எனக்கு நெருக்கமான நண்பர்களிடம் என்னிடம் கேட்பதற்கு எப்போதுமே கேள்விகள்
இருந்ததில்லை. ஏனெனில் அவர்கள் கேட்கவேண்டிய கேள்விகளுக்கான பதில்களை,
என்னையும் விட அவர்களே நன்கு அறிந்தும் இருந்தார்கள்.
ஆனால் சமீப அறிமுக நண்பர்கள், அதுவும் குறிப்பாக ‘ப்ளாக்’
எழுதத்தொடங்கி, அதைப்படிக்க ஆரம்பித்த
நண்பர்கள் என்னிடம் கேட்க ஏகப்பட்ட கேள்விகளுடன் அலைகிறார்கள் என்பதை கடந்த மூன்று
மாதங்களில் தெரிந்துகொண்டேன்.
போனிலும், நேரிலும் பலமுறை அவற்றை எதிர்கொள்ளவும் செய்தேன். ‘கேள்வியின் நாய் அவனே’ என்று சிலர் என் குறித்து
கமெண்ட் அடித்திருக்கவும் கூடும்.
‘என்ன பாஸ் நீங்க எழுதுற சினிமா விமர்சனத்தை படிக்கவா உங்க
ப்ளாக் பக்கம் வந்தோம்?’ சினிமா விமர்சனம் உங்கள மாதிரி
நூறுபேர் எழுதுறான். உங்க சொந்த வாழ்க்கை அனுபவங்கள் படிக்க
சுவாரசியமா இருந்துச்சி. அதை அப்பிடியே த்ராட்டுல
விட்டுட்டீங்களே?’’
‘நக்கீரன்’ ‘குமுதம்’ கோஷ்டிங்க, சினிமா ஆளுங்க யாராவது மிரட்டுனாங்களா பாஸ்?’ அதுலயும்
கோபால் கொஞ்சம் கோக்குமாக்கான ஆளாச்சே?’
‘;மோகம் முப்பது நாள். ஆசை அறுபது நாள்.
ப்ளாக் 90 நாள். இப்பிடி
நிறைய பேரை பாத்துட்டேன் நண்பா?’
நான் சந்தித்த மொத்த கேள்விகளையும் மேற்படி மூன்று வகையறாக்களில்
அடக்கிவிடலாம்.
இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒரு புறம் இருக்கட்டும் , ‘ப்ளாக்’
எழுத ஆரம்பித்து கொஞ்சம் கேப்பு விட்டாலும் ஆப்பு அடிக்க இத்தனை
பேர் இருப்பார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது.
சொந்தக்கதை தொடராமல் போனதற்கு நீங்கள் கற்பனை செய்துகொண்டதுபோல் சுவாரசியமான
காரணங்கள் எதுவும் இல்லை. பொதுவாகவே நான் ஒரு உலகமகா சோம்பேறி. எனது
பழைய அனுபவங்கள் தொடர்பான ஆவணங்கள் எதையுமே நான் சேகரித்து வைக்கவில்லை.
சரி, எழுத ஆரம்பித்தபிறகு, நம்முடன்
பணியாற்றிய ‘சின்சியர் சிகாமணி’களிடமிருந்து
சில தஸ்தாவேஜுகள் சிக்கக்கூடும். அப்படியே இரவல் வாங்கி
தொடர்ந்துவிடலாம் என்ற ஒரு கணக்கு என்வசம் இருந்தது. அது
சுமார் பத்து சதவிகிதம் கூட பலிக்கவில்லை.
நக்கீரன்’ அனுபவங்களை எழுத ஆரம்பித்தபோது என்னை மிகவும்
உற்சாகப்படுத்திய ஆசிரியர் துரை, ‘என்னிடம் பழைய பிரதிகள்
பெரும்பாலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. பரணில் தேடவேண்டும்’
என்று ஒரு பத்து நாட்கள் வரை இழுத்து மொத்தம் ஒன்பது பிரதிகளே இருக்கிறது என்றபோது, ஏறத்தாழ
200 இதழ்களுக்கு வேலை பார்த்தோம். அதில்
ஒன்பது இதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற சலிப்பே மிஞ்சி, அவற்றைக்கூட இன்னும் வாங்கப்போகாமல் இருக்கிறேன்.
இந்த தற்காலிக இடைவெளிக்கான உண்மையான காரணம் இதுதான். மற்றபடி
இதில் உள்குத்து’ வெளிக்குத்து என்று எதுவும் இல்லை.
ஆனாலும் ஒரு வெட்டிப்பயலின் கதையைப் படிப்பதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டிவரும்
நண்பர்களே, உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் நன்றி மற்றும் பச்சாதாப
உணர்ச்சிகளுக்காக மட்டுமே ‘என் கதை’ விரைவில்
தொடரும் என்று என் குலதெய்வங்களான அக்கம்மா அழகம்மாக்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
எப்பவும் போல் நம்ம சினிமா பஞ்சாயத்துக்களுக்கே வருகிறேன்.
டிஜிட்டல் ‘கர்ணன்’ ரிலீஸான முதல் ஷோவிலேயே பொட்டி
மீரான் சாகேப் தெருவிற்கு திரும்பியிருக்கவேண்டுமோ என்று நினைத்து வருந்தும்
அளவுக்கு கடந்த வாரம் ஒரே நாளில் இரண்டு எம்.ஜி.ஆர்.களை சந்தித்தோம்.
முதலாமவர் ’வாலிபன் சுற்றும் உலகம்’ என்று இரண்டு
மணி நேரப் படமாக வந்து நம்மை நன்கு பாடம் பண்ணினார்.
இரண்டாவது எம்.ஜி.ஆரை சந்தித்தது பிரசாத் லேப்பில் ‘சக்கரவர்த்தி திருமகன்’ ஆடியோ மற்றும் ட்ரெயிலர்
ரிலீஸில்.
‘கர்ணன்’ நல்லா கல்லா கட்டியதைத்தொடர்ந்து,
அதே போல் நாலு எம்.ஜி.ஆர்
படங்களை ரிலீஸ் பண்ணினால் வரவேற்கலாம். ஆனால் மதுரை, சேலம் பகுதிகளில் எம்.ஜி.ஆர்.போல் மேக்கப் போட்டுக்கொண்டு மேடையில் ஆடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம்
முழுப்படம் நடிக்கவந்தால் எங்கே போய் முறையிடுவது என்றே தெரியவில்லை.மேலும் கொடுமையாக இவர்கள் தங்கள் கூடவே லதா, மஞ்சுளாக்கள்,
நம்பியார், அசோகன்களையும் அழைத்துக்கொண்டே
திரிகிறார்கள்.
‘வாலிபன் சுற்றும் உலகத்தை, நானும் இரண்டு
மணிநேரம் தேவிஸ்ரீதேவி தியேட்டரில் பொறுமையாக பார்த்தேன். அதற்கு
விமரிசனம் எல்லாம் எழுதப்போவதில்லை. ஆனால் என் அருகே
அமர்ந்திருந்த ஆறடி உயரம் கொண்ட ஆஜானுபாவான நண்பர் படம் தொடங்கி முடியும்வரை
குலுங்கி குலுங்கி அழுதுகொண்டே இருந்தார்.
அவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்த நான், படம்
முடிந்த உடன் உள்நோக்கம் எதுவுமின்றி,’’ பிரசாத்துக்கும்
வர்றீங்கள்ல, அங்க ;சக்கரவர்த்தி
திருமகன்’ ஆடியோ ரிலீஸ் இருக்கு. அதுல
வேற எம்.ஜி.ஆர்’’ என்றேன் உற்சாகமாக.
அவரோ சைலண்டாக தனது பர்சை வெளியே எடுத்து ஒரு 20 ரூபாய் தாளை என்னிடம்
நீட்டினார்.
‘’ நான் உயிரோட இருக்குறது உங்களுக்கு புடிக்கலைன்னு நல்லா
தெரியுது. இந்த 20 ரூபாய்க்கு நாலு
முழத்துல ஒரு கயிறு வாங்கி கொரியர்ல அனுப்புங்க. நான்
வேணும்னா தொங்கிடுறேன்’’ என்றபடி என் பதிலுக்கு காத்திராமல்
கிளம்பிப்போனார்.
அவரிடம் சொல்வதற்கு என்னிடம் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
1.
இருபது ரூபாய்க்கு இரண்டு முழக்கயிறுதான் கிடைத்தது.
2.கொரியர்காரர்கள் இலவசமாக கயிறுகளை டெலிவரி செய்வதில்லை.
ஒரு எச்சரிக்கை: இந்த வாரத்தில், பார்த்து ரசித்து இன்னும் விமர்சனம் எழுதப்படாமல் ‘சுழல்’ மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘பொல்லாங்கு’ மற்றும் ஷகீலாக்கா சரக்கடிக்கும் ‘ஆசாமி’ ஆகிய படங்கள் மனக்கிடங்கில் கிடந்து
தவிக்கின்றன. அடுத்த 48 மணிநேரத்திற்குள்
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அட்டாக் செய்யப்படலாம்.
ஆஹா ஆஹா ஆஹா .....
ReplyDeleteகயிறு வாங்கி அனுபிடிங்களா இல்லையா ?
அதான் சொன்னேனே பாஸ் கொரியர் பண்றதுக்கு காசு கம்மியா குடுத்துட்டுப்போயிட்டாரு. கைக்காசு போட்டெல்லாம் யாரையும் கைலாசம் அனுப்ப முடியாது பாஸ்.
ReplyDeleteகுலுங்கி அழுதவரை/// ரொம்ப நேரம் ரசித்து சிரித்தேன்...ஹாட்ஸ் ஆப்..
ReplyDeletethala...Maalaip pozhuthin mayakkathile vimarsanam venum..director is one of my friend.But nan innum movie paakala.waiting for ur review.
ReplyDeleteஅட்ரஸ் ப்ளீஸ் :))
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)