கண்மாய்ப்பக்கம் போய்க்கொண்டிருக்கிறீர்கள்.ஏதோ ஒரு ஆசையில் ஒரு கழுதை உங்களைக்கடித்து விட்டு ஓடிவிடுகிறது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்? .முடிந்தால் கழுதையை நோக்கி, ஒரு கல்லை வீசிவிட்டு ஊசி போட்டுக்கொள்ள டாக்டரைத் தேடி ஓடுவீர்கள்.
ஆனால் எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர், அந்தக் கழுதையை பதிலுக்கு கடிக்காமல் விடமாட்டேன் என்று கண்மாய் கண்மாயாக வெறிகொண்டு அலைகிறார்.
அவர் பெயர் கார்த்திக்ஜெய். மிருகம்’ நெல்லு’ ‘சமீபத்தில் வந்த வெண்மணி’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்.’மிருகம்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த இவருக்கு தானும் அஜீத், விஜய் ரேஞ்சுக்கு பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசை.
உடனே ‘நெல்லு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
போட்டது நாப்பது பிரிண்ட். மறுநாளே திரும்பி வந்தது நாப்பத்தி ரெண்டு பிரிண்ட்.
.எக்ஸ்ட்ரா ரெண்டு பிரிண்ட் எப்படி வந்தது என்று யோசித்து அன்றே திருப்பூருக்கு திரும்பி போயிருந்தால், சில கோடிகள் மிச்சமாகியிருக்கும்.
ஆசை யாரை விட்டது?
அஜித் போகட்டும். ஒரு விஷால் இடத்தைப் பிடித்தால் கூட விட்ட காசைப்பிடித்து விடலாம் என்று, உக்கிரமாக யோசித்து, கிருபாகரன் என்ற கேரக்டரில் ஹீரோவாக’வெண்மணியில் நடித்தார். இந்தப்படமும்’ பொட்டி சுட்டதடா’ கதைதான்.
இவர் கடந்த வாரம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்தார்.
பரவாயில்லையே, பொதுவா,ஊருக்குப் பொட்டியக் கட்டுறப்ப, யாரும் சொல்லிட்டு போறதில்ல..இவரு வித்தியாசமான ஆளா இருக்காரே, டாட்டா சொல்லி அனுப்பிட்டு வருவோம் என்று நினைத்துதான் நானும் போயிருந்தேன்.
ஆனால் மைக்கைப்பிடித்தவுடன், அந்த சினிமாவை ஒரு கடி கடிக்காமல் நான் திருப்பூர் திரும்ப மாட்டேன்’’ என்று கொக்கரிக்க ஆரம்பித்தாரே பாருங்க ‘ நான் ஒரு கணம் வெலவெலத்துப் போயிட்டேன்.’
‘’மிருகம்’ படம் எடுத்தேன்.டைரக்டர் சாமி , சொன்ன பட்ஜெட்ல எடுக்காத்துனால ,அதில எனக்கு ஒரு கோடி நஷ்டம்.
’நெல்லு’ வெண்மணி’ படங்களால எனக்கு 5கோடி நஷ்டம்.
இந்த மூனு படங்கள் மூலமா ,சினிமாவுல எப்பிடியெல்லாம் சீட்டிங் பண்றாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
ஒரு ஒட்டு தாடி கேட்டா, மூவாயிரம் ரூபாய்க்கு பில்லை நீட்டுறாங்க. ஒரு துண்டு பீடி கேட்டா கிங்ஸ் சிகரட் விலை எழுதுறாங்க.
இந்த சினிமாவை நான் விடுறதாயில்ல.இங்க விட்ட காசை நான் இங்கயே எடுப்பேன்.’’[எடுப்பேன் எனக்கு மட்டும் வேற மாதிரி கேட்டுச்சி] என்று அகோர சினிமாப் பசியுடன் முழங்க ஆரம்பித்த கார்த்திக்,’பாவி’ என்ற பெயரில் மீண்டும் தானே ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தையும் ஆரம்பித்து விட்டாராம்.
சார், கழுத ஒதைக்கும். அத கடிக்க கண்மாய் கண்மாயா அழையாதீங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாரு.

No comments:
Post a Comment