Monday, July 21, 2014
ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று
'ஓஹோ’ பக்கம் லேசாய் எட்டிப்பார்க்கும் நேரமெல்லாம், ‘அடடா, எழுதி எவ்வளவோ மாதங்கள் ஆகியும், நேற்று கூட நூறுபேர் வந்துபோயிருக்கிறார்களே’ என்று தெரியும்போது, கடுமையான குற்ற உணர்ச்சி வந்துபோவதென்னவோ உண்மைதான்.
நம்ம படம் படுத்திய பாட்டில், அவ்வப்போதுகூட எழுத இயலாமல் மிகவும் சோர்ந்துபோய்விட்டேன்.
இனி?? படம் இயக்கிய அனுபவம் குறித்து, சுவாரசியமான பல நூறு பதிவுகள் எழுத முடியும் எனினும், வெட்டி ப்ராமிஸ் தர மனம் சம்மதிக்கவில்லை.
இங்கே கீழே இருக்கும் பதிவு கூட சற்றுமுன்னர் ஃபேஸ்புக்கில் எழுதிப்போட்டது.
கிராமப்புறங்களில் கொஞ்சம் குழப்பமான மனநிலையில் அலைபவர்களை ‘மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி அலையுது பாரு’ என்பார்கள்.
அந்தப்பழமொழிக்கு அர்த்தம், விஷுவலாக பார்க்கவேண்டுமானால், இப்போதைக்கு என்னைப்பார்த்தால் போதும்.
ஆகஸ்ட் 15 நம்ம ‘சிநேகாவின் காதலர்கள்’ ரிலீஸ் என்று விளம்பரம் வந்தவுடன், மாட்டை சகலரும் மானாவாரியாக கன்ஃபியூஸ் செய்கிறார்கள்.
நம்முடையது மிகமிகமிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சின்னப்படம். எனவே படம் நூறு நாட்கள் ஓடி, பலகோடி களைக் குவிக்க வேண்டும்...என்ற பேராசையெல்லாம் எனக்கோ தயாரிப்பாளருக்கோ இல்லை.
இந்தச்சூழலில் படத்தில் சிநேகா பேசும் ஒரு வசனத்தை போட்டால் பொருத்தமான இருக்கும் என்று கருதுகிறேன்.
சீன் நம்பர் [அநேகமாக] 47... இரவு...கொடைக்கானல் கெஸ்ட் ஹவுஸ்.
....எழிலை நோக்கி சிநேகா..
‘பாலச்சந்திரன் சுள்ளிக்காடெல்லாம் நீ படிச்சிருக்க வாய்ப்பே இல்ல..... அவரு சொல்றாரு....
ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று. ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை, அது உங்களுக்காக, பொத்திவைத்து காத்திருக்கும் எப்போதும்.....
Subscribe to:
Post Comments (Atom)
படம் நல்லா இருக்கிறதாகச் செய்தி. சீக்கிரம் பார்க்கணும்.
ReplyDeleteவாழ்த்துகள்.