Friday, January 11, 2013

’இனிமேலாவது உன்ன யாராவது சப்பாணின்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சிடு’
தியேட்டர் உரைமையாளர்கள், கடந்த சில தினங்களாகவே, கலக நாயகனாக்கி கலங்கவைத்துப் பார்க்கும், உலக நாயகன் கமலின் ராஜ்கமல் அலுவலகத்திலிருந்து இன்று காலையும் ஒரு அறிக்கை.
விஸ்வரூபம்திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின்  ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25-ம் தேதி 500 அரங்குகளுக்கு குறைவில்லாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது. என் தொலைநோக்கைப் புரிந்துகொண்டு டி.டி.ஹெச். என்னும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத்தயாரான என் திரையரங்கு உரிமையாள மற்றும் விநியோகஸ்த சகோதரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
தனி மனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி.
 அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்ட படத்தில், இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கமலின், டி.டி.ஹெச்.சுக்கு குறுக்கே நெடுக்கே போன சில பூனைகள் போஸ் கொடுத்து நின்றுகொண்டிருந்தார்கள்.

அதைப்பார்த்ததும் மனசு ஒரு ரயிலைப்பிடித்து 37 வருடங்கள் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
,........

,..இனிமே ஊருல ஒரு பயலாவது ஒன்னை சப்பாணின்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சிடு

சரி மயிலு
,.......
,.......
இப்ப எல்லாரும் உன்னை கோபாலகிருஷணன்னு தான கூப்பிடுறாங்க?’

இல்ல மயிலு இந்த ஊர்க்காரப்பயலுவல்ல எவன் என்னை மதிக்கிறான்? இப்பவும் என்னை எல்லாரும் சப்பாணின்னுதான் கூப்பிடுறானுவ

கடந்த சில தினங்களாக கமலுக்கும், நம்ம தமிழ்சினிமா வில்லேஜ் பார்ட்டிகளுக்கும்  நடுவில் நடந்த சண்டை, சப்பாணிக்கும் பரட்டைகளுக்கும் இடையில் நடந்த சண்டை போலவேதான் இருந்தது.

என் பேரு கோபாலகிருஷணன்..டி.டி.ஹெச்நான் என் படத்த லதான் ரிலீஸ் பண்ணுவேன்என்று எவ்வளவு காட்டுக்கத்தல் கத்தினாலும், நம்ம ஆளுங்கள் அவரை சப்பாணியாகவே நடத்த விரும்பினார்கள். கோபாலகிருஷ்ணன்ங்கிற பேர் உனக்கு நல்லால்ல.. அதனால நீ படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டு, அப்புறமா டி.டி.ஹெச் பத்தி பேசுஎன்று அவரை யாரும் மதிக்காமல் அறிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனஅபிராமி ராமநாதன் போன்றோர் கமலுக்கும் முந்தியே விஸ்வரூபம்முதலில் தியேட்டரில்தான் ரிலீஸாகும் என்று உத்தரவாதம் கொடுக்கிறார்கள்.

ஆத்தாசப்போர்ட்டும் இல்லை. மயிலும் வயசுக்கு வந்த பொண்ணு. வீட்டுல ரொம்ப நாளைக்கு வச்சிக்கிட்டு இருக்க முடியாதுஎன்று முடிவுக்கு வரும் சப்பாணி வேறு வழியின்றி பரட்டிகளின் சொல்லுக்கு செவிசாய்த்து, அதே சமயம் தன்னுடைய ஜம்பமும், பிம்பமும் கலைந்து விடாதபடி,’ ’பொதுநன்மை கருதி, தியேட்டர்ல முதல்ல ரிலீஸ் பண்ண சம்மதிச்சிருக்கேன். ஆனா அதுக்காக என்னோட டி.டி.ஹெச் பார்ட்னர்களைக் கைவிடவோ, அவர்களை விட்டு விலகவோ மாட்டேன்என்று கர்த்தர் பாணியில் அறிக்கை விட்டிருக்கிறார்.

இந்த உள்குத்து அறிக்கைகள், ‘விஸ்வரூபம்தொடர்பாக, பேச்சுவார்த்தை முற்றிலும் முடிந்து, இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையே சூசகமாக உணர்த்துகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நமக்கு என்னவோ சகலகலா சக்தி வாய்ந்த வேலு நாயகனை, தமிழ்சினிமா மறுபடியும் சப்பாணியாக்கி வேடிக்கை பார்ப்பதாகவே தோணுகிறது.


No comments:

Post a Comment