Sunday, June 17, 2012

விமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை




 ரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின்  ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக கொட்டத்தில் கட்டிப்போட்டிருந்த அவருடைய ‘முரட்டுக்காளையை கொட்டகைகளுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.

80’ல் வந்த பழையமுரட்டுக்காளையின் கதை என்னவோ வழக்கமான மசாலாதான் என்றாலும், முதன்முதலாக ஜெய்சங்கர் வில்லன் வேடன் ஏற்றதும், சுருளிராஜனின் யாரும்  எதிர்பாராத ஃப்ளாஷ்பேக்கும், இசைஞானியின் நெசவில், எஸ்.ஜானகியின் கொஞ்சல் குரலில்எந்தப்பூவிலும் வாசம் உண்டு’  மற்றும் ‘அண்ணனுக்கு ஜேமாமன் மச்சான்புது வண்ணங்கள் பொங்கிடும் சோலைஎன்ற ராஜாவின் மெட்டுக்களும் படத்தை பெரும் ஹிட்டாக ஆக்கின.

இன்று தொழில் நுட்பம் நாலுகால் பாய்ச்சல் எடுத்திருக்க, உலகமே உள்ளங்கையில் என்பதால் ரசிகரசனை எட்டுக்கால் பாய்ச்சலில் இருக்க, பழைய ‘முரட்டுக்காளைக்கு என்ன வகையிலெல்லாம் வண்ணம் பூசி மெருகேற்றியிருக்கிறார்களோ என்ற நப்பாசையுடன் தியேட்டருக்குப்போனால்…?

ரஜினியின் காளையன் வேடத்தை சுந்தர்.சி ஏற்க, ரத்தி அக்னிஹோத்ரியாக சிநேகா, சுமலதாவாக சுள்ளான்சிந்து துளானி, ஜெய்சங்கர் வேடத்தில் சுமன், சுருளிராஜன் வேடத்தில் விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 கன்னுக்குட்டிகளைப்போல் தனது 4 தம்பிகளை பாசமாய் வளர்க்கும் காளையன் சுந்தர்.சி., பக்கத்து ஊர்ப்பண்ணையார் சுமன், காளையனை ஒருதலையாய்க் காதலிக்கும் அவரது தங்கை சிந்துதுளானி, கூட இருந்தே பண்ணையாரைப் பழிவாங்க அரவாணி வேடத்தில் அலையும் விவேக், பண்ணையாரால் பெண்டாளத் தேடப்பட்டு சுந்தர்.சி குடும்பத்தில் தஞ்சம் புகும்  அனாதை சிநேகா.

மேற்படி கேரக்டர்கள் எல்லாம், தாங்கள் என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் தமிழ்சினிமா தர்மப்படி செய்துவிடுவதால் கதை என்று தனியாக ஒன்று உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

 

சுந்தர்.சி நடிக்கிறாரோ இல்லையோ படத்துக்குப்படம் தடிக்கிறார்அவருக்கு க்ளோசப் வைக்கும்போதெல்லாம் நமக்கே பகீரென்பதால்,  நமது  சிறு குழந்தைகளை கவனச்சிதறல் ஏதாவது செய்து காப்பாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம்.

சிநேகாவுக்கு கழுத்திலும், வயிற்றுப்பிரதேசத்திலும்  ரெண்டுரூபா காய்ன் சைஸில் மச்சம் வைத்திருப்பதின் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்றே விளங்கவில்லை.

‘’ சுந்தரு சுந்தரு,… சிநேகா சிநேகா…’ என்று உலக இலக்கியத்தரத்தில் இயக்குனர் செல்வபாரதியே எழுதியுள்ள பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறார் சிநேகா.

சுந்தரை ஒருதலையாய் காதலிக்கும் சிந்து துளானி, ஒரு பாடல் காட்சியில் பாலில் குளித்து கவர்ச்சி காட்டும்போது, நமக்கு ஒருவிதமான அயற்சியே மேலிடுகிறது.

அரவாணியாக வந்து, இரட்டை அர்த்தத்தில் சரியான அறுவை காமடிகளை தந்து  படம் முழுக்க நம்மை நோகடிக்கிறார் விவேக். ‘நீங்க அடிக்கடி மாராப்பை சரி பண்றதெல்லாம் பாத்துப்பாத்து அலுத்துப்போன சரியான போரப்பு.’

 தமிழ்சினிமா ஃபைட் மாஸ்டர்கள் வரவர தங்கள் மனசாட்சியை வீட்டில் ஹேங்கரில் மாட்டிவைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள் போலும்.

கரடுமுரடான வில்லன்கள் குவாலிஸ் கார்களில் வந்து, விதவிதமான ஆயுதங்களுடன் ஹீரோ சுந்தர்.சி.யை ரவுண்டு கட்டி, அவரிடம் வெறுங்கையால் அடிபட்டு ஓடுகிறார்கள். அய்யா மாஸ்டர்களே இனிமே ஹீரோக்கள் கையில அட்லீஸ்ட் ஒரு கிட்டிப்புல்லாவது குடுங்க சாமி. மனசு ரொம்ப வலிக்குது.

இசை ஸ்ரீகாந்த் தேவா. பொதுவாக எம் மனசு தங்கம்தவிர ராஜாவின் எந்தப்பாடலையும் பயன்படுத்தாமல் சொந்த டியூன் போட்டிருக்கிறார். பாடல்களிலும் , பின்னணி இரைச்சல்கள் மூலமும், தான் எப்படி வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனோம் என்பதை டியூன் போட்டு விளக்குகிறார்.

இசை மட்டுமல்ல, படத்தின் ஒட்டுமொத்த தொழில் நுட்பங்களும் பாடாவதி என்று சொன்னால்’ ’ஏங்க இவிங்களப்பத்தி சொல்றதுக்கு நாந்தான் கிடைச்சேனா?’  என்று ‘பாடாவதி’ என்ற சொல் கூட சண்டைக்கு வரும்.

மொத்தத்தில், புதியமுரட்டுக்காளையின் மூலம் முட்டித்தூக்குகிறார்கள் தியேட்டருக்கு வருகிற ஆளை..

8 comments:

  1. ஓஹோ,

    திருட்டு டிவிடி தொழிலை சட்டப்படி ஒழிக்க முடியலைனு இப்படி படம் எடுத்து ஒழிக்க திட்டம்னு நினைக்கிறேன். :-))

    இந்த படத்த பார்த்ததுக்கு ஒரு ஜல்லிக்கட்டு காளைக்கிட்டே ஒரு முட்டு வாங்கியிருக்கலாம் ,வீரன்னு பேராவது கிடைச்சு இருக்கும் :-))

    ஆனாலும் உங்களுக்கு திடமான மனசும், கூர்மையான பார்வையும் இருக்கு மச்ச பிரதேசங்களை உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்க :-))

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்த பார்த்ததுக்கு ஒரு ஜல்லிக்கட்டு காளைக்கிட்டே ஒரு முட்டு வாங்கியிருக்கலாம் ,வீரன்னு பேராவது கிடைச்சு இருக்கும் :-))சரியா சொன்னீங்க

      Delete
  2. கடசியா ஒரு காட்டு காட்டிட்டாங்க போல சினேகாக்கா

    எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடயில எடுத்துக்கோன்னு

    ReplyDelete
    Replies
    1. காட்டு காட்டுன்னு காட்டிட்டாங்க..பிரசன்ன தரிசனம்

      Delete
  3. நேத்தைக்கு சாயங்காலம் தான் இந்த படத்தோட டிவிடி மூணு பத்து டாலர்ன்னு கூவி கூவி வித்தாங்க.. நல்ல வேளை வாங்காம வந்ததினால தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன்.

    இப்பெல்லாம் விமர்சனம் படிக்கிறது இங்கே மட்டும் தான். அதுக்கப்புறமா தான் அந்த படம் பார்க்கணுமா வேண்டாமான்னு முடிவே பண்றோம்.

    தொடரட்டும் எங்களுக்காக நீங்கள் செய்யும் தியாகம்.

    ReplyDelete
    Replies
    1. இப்பிடி மிச்சமாகுற டாலர்கள உண்டியல்ல போட்டுவையிங்க

      Delete
  4. //தான் எப்படி வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனோம் என்பதை டியூன் போட்டு விளக்குகிறார். //

    :-(

    ReplyDelete