அம்மா ஹீரோவுக்கு சாப்பாடு வைக்கிற முதல் காட்சி’’இதே குழம்பத்தான் மூனு நாளா வேறவேற பாத்திரத்துல வச்சி ஊத்துற போல தெரியுது’’என்ற வசனத்தின்போதே, நாம் வந்திருப்பது வழக்கமான தமிழ் சினிமா இல்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார் அறிமுக இயக்குனர் சாந்தகுமார்.
அப்பா மு.க.தமிழரசு தயாரிக்க ,மகன் அருள்நிதி நடிக்க, டைரக்டர் ரெண்டு பஞ்ச் டயலாக் அடிக்க ..ரசிகர்கள் கிடந்து துடிக்க ஒரு படம் என்ற நினைப்பில் தான் தியேட்டருக்குப்போனேன்.
மூத்தவன் போல் விவரமா இல்லையே என்று சதா அம்மாவால் சலித்துக்
கொள்ளப்படும் சாதாராண மாணவன் கருணாமூர்த்தி. ஒரு அடிதடி பிரச்சினைக்காக, கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு, சென்னையில் அண்ணனின் சிபாரிசால் வேறொரு கல்லூரியில் சேருகிறான். அண்ணியின் தங்கை இனியா தங்களுடன் இருப்பதால், கருணாமூர்த்தியை ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள்.
இப்படி ஒரு ட்ராக்கில் கதை பயணித்துக்கொண்டிருக்குபோதே,.
..
நாலு போலீஸ்காரர்கள் ஆக்ஸிடெண்ட் ஆன ஒரு காரிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இறந்து விட்டதாக நினைத்த டிரைவர் உயிரோடு எழுந்து வர, அவனைப்போட்டுத் தள்ளுகிறார்கள். இந்த ரகஸியம் ஒரு போலீஸ்காரரின் கள்ளக்காதலிக்கு தெரிய வரவே, அவளையும் தற்கொலை செய்கிறார்கள்.சாகும்போது தன்னிடமிருந்த வீடியோ ஆதாரத்தை, மாணவன் ஒருவன் திருடிக்கொண்ட தகவலை அந்த கள்ளக்காதலி சொல்லிவிட்டுச்சாக மாணவனைத்தேடிப்போகும் இடத்தில்,சம்பந்தப்பட்ட மாணவனுக்குப்பதில் தவறுதலாக ஹீரோ,மாட்டிக்கொள்ள,...இங்கே கதை டாப் கியரில் சூடு பிடிக்கிறது.
இனியாவின் முதல் சமையலை கிண்டல் பண்ணும்போது,’’எதையுமே எடுத்தவுடனேவா சரியா செய்ய முடியும்? சைக்கிள் ஓட்டப்பழகுறப்ப,ரெண்டு மூனுதடவை கீழ விழுந்துதான கத்துக்கிறோம்’?
என்ற வசனத்தை அருள்நிதிக்காகவே எழுதியிருப்பார்கள் போலும்.
.
நடிப்பில் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம்‘ விழுந்து எழுந்திரிக்க’ ஆரம்பித்திருக்கிறார்.
கதாநாயகனுக்கு அணுசரனையாக தோள்கொடுப்பது, காபி போட்டுக்கொடுப்பது, டிபன் செலவுக்கு காசு கொடுப்பது என்று சின்ன ரோலாக இருந்தாலும் மனம்கொத்தும் இனியா தமிழ்சினிமாவுக்கு ஒரு இனிய வரவு.
டூயட் எதுவும் வைக்காமல் மிக நாகரீமாக இவர்கள் காதலைச்சொன்னவிதத்தில் நம்பிக்கை அளிக்கிறார் இயக்குனர்.
கறார் மற்றும் கர்ப்பிணி இன்ஸ்பெக்டராக வரும் உமா ரியாஸ்கான், மேற்படி கேஸை தனி ஆளாக துப்புத்துலக்குவது ஒரு புறம் இருக்கட்டும்.
க்ளைமேக்ஸில் யாரோ ஒரு பெரிய ஆபிசர் சொன்னார் என்பதற்காக, கொல்லத்துடிக்கும் வில்லன்களிடம் ஹீரோவை அம்போ என்று விட்டுவிட்டு’’நீ போய் பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிக்கோ’என்று சொல்வது கதையில் ஒரு சிறு சறுக்கல்.
ஒருவேளை அப்படி விட்டுவிட்டுப்போனால்தான், ஹீரோ வில்லன்களைப் பழி வாங்கமுடியும் என்று இயக்குனர் நினைத்திருப்பாரோ என்னவோ.?
மற்றபடி, தெளிவான ஒளிப்பதிவு,விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளிவந்திருக்கும் மவுன குரு’.படத்தின் இயக்குனரைப்பற்றி பேச வைக்கிறது.
Sir, Oru chinna thiruththam.. Hero-vin peyar Karunamoorthi illai.. KARUNAKARAN...
ReplyDelete@paramanantham: avlo detail ah padam pakkanuma?? take it easy!
ReplyDelete