எச்சூஸ் மி ஓஹோ புரடக்ஷன்ஸ் ஓனருக்கு யாராவது உங்க செல் நம்பர் தர முடியுமா? |
சிநேகாவும், பிரசன்னாவும் கல்யாணப்பத்திரிக்கை கொடுத்த திங்களன்றே திடீர் ஏற்பாடாக, அதே பிரசாத் லேப் தியேட்டரில் ‘வழக்கு எண் 18/9 ‘படத்தைப் போட்டார்கள், தயவு செய்து வெள்ளிக்கிழமை வரை விமர்சனம் எழுத வேண்டாமென்ற வேண்டுகோளோடு.
லிங்குவின் ‘வேட்டை’ ப்ரிவியூவின் போது, வழக்கு படத்தின் ட்ரைலர் பார்க்க நேர்ந்ததிலிருந்தே எனக்கு இந்தப் படத்தின் மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
படம் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வு, முன்பு குரு ஷங்கரின் மசாலா பாவங்களை தனது, ‘காதல்’ படம் மூலம் சற்றே கழுவிய பாலாஜி,அடுத்து,’வழக்கு எண் 18/9’ மூலம் ‘வேட்டை’ போன்ற கண்றாவி படம் எடுத்த நண்பர் லிங்குசாமிக்கும் அதே மாதிரியிலான ஒரு புண்ணிய காரியம் ஆற்றியிருக்கிறார் என்பதுதான்.
இதைத்தயாரித்த ஒரே காரணத்துக்காக,லிங்கு [நெக்லஸ் டீ சர்ட்டுகளை அணிவதை விட்டுவிட்டு] நல்ல சட்டைகளை அணிந்து காலரை தூக்கிவிட்டுக்கொண்டு அலையலாம்.
அப்படியே கீழே உள்ள பாலாஜியின் நேர்காணலைப்படித்துவிட்டு, ஒரு டீச்ச்ரம்மாவின் வூட்டுக்காரரே இவ்வளவு தில்லாக படம் எடுக்கும்போது............[புள்ளிகளிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கங்க ]
‘’வழக்கு எண்
18/9’ படத்தின் கதையை இரண்டு வருடங்களாக மனதில் அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அவசர அவசரமாக படம் எடுத்து, சினிமாவில் சம்பாதித்துதான்
சாப்பிட வேண்டிய நிலையில் நான் இல்லை. என் மனைவி ஒரு தனியார்
கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக வேலை பார்க்கிறார். டியூசன்
எடுத்தாவது எனக்கு கஞ்சி ஊத்துவார்.’’-
இனி பாலா, ஜீ எல்லாமே நீங்கதான் |
ஞாபக
சக்தி விஷயத்தில், என்னைப்பொறுத்தவரை, தமிழ்சினிமா ரசிகர்கள் காலகாலமாக பரிகசிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்.
படம்
துவங்கிய பத்தாவது நிமிடத்திலிருந்து,’எலே, நீ மறந்திருப்படே’என்று எதற்கெடுத்தாலும்
விடாமல் அவ்வளவு ரீ-கலெக்ஷன் ஷாட்கள் போடுவார்கள்.
ஒரு தியேட்டரிலும் ஓடாத படங்கள் திடீரென 100 வது நாள் போஸ்டரோடு நம்மைப்பார்த்து பல்லிளிக்கும்.
அப்படி
போஸ்டர் ஒட்டப்பட்ட ஒரே காரணத்துக்காகவே, அந்த வருட டிசம்பர் இறுதி நாட்களில் வெளியாகிற தினத்தந்தி, மாலைமலர் கெஸட்களில், ‘இந்த ஆண்டு 100 நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலில்’ இடம் பிடித்து, பின்னர் அதுவே
தமிழ்சினிமா சரித்திரமாக மாறும் கொடுமையும் நடந்துவிடும்.
மீண்டும்
தமிழ்சினிமா ரசிகனின் ஞாபகசக்தி மேல் அபார நம்பிக்கை வைத்து ‘காதல்’ என்ற
ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கியுள்ள பாலாஜி சக்திவேல், தனது நண்பர்
லிங்குசாமியின் தயாரிப்பில் இயக்கியுள்ள இரண்டாவது படம்’வழக்கு எண்
18/9.
படபோஸ்டர், பத்திரிகை, டி.வி. ட்ரைலர்
விளம்பரங்களை வைத்தே இந்த முடிவுக்கு வந்தேன். இவ்வளவு நாளும், ‘சாமுராய்’ கல்லூரி’ போன்ற
படங்களை இயக்கியவரும் இதே பாலாஜி சக்திவேல்தான் என்று எண்ணியிருந்த என் மூடக்கண்ணை திறந்த, தயாரிப்பாளர், இயக்குனர் ‘ரன்’
லிங்குசாமிக்கு நன்றி.சரி வெட்டிப்பஞ்சாயத்து எதுக்கு ? வழக்குக்கு வருவோம்.
தங்கள் சொந்த காரியமாகவோ, மற்றவர்களுக்காகவோ கோர்ட்வாசல்படி மிதிக்காத ஜீவராசிகள் இருக்க முடியாது. அப்படி கோர்டுக்கு
வந்த ஒரு வழக்கை, பார்ப்பவர்களை உலுக்கும்
விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
ஒருகொடியில்
இரு மலர்கள் மாதிரி, ஒரு கோர விபத்தின்
இரு முகங்கள்தான் ’வழக்கு எண்’ படத்தின்
கதை.
சேரியில்
வசிக்கும் ஜோதி, முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு, உயிருக்குப்போராடும் நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறாள். அதைப்பற்றிய விசாரணையில் ஈடுபடும் போலீஸ், அவளைக்காதலித்ததாகச் சொல்லப்படும், ப்ளாட்ஃபார்ம் கடையில் வேலைபார்க்கும், ஸ்ரீயை
விசாரிக்க ஆரம்பிப்பது முதல் பாதியாகவும், ஊர்மிளா வேலை பார்த்த, அபார்ட்மெண்ட் மாணவி
மனீஷா, தானே
வலிய போலீஸை தேடிவந்து, சம்பவத்தின் இன்னொரு முகத்தை சொல்ல ஆரம்பிப்பதுமாய் ஒரு பரபரப்பான சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற ஒரு
உணர்வை படம் முழுக்க நம்மை ஒரு விதமான பதட்டத்தோடே பயணிக்க வைத்திருக்கிறார்
பாலாஜி.
விஜய்மில்டனின் ஒளிப்பதிவும், பிரசன்னாவின் பின்னணி இசையும்,அறிமுகம் கோபியின் படத்தொகுப்பும் படத்தை இன்னும் நேர்த்தியாக்குகின்றன.
சொல் புதிது, பொருள் புதிது போல், படத்தின்
கதை புதிது. களம் புதிது. நடித்திருக்கும்
முகங்கள் புதிது.
என்னதான் இங்கிலீஸ் புரஃபஷர்
டியூசன் எடுத்தாவது கஞ்சி ஊத்துவார் என்றாலும், ரெகுலர் சினிமாவுக்கான பாடல்கள், காதல்காட்சிகள்,
காமெடி, காமநெடி எதுவுமின்றி மிகுந்த துணிச்சலாய்
இந்த வழக்கை, ’சினிமா வழக்கை’ ஒழித்து பதிவு
செய்ததற்காய் பாலாஜி சக்திவேலை எவ்வளவு எங்ஙணம் பாராட்டினாலும் தகும்.
உங்க விதி ...எப்பிடி இருந்தாலும் திகில்முருகன் கிட்ட மாட்டியே தீருவீங்க... |
படம்
முழுக்கவே நாம் இதுவரை பார்த்தறியாத அறிமுகங்கள்தான் நிரம்பி வழிகிறார்கள்.
நாயகன்
ஸ்ரீயில் துவங்கி முரளி,மிதுன்,ஊர்மிளா, மனீஷா ஆகிய அனைவருமே பாத்திரங்களாகவே மாறிவிட்டார்கள் என்று சொல்வது கண்டிப்பாக சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல.
க்ளைமாக்ஸ்
குறித்து இயக்குனருக்கு சின்னச்சின்ன குழப்பங்கள் இருந்திருக்கக்கூடும். பணவெறியிலும், ஜாதிவெறியிலும் விலைபோகும் போலீஸ்காரரை, ஊர்மிளா பதிலுக்கு ஆசிட் அடிக்காமல், இயலாமையில் பொங்கிக்கொண்டிருந்தாள்… என்று, சாசுவதம் என்னவோ
அப்படியே விட்டிருந்தால், இது இன்னும் நல்லபடம் ஆகியிருக்குமோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
படம்
முடிந்து வெளியே வந்த போது இயக்குனர் பாலாஜி சக்திவேலை கட்டிப்பிடித்து பாராட்டவேண்டும்போல் இருந்தது .அவரது உருவத்தை
கட்டிப்பிடிக்க என்னைப்போல் மூன்று பேர் தேவை என்பதால் வெறுமனே கைகொடுத்து வாழ்த்தி விடைபெற்றேன்.
வழக்கு எண் தமிழ்சினிமாவின் கிழக்கு.
[ விமர்சனம்,வழக்கு எண் 18/9, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி,ஸ்ரீ, ஊர்மிளா,vazhakku en 18/9, balaji sakthivel ,review,]
அருமையான விமர்சனம்.
ReplyDeleteஇந்த பதிவு www.hotlinksin.com திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ஹிட்ஸ் வருகிறது என்பதை பார்த்துக் கொள்ளவும். மேலும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து www.hotlinksin.com இணையதளத்தில் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறுவது மட்டுமின்றி அலக்ஸா ரேங்க் தரத்தையும் உயர்த்திடுங்கள்...
நன்றி. கண்டிப்பாக இணைக்கிறேன்...
Deleteவசிஷ்டர் வாயில் விமர்சனம்....நல்ல விமர்சனம்..இன்னிக்கே போயிடுறேன்..
ReplyDeleteகண்டிப்பா பாக்க வேண்டிய படம். நண்பர்களையும் அழைச்சிட்டுப்போங்க...
Deleteகுட்
ReplyDeleteநன்றி தோழர்
Delete‘காதல்’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கியுள்ள பாலாஜி சக்திவேல், தனது நண்பர் லிங்குசாமியின் தயாரிப்பில் இயக்கியுள்ள இரண்டாவது படம்’வழக்கு எண் 18/9.
ReplyDelete------------------------------------------
do yo remember a movie called samurai with vikram and kallori with tamana ending resembling Dharmapuri where 3 girls were burnt to death inside a bus during riots
i have mentioned that movies. please read the full review.
Delete" வழக்கு எண் தமிழ்சினிமாவின் கிழக்கு. "
ReplyDeleteநல்ல வார்த்தைகள் . .
ஓகே போன்ற உருபடாத படங்களின்
ஆதிக்கம் மீறி இப்படம் ஓட வாழ்துக்கள் . .
அது உங்க கையிலதான் இருக்குது தோழர்....
Deleteநாளை ஷோவிற்கு டிக்கெட் வாங்கியுள்ளோம். நல்ல படம் என்று தெரிந்த பின் போவது ஒரு மகிழ்ச்சியே :-)அருமையான விமர்சனம், நன்றி! பாலாஜி சக்திவேல் நேர்காணலில் சொல்லியிருப்பது போல ஒரு கலைஞனின் வெற்றி அவரின் துணையை பொறுத்தே அமைகிறது. அவருக்கும் இந்த பதிவின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் :-)
Deleteamas32
எதிர்பார்ப்பை தூண்டுகிறது விமர்சனம்
ReplyDeleteநன்றி தோழர்.
ReplyDeleteபலாஜி சக்திவேல் மற்றும் உண்மையான விமர்சனம் எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் !!! சிங்கையில் வெளியாகி விட்ட்டதன்னு தெரியல. நாளைக்கு முயற்சி பண்ணனும்.
ReplyDeleteநன்றி. பாருங்க.கண்டிப்பா ரசிப்பீங்க...
Deleteக்ளைமாக்ஸ் சற்றே ரொமான்ற்றிக்தான். இருந்தாலும் அதை முதல் நாள் விமர்சனத்தில் சொல்லி இருக்கக் கூடாது என்பது என் கருத்து. இவ்வளவு பொறுப்புள்ள படம் பண்ணுபவர்களின் சின்னக் குறைகளைக் கலைக்கொளகைத் துலாக்கோலில் நிறுக்க வேண்டாமே என்பது என் உணர்வு. மற்றபடி உங்கள் விமர்சனத்துக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteநீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் நல்ல படங்களின் கதையை நான் எப்போதுமே,நீங்கள் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடுகிறமாதிரி எழுதுவதில்லை.
Deleteஇந்த வார ஞாயிறு புக் பண்ணியாச்சு.ஹீரோ ஸ்ரீ என்னுடைய உறவினன். படம் நல்லாருக்குன்னு கேள்விப்படறது சந்தோசமா இருக்கு. ஐந்து வருட முயற்சிக்குப் பிறகு ஒரு நல்ல வாய்ப்பு அவனுக்கு. கனா காணும் காலத்தில் ஒரு ரோல் பண்ணியிருந்தான். அசத்தப்போவது யாருவில் மிமிக்ரி பண்ணினான். ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல படம் என்பதில் ஒரு ரசிகனாய் அதிக சந்தோஷம்.
ReplyDeleteஉங்கள் உறவினர் ஸ்ரீக்கு எனது வாழ்த்து. அடுத்து நிறைய வாய்ப்புகள் வரும். இன்னும் ஒரு நாலைந்து படங்களை முதல் படம் போலவே நினைத்து பணத்துக்காக பண்ணாமல் கதையில் மட்டும் நடிக்கச்சொல்லுங்கள்.
Deleteநன்றியோ நன்றி தல..!
ReplyDeleteஅண்ணா நீங்கதான் படத்துக்கு பினாமி புரடியூசரா? நன்றியெல்லாம் சொல்றீங்க?
ReplyDeleteவழக்கு எண் 18/9 என் மதிப்பெண் .42/100., அழகான விமர்சனம் உங்களுடையது, அந்த நையான்டி எப்பிடி சார் வருது???? super. லீலை னு ஒரு படம் வந்துச்சே பாக்கலியா, simple a, அழகா KONJAM பெரிய கவிதை!
ReplyDelete42 மார்க்தானா ரொம்ப ஸ்ட்ரிக்டான வாத்தியாரா இருப்பீங்க போலருக்கு. லீலை பாக்க வாய்க்கலை.இனி சன் டி.வியில பாத்தா உண்டு.
ReplyDeleteஅப்பா ..! ஒரு படம் உங்கட்ட இருந்து பொழச்சுது !
ReplyDeleteநல்ல படமா இருந்தா ஓசியில போஸ்டர் கூட ஒட்டலாம்னு ஒட்டக்கூத்தரே சொல்லியிருக்காரே சார்...
Deleteஓஹோ புரொடக்ஷன்ஸ் - அண்ணாமலை இது நீங்கள் எழுதியதா? எதோ விஷயத்தைத் தேடப்போய் இந்தப் பதிவிற்கு வந்து விழுந்தேன். இப்பொழுது வாசிக்க நேரமில்லை. நேரம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteமற்றபடி வாழ்த்துக்கள். தொடருங்கள்...
வாசிக்க நேரமில்லாததுல தப்பில்ல. ஆனா யோசிக்கவும் நேரமில்லாம ஓஹோவோட ஓனரையெ மாத்தப்பாக்குறீங்களே... இருங்க மு.ராமசாமிகிட்ட சொல்லி உங்க தலையில குட்டச்சொல்றேன்
Deleteஎனக்கு மயக்கமே வருது தல...நீங்க நல்லா இருக்குனு சொன்ன முதல் படம்(நான் படிக்க ஆரம்பிச்சதில் இருந்து...) இதுக்கெல்லாம் என்னை கூப்பிடக் கூடாதா??உங்க கூட ஒரு படமாவது பாக்கணும்..அது தான் என் லட்ச்...இல்ல இல்ல..ஆசை.. ; )..ட்ரை பண்ணுங்களேன்...
ReplyDeleteஇந்த வாரம் சீட் புக் பண்ணியாச்சி கண்டிப்பா வாங்க...
Deleteஆரண்யகாண்டத்துக்கு 50,, மார்க் குடுத்தேன்! தப்பில்லயே!
ReplyDeleteநீங்க ஒரு படத்த பாராட்டக் கூட செய்வீங்கன்றத தெரின்க்சுக்கிட்டேன்ம் ;-).
ReplyDelete//எச்சூஸ் மி ஓஹோ புரடக்ஷன்ஸ் ஓனருக்கு யாராவது உங்க செல் நம்பர் தர முடியுமா?// எதுக்கு சார்? அந்த கொழந்தைகளுக்கு இலவச ஷூ தரப் போறீங்களா?