Friday, June 1, 2012

விமர்சனம் ‘மனம் கொத்திப்பறவை’ –தமிழ் சினிமா துண்டிக்கவேண்டும், எழிலுடனான உறவை


இப்பிடியே தியேட்டருக்கு வர்ற எல்லாருக்குமே காதுல சொருகுறாய்ங்களாம்


விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் தன் கிராமத்துக்கு காரில் வருகிறார் சிவகார்த்திகேயன் [சி.கா]. அவரைப்பார்த்து அவரது நண்பர்கள் தெறித்து ஓடுகிறார்கள்.தன் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு எதிர்வீட்டை ஏக்கமாய் பார்த்தபடி, அவருக்கு சற்றும் ஒத்துவராதபேஸ் வாய்ஸில்தனது பழைய்ய்ய கதையை, தமிழ் சினிமா இதுவரை பார்த்துப் பார்த்து சலித்து புளித்துப்போன  கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

சி. கா.வின் எதிர்வீடு பணக்காரக்குடும்பம். நாயகியின் வீடு அதுதான் என்பதைச்சொல்லித்தெரியவேண்டியதில்லை.[ ஆனால் டிஸ்கசனில் இந்த முடிவை எடுப்பதற்கு 20 நாள் வரை இழுப்பார்கள்.] நாயகிக்கு அன்பான அப்பா. பாசத்தைக்கொட்டும் பெருமீசைக்கார அண்ணன்கள். பேத்தியின் கல்யாணத்தைப்பார்ப்பதற்காகவே உயிரோடு இருக்கும் ஒரு பாட்டி. செண்டிமெண்டுக்காகவே சின்ன வயசுலெயே பொட்டுன்னு போய்ட்ட அம்மா.
நாயகி சின்னவயசிலிருந்தே தோழி என்பதால் சி. கா. அவரை காதலிக்க, வழக்கம்போல் நாயகியைக் கேக்காமலே பாசக்கார,மீசைக்கார அப்பா திருமண ஏற்பாடு செய்துவிட, சி.கா.வின் நண்பர்கள் பொண்ணு மாப்பிள்ளையை கடத்திவிட , எப்பாடு பட்டு பிற்பாடு அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள் என்பதை காதல்-ல் கொஞ்சம், ‘காதலுக்கு மரியாதையில் கொஞ்சம், அதில் கொஞ்சம் ,இதில் கொஞ்சம் என்று , கதையை பிச்சைக்காரன் தட்டுமாதிரியே பல அயிட்டங்களுடன் பரிமாரியிருக்கிறார் எஸ்.எழில்.

எதிர்காலத்தில் நடிப்பில், தனுஷுக்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சி.கா., இதுபோல் இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் மீண்டும் சின்னத்திரை கார்த்திகேயனாக மாறும் வாய்ப்பே அதிகம்.

நாயகி ஆத்மியா, சும்மா ஒரு தடவை பாத்தியா போய்க்கிட்டே இருஎன்று சொல்லவைக்கிற சுமார் ரகம். நாயகிக்கான லட்சண,பட்சணங்கள் எதையும் அவரிடம் காணோம்.
சி.கா.வின் நண்பர்களாக வந்த சிங்கம்புலி,பரோட்டா சூரி,சாம்ஸ்,இத்யாதிகள் காமெடி என்ற பெயரில் மரண மொக்கை போடுகிறார்கள்.

இன்னொருபக்கம் பெரிய பெரிய மீசைகள் வைத்துக்கொண்டு அண்ணன்கள் என்ற பெயரில் வரும் வில்லன்கள், அவர்களைப்பற்றி அடிக்கடி ‘’மீசை வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலையேடாஎன்று எழில் ஏதாவது சமூகச்சிந்தனை சொல்ல வருகிறாரா?

அறிமுக ஒளிப்பதிவாளர் நல்லுச்சாமியின் டிஜிட்டல் ஒளிப்பதிவு பல இடங்களில் பல்லிளிக்கிறது.
இசை இமான். ’பின்னணி இசைங்கிறது கொஞ்சம் கஷ்டமான விஷயம் அது நமக்கு எப்பவும் வராது. ஆனா அட்லீஸ்ட் பாட்டுகளுக்காவது இன்னும் கொஞ்சம் மெனக்கெடனும் பாஸ்’. ஏதொன்னுக்கும் இனிமே சர்ச் புரோகிராம் எதுவும் வந்தா தட்டிக்கழிக்காம ஒத்துக்கங்க.

நம்ம பறவை கையில கிடைச்சா பிரியாணி பண்ணி சாப்புட்டுருவாய்ங்க போலருக்கே?


ரு மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்த.கொ. பிரஸ்மீட் ஒன்றில்,…

 ‘’நடுவுல ரெண்டு மூனு சுமாரான[?] படங்களை குடுத்துட்டு,அடுத்து என்ன செய்யிறது, யாரைப்போய் பாக்குறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கிறப்பதான், என்னோட இளவயது கல்லூரி நண்பர்கள் கைகொடுக்க முன்வந்தாங்க..

இந்த நண்பர்கள் இல்லைன்னா நான் இன்னொரு படம் எடுத்திருக்க முடியாமலே போயிருப்பனோன்னு யோசிக்கிற அளவுக்கு இன்னைக்கு இண்டஸ்ட்ரியோட நிலைமை இருக்கு. ரெகுலர் புரடியூசர்கள்னு இப்ப யாருமே இல்லை. பொதுவா சினிமாவோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.’’ என்று நண்பர்களைப்பற்றி நெகிழ்ந்தார் எழில்.

இந்த நண்பர்களின் அன்பை, நம்பிக்கையை எழில் காப்பாற்றுவாரேயானால், துவண்டுகிடக்கும் வேறுசில நல்ல இயக்குனர்களின் நண்பர்கள், தங்கள் நண்பனை நம்பி படமெடுக்க வருவார்கள்.

அதற்கான முன்னத்தி ஏராக இருப்பாரா எழில்?.
  என்று நானும் ஒரு அற்ப ஆசையில் எழிலுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன்.

ந்த வேண்டுகோள் டமாரச்செவிடன் காதில் ஊதிய சங்காக ஆனநிலையில்,
இப்போது தமிழ்சினிமாவுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன்.

அத்தனை தோல்விப்படங்கள் தந்த பிறகும் கைகொடுத்த நண்பர்களின் அன்பையும், பணத்தின் மதிப்பையும் புரிந்துகொள்ளாமல், ஒரு அரதப்பழசான கதையை எடுத்து, அதை அதையும் விட அரதப்பழசாக நம்மை கொத்தித்தள்ளிய எழிலை கதையில் வருகிற மீசைக்கார அண்ணன்களிடம் ஒப்படைத்து, கதையில் சி. கா. மற்றும் நண்பர்களுக்கு என்ன நடந்ததோ அதை நடத்தித்தருமாறு தரைமட்டமாக விழுந்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.


[விமர்சனம்,மனம் கொத்திப்பறவை, சிவகார்த்திகேயன்,எஸ்.எழில், ஆத்மியா,சிங்கம்புலி,பரோட்டா சூரி, ]





8 comments:

  1. மனம் கொத்தி பறவை

    பர்ஸை கொத்திவிட்டது போல

    ReplyDelete
  2. மனம் கொத்தல..சரக்கு பத்தல..இதைப்பாக்குறதுக்கு பதில் வீட்டுல உட்கார்ந்து போடலாம் ரெண்டு வெத்தல

    ReplyDelete
  3. டயலாக் பின்னிட்டீங்க முத்தண்ணா... எதுகை மோனைல டி.ராஜேந்தருக்கு அடுத்த வாரிசு நீங்க தான் போங்க.

    ReplyDelete
    Replies
    1. அட ஆண்டவா டி.ராஜேந்தரையெல்லாம் இந்த ஜென்மத்துல இன்னொருத்தன் நெருங்க முடியுமா? அவ்வளவு நாத்தமடிக்குமுங்க..

      Delete
  4. விமர்சனம் சூடா போட்டிருக்கீங்க, சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் ஆஸ்தான காம்பியராய் தொடர வாய்ப்புகள் நிறைய ஆயிருக்கு இந்த படத்துக்கு அப்புறம்..

    //மனம் கொத்தல..சரக்கு பத்தல..இதைப்பாக்குறதுக்கு பதில் வீட்டுல உட்கார்ந்து போடலாம் ரெண்டு வெத்தல//

    ஹா ஹா.. இது சூப்பர்.. :))

    ReplyDelete
  5. siva karthikeyam padam ellam poy paakureengala??? enna kodumai boss ithu????

    ReplyDelete
  6. என்ன பாஸ் இப்பிடி சொல்லீட்டீங்க. சிவகார்த்திகேயனை அடுத்த தனுஷுன்னு பேசிக்கிறாய்ங்க..

    ReplyDelete