Monday, January 2, 2012

பட் இந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு..ரா.கண்ணன் ரேக்ளாரேஸ்


அட ,நீ இப்பிடி ஒரு வெட்டிப்பயலா? என்று நீங்கள் கமெண்ட் அடிக்கப்போவதைப்பற்றி எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
விஷயத்தை சொல்லத்தான் போகிறேன்.
ஆம் இன்று மாலையில் ‘கருத்தக்கண்ணன் c/o ரேக்ளாரேஸ்’படம் பார்த்தேன். பயப்பட வேண்டாம் என் ப்ளாக்’ நண்பர்கள் யாரையும் பழி வாங்கும் எண்ணம் இல்லை என்பதால் இந்தப்படத்தின் கதையைப் பற்றியோ விமரிசனம் மாதிரியோ எதுவும் எழுத மாட்டேன்.
 படத்தின் ஹீரோ கம் தயாரிப்பாளர் ரிஷிராஜ் நம்ம பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஒண்ணு விட்ட சித்தப்பா பிள்ளையின் சகலை என்று தகவல் கிடைத்த ஒரே காரணத்துக்காகத்தான் படத்துக்கே போனேன்.
.
டைட்டில் கார்டு போடும்போது, புதிய பரிமாணத்தில் ரிஷிராஜ் என்று போடுகிறார்கள்.  பரிணாமம் என்று போட்டிருக்க வேண்டுமோ?
படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால்,’ என்னா நெஞ்சழுத்தம் இருந்திருந்தா என்னைப் பாக்க வந்திருப்பே’  நம்மை நோக்கிய படத்தின் இரண்டே கால் மணி நேரக்கேள்வி இதுதான்.

[படத்தோட விளம்பரங்கள்ல ஆறு ஆஸ்கார் நிச்சயம். பத்து ஆஸ்கார் லச்சியம்னு போடலாம்னு ஒரு ஐடியா குடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா யாரை தொடர்பு கொல்றதுன்னு தெரியலை.]
படம் முடிந்ததும், அதன் மக்கள் தொடர்பாளர் விஜயமுரளியிடம் சென்று,’’சார் 2012 ல நம்ம பத்திரிகையாளர் இனம் பாக்குற முதல் படம் இது.ஒரு படத்தை வச்சி மொத்த இனத்தையும் அழிச்சிடுற மாதிரி எதுவும் திட்டமா?’’என்று கேட்டவுடன் தத்துவார்த்தமாக ஒரு பதிலைச்சொன்னார். பட் அந்த டீலிங் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது.
குட்டி பவர்ஸ்டார்

‘’ரொம்ப கரடு முரடான விஷயங்களை வருஷத்தோட ஆரம்பத்துலயே சந்திச்சி பழகிட்டோம்னா, அடுத்த விஷயங்களை சுலபமா சந்திக்கலாம்’’ இது விஜயமுரளி அவர்களின் பதில்.
இதற்கு முன்பு ஒரு விஷயத்தை அவர் இவ்வளவு தெளிவாக அணுகி நான் பார்த்ததில்லை.அவரது பதிலில் ஒரு அமானுஷ்ய மெச்சூரிட்டி இருந்தது. அதையும் அவரிடம் சொல்லிக்கேட்டேன்.
‘’வழக்கமா press show' போட்டுட்டு நான் வெளியதான் நிப்பேன். இன்னைக்கு ஒரு பத்து நிமிஷம் படம் பாத்தேன்’’ என்றார் அசால்டாக.
‘கருத்தக்கண்ணனை பத்து நிமிஷம் பாத்ததுக்கே அவருக்கு அமானுஷ்ய பலம், தெளிவு வருகிறதென்றால் இரண்டே கால் மணி நேரம் பார்த்த எனக்கு என்ன வர வேண்டும்?
 ஒரு பாடாவதியான பின் குறிப்பு ; அண்ணன் ரிஷிராஜ் விகடன் ஆசிரியர் கண்ணனுக்கு போன் பண்ணி ‘’பாஸ் இதுக்கு முந்தி ரெண்டுமுனு படம் பண்ணிட்டேன். விகடன்ல விமரிசனமே எழுதமாட்டேங்குறிங்க. அப்படியே எழுதினாலும் மட்டமான மார்க் போடுறீங்க. அதை மனசுல வச்சிதான் இந்தப்படத்துல  என்னோட ஹீரோ கேரக்டருக்கு கருத்தக்கண்ணன்னு உங்க பேரையே வச்சிருக்கேன். ஒரு 50 மார்க்காவது போட்டு உங்க மானத்தை காப்பாத்துங்க பாஸ்’’என்று வேண்டுகோள் வைத்திருக்கிறாராம். 
 

1 comment: