'
....இத்துடன் நமது அறிவிப்பை ஏற்று சங்கத்தின் மரியாதையை காப்பாற்றும் விதத்தில் சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கும் சங்க அறிவிப்பை கவனத்தில் கொள்ளாமல் விழாவில் கலந்து கொண்ட ஒரு சில இயக்குநர்களுக்கும், சில உதவி இயக்குநர்களுக்கு சங்கத்தில் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...... "
’தென்மேற்கு பருவக்காற்று’ செங்கடல்’ ஆகிய இரு படங்களை சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சுகாசினி,அடிபணிந்து ஒத்துக்கொண்ட பிறகு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை இது.
சங்கத்தின் மரியாதையை காப்பாற்றும் விதத்தில் ஒத்துழைப்பு அளித்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கும், அறிவிப்பை கவனத்தில் கொள்ளாமல் திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் ஒரே மாதிரியான நன்றியைத்தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு ரெண்டுங்கெட்டான் அறிக்கையை யார் தயாரித்தது என்று தெரியவில்லை.?
சங்கத்தின் ‘சொல்பேச்சு கேட்காமல்’ திரைப்பட விழாவுக்குப் போனவர்களைக் கொஞ்சமாவது கண்டிக்காவிட்டால் ,எதிர்காலத்தில் சங்கம் எடுக்கும் தீர்மானங்களை யாரும் கண்டுகொள்ளாமல் போகும் ஆபத்து நேராதா?
ஆரம்பத்தில் ஓவராக ரூல்ஸ் பேசிய ருக்குமணி சுகாசினியே சங்கத்தின் ஒற்றுமையான தீர்மானத்துக்கு பயந்துதானே மேற்படி படங்களைத்திரையிட சம்மதித்தார்?
தங்கர் பச்சான், சேரன், மற்றும் அமீர் போன்றவர்களுக்கு தங்கள் பெயர் எப்போதும் பத்திரிகைகளில் வந்துகொண்டேயிருக்கவேண்டும். இந்த வியாதிக்கு அறிக்கை அரிப்பு என்று சொல்வார்கள். உலகத்தின் எந்த மூலையிலும் இன்னும் இந்த அரிப்புக்கு தைலம்’ கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏற்கனவே, தலைவர் பாரதிராஜாவைக் கலந்து ஆலோசிக்காமல், அமீரே எதுக்கெடுத்தாலும் பத்திரிகைகளை அழைத்து பேட்டிகளும், அறிக்கைகளும் தருவதாகவும், அதனால் அமீர் மீது பாரதிராஜா கடும் கோபத்தில் இருப்பதாகவும் ஒரு வதந்தி நொண்டியடிக்கிறது.
ஒருவேளை மேற்படி அறிக்கையும் அறிக்கை மன்னன் அமீரால் அப்படி அவசர அடியாக வந்ததுதானோ என்னவோ?

No comments:
Post a Comment