Monday, November 28, 2011

சூர்யாவுக்கும், முருகதாஸுக்கும் ஏன் இந்த அல்ப புத்தி?

விளம்பரத்திணிப்பு என்பது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பேரைப் பிடித்து ஆட்டும் வியாதி.பேப்பர் விளம்பரங்களிலும், போஸ்டர்களிலும் தாங்கள் நினைக்கிற பொய்யை கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அவிழ்த்து விடுவதில் இவர்களுக்கு இணை யாரும் இல்லை
.ஒரு தியேட்டரிலும் படம் ஓடாத நிலையில் 100 வது நாள் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள்
.
மக்கள் விவரம் தெரிந்து மனசுக்குள் கைகொட்டி சிரிக்க  ஆரம்பித்த பிறகும் இவர்களது காமெடி நிற்கிற பாடாகத்தெரியவில்லை.
.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ஏ.ஆர். முருகதாஸும் ,நடிகர் சூர்யாவும் அடிக்கும் விளம்பரக்கூத்தை தாங்க முடியவில்லை.தமிழனின் வீரத்தை புல்லரிக்கும் வகையில் எடுத்திருந்த 7 ம் அறிவு எதோ அதன் அறிவுக்கு எட்டிய வகையில் ஓடிக்கொண்டிருக்கிறது.படம் பெரிய வெற்றியுமில்லை,தோல்வியுமில்லை.

இதை பெரிய வெற்றிப்படமாக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் சூர்யாவும்,முருகதாஸும் கடந்த  80 வருட தமிழ் சினிமா வரலாற்றை ஏலம் போட ஆரம்பித்துவிட்டனர்.
80 வருட தமிழ் சினிமா கலெக்‌ஷன் ரிப்போர்ட்டும் இவர்கள் கையில் எப்போது வந்தது என்று தெரியவில்லை. ‘சிவாஜி,எந்திரன் அதுக்கு அப்புறம் 7ம் அறீவு’தானாம்.

 படத்துக்கு 7ம் அறிவு’ என்று வைத்து விட்டு ஒரு அறிவு கூட இல்லாமல் எடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் தமிழ் சினிமா வரலாற்றை உங்கள் சுயலாபத்துக்காக திருத்தி எழுத ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
ஹரிதாஸ் துவங்கி 16 வயதினிலே வழியாக தூறல் நின்னு போச்சி,ஒரு தலைராகம்,கரகாட்டக்காரன்,என் ராசாவின் மனசிலே என்று நூற்றுக்கணக்கான வசூல் சாதனைப்படங்கள் இருக்கின்றன. இந்தப்படங்கள் வசூலித்ததில் கால்வாசி கூட 7ம் வசூல் செய்யவில்லை என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். அப்படியிருக்க ஏன் வரலாற்றை வம்பிழுக்கிறீர்கள்.
இவ்வளவு ஏன்  இதே உங்கள் கூட்டணியில் வந்த ‘கஜினி’ அளவுக்கு கூட இது ஹிட் இல்லை என்று உங்களுக்கு தெரியாதா?

இனி வரும் போஸ்டர் விளம்பரங்களில் இந்த வரலாற்று மோசடிகளை தொடர்ந்தீர்களெனில் ஒருவேளை மக்கள் உங்களை மறக்கலாம், மன்னிக்கலாம்.

 ஆனால் வரலாறு ஒருபோதும் உங்களை மன்னிக்காது.

No comments:

Post a Comment