Thursday, January 12, 2012

நடுநிசி நாயாக கௌதம வாசுதேவ மேனன்.


 இன்று மாலை மூன்று மணிக்கு பிரசாத் லேப் தியேட்டரில் ‘நண்பன்’ படம் போடுகிறார்கள்.எனது ப்ளாக்கில் 8மணிக்குள் விமரிசனம் எழுத முயற்சி செய்கிறேன்.

எனது வெப்சைட்டில் ல்  2011 திரைப்பார்வை என்ற தலைப்பில் கடந்த ஆண்டின் முக்கியமான படங்கள்,தமிழ்சினிமாவை ஒருபடி உயர்த்தியவர்கள், தமிழ்சினிமா என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டவர்கள் பற்றி விரிவாக எழுத முடிவு செய்தேன்.

 என் பார்வையில் முதலில் பட்டவர் கவுதவ் வாசுதேவ மேனன். படங்களுக்கு பிரமாதமான தலைப்புகளைச்சூட்டும் கவுதம் ஏன் ஒரே படத்தில் நடுத்தெருவுக்கு வந்தார்?  2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு முதல் இழிவு இயக்குனர் கௌதம் மூலம் நிகழ்ந்தது.

கௌதம் ஆங்கில நாவல்களை தழுவி படம் எடுப்பார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் கதைக்காக அவர் சரோஜாதேவியையும் தழுவுவார் என்பது இந்தப் படத்திற்குப் பின் தான் உலகிற்குத் தெரிய வந்தது. படம் மனதில் ஏற்படுத்திய அருவருப்பு நீங்க இரண்டு மூன்று நாட்கள் ஆனது. 

எட்டு வயது மகன் பார்க்க குரூப் செக்ஸில் ஈடுபடும் அப்பா, அவரிடம் இருந்து காப்பாற்றி அம்மா ஸ்தானத்தில் வளர்த்த பெண்ணை புணரும் மகன் போன்ற ஒருவன், அதை முதலில் மறுத்து பின் ஏற்றுக் கொள்ளும் அம்மா, அந்த அம்மாவின் புதுக் கணவனை கொல்லும் மகன், அதில் தீ விபத்தில் உடலெல்லாம் அழுகிப் போகும் அம்மா, அதன் பின்னும் அந்த உடலை புணரும் மகன், மகன் யாரையாவது இழுத்துக் கொண்டு வந்து வன்புணர்ச்சி செய்ய அதை வேடிக்கைப் பார்க்கும் அம்மா, என உலகில் எந்தக் காமக் கொடூரனும் யோசிக்க முடியாத அளவிற்கு வக்கிரமாய் ஒரு கதையை யோசித்திருந்தார் கௌதம்.

ஒரு திரைப்படத்தில் நடிகர் என்று ஒருவர் இருந்தாலும்  இயக்குனரே கதையின் நாயகன் என்பதாகத்தான் மக்கள் எடுத்துக் கொள்வார்கள்.
மின்னலே பார்த்து கௌதம் இவ்வளவு இனிமையானவரா என்றும் காக்க காக்க பார்த்து கௌதம் இவ்வளவு நேர்மையானவரா என்றும் வியந்த மக்கள் நடுநிசி நாய்கள் பார்த்து கௌதம் இவ்வளவு வக்கிரமானவரா என்று அதிர்ந்து போனார்கள்.

மேன்மையான கதைகளை மிகவும் மேன்மையாக எடுக்க முடிந்தவர் கௌதம் என்பதில் யாருக்கும் எந்தக் கேள்வியும் கிடையாது. ஏன் கனியிருக்க காய் கவர்ந்தார் என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது.

அடுத்து நிதானே என் பொன் வசந்தம் ‘என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்தப்படத்தின் செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறாரா என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment