Monday, January 28, 2013

‘பரதேசி’ படத்தை எங்களுக்குப் ‘போடாமல்’ ரிலீஸ் பண்ணக்கூடாது’- பிச்சைக்காரர்கள் பெக்கிங்
மேட்டர் கொஞ்சம் சிக்கலா இருக்கு.அதனால கோர்ட்டுக்கு வெளிய நீங்களே போய்ப்பேசித் தீத்துக்கங்கஎன்று நீதிபதியே கமலுக்கு, ’கட்டப்பஞ்சாயத்தே மேல்என்று அட்வைஸ் வழங்கியிருப்பதும், ‘ஆதிபகவன்என்ற இந்துக்கடவுளர்களின் பெயரை டைட்டிலாக வைத்துக்கொண்டு இஸ்லாமியரான அமீர் எப்படிப் படம் இயக்கலாம்என்று சில வக்கீல்கள் கோர்ட்டுக்கும் கமிஷனர் அலுவகத்துக்கும் புகார் செய்யக்கிளம்பியிருப்பதுமாய் ஒரு புரட்சிப்பாதையை நோக்கிப் பீடைநடை,.. ஸாரி,.. பீடுநடை போட ஆரம்பித்திருக்கிறது தமிழ்சினிமா.
ஐந்து வேளை தொழக்கூடிய தீவிர இஸ்லாமியரான அமீர், ஏற்கனவே இந்துக்கடவுளானராம்பெயரில் படம் எடுத்து, அவனை புத்தி சுவாதீனமில்லாதவனாக்க் காட்டியதை, இப்போது தோண்டி எடுக்க ஆரம்பித்திருக்கும், சில இந்து ஆர்வலர்கள்ஆதிபகவன்என்று
விநாயகர், சிவபெருமான் ஆகிய இரு கடவுள்களைக் குறிக்கும் பெயரை வைத்துக்கொண்டு இந்துக்கடவுளகளை அநியாயத்துக்கு நையாண்டி பண்ணியிருக்க வாய்ப்புண்டு என்று சந்தேகித்து படத்தை அவர்களுக்கு போட்டுக்காட்டச் சொல்லியிருக்கின்றனர். அதில் ஆதியோ, பகவனோ அரவாணியாகத் தோன்றுவதாக சில ஊர்ஜிதமாகாத செய்திகளும் உண்டு.
ஏற்கனவே வெளியான படத்தின் ஸ்டில்களில்ஆதிபகவன்சரக்கடிக்கும் ஸ்டில்களையும் தங்களது போதைக்கு ஊறுகாயாய் யூஸ் பண்ண ஆரம்பித்திருக்கும், அந்த இந்து ஆர்வலர்கள், சும்மா கிடந்த தன் படத்துக்குவிஸ்வரூபவிளம்பரம் தர ஆரம்பித்திருப்பதை எண்ணி உள்ளூர உற்சாகமடைய ஆரம்பித்திருக்கும் அமீர், கமல் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஷோ போட்டுக்காட்டியதைப் போல் முன்கூட்டியே படம் போட்டுக்காட்ட மட்டுமே கொஞ்சம் தயங்குகிறாராம்.
இவர்களைப் போன்ற பொழுதுபோகாத பொம்முகள் வேறுசிலர், மற்ற படங்களையும் இதே போல் கைப்பற்ற, தயாரிப்பில் இருக்கும் தமிழ்ப்படங்களின் லிஸ்ட் கேட்டு, திருவாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் கதவைத்தட்டுகிறார்களாம்.
எல்லாப்படங்களுக்கும் இதே ரீதியில் பிரச்சினைகளைக் கிளப்ப ஆரம்பித்தால் 2013-ன் பிற்பாதியில் இருந்து பார்க்க எதுவும் படங்கள் இன்றி மக்கள் நிம்மதியாக வாழ ஆரம்பிக்கலாம் என்பது, மெல்ல அழிந்து வரும் தமிழினத்துக்கு, ஆகச்சிறந்த செய்திதான் எனினும், சினிமாவை இவ்வளவு சிம்பிளான ரூட்டில் அழிக்க நாம் சம்மதிக்கலாகாது.
சிந்தனைக்குதிரை, இந்த ரூட்டில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சற்றுமுன்னர், நமது பிச்சைக்கார பிரதர்ஸ் அசோஸியேசனிலிருந்து, பிரத்யேகமாக நமக்கு ஒரு சூடான அறிக்கை வந்திருக்கிறது.
அம்மா தாயே நமஸ்காரங்கள்,..
பிரியாணியோ, பழைய சோறோ எதுவாக இருந்தாலும் நீங்கள் போட்டதைத் தின்று வஞ்சனையில்லாமல் வளர்ந்தவர்கள் நாங்கள். ‘பிச்சை புகினும்ஒரு சுடுசொல் பொறுக்காதவர்கள் நாங்கள் என்பதை இந்த ஒட்டு மொத்த பூகோளமும் உணரும். சமூகத்தில் எங்களுக்கென்று அசைக்கமுடியாத அந்தஸ்தொன்றும் உண்டு. பிச்சைக்காரர்களாகிய எங்களை, சிலர் சில சமயங்களில், ‘பரதேசிஎன்று செல்லமாக பறைவதை இந்தப் பார் அறியும்.
நிலைமை இப்படியிருக்க, ‘பரதேசிஎன்ற பெயரில், இயக்குனர் பாலா எடுத்திருக்கும் படத்தில், எங்களை இழிவு படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்குமோ என்று  இதயம் பதைபதைக்கிறது. எங்கள் சதையும் சந்தேகிக்கிறது. ஏற்கனவே அவர் நக்கலுக்கும்,விக்கலுக்கும் பேர் போனவர் என்பதை இந்த நாடறியும், பாடறியும், பள்ளிக்கூடம் தானறியும்.
இதில் எங்கள் மனது சங்கடப்படும்படியான காட்சிகள் இடம் பெற்றிருக்க்க்கூடிய வாய்ப்பு இருக்கும் என்று நாங்கள் சந்தேகிப்பது ஒருபுறமிருக்க, படத்தை எங்களுக்குப் போட்டுக்காட்டாமல் சென்சார் பார்த்து, அதற்கு சர்டிபிகேட்டும் தந்தது கண்டு, நாலு தெரு நடந்து வெறும் தட்டோடு திரும்பினால் ஏற்படுமே, அப்படியொரு விரக்தியும் வேதனையும் அடைந்தோம்.
எனவேபரதேசியை எங்களுக்குப் போட்டுக்காட்டி, அதில் எங்களைப்பற்றிய அவதூறுகள் எதுவுமில்லை என்று நாங்கள்,கே.தாயீசொன்னவுடன் ரிலீஸ் பண்ணவும் என்று பிச்சைப்பாத்திரம் ஏந்திக்கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
யாசிக்க மட்டுமல்ல,.. யோசிக்கவும் ஆரம்பித்துவிட்ட
பிச்சைக்கார பிரதர்ஸ் அசோஸியேசன்.

Sunday, January 27, 2013

'பத்ம பூஜனை நீங்களே பத்திரமா வச்சிக்கங்க’- ’நோ’ சொன்னார் யெஸ்.ஜானகி

சப்போஸ் திருவள்ளுவர் மட்டும் கொஞ்சம் லேட்டாகப் பிறந்திருந்து, லேப்-டாப்பில் திருக்குறளை இயற்ற ஆரம்பித்திருந்தால், கண்டிப்பாக அவரது குழலினிது யாலினிதுகுறளை மட்டும் டெலிட் பண்ணி விட்டு, 1299 குறள்களோடு, அல்லது எஸ்.ஜானகியம்மாவின் குரலுக்கு,’ஜானவாசம்என்ற தலைப்பில், ஒரு பத்து குறளை சேர்த்து எழுதி 1340 குறள்களோடு திருக்குறளை வெளியிட்டிருப்பார்.
 
1957-ல்விதியின் விளையாட்டுதமிழ்ப்படத்தில் அறிமுகமாகி, இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஜானகியம்மாவுக்கு தற்போது வயது 74. ‘செந்தூரப்பூவேவில் தொடங்கி இதுவரை நான்கு முறை தேசிய விருதுகளும், எண்ணிக்கையற்ற அளவில் மாநில விருதுகளும் வாங்கியிருப்பது அனைவரும் அறிந்த சங்கதி. ஜானகியம்மாவின் ஆல்-டைம் ஃபேவரைட் பாடகர் எஸ்.பி.பி. அவருடன் மட்டும் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் இணைந்து பாடியிருக்கும் ஜானகியின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இசைஞானி. 15 ஆயிரம் பாடல்களில் ராஜாவின் இசையில் மட்டுமே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.
 இவர் பாடிய நல்ல பாடல்களைப் பட்டியலிடவே நாலு வாரங்கள் ஆகும். ‘சிங்காரவேலனே தேவாபாடல் ஒன்றுக்காக மட்டுமே நாட்டின் உயரிய விருதுகள் அத்தனையும் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜானகியம்மாவுக்கு,வழக்கம் போல் ரொம்ப சீக்கிரமாகஇந்த ஆண்டுதான் பத்ம பூஷன் விருதையே, ’மக்கியஅரசு அறிவித்திருக்கிறது.
அந்த அறிவிப்பைக்கேட்டு, ‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லைஎன்பது போல் அறச்சீற்றம் கொண்டிருக்கிறார். இவ்வளவு தாமதமாக எனக்கு விருது அறிவித்தவர்கள் அட்லீஸ்ட் பாரதரத்னாவாவது அறிவித்திருக்கலாம். மத்திய அரசின் விருது என்றாலே, அது வடக்கர்களுக்கென்று ஆகிவிட்டது. எனவே இந்த விருதை நான் பெற்றுக்கொள்ளப்போவதில்லைஎன்று நோஸ் கட் பண்ணிவிட்டார்யெஸ்.ஜானகி.
பாரதரத்னாஉங்க வீட்டுக் கதவைத் தட்டுற நாள் ரொம்ப தூரத்துல இல்லைம்மா. உங்களுக்காக குரல் கொடுக்க நாங்க இருக்கோம்.

Saturday, January 19, 2013

‘அ.கொ’கொ.வீ’ அழைப்பிதழ்’- பாலு,மகேந்திரன்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் பாரதிராஜா


’அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்துக்கு, நாளை, மதுரையில் இசைவெளியீட்டு விழா நடக்கவிருப்பதாக, நேற்று அழைப்பிதழ் வந்திருந்தது இயக்குனர் பாரதிராசாவிடமிருந்து.
‘அன்னக்கொடி’யில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்தே, பாவம் பாரதிராசாவுக்கு அடிமேல் அடி விழுந்துகொண்டே இருந்தது. தற்போது அழைப்பிதழ் மூலமும், நல்ல ரசனையுள்ள தமிழ்சினிமா ரசிகர்களிடம், செல்லக்கடி வாங்கவேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார் பாரதிராசா.
துரதிர்ஷ்டவசமாக, உலகின் ஒப்பற்ற இசையமைப்பாளனை உயிர்த்தோழனாக வைத்துக்கொண்டு, கத்துக்குட்டிகளிடம் மியூசிக் கேட்டு காத்துக்கிடக்கும் கொடூர நிலைக்கு ஆளாகியுள்ளதை கொஞ்சம் தாமதமாகவேனும் புரிந்துகொண்டு, ‘அன்னக்கொடி’ இசைவெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க இசைஞானியையே தேர்வு செய்திருக்கிறார் பாரதிராசா.
இந்த எண்ணத்தின் முதல் புள்ளி கவுதம் வாசுதேவமேனனின் ‘நீதானே பொன்வசந்தம்’ விழாவின் போதுதான் ஏற்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் ராஜாவிடம் ‘செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த’ எண்ணற்ற பாடல்களை வாங்கிய முன்னணி இயக்குனர்கள் அனைவரும், ‘கவுதம் அளவுக்கு நாம யாருமே ராஜாவை கவுரவப்படுத்தினதில்லையே’ என்று எட்டு கட்டைக்கு உள்ளம் கூசிய உன்னத தினம் அது.
மற்றவர்கள் நிலையே அதுவென்றால், உயிர்த்தோழனுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அந்த நாள் முதலே, ராஜாவைக் கவுரவிக்க, உலகசினிமா இதுவரை கண்டிராத விழா ஒன்றை மதுரையில் நடத்தவேண்டும் என்று தனது நெருங்கிய நண்பர்களிடம் பேசிவருகிற பாரதிராஜா, அதற்கு முன்னோட்டமாய் சின்னதாக ஒரு ட்ரெயிலர் ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்டதன் விளைவுதான் ‘அ.கொ.கொ.வி’க்கு இசைஞானியின் தலைமை ஏற்பு.
 இன்னொரு பக்கம், பரமக்குடி  சண்டியர்களெல்லாம் மதுரையில் திருவிழா அளவுக்கு கூட்டம் கூட்டும்போது இந்த பாரதி,ராஜாக்களால் முடியாதா? என்ற வீராப்பு.
ஆனால் இந்த வீராப்பை நினைத்து இறுமாப்பு கொள்ளமுடியாத அளவுக்கு அழைப்பிதழில் பெரும்பிழை செய்திருக்கிறார் பாரதிராசா. இளையராஜாவின் தோழுக்குப் பின்னால் பாரதிராஜா நிற்க, அவருக்குப் பின்னால் ‘moneyரதனம் நிற்க, இவருக்குப்பின்னால் போய், தமிழ் சினிமாவின் மாமேதைகளான பாலுமகேந்திராவும், மகேந்திரனும் நிற்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
காவியங்கள் என்று சொல்லி காலகாலத்துக்கும் கொண்டாடக்கூடிய அற்புதமான படைப்புகளைத்தந்தவர்கள் மகேந்திரனும், பாலுமகேந்திராவும். ஆனால் உத்திகளையே சினிமாவாக்கி, தனது புத்தி முழுக்க துட்டு பார்ப்பதிலேயே கவனம் செலுத்துபவர் மணிரத்னம். அதுவும் இசைஞானியின் இசையமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு, கழுதை தேய்ந்து கரப்பான்பூச்சியாய் ஆன கதையாய், படத்துக்குப் படம் இவரது தடம் தளர்ந்துகொண்டே வருவதை சுஹாசினியே பலமுறை சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளார்.
நிலைமை இப்படியிருக்க, அழைப்பிதழில் மணிரத்னத்துக்குப் பின்னால் பாலுமகேந்திராவையும், மகேந்திரனையும் நிறுத்தி, ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழை புரிந்தமைக்காக, மதுரை விழாவில் பாரதிராசா மன்னிப்புக்கேட்கவேண்டும். அப்படிக் கேட்காவிட்டால்,..? கேட்காவிட்டால்,..?? கேட்காவிட்டால்,..???
 யோசிக்கனும், கொஞ்சம் டைம் குடுங்க சார்.

Thursday, January 17, 2013

விமர்சனம்- ‘கண்ணா துட்டு பண்ண ஆசையா?’ இப்பிடியெல்லாமா யோசிப்பாய்ங்க??’

தமிழ் சினிமாவில், ஃபார்முலா படங்கள் தங்களுக்குத் தாங்களே பாடை கட்டிக்கொண்டு பயணம் புறப்பட்டிருப்பதை, இன்னும் ஓரளவு உறுதி செய்ய வந்திருக்கும் படம்கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று கூட சொல்லலாம்.
ஃபேஸ்புக் உட்பட்ட இணையதளங்களின் ஏகோபித்த கோமாளி, பவர்ஸ்டார் என்று நையாண்டி செய்யப்படுகிற வயர் இணைப்பு கூட இல்லாத சீனிவாசன் தான் தி வின் ஹீரோ.
அவன் நடையைப் பாருடா கக்கா போய் நாலு நாளா கழுவாதவன் மாதிரிஎன்பதில் தொடங்கி, உலக சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் இவ்வளவு அவமானங்களைச் சந்தித்திருக்கமாட்டார்கள் என்கிற அளவுக்கு சந்தானம் அவரை ஓட்ட, அதை பவர்ஃபுல்லாக,ஸ்ட்ராங்கான சுவர் மாதிரி, இவர் தாங்கிக்கொள்வதுதான் படத்தின் ஒரே ஹை மற்றும் லோ லைட்.
 
கதை பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பாக்கியராஜின்இன்று போய் நாளை வாவின் மாடர்ன் மங்காத்தாதான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ’மூன்று பேர் ஒரு காதல்என்கிற மெயின் லைனில் துவங்கி, கதையின் முக்கியமான மூவ்மெண்ட்களையெல்லாம் பாக்கியராஜின் கதையிலிருந்தே பந்தாடியிருக்கிறார்கள். ஆனால் பழைய பாட்டிலில் புதிய சரக்கு மாதிரி, படம் முழுக்க சந்தானத்தின் டச், நச்சென்று கதையை நகர்த்துகிறது.
இதே பொங்கலுக்கு வந்தஅலெக்ஸ்பாண்டியன்’-ல் ஆபாச வசனங்களை அள்ளி இறைத்து நாலு படி சறுக்கியிருந்த சந்தானம், ‘ தி காமெடிகள் மூலம் ஏழு படி ஏறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு வொர்க்-ஷாப்பில் கொடுத்து பட்டி பிடித்து, டிங்கரிங் பண்ணி, பெயிண்ட் அடித்து ஃபினிஷிங் பண்ணி வாங்கினாலும் பார்க்கச் சகிக்காத பவர்ஸ்டாரை அவரது மைனஸ்களை வைத்தே கலாய்த்து கவுண்டரின் அடுத்த வாரிசு என்ற அரசல்புரசலான பட்டத்துக்கு ஸ்ட்ராங்காய் அச்சாரம் போட்டு விட்டார் சந்தானம்.ஒரு காட்சியில் மட்டும் தலைகாட்டிவிட்டுப் போனதாலோ என்னவோ சிம்புவைக்கூட ரசிக்கமுடிகிறது.
சந்தானம் மற்றும் பவருடன் மூன்றாவது சாது நண்பராக வரும் சேதுவுக்கு சுத்தமாக நடிப்பு வரலேது.
 புடிச்சிருக்குபடத்தில் அறிமுகமாகி, கொஞ்சம் தடிச்சிருக்கும் நாயகி விசாகா, பவர்ஸ்டாரோட காதலை ஜீரணிக்கிற அளவுக்கு, நல்லா நடிச்சிருக்கு.
ஓவர் வாசிப்பா இருக்கே படத்துல குறைகளே இல்லையா என்று கேட்கலாம். ஏன் இல்லை. முதல் குறை, பாக்கியராஜின் ஒரிஜினலில் இருந்த உயிர்ப்பு இதில் துளியும் இல்லை. பா.ரா.வும் படத்தில்  இதே அளவுக்கு காமெடி பண்ணியிருந்தார் என்றாலும், அவரது பாத்திரப் படைப்புகள் நாம் எங்கோ சந்தித்தவையாய் இருந்தன. ‘ தி ’-வில் அது சுத்தமாக மிஸ்ஸிங். அதுவும் பவர் ஸ்டாருக்கு ஒரு  அறுவெருப்பான அண்ணனையும், அப்பாவையும் வைத்துக்கொண்டு பண்ணிய காமநெடிகளை ஒன்றிரண்டு காட்சிகளுக்கு மேல் சகிக்கமுடியவில்லை.
பவர் ஸ்டாருக்கு கோட் ஷூட் மாட்டிவிட்டமாதிரியே படத்துக்கு மேட்சிங் ஆகாத காஸ்ட்லி ஒளிப்பதிவு பாலசுப்புரமணியத்துடையது. இசை தமன். கானா பாலா பாடியஒரு லெட்டர் எழுத ஆசைப்பட்டேன்பாடல் மட்டும் பரவாயில்லை.
அறிமுக இயக்குனரானமணிகண்டன் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்கிக்கொண்டிருந்தவராம். இன்னொரு படம் பார்க்காமல் இவரையும் பவர்ஸ்டாரையும் விமர்சிப்பது, அடாத செயல் என்பதாகவே படுகிறது. இன்று போகட்டும் நாளை அடுத்த படத்தோடு வரும்போது கவனித்துக்கொள்ளலாம்.