படத்தை வெள்ளியன்று காலை 10 மணிக்கு 4 ப்ரேம்ஸ் தியேட்டரில் போட்டார்கள்.
‘பில்லா2’ துவக்க காலத்திலிருந்தே, பார்வதி ஓமனக்குட்டன் மற்றும் புருனா அப்துல்லா இருவரையும் ஸ்டில்களில் பார்த்தே நான் படு அப்செட். இவளுக
ரெண்டுபேருமே ஃப்ளைட் புடிச்சி வந்து ‘ஐ
லவ் யூ’ சொன்னாக்கூட
நானே திரும்பிப்பாக்க
மாட்டேன்’ அப்புறம்
எப்பிடி இவங்கள அஜீத் லவ் பண்ணி, டூயட்
பாடி?
படத்தின் இரு கதாநாயகிகளைப் பார்த்தபோது ஏற்பட்டிருந்த அவநம்பிக்கை, ரிலீஸுக்கு முந்தின நாள் அவசர அவசரமாக கூட்டப்பட்ட பிரஸ்மீட்டினால் இன்னும் சற்றே அதிகரித்திருந்தது.
’அவர்
அஜீத்துக்கு வேண்டப்பட்ட ஆள். அதனால ‘பில்லா2’ நல்லா இல்லைன்னா அதை ’ஓஹோ’வுல தில்லா எழுத மாட்டாரு பாருங்களேன்’ என்று என் காதுபடவே சில கமெண்டுகள் வந்தன. அந்த
கமெண்டுகள் வலுவாகும் வகையில் நேற்று என்னால் உடனே விமரிசனம் எழுதமுடியவில்லை.
படம்
தந்த சோர்வு ஒருபுறமிருக்க, ஒரு நண்பரின் எதிர்பாராத மறைவு, அவரது
இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச்சென்றது என்று முழு வெள்ளியும் போய்விட்டது.
முன்பு
ட்விட்டரில் விஜயை அதிகம் கலாய்த்துகொண்டிருந்தவர்கள், சமீபகாலமாக மெல்ல அஜீத்துக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டார்கள்.
அதில்
பில்லா2’ படத்தின் சாயலில் இருந்த ஒரு ட்விட்டரை நான் மிகவும் ரசித்தேன். ’
நடிகன்
அஜீத்தை விமரிக்க தகுதிகள் வேண்டியதில்லை. ஆனால் மனிதன் அஜீத்தை விமர்சிக்க தகுதிகள் வேணும்டா’
நான் ‘பில்லா2’ வுக்கு விமர்சனம் எழுத வைத்துக்கொண்ட அளவுகோலும் இதுதான்.
இனி விமர்சனம் படிக்கலாம்.
இப்போது நான் நினைவூட்ட விரும்பும் ஒரு காட்சி, உங்களில்
அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளதுதான் எனினும், ஒரு
காரண காரியம் கருதி மீண்டும் அதை லைட்டாக தொட்டுவிட்டு செல்வோம்.
1983ம்
ஆண்டு, ஜனவரி
முதல் நாளன்று வெளியான கே. விஸ்வநாத்தின் ‘சலங்கை ஒலி’யில்
ஒரு காட்சி. பரத
நாட்டியக்கலைஞரான கமல் ஒரு பூங்காவில் நாட்டியப்பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார். அப்போது அவரை வாலண்டியராகப்போய் ஒரு சிறுவன் போட்டோ எடுப்பான். கமலும்
அவனை நம்பி ஆசை ஆசையாய் போஸ் குடுத்து, மறுநாள்
அவன் ஸ்டுடியோவில் போய்ப்பார்த்தால்,… ஒரு ஸ்டில்லில் கமலின் கை மட்டும்
இருக்கும்… இன்னொன்றில்
கமலின் பாதம் மட்டும் இருக்கும்… மற்றொன்றில்
கன்னத்தில் ஒரு கொசுவை அடித்துக்கொண்டிருப்பார்.
‘’டேய்
டேய் ஒரு ஸ்டில்லைக்கூட ஒழுங்கா எடுக்காம இப்பிடி அநியாயம் பண்ணிட்டியேடா’’ என்று கமல் அந்தப்பொடியனை அடிக்க முயல, அவனோ
சாமர்த்தியமாக ஓடி தனது தந்தைக்கு பின்னால் ஒளிந்துகொள்வான்.
அந்தப்
பையனின் பெயர்தான் சக்ரி டோலட்டி.
நேற்று
ரிலீஸாகி, அஜீத் ரசிகர்களை வெலவெலத்துப்போக வைத்திருக்கிறதே ‘பில்லா2’ அந்தப்படத்தின் இயக்குனர்.
29 வருடங்களுக்கு
முன்பு, உங்களையும்
என்னையும் போல் ஏதோ ஒரு தியேட்டரில் அமர்ந்து ‘சலங்கை
ஒலி’ யை
ரசித்த அஜீத்துக்கு தெரிந்திருக்குமா, ஒரு ஸ்டில்லையே ஒழுங்காக எடுக்கத்தெரியாத பையன்தான் 2012-ல் 1,85,760
ஸ்டில்களைக் கொண்ட ‘பில்லா2’ என்ற படத்தை எடுக்கப்போகிறான் என்பது?
இதைத்தான்
விதி வலியது என்கிறார்களோ?
டேவிட்
பில்லா, ஒரு
அகதியாக, வரும்போதே, ரொம்ப
அசதியாக ஒரு முகாமில் இறங்குகிறார்.
அவர்
அசதியாக இருப்பது தெரியாமல், ‘அம்மா
பேரு, அப்பா பேரு’ கேள்விகேட்கும்
அதிகாரி மேல் அவருக்கு கோபம் கோபமாக வருகிறது. அடுத்த
காட்சியில் அவருக்கு ஒரு கடத்தல் வேலை கிடைக்கிறது. அதற்கும் அடுத்த காட்சியில் பெரிய டான் ஒருவருக்கு ரைட் ஹேண்டாக மாறுகிறார். இடைவேளையில்
தனி டாணாக மாறுகிறார். அதுவரை
அவர் சுட்டுத்தள்ளிய மனித
உயிரினங்களின் எண்ணிக்கை சுமார் ஐநூறைத்தாண்டியிருக்க, உயிரைக்கையில் பிடித்தபடி வெளியேறுகிறோம்.
படத்தின்
முக்கிய அம்சமாக நான் கருதுவது சுமார் 20 பக்க நோட்டுக்குள் அடங்கிவிடக்கூடிய வசனங்கள். அதில்
பத்தொன்பதரை பக்கங்கள் ஆங்கிலம்,ரஸ்யா, இந்தி போன்ற மொழிகளில் இடம் பெற்றிருப்பது.
அதிலும்
அவ்வப்போது கீழே தமிழில் போடப்படும் சப்-டைட்டில்களில், பில்லா என்பதைக்கூட அல்லா என்று எழுதிவிடுவார்களோ என்று நெஞ்சைப்பிடித்துக்கொள்ளுமளவுக்கு, எக்கச்சக்கமான
ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்.
பில்லா
டேவிட் உட்பட படத்தில் இடம்பெறும் அத்தனை கேரக்டர்களுமே, ஏதோ வனாந்திரத்திலிருந்து பிடித்துவந்து விட்டது போல முன்கதை, பின்கதை
எதுவுமில்லாமல் அந்தரத்தில் கிடக்கிறார்கள்.
கிளாமருக்காகவோ
அல்லது டாண்கள் உலகத்தின் செட் புராபர்ட்டியாக இருக்கட்டும் என்று நினைத்தோ படத்தின் பல காட்சிகளில்
ஜட்டியோடே அலையும் குட்டி புரூனா அப்துல்லாவும், பில்லாவின் அக்கா மகளான பார்வதி ஓமனக்குட்டனும் என்ன காரியமாக அங்கங்கே நடமாடி, அவ்வப்போது
நடனமாடினார்கள் என்று
கடைசிவரை விளங்கவேயில்லை.
கேரக்டருக்காவா
அல்லது பொதுவாகவே சினிமாவின் மீது, பணத்தின் மீது வெறுப்பு வந்துவிட்டதோ தெரியவில்லை. படம் முழுக்க டல்லா2 வாகவே
காட்சியளிக்கிறார் அஜீத். பஞ்ச்
டயலாக் என்ற நினைப்பில் அவர் பேசும் அத்தனை டயலாக்குகளும் ஏதோ பஞ்சத்துக்கு எழுதப்பட்டது போல் அத்தனை வறட்சி.
யுவனின்
பின்னணி இசை தவிர்த்து,ஒளிப்பதிவு,
படத்தொகுப்பு, அத்தனையிலும் டெக்னிக்கலாக, இந்த 2012-லும்
இவ்வளவு திராபையாக ஒரு படம் இயக்க முடியுமெனில் அது, 29 வருடங்களாக
இன்னும் சற்றும் வளராத இந்த குட்டிப்பையன் சக்ரி, துக்கிரி, பக்கிரியால் மட்டுமே முடியும்.
அந்தவகையில் ‘பில்லா2’ கதை, திரைக்கதையில்
துவங்கி, ஒவ்வொரு
விசயமும், ஒவ்வொரு
சீனும், அவ்வளவு ஏன்
ஒவ்வொரு ஃப்ரேமும் சக்ரியே சொதப்புனதுடா.’
kavutheetteenga boss....
ReplyDeleteநான் கவுக்கலை பாஸ். சக்ரி கவுத்துட்டாரு
Deleteபடம் பார்த்த பிறகு- விஜய்யின் துப்பாக்கி மூலம் பில்லா-2வை சுடலாம் போல தோன்றியது.
ReplyDeleteமுதலில் அந்த துப்பாக்கி நம்மை சுடாமல் இருந்தால் நல்லது.
ரெண்டு கையில ரெண்டு துப்பாக்கி புடிச்சவன் எவனும் இதுவரைக்கும் உருப்பட்டதா சரித்திரம் இல்ல பாஸ்
Deleteவிமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteபாஸ்,
ReplyDeleteதசாவதாரம் படத்துல அமெரிக்க கமல்க்கு பிரிண்டா ஒருத்தர் வந்து வில்லன் கமல் கையால அடிபட்டு சாவரே..?? அந்த ஆளு தான் சக்ரி டோலட்டியா..???
சரியா நினைவுக்கு வரல.யூ டுப்ல பாத்து சொல்றேன்.
Deleteஆமாம் அவரேதான் ....
Deleteஓஹோ சார்,
ReplyDeleteஉண்மையில் உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு, வெண்டைகாய வெளக்கெண்ணைல போட்டா போல வழுக்கலா எழுதாமா ,சிதறு தேங்கா போல சிதற அடிச்சிட்டிங்க :-))
வசனம், கேமிரா எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க அதையும் திராபைனு சொல்லிட்டிங்களே, கோட்டு,கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு ஸ்டைலா நடந்து வந்தா ஹாலிவுட்டு ரேஞ்ச் படம்னு அஜித்கிட்டே யாரோ தப்பா சொல்லி வச்சு இருக்காங்க, நீங்களாவது அவருக்கிட்டே உண்மைய சொல்லுங்க பாஸ் :-))
-----------
ராஜ்,
அந்த பிரண்ட் தான், உன்னைப்போல் ஒருவன் கூட இயக்கினார்(கமலே எல்லா வேலையும் செய்துட்டு பேர சக்ரினு போட்டு இருப்பார் வழக்கம் போலனு நினைக்கிறேன்)
அது ‘wednesday' படத்தோட ரீ-மேக்தான?
Deleteஓஹோ சார்,
Deleteஆமாம் , ஹிந்தில நஷ்ருதீன் ஷா நடிச்சது,ஹிந்தில இயக்கியது நீரஜ் பாண்டே, தமிழில் சக்ரி டோலட்டி பெயரைப்போட்டுக்கிட்டு கமலே வேலையைசெய்திருப்பார் என்பது எனது கணிப்பு. சிங்கிதம் சீனிவாசராவ், சந்தானபாரதினு கமலுக்குனு சிலர் இருக்காங்களே அது போல :-))
பில்லா-2 வச்சு பார்க்கும் போது தான் டோலட்டி டோமர் பார்ட்டினு தெரியுது :-))
அவரு சுட்டதுல இருந்து எப்படியோ தப்பிச்சு வந்துட்டேன் பாஸ். முடியல. :-(
ReplyDeleteஎன்ன தல நீங்களே தல படத்த இப்டி சொல்லிடீங்களே...ரஜினி கு பிறகு தல movie தான் opening collection ல leading...அது உண்மை தானே??
ReplyDeleteSCARFACE படம் பாத்திருக்கீங்களா???
ReplyDeleteபாத்து பல வருசங்களாச்சி....
Delete:-)))))))))))))))
ReplyDelete//‘ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ஃப்ரேமும் நானே சொதப்புனதுடா’//
செம டைட்டில்! :-)
ஆஸ்கர் ரவிச்சந்திரன் கைய கடிக்கும்னு சொல்றாங்களே. ஏற்கனவே புக்பண்ணுனவங்க மட்டும் விதியேன்னு பார்க்க போறாங்களாம். விஷ்ணு வர்த்தனே இந்த படத்தை எடுத்திருந்தால் பில்லா1ல் செய்த தவறுகளை களைந்திருப்பார் என்று தோன்றுகிறது. நல்ல ஓபனிங் கொடுக்கிற ஹீரோ இது மாதிரி படங்கள் கொடுத்தால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே. கதை மற்றும் டைரக்டர்களை தேர்ந்தெடுப்பதில் முன்பு மற்ற ஹீரோக்களை விட தல முண்ணனியில் இருந்தார். உதாரணம் எஸ்.ஜே சூர்யா, முருகதாஸ்.. இப்போது சொதப்பலான் கதையை தேர்ந்தெடுப்பதில் முண்ணனியில் இருக்கிறார்.
ReplyDeleteஅப்படியே பில்லாவுக்கு செய்யப்பட்ட அளவுக்கு அதிகமான TARGETED NEGATIVE PUBLICITY KU பின்னால யாரு இருக்காங்கனு உங்களுக்கு தெரிஞ்சா அதையும் இங்க சொல்லிருங்களேன்.. புண்ணியமா போகும்
ReplyDeleteஅய்யய்யோ தல கெதியே இப்படின்னா, அடுத்து டுப்பாக்கி வேற வருதே...?
ReplyDeleteஒரு ஸ்டில்லையே ஒழுங்காக எடுக்கத்தெரியாத பையன்தான் 2012-ல் 1,85,760 ஸ்டில்களைக் கொண்ட ‘பில்லா2’ என்ற படத்தை எடுக்கப்போகிறான் என்பது?////
ReplyDeleteஎல்லாம் நம்ம நேரம்..