Saturday, May 12, 2012

விமர்சனம் -’கலகலப்பு @ மசாலா கஃபே ‘ சென்னை மாநகராட்சி குப்பே

பாஸ் என்ன தேடுறீங்கன்னு சொல்லிட்டு தேடுனா நாங்களும் ஹெல்ப் பண்ணுவோம்



இந்தப்படத்திற்கு பிரபல ப்ளாக்கர் [அதுக்கு மேல ஏதாவது வார்த்தை இருக்கா?] கேபிள்சங்கர் வசனம் எழுதிக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் எந்த விளம்பரங்களிலும் அவரது பெயரைக்காணவில்லை. இதுகுறித்து பதிவு ஏதாவது எழுதியிருப்பார் என்று அவரது ப்ளாக்குக்கு போனால், மீடியம் ஸ்ட்ராங்கில் ஒரு மசாலா கபே ‘ விளம்பரத்தை மட்டும்தான் பார்க்க முடிந்தது.

பெயரை இருட்டடிப்பு செய்தவர்கள் சம்பள செட்டில்மெண்டை ஒழுங்காக செய்திருப்பார்கள் போலும்.அதுதான் அண்ணன் சைலண்டாக ஒதுங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

கடந்த வாரம் எழுத்தாளர் செயமோஹன் என்பவர் ‘வழக்கு எண் 18/9’ படம் பார்க்க கிளம்பும்போது,  போனாப்போகட்டுமே என்று இணையதளங்களில் எழுதப்படும் சினிமா விமர்சனங்களை சும்மா மோர்ந்து பாக்கலாமே என்று நினைத்தாராம். அவருக்கு கிட்டியதெல்லம் ஒன்லி பேட் ஸ்மெல்தானாம். இணைய எழுத்தாளர்களில்
 பெரும்பாலானோர்  அவரையும் விட மட்டமாகவே எழுதுகிறார்கள் என்று விசனப்பட்டுக்கொண்டார்.

பதிவர்களில் ஓரிருவர் செமோவை விட்டுக்கிடாவுவர் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். அதிலும் உச்சக்கட்ட கொடுமையாக ‘அய் செயமோகன்’ என்னை முட்டாள்னு திட்டிட்டார்’ என்று ப்ளாக்கர் கழுத்தில் போர்டு மாட்டிக்கொண்டு அலைந்ததை என்னவென்று சொல்வதய்யா ?

அவங்க பஞ்சாயத்து நமக்கு எதுக்கு,...சரி, வாங்க சுந்தர்.சீ.யோட மசாலா கபே’க்கு போவோம்.
மயில் மேல பொண்ணு  ஒண்ணு

டம் ஓடும் நேரம் : 149 நிமிடங்கள் மற்றும் 26 விநாடிகள்
தயாரிப்பு- குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ் .
 ப டத்தின் பட்ஜெட் சுமார் 3கோடி.
விலைக்கு வாங்கி வெளியிடும் நிறுவனம்: தொடர்ந்து தமிழ்சினிமாவில் மோசம் போகும் யூ.டி.வி. மோஷன் பிக்‌ஷர்ஸ்.
வாங்கிய விலை : 5.50 கோடி.
தயாரிப்பாளர் குஷ்ஷுக்கு கிடைத்த ஜாக்கெட் மணி 2.50 கோடி.
வசூலாகப்போகும் தொகை : இந்த விமர்சனம் படித்து முடிக்கும்போது, உங்களுக்கே பிடிபட்டுவிடும்.

த்திரிகை செய்திகளின் மூலம் இந்த ‘மசாலா கஃபேஇயக்குனர் சுந்தர்.சி.யின் 25 வது படம் என்று அறியப்படுகிறது.

அதில் நல்ல படம்-0 [அன்பே சிவம்கமல் லேபிளில் வந்த  சு.சி.யின் படம்.எனவே அது கணக்கில் வராது]

ஓடிய படங்கள் மூன்று எனும்போது எப்படி இவரால் 26 படங்களை இயக்க முடிந்த்து என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இயக்குனர் சுந்தர்.சி.யின் மனைவி குஷ்புவாகப்பட்டவர் இடையில் சிலகாலம் சின்னத்திரையிலும், அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, வீட்டில் மிகவும் பொறுப்புடன் சுந்தர்.சி குழந்தைகளை கவனித்துக்கொண்ட செய்தியை நான் பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்.

அவ்வாறான தருணங்களில் குழந்தைகளை கவனித்துக்கொண்ட நேரம் போக மீதிநேரங்களில், உலக சினிமா வேண்டாம்,இந்திய சினிமாகூட வேண்டாம். அட்லீஸ்ட் தமிழ்ப்பட உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக சில தமிழ்ப்படங்களை பார்த்திருக்கலாம் சுந்தர்.சி.

ஒரு 20 வருடங்களுக்கும் மேலாக கோமாவில் இருந்து வந்தவர் நேராக ஷூட்டிங் கிளம்பியது போல் பட்த்தின் எல்லா அம்சங்களிலும் ஒரு மொன்னைத்தனம் நிரம்பி வழிகிறது.

சரி, படத்தின் கதைகளை பார்ப்போம். அது என்ன ‘கதைகள் என்று குழம்பாதீர்கள்.டிஸ்கசனில் நம்ம கேபிள்சங்கர் உடபட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். சொல்லி மாளமுடியாத அளவுக்கு படம் முழுக்க கதைகளும் சீன்களும் நிரம்பி வழிகின்றன.

பாட்டன்,பூட்டன் நடத்திவந்த மசாலா கபேவை, வம்ச பெருமையை காக்கும்பொருட்டு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விமல் பிடிவாதமாக நடத்துகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி மிர்ச்சி சிவா, சிவனே என்று கடையில் வேலை பார்த்த ஓவியவை லவ்வுகிறார். [இந்தப்பொண்ணை ஏதாவது ஒரு பட்டறைக்கு இழுத்துக்கினு போய் சீக்கிரமே பட்டி பாத்து டிங்கிரிங் பண்ணுங்கப்பா...தாங்க முடியலைங்ணா]

இதே சமயம் கடையை இன்ஸ்பெக்‌ஷன் செய்ய வந்த அஞ்சலியை விமல் லவ் பண்ணுகிறார். கடையை பிக்-அப் பண்ணுவதைவிட அஞ்சலியை பிக்-அப் பண்ணுவதில் இவர் ஆர்வம் அதிகம் போகிறது. அவரது ஆர்வத்தை புரிந்துகொண்டோ என்னவோ அடுத்து அஞ்சலி  அரசாங்க வேலைக்கு லீவு போட்டுவிட்டு, மசாலா கபேயில் சப்ஜாடாக குடியேறிவிடுகிறார்.

இன்னொரு ஏரியாவில் இளவரசு,  கடையை நடத்துவதற்காக விமலுக்கு 2 லட்சம் கடன் கொடுத்துவிட்டு அதை வசூலிக்க, தசாவதாரம் கமல் நெனப்பில், பதினோரு ’கெட்’ட  அப்புகளில் அலைகிறார்.

இதற்கும் அடுத்த ஒரு ஏரியாவில், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் பிஞ்சு மகன் சுப்பு, ஒரு கத்தியையும் , வைரங்கள் அடங்கிய செல்போனையும் தனது உறவினர் ஒருவர் கையில் கொடுத்துவிட்டு,அதை தொலைத்துவிட்டு அலைகிறார்.

இதற்கெல்லாம் அடுத்த ஏரியாவில், பக்கத்து ஊரில் அஞ்சலியின் தாய்மாமன் சந்தானம் கட்டுனா  அஞ்சலியைத்தான் கட்டுவேன்.இல்லைன்னா கட்டப்போறவன வெட்டுவேன் என்று ஒத்தைக்காலில் நிற்கிறார்.

எனக்கு மட்டும் ஏன் தான் மொக்கை ஃபிகர்ங்களா மாட்டுதுன்னு தெரியலை


இவைகளுக்கு மத்தியில், சந்தில் சிந்து பாட நினைக்கும் போலீஸ்காரர் ஒருவர், விமலின் மசாலா கபே கடையை ரியல் எஸ்டேட் பார்ட்டிக்கு வாங்கித்தருவதாக ப்ராமிஸ் பண்ணி, விமலின் தம்பி சிவாவை சீட்டாட வைத்து தோற்கடித்து பாண்டு பேப்பரோடு பாண்டி ஆடுகிறார்.

படத்தில் மீதியுள்ள கதைகளை பேச ஆரம்பித்தால், என் போன் நம்பரையும் விலாசத்தையும் விசாரிக்க ஆரம்பித்து விடுவீர்கள் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாதவனா நான் ?

எனவே கதைகளை முடிக்கிறேன்.

கதை கோடைகாலத்தில் நடக்கிறதோ என்னவோ, அஞ்சலியும்,ஓவியாவும் பட்த்தின் பல காட்சிகளில் குளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.[ நீங்க குளிக்கிறப்ப எங்க மனசு ஏன் அழுக்காகுது ?- கவிதை ]

இந்த குப்பை கதைக்கு இது போதாதா என்பதுபோலவே, அனைத்து தொழில் நுட்பங்களும் அரதப்பழசாய், படம் பார்க்க வந்தவர்களை அனுதாபத்துக்குரியவர்களாக்குகின்றன.

குறிப்பாய் இசையும் பாடல்களும்.ஜவ்வுமிட்டாய் சாப்புட்டுக்கிட்டே லவ்வு பண்ணுவமா? லவ்வுமிட்டாய் சாப்புட்டுக்கிட்டே ஜவ்வு பண்ணுவமா.. ?அட போங்கப்பா நீங்களும் உங்க பாடல் வரிகளும்...

படத்தின் ஒரே ஆறுதல் அம்சம் இடைவேளைக்கு அப்புறம் வரும் சந்தானத்தின் சில காமெடிகள். அதுவும் படம் முடியும் தறுவாயில்,அவரது அள்ளக்கைகள் அவரது ‘மேட்டரில்நெருப்பை வைத்து விளையாடும்போது நமக்கு சந்தானத்தின் மீதும் கூட வெறுப்பு வந்துவிடுகிறது.[வடிவேலு ‘அதைச்சுத்தி பந்தல் போட்டதையே பாத்து ரசிச்சவங்கடா நாங்க]

இதை தனது 25 படம் என்று போட்டு பெருமைப்பட்டுக்கொள்ளும் சுந்தர்.சி., தனது அடுத்த படத்தை 50- வது படம் என்று தைரியமாக போட்டுக்கொள்ளலாம் இதில் 25க்கும் மேற்பட்ட கதைகள் இருப்பதால்.

மசாலா கஃபே, சென்னை மாநகராட்சி வண்டியிலே, உடனே கொட்டவேண்டிய குப்பே.

[ விமர்சனம், மசாலா கபே. கலகலப்பு, சுந்தர்.சி. மிர்ச்சி சிவா, பசங்க விமல்,சந்தானம்,அஞ்சலி, ஓவியா, masala café, anjali, vimal,sundar.c, mirchi siva ]

31 comments:

  1. செமையா வாரி இருக்கீங்க...நடுவுல நம்ம பதிவர்களையும் உள்ளே இழுத்துடீங்களே...இந்த படத்த ப்ரிவ்யூ ல பார்க்கலையா நீங்க..முன்னமே எச்சரித்து இருக்கலாமே..நிறைய பேரு தப்பிச்சு இருப்பாங்களே..

    ReplyDelete
    Replies
    1. எச்சரிக்கை குடுக்கச்சொல்றதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியலை.எல்லாப்படத்தையுமே பாருங்கண்ணே...

      Delete
  2. அண்ணே ஏன் இம்புட்டு கொலைவெறி . .

    கலகலப்பை கைமா பண்ணிட்டியே . . அண்ணே

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் சாதா வெறிதான்.சந்தானம் காமெடி பத்தி நல்லாதானே எழுதியிருக்கேன்.?

      Delete
  3. படத்த விட உங்க விமர்சனம் செம காமெடிங்கண்ணா...எனக்கு ஒரு டவுட்டு..சப்பையா இருந்த ஓவியாவின் "இமாலய" வளர்ச்சியின் ரகசியம் என்னங்ண்ணா ?

    ReplyDelete
    Replies
    1. ஓவியாவோட காஸ்ட்யூமர்கிட்ட கேட்டு சொல்றேன். பொறுமை பொறுமை

      Delete
    2. இதை நான் ஆட்சேபுக்குறேன். களவாணி படத்தை கூர்ந்து கவனிக்கவும்

      Delete
  4. தல, கேபிள் அதுல வெறும் வசன உதவி தான்...பெயர் கடைசியா வரும்..போஸ்டர் ல வராது..கூடிய சீக்கிரம் வரணும்னு நம்ம..இல்ல அவர் தான் வேண்டிக்கணும்...:) எனக்கு என்ன கடுப்புனா..படத்துல சந்தானத்துக்கு தான் விளம்பரம்...பாவம் விமல் & சிவா...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னது சரிதான்.அவரும் ஒரு கடிதம் எழுதிட்டார்.கூடிய சீகிரமே அவர் ஒரு படம் இயக்கப்போறதா நானும் கேள்விப்பட்டேன்.

      Delete
  5. I feel the same. good review

    ReplyDelete
  6. தலைவரே.. இப்படத்தில் நான் வசன உதவி எனது பெயர் டைட்டிலில் வருகிறது. செட்டில்மெண்ட் எல்லாம் ப்ரச்சனையில்லை.. எவ்ரிதிங் நீட் அண்ட் க்ளீன். :))

    ReplyDelete
    Replies
    1. ஸாரி தலைவரே நான் தான் கவனிக்காம விட்டுட்டேன்.எனிவே பழைய பாக்யராஜ் மாதிரி வளர வாழ்த்துக்கள்

      Delete
  7. // உலக சினிமா வேண்டாம்,இந்திய சினிமாகூட வேண்டாம். அட்லீஸ்ட் தமிழ்ப்பட உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக சில தமிழ்ப்படங்களை பார்த்திருக்கலாம் சுந்தர்.சி.//

    என்னண்ணே இப்படி சொல்லிட்டிங்க "SOUL KITCHEN" என்கிற ஜெர்மானிய உலகப்படத்தில இருந்து அண்ணன் ஒரு பழைய ஹோட்டல் நடத்துவான் ஜெயிலில் இருந்து பரோலில் வர்ர தம்பி ரியல் எஸ்டேட் மாபியாக்கிட்டே வித்துடுவான் ,பின்னர் எப்படி மீட்கிறாங்க என்ற ஒரு டிராக்கையும்,"DELHI BELLY" படத்தில வைரத்தை தப்பா கைமாத்தி ஹோட்டலில் சண்டைப்போட்டு முடிக்கிற டிராக்கையும், கண்டேன் காதலைப்படத்தில சந்தானம் தமன்னாவுக்கு முறைமாமனா கட்டினா அவளைக்கட்டுவேன்னு அலையுற டிராக்கும் எடுத்து கலகலப்பா கொடுத்து இருக்கார் சுந்தரு அவரைப்போய் எந்த படமும் பார்க்காம படம் எடுத்துட்டார்னு அபாண்டமா குறை சொல்லுறிங்களே அடுக்குமா இது. ஒலக படம் முதல் உள்ளூர் படம் வரைக்கும் டிவிடி வச்சிருக்காரு சுந்தரு.சி!

    சுந்தரு.சி ஒரு படம் எடுக்கறதுக்கு முன்ன 100 படம் பார்ப்பார்ண்ணே உழைப்பாளி அவரு ,இப்படிலாம் தப்பா சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன் ,அப்படிலாம் படம் பார்த்து ஒரு கதைய உருவி ரெடி செய்ற கஷ்டம் அவருக்கு தாண்ணே தெரியும் :-))

    ஆனால் வைரம் கை மாறிப்போற மேட்டர் பஞ்ச தந்திரம், கொலை கொலையா முந்திரிக்கா,ஓரம் போ என பலப்படத்திலும் வந்திடுச்சு ஆனால் டெல்லி பெல்லி டிராக் ரொம்ப ஒத்துப்போகுது.

    ReplyDelete
    Replies
    1. நான் மெயினா சொன்னது டெக்னிக்கல் சமாச்சாரத்திதான்.பாடாவதி மேக்கிங்.

      Delete
  8. ச்சே......
    உள்ளூர சந்தோசப்படும் “நெருங்கிய” நண்பர்கள் கூட்டம் இங்கேயா இருக்கீங்கிங்க....

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷப்படலேண்ணே சப்போர்ட் பண்றோம். நம்ம பதிவருக்கு ஒரு அநீதி நடந்தா அந்த கணமே பதிவர் இனமெ பொங்கி எழும்ங்கிறதுக்காக எழுப்பிய கேள்வி அது.?

      Delete
  9. படத்த இன்னும் நான் பாக்கல. கேபிள் மேலயும் நம்பிக்கை இருக்கு, சுந்தர் சி மேலயும் நம்பிக்கை இருக்கு. நிறைய ப்ளாக் விமர்சனங்கள் நல்லாத்தானே சொல்லியிருக்கு. சுந்தர் சி யோட காப்பி பத்தி வவ்வால் நல்லா சொல்லியிருக்கார். ஆனால் அருனாசலம் படத்த "தி மில்லியன்ஸ்" படத்துலருந்து சுட்டிருந்தார். அதுவும் படத்துல கடைசி சீனில் வரும் 20000 ரூபாயைத் திருப்பி கொடுப்பது கூட தி மில்லியன்ஸ் படத்தில் 20000 டாலர் என்று வரும். முப்பது மில்லியன் டாலரம் முப்பது கோடியாக்கி இருப்பார். ஆனாலும் சவுந்தர்யா கேரக்டரை உருவாக்கி படத்தை தமிழ்ப் படுத்தியிருப்பதில் தான் அவருடைய வெற்றி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வெற்றியா தியேட்டர்ல ஈ ஓட்டுறாங்களாம்....

      Delete
    2. அமரபாரதி,
      அருணாச்சலம் ,மில்லியன்ஸ் பட காப்பியா, நான் இத்தனை நாளா நசுருத்தீன் ஷா ஹீரோவாக நடிச்ச "maalamaal " ஹிந்திப்படத்தோட காப்பினு நினைச்சேன், 1988 இல் வந்த படம் அது, டீ.வில ஒரு தடவைப்போட்டான் அப்போ தான் ஆஹா அருணாச்சாலம் இதானானு கண்டுக்கொண்டேன் :-))

      சுந்தரு.சி ஒரு படம் கூட சொந்தமாக எடுத்ததில்லை இதுல அவர் மேல நம்பிக்கை இருக்குனு சொல்றது எந்த நம்பிக்கைனே தெரியலை!

      Delete
  10. ஓகே ஓகே கூட ஒப்பிடும்போது இந்த படம் எவ்ளவோ தேவலாம்.

    ReplyDelete
  11. பிரபல ப்ளாக்கர் [அதுக்கு மேல ஏதாவது வார்த்தை இருக்கா?] கேபிள்சங்கர்
    வன்மையாகக் கண்டிக்கிறேன்.
    முத்தண்ணே அவரு நாட் ஜஸ்ட் பிரபல ப்ளாக்கர். "பன்முக எழுத்தாளர் " மைன்ட் இட்.

    ReplyDelete
  12. பதிவர்களில் ஓரிருவர் செமோவை விட்டுக்கிடாவுவர் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்//

    அய்யோ அய்யோ ... அண்ணே இந்தியாவுல காங்கிரசும், இணையத்துல சாருவும் காறித் துப்பக் கூட வொர்த் இல்லாததுகனு சின்னப் புள்ளைக்குக் கூடத் தெரியும். இப்ப அந்த லிஸ்டுல செமோ இடம் புடிக்க ட்ரை பண்றாப்புல. அதான் யாரும் மதிக்கல.

    ReplyDelete
  13. கதை கோடைகாலத்தில் நடக்கிறதோ என்னவோ, அஞ்சலியும்,ஓவியாவும் பட்த்தின் பல காட்சிகளில் குளித்துக்கொண்டே இருக்கிறார்கள்

    சுந்தர் சி படம். வேற என்ன கதை, திரைக்கதை எதிர்பார்த்தா போனீங்க

    ReplyDelete
  14. மசாலா கஃபே, சென்னை மாநகராட்சி வண்டியிலே, உடனே கொட்டவேண்டிய குப்பே

    ஆனா இதுக்கு அவய்ங்க குடுத்த/ குடுத்துக்கிட்டு இருக்க பில்டப்பு இருக்கே. ஆயிரம் கோடி செலவு பண்ணி அவதார் ரிலீஸ் பன்னனுவன் கூட இம்பூட்டுப் பேச்சு பேசல

    ReplyDelete
  15. "கலகலப்பு" படம் நல்ல நகைச்சுவை நிரம்பிய மன மகிழ் பொழுது போக்கு படமாக இருந்தது. இப்படிப் பட்ட படங்களில் லாஜிக்கை எதிர் பார்க்கக் கூடாது. நல்ல நகைச்சுவை நிரம்பிய "கலகலப்பு" பொழுது போக்கு படத்தை குறை கூறி எழுதப்பட்டுள்ள இந்த திரைப்பட திறனாய்வை நான் பணிவுடன் மறுக்கிறேன். "கலகலப்பு" திரைப் படம் எனக்கு பிடித்திருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க பணிவுடன் மறுக்கிறதை நான் அதைவிட பணிவுடன் ஏற்கிறேன்.

      Delete
    2. அவர் பணிவோடு மறுத்ததை, நீங்கள் பணிவோடு ஏற்பதை நான் பணிவோடு வரவேற்கிறேன்.

      Delete