பாஸ்வேர்டை தொலைச்சிட்டு பொண்ணு அலையுது ஹெல்ப் பண்ணுங்க பாஸ் |
ஒரு பெரும் கேப்புக்கு அப்புறமாய்
வந்த வடிவேலுவின் படம் ‘மறுபடியும்
ஒரு காதல்’ இவ்வளவு பெரிய ஆப்பாக இருக்கும் என்று நாங்கள் யாரும்
எதிர்பார்த்திருக்கவில்லை.
பழைய சினிமா ஃபார்மூலாவின்
படி, ஹீரோ டாக்டராக வந்ததால்,
தனி டிராக்கில் போலி டாக்டராக வந்த வடிவேலு, சொற்ப
இடங்கள் தவிர எங்கும் சிரிக்க வைக்கவில்லை.
ஆனால் மெயின் கதை மெய்யாலுமே
பயங்கர காமடியாக இருந்தது.
லண்டனில் இருந்தபடி, வானொலி நிலையங்களுக்கு கவிதை எழுதும் நாயகியும்,
டாக்டருக்கு படிக்கும் சென்னைப்பையனும்,
பார்க்காமலே, கண்றாவியாய் கவிதைகள் எழுதி காதலிக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் புகைப்படங்களைக் கூட பரிமாறிக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் காதலனுக்காகவே மெடிக்கல் படிக்க சென்னை
வரும் பொண்ணு, வரும்போது ’பென் ட்ரைவை’
மறந்து வைத்துவிட்டு,சென்னையில் வந்து காதலனைக்
கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறுகிறார்.
பாவம், அவருக்கு யூசர் நேம் பாஸ்வேர்டு மறந்துவிடுகிறது.
கம்ப்யூட்டரை ஆன் பண்ணப்போகும்போது கரண்ட் கட் ஆகிவிடுகிறது.
கரண்ட் வரும்போது கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிவிடுகிறது. அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் பண்ண ஒரு ஆளுக்கு சொல்லிவிடும்போது அவருக்கு ஹார்ட்
அட்டாக் வந்து ஐ.சியூ.வில் சேர்க்க நேரிடுகிறது. இருவரும் தற்செயலாக சந்திக்க நேரும்போது காற்றில் பறந்து வரும் கவிதைப்பேப்பர் திடீர் மழையால் நனைந்துவிடுகிறது. இப்படி தமிழ்த்திரையுலகம் முன்னெப்போதும் சந்தித்திராத, இனியெப்போதும்
கூட சந்திக்க விரும்பாத அளவுக்கு சகுனத்தடைகள்.
ஆனால் இவ்வளவுக்கும் மத்தியில், அவர்களுக்கு,
தாங்கள் இருவரும் காதலர்கள் என்று தெரியாமலே திருமணம் நடந்துவிடுகிறது. அந்த உண்மை தெரியாததால்,
‘கூடாமல்’ கூடிவாழ்கிறார்கள்.
தனது காதலியை சந்திக்க முடியாததால் குடிப்பழக்கத்துக்கு
அடிமையாகும் ஹீரோ, க்ளைமாக்ஸில் ஆக்சிடெண்ட் ஆகி மருத்துவமனையில்
இருக்க உண்மை தெரிந்து ஹீரோயின் ஆஸ்பத்திரிக்கு ஓட, ஹீரோ இறந்துவிட, அவர் மடியிலேயே ஹீரோயினும் உயிர்விட,
காரணத்தை வெளியே சொல்லமுடியாமல், நாம் கதறி அழ ஆரம்பிக்கிறோம்.
தன்னுடன் விமானத்தில் பயணம் செய்த முதியவர்
ஒருவர், தன் காதலிதான், தனக்கு மனைவியாக வாய்த்திருக்கிறார் என்று தெரியாமல் 30 வருடம்
சேர்ந்து வாழ்ந்ததாக சொன்ன கதையை ஆதாராமாகக் கொண்டுதான் இப்படத்தை இயக்கினாராம் வாசு பாஸ்கர்.
முப்பது வருடக்கதையை மூன்று வருடங்களாக
குறைத்தே நம்மை இவ்வளவு துவம்சம் செய்தவர், ஒருவேளை 30 வருடக்கதையாக எடுத்திருந்தால்…?
அந்த பயங்கரத்தை நினைத்துப்பார்க்கவே பயங்கரமாக இருப்பதால் …ஸ் அப்பாடா விட்டுவிடுவோம்.
கடந்த வியாழனன்று பிரசாத் லேப் தியேட்டரில் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பத்திரிகையாளர்கள்
பலரது முகத்தில் எதையோ பறிகொடுத்த தோற்றம்.
செய்வதறியாது திகைத்து நின்ற சிலர்.
ஒருவர் சிகரட்டை தலைகீழாக பிடித்து ஃபில்டருக்கு நெருப்பு வைத்துக்கொண்டிருந்தார்.
இன்னொருவரோ
அனைவரையும் அவசர அவசரமாக கிராஸ் பண்ணியபடி, ‘மறுபடியும் மறுபடியும்
காதலிக்கனும்போல இருக்கு’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே போனார்.
ஒரு மூத்த பத்திரிகையாள நண்பரை நெருங்கி,’’ உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சி பாஸ்? என்றேன்.
‘’அது ஆச்சி. பதினைஞ்சி வருஷம். இப்ப என்னத்துக்கு அந்த துயரத்தை ஞாபகப்படுத்துறீங்கலாம்?’’
‘’ஒரு காரணமாத்தான்.
குறுக்க பேசாம நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது நேர்ல பாக்காம , கவிதைகள் மூலமாவோ, போன் மூலமாவோ
லவ் பண்ணியிருக்கீங்களா?
’’ஆமா பண்ணியிருக்கேன்.’’
‘’உங்கது லவ் மேரேஜா, அரேஞ்சுடு மேரேஜா?’’
‘’அரேஞ்ஜ்டுதான்’’
‘’கொஞ்சம் திங்க் பண்ணிப்பாருங்க. ‘ மறுபடியும்
காதல்’ல வந்த மாதிரியே, நீங்க கவிதை எழுதி காதலிச்சவங்கதான் உங்க மனைவியா வந்துருக்காங்கன்னு
திடீர்னு இன்னக்கி நைட் தெரிஞ்சா உங்க ஃபீலிங் என்னவாம் இருக்கும் பாஸ்?’’
’’ஏற்கனவே மனுஷன் நொந்து அந்து வெந்து
போய்க்கிடக்கப்ப’’ என்ற மைண்ட் வாஸுடன், அவர் அவசர அவசரமாக எதையோ தேட ஆரம்பிக்க…சைக்கிள்
கேப்பில் நான் எஸ்கேப்.
’கொஞ்சம் திங்க் பண்ணிப்பாருங்க. ‘ மறுபடியும் காதல்’ல வந்த மாதிரியே, நீங்க கவிதை எழுதி காதலிச்சவங்கதான் உங்க மனைவியா வந்துருக்காங்கன்னு திடீர்னு இன்னக்கி நைட் தெரிஞ்சா உங்க ஃபீலிங் என்னவாம் இருக்கும் பாஸ்?’’//
ReplyDeleteஅண்ணே உங்க பீலீங் எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் சொல்லுங்களேன்
// காரணத்தை வெளியே சொல்லமுடியாமல், நாம் கதறி அழ ஆரம்பிக்கிறோம்// அண்ணே, எப்படிண்ணே இப்படியெல்லாம். சும்மா அது பாட்டுக்கு வருது போல.
ReplyDelete