’சினிமா எக்ஸ்பிரஸ்’ வாங்கிப்படிக்கிற பழக்கத்தை விட்டு வெகுகாலமாகி விட்டது.காரணம் அந்தப்பத்திரிகை காலமாகி வெகு காலமாகி விட்டது.
நேற்று போனில் வந்த நண்பர் ஒருவர், உங்க நண்பர்,உங்க ஊர்க்காரர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பத்தி சினிமா எக்ஸ்பிரஸ்’ல ஏடாகூடமா எழுதியிருக்காங்க பாருங்க’ என்றார்.
ஒரு நண்பரைப்பற்றி ஏடாகூடமாக எழுத இன்னொரு நண்பர் இருக்கும்போது. கண்டபயலுக கண்டபடி ஏன் எழுதனும்? என்று யோசித்தபடியே சினிமா எக்ஸ்பிரஸ் வாங்கிப்படித்தேன்.
‘வசன விபச்சாரிகள்’ என்று தலைப்பிட்டு, சினிமா வஜனகர்த்தாக்களை மிக மட்டமான வார்த்தைகளில் கிழித்து தோரணம் கட்டித்தொங்க விட்டிருந்தார்கள்.
.....தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நல்ல இலக்கியவாதிகள் தங்கள் ‘கற்பை' இழக்க மட்டுமே சினிமாவுக்கு வருகிறார்கள்.விபச்சாரம் செய்யும் பெண்கள் பணத்துக்காக தொழிலுக்கு வந்ததாக உண்மையை ஒத்துகொள்வார்கள். ஆனால் நம் இலக்கிய வாதிகள்? காசுக்காகவும் சினிமா கவர்ச்சிக்காகவும் சோரம் போகத்தயாராகி விடுகிறார்கள்....
இந்த ரீதியில் கொஞ்சம் நீளம் அதிகமாகவே தொங்குகிறது அந்தக்கோவணம் ஸாரி அந்தத் தோரணம்.
இதை ஒட்டி சினிமா எக்ஸ்பிரஸுக்கு ஒரு ஒச்சரிக்கை விடுகிறேன்.
இனி இது போன்ற இலக்கியவாதிகளை திட்டி நீங்க எழுதக்கூடாது. அதுக்குதான் நாங்க இருக்கோம்ல...
முதல்ல எஸ்.ராமகிருஷ்ணன் ல இருந்தே ஆரம்பிப்போம்.
இவரே சொல்ற மாதிரி, கோணங்கி லுங்கிய புடிச்சபடி எழுத ஆரம்பிச்சவர். கோணங்கி ஆறு மாசத்துக்கு ஒருதடவை கூட எழுத மாட்டார்.
ஆனால் எஸ்.ரா சாப்பிடுறப்ப,தூங்குறப்ப, தும்முறப்ப கூட எழுதிக்கிட்டே இருப்பார். அம்மாவோட தாலாட்டு மாதிரி, இவரோட எழுத்த பத்தாவது வரி படிக்கிறப்பவே ஒரு சுகமான தூக்கம் வரும் பாருங்க. அந்த தூக்க நடைய தூக்கலா வச்சி எழுதியே மனுஷன் பிரபலம் ஆயிட்டாரு.
நதிகள் இறங்கி நீராடிய போது, வாழ்வின் தரிசனங்களை ஆழமாக ஊடுருவிச்சென்று செறிவானதொரு பரவச தருணங்களை பருக.....
இப்பிடி கமா,கைமா எதுவுமில்லாம போயிக்கிட்டே இருக்கும் இவரோட எழுத்து.
இவர் சினிமாவுக்கு வசனம் எழுத ஆரம்பிச்ச முதல் படம்’ஆல்பம்’ .கம்பெனி கவிதாலயா.டைரக்டர் இவரோட ஊர்க்காரரான வசந்தபாலன்.
முதல் கோணல் முற்றிலும் கோணல்ங்கிற மாதிரி, அடுத்து வரிசையா பல ஊத்தல் படங்களுக்கு எழுத ஆரம்பிச்சார்.
சரி, ஒரு படம் ஓடலைன்னா அடுத்த படத்துக்கு கூப்பிட மாட்டாங்களே? இவருக்கு மட்டும் எப்பிடி இவ்வளவு படங்கள் வந்தது?
அண்ணன்கிட்ட ஒரு அருமையான வசிய மருந்து இருக்குது .அது இல்லாம எங்கேயும் போகமாட்டார்.
எழுதுற நேரங்கள் போக மீதி நேரங்கள்ல, அசராம உலக சினிமாக்களை டி.வி.டி யில பாக்குறதுதான், இவரோட முக்கியமான வேலை.
பாத்துட்டு அதைப்பத்தி மணிக்கணக்குல பேசுறதுல நம்ம அண்ணன் ஒரு மன்னன்.
இவரோட பேச்சுக்கு ஆனானப்பட்ட ரஜினியே கொஞ்ச காலம் அடிமையாக்கிடந்தார்னு சொன்னா உங்களுக்கு நம்புறதுக்கு கஷ்டமா இருக்கும்.ஆனா உண்மை அதுதான்.
தினமும் மதியத்துக்கு மேல காரை செல்ஃப் டிரைவ் பண்ணிக்கிட்டு ராமகிருஷ்ணன் வீட்டுக்கு அவரை பிக்கப் பண்ணப்போவார் ரஜினி.
கார் அங்கருந்து நேரா ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்குப்போகும்.
உள்ள ஒரு வெட்டவெளியில நின்னுகிட்டு, தத்துவம்,சினிமா,ஆன்மிகம்னு எதாவது ஒரு டாபிக் எடுத்து ராமகிருஷ்ணன் பேச ஆரம்பிக்க
,குறுக்க ஒரு வார்த்தை கூட பேசாம,
வாய்ல ஈ,காகா,கொக்கு,குருவி எது போறதும் தெரியாம
மணிக்கணக்குல ’மயக்கம் என்ன’ தனுஷ் மாதிரி மயங்கிக் கேப்பார் ரஜினி. இதுக்காக எஸ்.ராவுக்கு .மாசச் சம்பளமும் தந்துட்டு வந்தார் ரஜினி.
. அப்படிப்பட்ட வசியப் பேச்சுக்கு சொந்தக்காரர் அண்ணன் ராம்கி. .பப்பரப்பான்னு போன ‘பாபா’ பட வாய்ப்பும் இப்பிடி ரஜினி மூலமா தான் கிடைச்சது.
அதுக்கப்புறம் எஸ்ரா. வசனம் எழுதின படங்கள், நாசரோட ‘பாப்கார்ன்’ போட்ட காசெல்லாம் நாசமாப்போனதாலஅத்தோட படம் எடுக்கிறதையே நிறுத்தினார் நாசர்.
அடுத்து இவர் வசனத்துல.’பீமா’ தயாரிச்ச ஏ.எம்.ரத்னம் முதல் முறையா கோமா ஸ்டேஜுக்கு போனார்.
ஓளிப்பதிவாளர் ஜீவா ‘தாம்தூம்’னு ஒரு படத்துக்கு இவரை வசனம் எழுதச்சொல்லிட்டு இந்த உலகத்தை விட்டே போனார்.
அடுத்து வசனம் எழுதின ’மோதி விளையாடு’ சரணுக்கு பேதி ஆயிடுச்சி.’சிக்குபுக்கு’ன்னு ஒரு படம் கெக்கேபிக்கேன்னு சிரிச்சாங்க.
. 18 கோடியில் தயாரான பாலாவின்’அவன் இவன்’ படத்துக்கும் எஸ்.ரா தான் வசனம் எழுதினார். படத்தில வந்த சில வசனங்கள்னாலேயே பாலா பஞ்சராகி கொஞ்ச நாள் டிஞ்சர் போட்டுக்கிட்டு திரிஞ்சார். அடுத்து’ யுவன் யுவதி’ன்னு ஒரு படம்.மொத்த யூனிட்டுக்கும் அவதி.
கடைசியா ‘பேசு’ன்னு ஒரு படத்துக்கு எழுதியிருக்கார்.
அந்தப்படம் தியேட்டர் வரிக்கும் வந்து பேசுமான்னு தெரியலை.
இதுல ‘சண்டக்கோழி’ மட்டும் விதிவிலக்கு. [அந்தப்படத்துலயும் குட்டிரேவதிங்கிற,ஒரு கவிஞரைப்பத்தி ஏடாகூடமா எழுதி ஏகப்பட்ட பொண்ணுங்க நம்ம எஸ்.ரா வீட்டுக்கு விளக்கமாத்தோட போனகதை பழையகதை.]
மேற்படி படங்களோட பட்ஜெட்டை கூட்டிக்கழிச்சி ,பாக்கிறப்ப நம்ம எஸ்.ரா கதை வசனம் எழுதின படங்கள்ல மட்டும் தமிழ்சினிமா 77 கோடி ரூபா நஷ்டப்பட்டிருக்கு.
எஸ்.ராமகிருஷ்ணன் ஏரியாவுல ஒரு சொலவடை மிகப்பிரசித்தி பெற்றது.
‘முள்ளு முனையில மூனு குளம் வெட்டி வச்சேன்.ரெண்டு குளம் பாழு.ஒண்ணு தண்ணியே இல்ல.
அது மாதிரியே எஸ்.ரா. பதினோரு படத்துக்கு வசனம் எழுதினார். பத்து ஓடவே இல்ல. ஒண்ணு இன்னும் ரிலீஸே ஆகலை.
[ஓ சினிமாஎக்ஸ்பிரஸே உன்னை மறுபடியும் ஒச்சரிக்கிறேன்,
நம்ம எழுத்தாளர்களைப் பற்றி ஏடாகூடமாக எதுவும் எழுதவேண்டாம். அப்புறம் எங்க பொழப்பு என்னாகுறது? ]

ROFL :)))))))))))))))))
ReplyDeletetoo bad pal....! but i cant control laughing. i almost forgot his writings. i m influenced by your review.. but he is not that bad! LOL
ReplyDelete