Monday, June 11, 2012

எதையும் தாங்கும் இதயம் வேணுமா, பாருங்க ‘இதயம் திரையரங்கம்’



 

கக்கொடுமையான விசயம் ஒரு படம் எவ்வளவு நேரம் ஓடப்போகிறது என்பது தெரியாமல் பார்ப்பது. எனவே எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் சரி, சென்சார் சர்டிபிகேட் போடுவதற்குள், சீட்டில் உட்கார்ந்து விடத்துடிப்பேன் நான்

வண்டியை பார்க்கிங் பண்ணுவதில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சினையால் என்னால்இதயம் திரையரங்கம்படத்துக்கு சுமார் மூன்று நிமிடங்கள் தாமதமாகவே நுழைய முடிந்தது. அதனால் என் இதயத்துக்கு ஏற்பட்ட இழப்புகள் சொல்லி மாளாது.

தியேட்டருக்குள் நுழைந்து தட்டுத்தடுமாறி என் சீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, நம்ம குந்தாணியக்கா கவிதா, சேலையைத்துக்கி தனது வலது கெண்டங்காலால்,’வெண்மணிபடம் எடுத்த இயக்குனர் திருமாவளவனை ஓங்கி ஒரு மிதிவிட்டுக்கொண்டிருந்தார்.

அந்தப் பெண்யானையின் மிதி தாங்காது அவர் உடனே வட்டிப்பணத்தை கொட்டிவைக்க, ‘’அந்த பயம் இருக்கட்டும்என்று அக்கா கிளம்ப,அடுத்து கியூவில் இருந்தவர்கள் ‘’அக்கா நாளைக்கு தரவேண்டிய வட்டிப்பணம்’ ,அக்கா நாளைக்கு மறுநாள் தரவேண்டிய வட்டிப்பணம்என்று, இனிமேல் வாங்கப்போகிற பணத்துக்கெல்லாம் வரிசையாக வட்டி  கொட்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் வர்றதுக்கு முந்தி என்ன நடந்துச்சி என்று பக்கத்து சீட்டு பத்திரிகையாளர்களிடம் துழாவியபோது, ‘ஒழுங்கா படம் படம் பாக்குறியா. கவிதா அக்காவ கூட்டியாந்து உன்ன ஒரு மிதிவிடச்சொல்லவா?’ என்ற கடுமையான பதில் வந்தது

பத்திரிகையாளர் மத்தியிலும் கவிதாக்காவுக்கு வேண்டிய சில கந்துவட்டி விஷமிகள் இருப்பதை புரிந்துகொண்டு சைலண்டாகப்படம் பார்க்க ஆரம்பித்தேன்.

கதை இதுதான்.

வாஸ்து பார்த்து, வட்டி, வரி, கிஸ்தி வசூலித்து இண்டஸ்ட்ரியை கலக்கிவரும் கவிதாக்கா, தன் மகள் ஒரு சாதாரண பையனை காதலிப்பதை அறிந்து வெகுண்டு, மகளை தன் சொந்த மகனுக்கே கட்டி வைக்க முடிவெடுக்கிறார்.

இந்த ட்விஸ்டைப்பார்த்து மொத்த திரையரங்கும் அதிர்ச்சியடையும் என இயக்குனர் ராம்கி எதிர்பார்த்த வேளையில், அனைவரும் கொட்டாவி விட, இடைவேளை விடுகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அடுத்த வருஷம் சியர் கேர்ள்ஸ்

பின்னர் அது கவிதாவின் சொந்த மகள் அல்ல வாஸ்து பார்த்ததால் வந்த மகள் என்று தெரியவரும்போது, நாமும் ஏறத்தாழ வட்டி கிடைக்காத கவிதாக்கா மாதிரியே ஆவேசமாகிவிடுகிறோம்.

படத்தின் தயாரிப்பாளர் விஜயபத்மா, என்னைப்போலவே  ஒரு ரிடையர்ட் பத்திரிகையாளர் என்று அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.

[ ஹி..ஹி.. என்கிட்ட கூடஉதயம் திரையரங்கம்னு ஒரு மொக்க சப்ஜெக்ட் இருக்கு மேடம். கூடவே செகண்ட் ஆஃப்ல வர்ற மாதிரி, ‘மொக்கையும் மொக்கையும் சேர்ந்துச்சாம்,. முருங்கை மரத்துல ஏறிச்சாம்,. கட்டெறும்பு கடிச்சிச்சாம்,. கால்கால்ன்னு கத்திச்சாம்ன்னு ஒரு குத்து சாங் லிரிக்ஸோட ரெடியா இருக்கு ]

‘’மேடம் இந்தப்படத்திற்கு ஏன்இதயம் திரையரங்கம்என்று பெயர் வைத்தீர்கள் என்று கேட்கும் துணிவு என்னிடம் இல்லை. ஏனென்றால் நான் ஒரு ரிடையர்ட் கேஸ். ஆனால் இந்தப்படத்தை பார்த்தபிறகு, இனி வாழ்க்கையில் எதையும் தாங்கும் இதயத்தை எனக்கு கொடுத்துவிட்டீர்கள். நன்றி

பற்பொடி விளம்பரம் கூட இப்ப நல்லா எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க


 மீபத்தில் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதாத படங்களின் எண்ணிக்கை இப்போது அரை டஜனை தாண்டிவிட்டது.  எழுதாமல் பெண்டிங்கில் கிடந்ததால், அந்தப்படங்கள் என் மனசுக்குள் ஏற்படுத்திய வலியை ஒத்த வலியுடன் ஓர் இளைஞரை நேற்று சந்தித்தேன் .திரையில்தான்.

படத்தின் பெயர்பொற்கொடி பத்தாம் வகுப்புடைட்டிலுக்கு அடியில்ஆத்தா நான் பாஸாயிட்டேன்என்று சப் டைட்டில் வைத்திருக்கலாமே என்று யோசித்தபடியேதான் .வி.எம். .சி தியேட்டருக்குள் நுழைந்தேன்.

’’பொற்கொடி மனசு வலிக்குது பொற்கொடி. அன்பே கிடைக்காதப்ப இருந்த வலியை விட, கிடைச்ச அன்பு மறுபடியும் இல்லாம போறது பெரிய வலி பொற்கொடி. உயிர் வரைக்கும் வலிக்குது பொற்கொடி. பசியில வயிறு வரைக்கும் வலிக்குது பொற்கொடி. தயிர் சாப்பிட மனசு வராம வலிக்குது பொற்கொடி.’’

தான் காதலித்த பத்தாம் வகுப்புத் தோழியை கற்பழித்த தந்தை பாலாசிங்கை போட்டுத்தள்ளி விட்டு, சில் அவுட்டில் காலாற சொந்த ஊரைநோக்கி, நடந்தபடியே போய்க்கொண்டிருந்தார் ஹீரோ.

ஹீரோ பிரவீணின் அப்பா சதா சாராயம் காய்ச்சுகிறார். ஹீரோயின் பிருந்தாவின் அப்பா சதா சாராயம் குடிக்கிறார்.

ஊர் மொத்தமும் சாராயம் குடிக்கிறது. அதை நிறுத்துவதற்காக அந்த ஊர் பள்ளி வாத்தியார், மாணவர்களின் உதவியுடன் ஒரு ஐடியா பண்ணுகிறார். இனி ஆண்கள் குடித்தால்,பதிலுக்கு பெண்களும் குடிப்போம் என்று கணவர்களை மிரட்டுவதற்காக,  மாணவர்கள் ஒவ்வொரு வீடாக டூப்ளிகேட் சரக்கு வைக்க, அதை வில்லன் எடுத்துவிட்டு, ஒரிஜினல் சரக்கை வைக்க, அதைக்குடித்துவிட்டு, அந்த கிராமத்து பேரிளம்பெண்கள் ஆடும் ஒரு குத்துப்பாட்டுதான் சமீபத்திய தமிழ்சினிமாவின் கும்மாங்குத்து.

படத்தின் இன்னொரு முக்கியமான ஹைலைட். வில்லனுக்கும், ஹீரோயினுக்கும் ஒரு முழு நீள குத்து டூயட் வைத்திருப்பது.

சாராயம் குடிக்கும் கிராமத்தின் கதையில் ஸ்கூல் காதலை சைடிஷ் ஆக வைத்து, படம் நெடுக சோகத்தைப் பிழிந்துகொண்டிருந்தார் டைரக்டர் பழ.சுரேஷ்.

பொற்கொடியின் மூலம் நமக்கு என்ன சொல்ல வருகிறார்? எதற்காக அதைச்சொல்லவந்தார்,?? எப்படியெல்லாம் அதைச்சொல்லியிருக்கிறார்??? என்றெல்லாம் யோசித்தபடியே, க்ளைமேக்ஸ் முடிந்து வெளியேறும்போது, சற்றே நினைவு தப்பியதால், பையிலிருந்த . டி கார்டை எடுத்து நான் யார், என் பெயர் என்ன, எதற்காக இந்த பூமிக்கு வந்தேன் போன்ற விபரங்களை நினைவுபடுத்திக்கொண்டு வீடு நோக்கி திரும்பலானேன்.






9 comments:

  1. உண்மையிலேயே உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம்தான் போலருக்கு, நெக்ஸ்ட் ஷோ இதயம் திரையரங்கம்ம் டிக்கெட்டு வேணுங்களா?

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வர்றதா இருந்தா போகலாம்..

      Delete
  2. //என்னைப்போலவே ஒரு ரிடையர்ட் பத்திரிகையாளர் என்று அறிந்து //

    என்னது ... ரிட்டையர்ட் ஆய்ட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. கிராமத்துப்பக்கம் ‘என்னது எம்.ஜி.யாரு செத்துட்டாரா’ ந்னு அதிர்ச்சியாகுற பெருசுகள் ஒன்னு ரெண்டு இன்னும் கூட நடமாடுதுன்னு கேள்விப்பட்டுருக்கேன்.அது மாதிரியே இருக்கே உங்க கேள்வி?

      Delete
    2. பெருசுகளே அப்படித்தான் .......!

      Delete
  3. இதயம் திரையரங்கம் படம் இதற்கு முன்னல் நானும் என் காதலும் என்ற பெயரில் இருந்தது. பின்னால் ஏதோ உட்டாலக்கடி பண்ணி பெயர் மாற்றம் நடந்து வெளியாகியிருக்கிறது. நான் பார்த்தே சுமார் ஒர் எட்டு மாதம் இருக்கும். அதே போல தேன்மொழியை பார்த்து ஆறு மாதம் ஆகிவிட்டிருக்கும். ம்ஹும். என் கொடுமை தனிக் கொடுமைன்ணே.. இதோ போன வாரம் கூட.. பேர் சொல்ல முடியலை.. இல்லை.. மறந்திருச்சு..

    ReplyDelete
    Replies
    1. அண்ணே கொஞ்சம் குழப்பமாதான் இருக்கீங்க போலருக்கு.ஏதொன்னுக்கும் ஒரு நல்ல டாக்டரா பாத்து செக் பண்ணிக்கங்க.

      Delete
  4. இந்த லட்சணத்துல . .

    இந்த விஜய பத்மாவும் ராம்கியும் . .

    மக்கள் டிவில குறும்பட இயக்குனர்களை

    வறுத்தெடுப்பாங்க பாருங்க . . .


    ரொம்ப கொடுமை அண்ணே . . .

    ReplyDelete