ஓராயிரம் உயிர்களை
பதற வைத்தபடியே
காலந்தோறும்
கடந்து செல்லும்
ஆம்புலன்ஸ் ...
ஒரு உயிரைச் சுமந்தபடி...
[இன்று காலை]
இனி பதிவு எழுதும்போது,அதைப்பாதியில் முடித்து தொடரும் போடக்கூடாது என்று உறுதியான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.
காரணம் 1. மிகச்சிலபேர், அது ஒரு பில்ட்-அப் என்று தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். பதிவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீளமாக ஆகிவிட்டதே என்பதற்காக மட்டுமே தொடரும் போட்டேன்.
கா 2.விஷயம் கொஞ்சம் சீரியசானதாக இருந்தால், அதை எழுதி முடிக்கும் வரை நம்மை நாமே ஒரு மனநெருக்கடிக்கு ஆளாக்கிக்கொள்கிறோம்.
பாதியில் நிறுத்தப்பட்ட ‘என் பெயர் முத்துராமலிங்கம்’ அப்படித்தான் ஆகிப்போனது. இதோ தொடருகிறேன்.
‘எல்லாரும் வழி விட்டு நில்லுங்க’ என்றபடி என் வெந்த உடலை வாங்கியபடி டாக்டரை நோக்கி நடக்கிறார் அந்த கான்ஸ்டபிள்.
உள்ளே போனவர் டாக்டரிடம் ஒரு நீண்ட விவாதம் நடத்தி, ‘எனக்கும் இந்த புள்ள பொழைக்கிறதுக்கு வாய்ப்பில்லங்கிறது தெரியுது. ஆனா இன்னும் அஞ்சு நிமிஷத்துல போயிரும் ,பத்து நிமிஷத்துல போயிரும்னு வச்சி அடக்கம் பண்றதுக்கு இது வாழ்ந்து முடிச்ச உசுரா?.முடிஞ்ச வரைக்கும் பாருங்க.உயிரோட தூக்கிட்டுப்போக வேண்டாம்’ என்று சொல்ல, கான்ஸ்டபிளை ஒருமாதிரியாகப் பார்த்த லைஸாண்டர், ‘நர்ஸ் யாரையாவது உடனே போய் ஒரு குலை வாழைப்பழம் வாங்கிட்டு வரச்சொல்லு’ என்று அவசரப்படுத்தியிருக்கிறார்.
நான் எட்டாம் வகுப்பு படித்த சமயத்தில்,தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தேன்.என் அண்ணன்மார்களின் பலசரக்குக் கடையை, படிப்பு நேரம் போக கவனிக்க வேண்டி, நல்லமநாயக்கன்பட்டியிலிருந்து விருதுநகருக்கு ஷிப்ட் பண்ணப்பட்டிருந்தேன். எல்லோரும், கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்கப்போய்க்கொண்டிருக்க, நான் மட்டும் விருதுநகரிலிருந்து சத்திரரெட்டியபட்டி என்னும் கிராமத்துக்கு படிக்கபோய்க்கொண்டிருந்தேன்.பெ
அம்மா சொன்ன கதையின் ஒரு பகுதியை அவரும் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். ,’’ அப்பல்லாம் போலீஸ் யூனிஃபார்முக்கு பயங்கர மரியாதை. போலிஸ்காரர் வந்து சொன்னாரேன்னு சொல்லி, நான் வாழைப்பழ ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சேனே ஒழிய எனக்கு நீ பொழைப்பேன்னு ஒரு துளி நம்பிக்கை கூட கிடையாது.
பழம் வாங்கிட்டு வர்றதுக்குள்ளயே உன் கதை முடிஞ்சிரும்னு கூட நினைச்சேன். நடக்கலை.
தினமும், முகம் தவிர உன் உடம்பெல்லாம் பழச்சதையை வச்சி மூடிட்டு,சில மணி நேரங்கழிச்சி எடுப்போம். ஒரு மூனு மணி நேரம் நீ தாக்குப்பிடிச்ச உடனே எனக்கு லேசா ஒரு நம்பிக்கை வந்துச்சி.தினமும் ஆஸ்பத்திரியில உன்ன கிராஸ் பண்றப்பல்லாம்,மனசுக்குள்ள ‘நீ செத்துப்பொழைச்சவண்டா’ தான் பாடிட்டுப்போவேன்.
இப்பப்பாரு வவுத்து வலின்னு வாரத்துக்கு ரெண்டுதடவையாவது என்னை டார்ச்சர் பண்ண வந்துர்ற’’ என்ற டாக்டர் எனக்கு வவுத்து வலி முத்துராமலிங்கம்’ என்று பட்டப்பெயர் வைக்கும் அளவுக்கு அவருக்கு ரெகுலர் ’கஷ்ட’மர் ஆகியிருந்தேன்.போகும்போதெல்லாம் கலர்கலராக மாத்திரைகள் அடுத்த தடவ சரியாகலைன்னா ஆபரேசன் தான் என்று மிரட்டி அனுப்புவார்.
வாழைப்பழத்தின் தயவில் என் உயிர் நீடிக்க ஆரம்பித்த மூன்றாவது நாள்தான்,இனி இவன் பிழைத்துவிடுவான்’ என்ற நம்பிக்கை வந்து, வாடிப்பட்டி, சோழவந்தான், கட்டக்குளம், சுக்கிலநத்தம் போன்ற கிராமங்களிலிருந்து வந்த என் சொந்தங்கள் ஊருக்கே திரும்பியிருக்கிறார்கள்.
சுமார் இரண்டு மாத சிகிச்சைக்குப்பிறகு சகஜ நிலைக்கு வந்த என் உடலில் தீக்காயத்துக்கான தழும்பு என்று இருப்பது, இடது கையின் ஒரு பகுதியில் மட்டுமே. அதுவும் தினமும் கவனமாய் வாழைப்பழத்தை நீக்கி, புதிய பழங்களை வைக்கும் வேலையை அம்மா செய்துவர,அது அத்தை கைக்குப்போன ஒரு நாள், அந்தக்கையில் வாழைப்பழத்தை எடுக்கும்போது, எனது சதையும் சேர்ந்துவருவதை அவர் கவனிக்காமல் செய்தததால் நிகழ்ந்தது.
இந்தக்கதையை உடைந்த குரலிலேயே பெரும்பாலும் சொல்லும் அம்மா, முத்துராமலிங்கத்தேவர், அந்த கான்ஸ்டபிள், டாக்டர் லைஸாண்டர் ஆகிய மூன்று பேரைப்பற்றிச்சொல்லும்போதெல்லா
’எத்தனை செல்வங்கள் வந்தாலுமே, எத்தனை இன்பங்கள் தந்தாலுமே..அத்தனையும் ஒரு தாயாகுமா? அம்மா..அம்மா...அம்மா.. எனக்கது நீயாகுமா?
தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை. தாயின் வடிவில் தெயவத்தைக்கண்டால் வேறொரு தெய்வமில்லை’
- இது அடிக்கடி நான் கேட்கும் பாடல் எனும்போது என்னை வாழவைத்த ‘முத்துராமலிங்கம்’ எனும் இந்தப் பெயரை நான் கல்லறைக்குப்போகும் வரை மாற்ற முடியுமா?
அப்புறம் எனக்கு விபரம் தெரிந்தபிறகு ‘தேவர்’ பச்சை குத்தியிருந்த அந்த கான்ஸ்டபிளை நான் பார்த்ததில்லை.
ஆனால் டாக்டர் லைஸாண்டரோ வாழ்நாள் முழுக்க பல சமயங்களில் என் கனவுகளில் வந்து நலம் விசாரித்துவிட்டுபோயிருக்கிறார்

90ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள், நான் என் சொந்த வேலை காரணமாக ரயிலில் மும்பை பயணித்துக்கொண்டிருக்கிறேன். வழக்கத்தை விட ஒரு நீண்ட கனவு, ‘என்னய்யா ராசா இப்பல்லாம் என்னப்பாக்க வர்றதேயில்லை. ஊரை விட்டுக் கிளம்பின உடனே வவுத்து வலியெல்லாம் சரியாப்போச்சா?’’ என்றெல்லாம் பேசுகிறார் டாக்டர்.
இறங்கின உடனே முதல் வேலையாக என் விருதுநகர் நண்பனுக்கு போன் அடித்து விஷயத்தைச்சொல்கிறேன்.
‘’டேய் இன்னைக்கி காலைல தான் நான்குநேரி பக்கத்துல ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல லைஸாண்டர் டாக்டர் இறந்துட்டார்டா’’
அதன்பிறகு ஒருமுறை கூட டாக்டர் என் கனவில் வரவேயில்லை.




