Saturday, January 7, 2012

நமீதாவின் பாலிசியும், வஸந்தின் வேஷ்டியும்

நான் சிங்கிளா இருக்கிறதால என்ன யார் கூடயாவது மிங்கிள் பண்ணிப்பாக்குறதே இங்க உள்ள பத்திரிகைக்காரவங்களுக்கு பொழப்பாப் போச்சி’’மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க இப்படிக்கொந்தளிப்பவர் நடிகையர் திலகம் நமீதா.

பாக்கிறவர்களையெல்லாம் ஏதோ அம்மாகூடப் பிறந்த தாய்மாமன் உறவு போல, ‘ மாமான்ஸ்,மச்சான்ஸ்’ என்று அழைத்து வந்த நமீதாவுக்கு கலைஞர் டி.வி.யில்’ யானை ஆட எருமை ஆட’  நிகழ்ச்சி நடத்தப்போனதிலிருந்து சினிமா உறவே அத்துப்போயிருந்தது, நடப்பது நிஜம்தானா என்று நமீதா பலமுறை தன் தொடையை தானே கிள்ளிப்பார்க்க வேண்டி இருந்தது.

 கவர்ச்சியில் குறை வைக்கவில்லை. ஃப்ளாப் படம் எதிலும் நடிக்கவில்லை.வரி வட்டி, கிஸ்தி எல்லாம் முறைப்படி கட்டிவருகிறோம்., பிறகு ஏன் மச்சான்ஸ் படங்கள்ல நடிக்க நம்மள கூப்பிடாம இருக்காங்க? சமிப காலமாய் நமீதா தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் பில்லியன் டாலர் கேள்வி இதுதான்.

பாப்பா இப்பிடி கேப்பாரில்லாமல் நொந்து போயிருக்கும் நிலையில் தான் சில விஷமிகள் [ நாம் அல்ல] அவரைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதி மூட்-அவுட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

நமீதா சமிபத்தில் மும்பையில் பத்துக்கோடி ரூபாய்க்கு கிரவுண்டு வாங்கிப்போட்டாராம். இதற்கு ஒரு வக்கீல் உறுதுணையாக இருந்தாராம். அப்படி உறுதுணையாக இருந்த போது ஏற்பட்ட உராய்வில் டயரும் டிங்க்‌ஷரும் பத்திக்கிச்சாம்...இப்படி படிக்கவே நெஞ்சு  துடிக்கிற மாதிரி போகிறது அந்த கிசுகிசு.

‘ஆளான நாள் முதலா யாரும் என்ன பாத்ததில்ல’.. என்னப்பத்தி இப்படி எழுதீட்டாங்களே என்று பதறிப்போன, நமீதா,’’ அவர்கள் எழுதியதுபோல் மும்பையில் ஒரு வக்கீல் அல்ல. சில வக்கீல்களுடன் சுற்றியிருக்கிறேன். ஆனால் அவர்கள் என் அப்பாவுடன் படித்த கிழட்டு வக்கீல்கள். ஒரு திருட்டுப்பயலைக்கூட கட்டலாம்.ஆனா கிழட்டுப்பயலை கட்டக்கூடாதுங்கிற பாலிசியோட வளர்ந்தவ நான்’’என்று தனது லைஃப் இன்ஸ்ட்ரக்‌ஷன் பாலிசியை எடுத்து விடுகிறார்.

பத்திரிகை நண்பர்களே ஒரு வாந்திக்குப் பின்னால எவ்வளவு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு இனிமே கிசுகிசு எழுதுங்க.வயசுக்கு வந்த பொண்ணோட வயித்தெரிச்சலைக்கொட்டிக்காதீங்க.அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.

*******மேற்கண்ட நமீதாகுட்டியின் மேட்டர் ரொம்ப குட்டியாக இருந்ததால் மேலும் ஒரு வேஷ்டி மேட்டர் ஒன்று எழுதலாமே என்று தோன்றியது.

வெப்சைட் ஆரம்பிச்சாச்சி இனிமே ப்ளாக்’ல எழுதுறதை அடியோடு நிறுத்துங்க ;என்று என் நண்பர் ஒருவர் சதா சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

அப்படி ஆகி விடக்கூடாது என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பது என்ற ஒன்று இதுவரை நடந்ததில்லை. இதுவாவது நடக்கிறதா என்று பார்ப்போம்.

சரி, குட்டிக்கதைக்கு வருகிறேன்.

இன்று மாலை பழைய உதவி இயக்குனர்கள் மூன்று பேர் சந்தித்தோம். எங்களிடம் பேசுவதற்கு ஆயிரக்கணக்கில் ஃப்ளாஷ் பேக்குகள் இருக்கின்றன.

ஒரு கட்டத்தில் பேச்சு இயக்குனர் வஸந்தில் வந்து நின்றது.

தயாரிப்பாளர் ஜீ.வி.வேஷ்டியில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்த வஸந்தின் உதவியாளர்களில் ஒருவர், ‘’டேய் ஜீ.வி. தொங்குன வேஷ்டியில நம்ம டைரக்டரோட நூலும் கொஞ்சம் இருக்குடா. என்றபடி, ‘.ஜீ.வி சார் தயாரிச்ச ‘ஏய் நீ ரொம்ப அழுக்கா இருக்க’ படத்தை ஒட்டிதான் அவருக்கு பிரச்சனைகளே ஸ்டார்ட் ஆச்சி’ என்று விளக்கமும் சொன்னாராம் அந்த உதவி இயக்குனர்.

இந்த செய்தி பல காதுகள் தாவி, கடைசியில் ஒரு வழியாக வஸந்த் காதுக்கும் போய்விட்டது.

இதைக்கேட்டு கடும் ஆத்திரமடைந்த வஸந்த், உடனே அந்த உதவி இயக்குனருக்கு போனைப்போட்டு நீ இப்படியெல்லாம் அபாண்டமா என்னைப்பத்தி பேசலாமா? என்று கேட்டிருக்கிறார். உடனே அந்த உதவி இயக்குனருக்கு ’போட்டு விட்டவர்’ மீது கோபம் வந்துவிட்டது.

‘’சார் அப்படி நான் சொன்னதாக யார் சொன்னாங்க? இது உதவி இயக்குனர்.

வஸந்த் சற்றும் தயங்காமல், ‘இன்னார்’ என்று அவர் பெயரைச்சொல்லியிருக்கிறார்.

 உடனே பதிலுக்கு அந்த உதவி இயக்குனர், சார் சொன்னது கூட பரவாயில்லை. அந்த இன்னார்’ உங்களைப்பத்தி என்ன சொன்னார்னு தெரிஞ்சா நீங்க இன்னொரு வேஷ்டியே வாங்க வேண்டியிருக்கும்’ என்று சொல்ல, சற்றும் யோசிக்காத வஸந்த் அப்படி என்னதாம்பா சொன்னார் அந்த ‘இன்னார்’ என்று கேட்க, ‘ஜீ.வி. சார் தொங்குன வேஷ்டியே நம்ம வஸந்த் சார் வாங்கிக்குடுத்தது தாண்டான்னு சொல்றான் சார்’ என்றபடி போனை வைத்துவிட்டாராம்.


தாடியைச் சொறிந்தபடி செய்வதறியாது திகைத்து நின்றாராம் வஸந்த்.************************************************************************

1 comment:

  1. விகடனில் ஒரு ஆர்வக்கோளாறு நிருபராய் காலத்தைக்கடத்திக்கொண்டிருந்த நேரம் அது... வசந்த் இயக்கிய கேளடிகண்மணியை பார்த்து விட்டு பரவாயில்லையே என்று மனசுக்குள் ஜஸ்ட்பாஸ் மார்க் போட்டுவிட்டு துள்ளித் திரிந்தகாலம் அது ...
    சிலநாட்களில் அதே வசந்த் இயக்கிய ’நீபாதி நான் பாதி’ திரைக்கு வந்தது... கேளடி கண்மணியை நினைத்து அதையும் போய் பார்த்தேன் பாதி படத்தை தான் என்னால் பார்க்க முடிந்தது... அதன்மேல் என்னால் பார்க்க முடியவில்லை.. வசந்த் மேல் எனக்கு ஏகப்பட்ட கோபம் எனது எட்டு ரூபாயை இந்த சண்டாளன் வீணாக்கிவிட்டானே எனற கோபம்...
    காலம் ஓடியது அமேரிக்கன் கான்சலேட் பக்கம் உள்ள பஸ்ஸ்டாண்டில் விஜி என்ற விகடனில் பலராலும் ஜொள் விடப்பட்ட பெண் நிருபருடன் வந்து கொண்டிருந்தேன் தூரத்தில் பஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும் ஒருவறைக்காட்டி ‘ஏய் இவருதான் வசந்த தி கிரேட் டைரக்டர் எனறாள் .. எனக்கு ஆத்திரம் பொங்க்கிக் கொண்டு வந்தது .. ‘ என்னது கிரேட் டைரக்டரா.. இந்த ஆளதான் நான் ரெம்ப நாளா தேடீட்டு இருக்கேன் என்னை ஏமாத்தினவன் .. இவன என்ன பண்ணுறேன் பாரு..’என்றபடி வசந்திடம் போய் பவ்ய்மாக முதலில் ஒரு வணக்கம் வைத்துவிட்டு ‘ஏன் சார் நீங்கள்ளாம் படம் எடுக்க வற்றீங்க..?’ எண்றேன் கோபமாக. அதிர்ச்சியடைந்த அவர் ‘ஏய் யாரு நீ
    .. என்ன வேணும் என்றார், உடனே நான் கூலாக ‘நான் உங்க ரசிகன் சார்.. உங்க முதல் படம் கேளடிகண்மணிய பார்த்தேன் பரவாயில்ல .. அந்த நம்பிக்கையில உங்க ரெண்டாவது படம் ‘நீ பாதி நான் பாதி’க்கு போனேன் பாதி படம் தான் என்னால பாக்க முடிஞ்சுது மீதி கதை என்ன சார்..? இப்படி மாதிட்டீங்கள்ளே சார் இப்படியெல்லாம் ஒரு படம் தேவையா ..’என்றேன். நான் இப்படி சொன்னதும் வசந்துக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.. ’அதெக்கேக்க நீ யாருய்யா’என்றார் கோபமாக. எனக்கும் கோபம் தலைக்கேறீயது..’என்னது நான் யாரா.. உன்னய நம்பி எட்டு ரூவாய்க்கு டிக்கெட் எடுத்து எமாந்த ரசிகன்யா நான் .. நீ யெல்லாம் எதுஇக்குய்யா படம் எடுக்க வற்ற என்று கோபத்தில் வார்த்தைகளைக்ஒட்டித்தீர்க்க ஆரம்பித்தேன்..என்ணுடன் வந்த விஜிக்கு என்னிடமிருந்து வசந்தை காப்பாற்ற முயற்சிக்க ..சட்டென்று ரோட்டில் வந்த ஒரு ஆட்டோவை நிப்பாட்டி ஏஸ்கேப் ஆகிவிட்டார் வசந்த்.. மறுநாள் விகடன் ஆபீஸில் மதன் என்னை அழைத்தார்.. தொடர்ச்சி அப்புறம்... நீங்க மாலன் மேட்டரை மட்ட்டும் இப்படி இழுக்கலாமா..?

    ReplyDelete