’கண்ணாடி போட்டுக்கிட்டா நீங்க அறிவுஜீவி மாதிரி தெரியிறீங்க சார்’ என்று ஹீரோயின் சொன்னதால் ஸ்டைலுக்காக போட்டுக்கொண்ட கிளாஸ். |
’ஓஹோ’வுல கடைசியா எழுதி ஒன்பது மாசங்களாச்சி. நண்பர்கள் சிலர் அன்பா சொல்லிப்பாத்தாங்க. சிலர் அடிச்சும் சொன்னாங்க. இன்னும் ஒருத்தர் பாசத்தின் உச்சிக்கே போய் ‘மரணகுறிப்பு’ கூட எழுதிப்போட்டார்.
ம்ஹூம் என்னத்தைச்சொல்ல, ‘சிநேகாவின் காதலர்கள்’ சின்ன பட்ஜெட் படம்ங்குறதால படப்பிடிப்பு முழுக்கவும் ஒரே படபடப்புதான்.
இப்ப ஒருவழியா எல்லாவேலைகளும் முடிஞ்சி, பின்னணி இசை வரைக்கும் வந்தாச்சிங்கிறதால இனிமே வாரத்துக்கு ஒண்ணுரெண்டுவாட்டி பதிவுகள் எழுதமுடியும்னு நெனச்சி, பழையபடி களம் இறங்கியிருக்கேன்.
ஏற்கனவே எழுதினப்போ என்னை அமோகமா ஆதரிச்ச ‘ப்ளாக்’ உள்ளங்களை எப்பிடி கண்டடையப்போறேன்னு வெளங்கலை.
‘அதுசரி, படம் எப்பிடி வந்திருக்கு?’
இதுதான் நண்பர்கள் மத்தியில், சமீபத்தில், நான் அதிகம் சந்திக்கும் கேள்வி.
என்கிட்ட இதுக்கு சரியான பதில் இல்லை. வேணும்னா, இப்போதைக்கு, தலைவரோட பாட்டு ஒண்ண பாடலாம்... ‘கதைபோல தோணும், இது கதையே அல்ல....’
இப்போதைக்கு நீங்க இருக்குற திசையை நோக்கி, ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்.
எழுப்பி, தண்ணி தெளிச்சி உக்காரவைய்ங்க. மறுபடியும் கச்சேரியை ஆரம்பிச்சிரலாம்.
No comments:
Post a Comment