'வாங்க ‘ஓஹோ’ன்னு வருவீங்க |
’‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ ட்ரெயிலர்
பார்த்தேன். ஸ்ரீதேவி 15 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட 15 மடங்கு அழகாக இருக்கிறார்’’
இந்தியாவின்
பிரபல [பேச்சாளர்களில்
அல்ல,] பேச்சிலர்களில்
ஒருவரான, ராம்கோபால்வர்மாவின்
இந்த கமெண்ட், டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ ரெகுலராகப்
படிப்பவர்களுக்கு, எறும்புக்கடி சமாச்சாரம்தான். அதில் கேள்வி-பதில்
பகுதியில் ராம்கோபால் வர்மா அடிக்கும் சில கூத்துக்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது, ஸ்ரீதேவி மேட்டர் கொஞ்சம் கம்மிதான்.
ஆனால், ஒரு
கணவராக இதைப்படிக்கும்போது, போணிகபூரின் மனம் எவ்வளவு கோணியிருக்கும் என்பதை என்னால் யோசித்துப்பார்க்கமுடிகிறது.
தமிழில், ‘என்னமோ நடக்குது’ என்ற
பெயரில் டப் ஆகி ரிலீஸான ஷணக் ஷணம்’ காலத்திலிருந்தே
ராம்கோபால் வர்மா ஸ்ரீதேவியின் தீவிரபக்தர்தான்.
ஆனால்
அதற்காக, ஸ்ரீதேவி நல்ல கிளாமரான பாட்டியானபிறகும்கூட, அவரைப்பார்த்து ஜொள்ளு விட்டு போணிகபூரை, கூடஒரு ஃபுல் அடிக்கவைப்பதென்பது, எந்தவித நியாயங்களுக்கும், தர்மங்களுக்கும் ஒத்துவராதது மிஸ்டர் ராங் கோபால் வர்மா.
இதே ’இங்கிலீஷ்
விங்கிலீஷ்’ படத்துக்கு
ஒரு நாள் கூத்துக்கு அஜீத்தை அழைத்தபோது, ‘சரி ஈராஸ் நிறுவனத்துக்கு பெரிய விலைக்குத்தானே விற்றிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் ஒரு நல்ல சம்பளம் கேட்டுப்பார்த்தார்.
நடுவில்
என்ன நடந்ததோ தெரியவில்லை. ‘நான் கேக்குற சம்பளம் உங்களுக்கு கட்டுபடியாகலையா/ சரி சும்மாவே பண்ணித்தர்றேன்’ என்றபடி, ஒரு
நயா பைசா சம்பளமும் வாங்காமல், சொந்தக்காசில்
ஃப்ளைட் டிக்கட் போட்டுக்கொண்டு, சொந்தக்காசில் ஹோட்டலில் ரூம் போட்டு, சொந்தமாக
நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் அஜீத்.
மற்றவர்கள்
மீது அன்பு காட்டுவதிலாகட்டும், கோபம் கொள்வதிலாகட்டும், சினிமாவுக்கு வந்த முதல் நாளிலிருந்தே அஜீத் இப்படித்தான்.
போன வெள்ளியே
ரிலீஸ் பண்ணும் எண்ணத்தில், சுமார்
எட்டுதினங்கள் முன்பு பிரசாத் லேப் தியேட்டரில் ‘ஆச்சரியங்கள்’ படம் போட்டார்கள்.
’கடவுளுக்கு ஒரு ஷோ போட்டா நல்லாருக்குமே’ |
படம்
துவங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் மத்தியில், ஒரு
புதுவரவு கண்டு சற்றே மலர்ச்சியடைந்தபோது, ‘பிரதர் அவங்க இந்தப்படத்தோட ஹீரோயின் ஐஸ்வர்யா. அடுத்த
பிரஸ்மீட்டுக்கெல்லாம் வரமாட்டாங்க. க்ளோசப், ரவுண்ட்
ட்ராலி எதுவாயிருந்தாலும் இப்பவே போட்டு முடிச்சிக்கங்க’ என்று வெறுப்பேத்தினார்கள். ( ஒருவேளை படம் சரியா ஓடலைன்னா ‘ஓஹோ
புரடக்ஷன்ஸ்’ல நிருபர்
வேலை காலி இருக்கு. நீங்க
எப்ப வேணுமுன்னாலும் ஜாய்ன் பண்ணலாம் ஐஸூ)
’ஆச்சரியங்கள்’ கதாநாயகன் ஒரு நாள் நண்பர்களுடன் ஓவராக சரக்கடித்துவிட்டு, ‘மந்தமான வாழ்க்கை எனக்கு போரடிக்கிறது. ஆகவே என் வாழ்க்கையில் ட்விஸ்ட் மற்றும் டர்னிங் பாயிண்டுகளைக்கொடு’ என்று கடவுளை டார்ச்சர் பண்ணுகிறான்.
அடுத்த
சில நிமிடங்களில் ஒருவிபத்தை ஏற்படுத்தி, அவனது
செல்போன் மூலம் அவனைத்தொடர்பு கொள்ளும் கடவுள் ‘ மகனே நீ கேட்டது
அருளினேன். யுவர்
கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்’ என்றபடி
தொடர்பை துண்டித்துக்கொள்ள, அவன் படுகிற பாடு இருக்கிறதே, இந்த
படத்துக்குப்போனதால் தியேட்டரில் நாம் படுகிற பாடுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது.
இயக்குனர்
ஹர்ஷவர்த்தன் கமலின் தீவிர ரசிகர் என்பது திரைக்கதை முழுக்க தெரிகிறது. அவர்
மூன்று வருடங்களுக்கு முன்பு நடத்திய சினிமா வொர்க்ஷாப்பில்
கலந்துகொண்டது தவிர எந்த சினிமா அனுபவமும் இல்லாமலே ‘ஆச்சர்யங்களை’ இயக்கியிருக்கிறார் என்பது எந்தவித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை.
குறும்படங்களை
மட்டும் தொடர்ந்து இயக்கினால், இவர்
பெரிதும் பிரகாசிக்க வாய்ப்பு இருக்கிறது.
இடையிலும்
ட்ரெயிலர் மற்றும் பட புரமோஷன்களுக்காகவும்
பலமுறை கமலை சந்தித்திருக்கிறார் ஹர்ஷவர்த்தன்.
இந்தப்படத்தின்
புரமோஷனுக்காக கமல் பேசிய வீடியோ பதிவு ஒன்றை படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர்
ரிலீஸன்று
போட்டார்கள். அதுவரை எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
’’கடவுள்
இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வி என்னை நோக்கிப்பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. அவர் இருக்கிறார் என்று சொல்லவிரும்பும் வேலைகளில் எல்லாம் இருக்கிறவர், தான் இருக்கிற வேலையை அவரே வந்து ஏன் சொல்லக்கூடாது என்கிற கேள்வி ஒருபுறமும், அவர்
இல்லையென்று சொல்வதானால், இல்லாத ஒருவரை, அவர்
இல்லாத ஒரே காரணத்துக்காக எதற்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லி வம்பிழுக்கவேண்டும் என்றும்…
சார்
எங்க ஓடுறீங்க. கமல்
சார் இன்னும் பேசவே ஆரம்பிக்கலை.
thalaiya, thalapathyanu, ketta "kamal" madhiri puriyyamali pesukitu irukka, "*§€$$£ adigada ivana "
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்!நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html