மம்பட்டியான்’சி டி ஐ தியாகராஜன் கொடுத்தனுப்பினாராம். தான் பாடிய பாடலை தியாகராஜன் பாடியதைக்கூட பெருந்தன்மையாக எடுத்துக்கொண்ட ராஜா,சிம்பு வின் ரீமிக்ஸைக்கேட்டு பேரதிர்ச்சி அடைந்தாராம். இவ்வளவு பாட்டை ரி-மிக்ஸ் பண்றதுன்னா நான் என்னமோ நினைச்சிருந்தேன்.மிக்ஸியில போட்டு அரைச்சி எடுப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது என்று கமெண்ட் அடித்தாராம்.
வெறுமனே பாட்டைக்கேட்ட நமக்கே இவ்வளவு வெறுப்பு வருதுன்னா ...பாட்டை போட்டவருக்கு எப்பிடி இருக்கும்?
அடுத்து ராஜாவும் எஸ்.ஜானகி யும் தங்கள் குரலால் காதலில் நனைத்தெடுத்திருந்த ‘சின்னப்பொண்ணு சேல, செம்பகப்பூ போல’ கொஞ்சம் லைட்டாக ரி-மிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள்.
இதற்கு ‘பதிலடி’ கொடுக்கும் விதமாக, அடுத்த ஆறு மாதங்களுக்கு தியாகராஜனை எங்கு பார்த்தாலும் வணக்கம் வைப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
No comments:
Post a Comment