Sunday, August 12, 2012

’பரதேசி’ வாழ்க்கையே பரமானந்தமானது’ - பரிகாசம் செய்கிறார் பாலா


ம்..கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா நான் எடுத்திருக்கவேண்டிய ஸ்டில்ஸ்

கடந்த வாரம் சொந்தவேலை காரணமாக விருதுநகர் சென்றுவிட்டதால், ’பாளையங்கோட்டையில் அடித்த பனித்துளிஏற்கனவே எனக்கு ஹார்ட் ப்ராப்ளம்னு தெரிஞ்சிருந்தும்,  என்னத்துக்கு மனசுக்குள் வந்தாய்?போன்ற மூன்று காவியங்களை அநியாயத்துக்கு மிஸ் பண்ணினேன்.
யாரும் வருந்தவேண்டியதில்லை. அதற்கு வட்டியும் முதலுமாகச்சேர்த்து இந்த வாரம் மட்டும் ஐந்து படங்கள் ரிலீஸாகின்றன.

 கடந்த சில மாதங்களாக, சில பிரஸ்மீட்களோ, படங்களோ எதிர்பார்த்ததையும் விட சீக்கிரம் முடிந்துவிடுகிற வேளையில், பிரசாத் லேப் தியேட்டரின் இடது புறம் இருக்கிற புல்வெளியில் அமர்ந்து ஒருசில நண்பர்கள் ஆணிபுடுங்க ஆரம்பித்திருக்கிறோம்.
 
 இன்னும் சில வருடங்கள் கழித்து, அதிக நேரம் செலவழித்ததை காரணமாகக் காட்டி எல்.வி.பிரசாத்காரு குடும்பத்தினரிடமிருந்து அந்த புல்வெளியை எழுதி வாங்கும் உத்தேசமும் எங்களுக்கு இருக்கிறது என்பதை இங்கே ரகஸியமாக பதிவு செய்யவிரும்புகிறேன்.

பட ஸ்டில்களை ரகஸியம் காத்து, தனது ஒன்றிரண்டு கருப்புவெள்ளைகளுடன் களம் இறங்க ஆரம்பித்திருக்கிறார் பரதேசிபாலா.
பாலா படம் போட்டா ஃபீலாவீங்களேன்னுதான்


தமிழ்சினிமாவில் குனிவதற்கென்றேபெரும்தொகையை பொட்டலமாகக் கட்டிக்கொண்டு வந்து, முதலில் கமலிடம் விஸ்வரூபத்துக்காக 40க்கும் மேற்பட்ட கோடிகளை பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் பொட்லூரி. வி. பிரசாத்தை, அடுத்து பரதேசியாக்கும் முயற்சியில்  க்ளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறார் பாலா.

முதல் இரண்டு ஷெட்யூல்களை மூடிமறைத்து, தொண்ணூறு நாட்களில் முடிக்கப்பட்டதாக, முன்னூறு பொய்கள் அவிழ்த்துவிடப்படும் பரதேசியின் ஆரம்ப கட்ட தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது பொட்லூரியின் பி.வி.பி.நிறுவனம்.

படம் துவங்கியதற்கு முன்பே பெரும் தொகையை அட்வான்சாக வாங்கிக்கொண்ட பாலாவுக்கு, கடைசி ஷெட்யூல் நடந்த போது, கேட்டபோதெல்லாம் பணப்பட்டுவாடா செய்ய தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டது.

இதற்காகவே காத்திருந்ததுபோல், விஸ்வரூபம் கமல் பாணியிலேயே, ‘உனக்கு படம் முடிஞ்ச உடனே, என்னோட அருமை தெரிஞ்ச நல்ல புரடியூசர்கிட்ட பிசினஸ் பண்ணிட்டு பணத்தை செட்டில் பண்ணிடுறேன்என்று பேசி, ‘பரதேசிஆகும் பாக்கியம் உனக்கு இல்லைஎன்று பி.வி.பி.யை கழட்டிவிட்டுவிட்டாராம் பாலா.

இப்போதைய ஆரம்பகட்ட பரதேசிடிசைன்கள் தயாரிப்பாளர் பெயர் இல்லாமல், வெறுமனே பாலாவின் பெயருடன் மட்டுமே காணப்படுகின்றன.
நான் கடவுளில் மரணமே மனிதன் வேண்டி நிற்கும் வரம் என்று முழங்கிய பாலா பரதேசியில் பணக்காரனாக இருப்பதைவிட பரதேசியாய் வாழும் வாழ்க்கையே மேலானது என்று படம் முடிந்தவுடன் எண்ட் கார்டு போட்டு தயாரிப்பாளரை எகத்தாளம் பண்ணுவாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ம் நடிகைகள் மாதிரி, பெரும்பாலான ஹாலிவுட் நடிகைகளிடம், ஒளிவு,மறைவு என்பதே கிடையாது. அப்படியே கொஞ்சம் தாக்குப்பிடித்தாலும் வயது ஏற ஏறஎடுத்துட்டு எங்கே போகப்போறேன். எஞ்சாய் மவனே எஞ்சாய்என்று தங்கள் அழகு முழுமையையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கிவிட்டுத்தான் விடைபெறுவார்கள்.
 
இடையில் கைவசம் படங்களே இல்லாமல் போய், பின்னர்ஃபையர்இயக்குனர் தீபா மேத்தா தயவில்மிட்நைட் சில்ரன்ஆங்கிலப்படத்திலும், ’சந்திராஎன்ற தமிழ், தெலுங்கிலும்  மட்டும் நடித்துவந்தசிவாஜிஹீரோயின் ஷ்ரேயா கடந்த வாரம் மும்பையில் நடந்தமேக்ஸிம்பத்திரிகையின் புகைப்பட ஆல்பத்துக்காக முக்கால் ஆடை துறந்த முனிவி ஆகி இருக்கிறார்.
வயது 32 தாண்டுகிறது. இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் தாண்டினால் தீண்ட ஆள் இருக்கமாட்டார்கள் என்ற ஞானம் ஒருபுறமும், ‘மிட்நைட் சில்ரன்படத்தில் ஹீரோவுடன் உதட்டோடு உதடு கவ்வி பல ஹெவி சீன்களே பண்ணி முழுக்க நனைந்தபிறகு, இனி துப்பட்டா எதற்கு என்று துணிந்துவிட்டார் ஷ்ரேயா என்கிறது அவரது நட்பு வட்டாரம்
ஆனால் ட்விட்டரில் மேற்படி துணிந்து போஸ் கொடுத்ததற்கு காரணமானவராக, ஷ்ரேயா குறிப்பிடுவது போட்டோகிராபரான ஃபராக் என்பவரை.
‘’ நான் இதுவரை வேலைபார்த்த புகைப்பட கலைஞர்களிலேயே ஆகச்சிறந்த வேலைக்காரர் ஃப்ராக். அவருக்காகத்தான் இப்படியெல்லாம் போஸ் கொடுக்கவே ஒப்புக்கொண்டேன். எதிர்காலத்தில், என்னை ஒருவேளை அவர் நிர்வாணமாக படம் எடுக்க விரும்பினாலும், படங்கள் எடுக்கப்போவது அவராக இருந்தால் கண்டிப்பாக சம்மதிப்பேன்என்று நம்மைப்போன்ற இளைஞர்களை ரொம்பவே எச்சரிக்கிறார் ஷ்ரேயா.
போட்டோகிராபருக்கு இவ்வளவு சலுகையெல்லாம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், நான் சில வருடங்கள் பார்த்து வந்த போட்டோகிராபர் வேலையிலேயே தொடர்ந்திருப்பேன்
ஷ்ரேயா இல்லாவிட்டால், அட்லீஸ்ட் ஒரு காஜல் அகர்வாலோ, அவ்வளவு கூடவேண்டாம் ஒரு சமந்தாவாவதுமிஸ்டர் ஓஹோபுகைப்படம் எடுப்பதாக இருந்தால் நான் எப்படி வேண்டுமானாலும் போஸ் கொடுக்கத்தயார்என்று பேட்டி கொடுத்திருந்தால், அட்லீஸ்ட் பாதி தமிழ்நாட்டின் வயிறு பற்றி எரிந்திருக்காதா?
ம்காலம் கடந்த ஞானம் கஞ்சி குடிக்கக்கூட உதவாது.


9 comments:

  1. ஏன் இப்பிடி ஸ்டில்களைப் போட்டு கிளப்பி விடறீங்க...ஆனா ஒரு கவிதைத்தனம் தெரியுது இஸ்டில்ஸ் செலக்ஷன்லே...

    என்னோட அருமை தெரிஞ்ச நல்ல புரடியூசர்கிட்ட பிசினஸ் பண்ணிட்டு////ஓடியே போவாங்கய...பாலா படத்துக்கு ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கும்.பினிஷிங் சரியா வராதே...

    ReplyDelete
    Replies
    1. நல்ல நல்ல ஸ்டில்லுகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி

      Delete
  2. கவர்ச்சி மழையில் நனைய வைத்து விட்டீர்...

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் கவர்ச்சி மழையா?? அண்ணே நீங்க அவ்வளவு நல்லவராண்ணே???

      Delete
  3. ஹா ஹா ஹா..
    நீங்க மிஸ் வேர்ல்ட் ஐ போட்டோ எடுங்க...

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை அப்பிடி எதுவும் ஒர்க்-அவுட் ஆனா, நீங்கதான் என்னோட ஃபர்ஸ்ட் அசிஸ்டெண்டு

      Delete
  4. பபரதேசி விளக்கம் அருமை!
    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  5. ஒஹோ சார்,

    அப்போ ஒலகத்திலேயே சிறந்த கேமரா மேன் ஸ்டில் கேமரா மேன் தானா ? இது இம்புட்டு நாளாத்தெரியாம போச்சே :-))

    ஒரு சில ஸ்டில்களுக்கும்,சில மணி நேர "உழைப்புக்கும்" ஒரு படத்தில் நடிப்பதை விட அதிக சம்பளம் மேக்ஸிம் கொடுக்கிறது என படித்தேன், அந்த கண்ராவி உண்மையை சொல்லாமல் அந்த கேமரா மேன் கலைக்கண்ணோடு படம் எடுத்தார் என புழுகும் நடிகைகளை என்னவென்பது :-))

    ReplyDelete