Thursday, December 8, 2011

ஒஸ்தி நீ ரொம்ப worsty '-விமரிசனம்

சல்மான் கான் நடிப்பில் இந்தியில் வெளிவந்து சக்கைப்போடுபோட்ட ‘தபாங்’ சிம்பு-தரணி காம்பிநேஷனில் ‘ஒஸ்தி’யாகியிருக்கிறது.
மயக்கம் என்ன’வில் அறிமுகமான ரிச்சா கங்கோபத்தியாய நாயகி.ஜித்தன்ரமேஷ், சந்தானம்,மயில்சாமி மற்றும் நம் உறவினர்களெல்லாம் நடிச்சிருக்காக.
போலிஸ் இன்ஸ்பெக்டர் சிம்பு. அவரது தம்பி ஜித்தன்ரமேஷ். அப்பா நாசர் ,தம்பி ஜித்து மீது காட்டுகிற பாசத்தை சிம்புவிடம் காட்டுவதில்லை .(அது ஏன் என்பதை டைரக்டர் கடைசிவரை நமக்கு காட்டுவதில்லை)
ஒரு நேர்மையான போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு,சினிமாவில் எங்கெங்கிருந்தெல்லாம் பிரச்சினை வரவேண்டுமோ அங்கிருந்தெல்லாம் வருகிறது.மணல்கொள்ளையில் ஈடுபடும் தாதா இடைத்தேர்தலில் நிற்கிறார்.தான் ஜெயிப்பதற்காக மக்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுக்க முயலும்போது சிம்பு அதைத்தடுக்கிறார். அந்தப்பணத்தை ‘ஆட்டயப்போட்டு’ தனது வீட்டில் ஒளித்து வைக்கிறார்.வில்லனுக்கு ரத்தம் கொதிக்கிறது.பணத்தைக்கைப்பற்ற சிம்புவின் வீட்டுக்குப் போய் கிடைக்காத ஆத்திரத்தில் சிம்புவின் அம்மா ரேவதியைக் கொல்கிறார்.பழிக்குப்பழியாக வில்லனை சிம்பு கொல்கிறார்.இந்த அரதப்பழசான கதையை வைத்துக்கொண்டு டைரக்டர் நம்மைக்கொல்கிறார்.
ரிச்சாவுக்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை.இடுப்பைக்காட்டிக்கொண்டு, நாலு காட்சிகளில் மண்பானை விற்கிறார்.ரெண்டு டூயட் பாடுகிறார்.அவ்ளோதான். சந்தானத்தின் காமெடியை மக்கள் நன்றாகவே ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.எனவே இனி அவர் சாமான், காலு....,குறி பார்த்துச்சுடு,ஜட்டி போடாம லுங்கி கட்டுனவன் இடுப்புல பீர் பாட்டில சொருகின மாதிரி போன்ற சில அபத்தங்களைத் தவிர்க்கலாம்.
அம்மா இறந்து கிடக்கும் காட்சியிலும், அப்பா நாசர் மருத்துவமனையில் இருக்கும்போது அவரிடம் பேசும் காட்சியிலும் அட’ என்று வியக்க வைக்கிறார்si. ஆனால் சண்டைக்காட்சிகளில் நம்மை மெண்டல் ஆக்குகிற அளவுக்கு பறந்துபறந்து அடிக்கிறார்.50 வில்லன்கள் கையில் துப்பாக்கியுடன் இருப்பார்களாம்...வம்புத்தம்பி சிம்பு மட்டும் வெறுங்கையுடன் இருப்பாராம். அத்தனை பேரையும் அடித்து நாஸ்தி பண்ணி விட்டு சிறு கீறல் கூட இல்லாமல் பஞ்ச் டயலாக் பேசுவாராம்.இந்த மாதிரியான ஃபைட்டுகள் படம் முழுக்க நான்ஸ்டாப் நான்சென்ஸாகத் தொடர்கின்றன.
நீதாண்டி எனக்கு கியூட் பொண்டாட்டி‘ என்று ஒரு இலக்கியத்தரமான பாடலை சிம்பு எழுத,இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் ஆடும் ஒரு பாடலை அண்ணன் டீ.யார் பாடியிருக்கிறார்.
ஒளிப்பதிவு கோபிநாத்.படத்தின் ஒரே ஆறுதல்,தேறுதல் எல்லாமேஇவர்தான்.
படம் துவங்கும்போது, டைட்டில் கார்டு ஒன்றில்’’ இந்தப்படத்தில் எந்த விலங்குகளையும் அடிக்கவோ கொடுமைப்படுத்தவோ இல்லை’ என்று போடுகிறார்கள். விலங்குகளுக்கு காட்டிய கரிசனத்தை ரசிகர்களாகிய நாம் எதிர்பார்க்கக்கூடாது என்று சிம்பு-தரணி கூட்டணி நினைத்துவிட்டது போலும்.
ஒஸ்தி யூ ஆர் வெரி WORSTY.



,

No comments:

Post a Comment