![]() | |
இன்னொரு 500 வாங்கியிருக்க வேண்டிய | அந்தணன் |
![]() |
கி.க.சா’ வில் வடக்கம்பட்டி ராமசாமி ,பாவணாவுடன் |
கடந்த வெள்ளிக்கிழமை நான் வழக்கத்தைவிட சற்று அதிக டென்சனாகவே இருந்தேன். என்னை அறியாமலே என் அலுவலகத்தில் நாலைந்துமுறை குறுக்கும்நெடுக்குமாக ,புட்டி போட்ட பூனை மாதிரி நடக்கவும் செய்திருந்தேன்.
மதிய வேளையில், ட்விட்டரில் ஒரு நண்பர் ’ஆயிரம் சத்தங்களுடன் வான்கோழியாமே? என்று ஒரு கமெண்ட் போட்டவுடன் ஒரு அல்ப சந்தோஷத்துடன் டென்சனும் குறைந்தது.
அந்த டென்சனுக்கும், அல்ப சந்தோஷத்துக்கும் காரணம் அறிய நாம் ஒரு ஆறு வருடம் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
அந்த பின்னோக்கிய பயணத்துக்கான போக்குவரத்துச் செலவு, அதன் போது ஏற்படும் மற்ற உதிரிச்செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்பதால் என்னோடு பயணம் செய்வதில் உங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்காது என்று நினைக்கிறேன்.
2005-ம் வருட இறுதியில் நம்ம ‘டமில் சினிமா’ புகழ் ஆர்.எஸ். அந்தணன் என்னை ஒரு நாள் அழைத்து,’ நாம ஒரு படம் எடுக்கலாமா?’ என்றார்.
என்கிட்ட நாலணாவும், உங்க கிட்ட எட்டணாவும் தான் இருக்கு எப்படிங்க படம் எடுக்கிறது? என்று நான் அந்தணனிடம் கேட்ட இரண்டாவது மாதத்தில்,எஸ்.எஸ். ஸ்டான்லி டைரக்ஷனில், ஸ்ரீகாந்த்-பாவணா காம்பினேஷனில் ‘கிழக்குக்கடற்கரைச் சாலை’ என்ற பாடாவதி படத்தை நாங்கஆரம்பித்த கதையெல்லாம் பின்னால் பேசிக்கொள்ளலாம்.[ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்.இந்த ஆள் இந்த மாதிரி நிறைய கதைகளை பெண்டிங் வச்சிட்டுப்போறார்’ ]
‘கி.க.சாலை’ படம் ஒரு ஷெட்யூல் மட்டுமே நடந்து முடிந்திருந்த வேளையில்,படத்தின் ‘தயாரிப்பாளர் நம்ம அந்தணனுக்கு வேண்டியவரான வேலு, தனக்கு வேண்டியவரான சண்முகராஜா என்பவரை அழைத்து வந்திருந்தார்.
இப்ப ஆயிரம் சத்தங்களுடன் ஒரு வான்கோழியை இறக்கியிருக்காரே அந்த சண்முகராஜா தான் அப்ப வந்த சண்முகராஜா. அவரை அறிமுகப்படுத்தி வச்ச வேலு,’’சார் நம்ம கம்பெனிக்கு அடுத்த டைரக்டர் இவர்தான். ‘ல்தாக’ன்னு [அதாவது காதல்-ஐ திருப்பிப்போட்டுருக்காராம்] ஒரு கதை வச்சிருக்கார். அதைக்கேட்டுட்டு உடனே ஆரம்பிச்சிரலாம்’’
மச்சான் நீ கேளு’ங்கிற மாதிரி வேலு அதே தகவலை அந்தணன் கிட்டயும் சொல்லிட்டு தன் வேலையைப்பாக்கக்கிளம்பிட்டார்.
அவர் எவ்வளவோ சொல்லியும் கேளாம, ஸ்டான்லியை தலையில கட்டிவிட்டதனால, ஒரு முழு நேர நொந்தணனா மாறியிருந்த அந்தணன், ‘’ஏங்க சண்முகராஜா கதையையும் நீங்களே கேட்டு சூயிசைடா, மர்டரா எந்த முடிவா இருந்தாலும் நீங்களே எடுத்துக்கங்கன்னுட்டுப்போயிட்டார்.
இப்ப ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியா ரிலீஸாயிருக்க, ‘ல்தாக’ கதைய சண்முகராஜா கிட்ட மறுநாளே கேட்டேன்.
வாளமீன் இருக்குன்றான்,வஞ்சிரமீன் இருக்குன்றான்..நெய்மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருக்குன்றான் ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம் மாதிரி, அவர் சொன்ன கதையில் காதலுக்கான கெமிஸ்ட்ரி இருந்தது, பயாலஜி இருந்தது ஜுவாலஜி இருந்தது, ஜவ்வாலஜி இருந்தது,அவ்வளவு ஏன் நடுவில் சாப்பிட ஒரு பஜ்ஜி கூட வந்தது, ஆனால் கடைசிவரை கதை மட்டும் வரவே இல்லை.
ஆனால் அதை என்னால் சண்முகராஜாவிடம் சொல்லமுடியவில்லை. உதவி இயக்குனராக இருக்கும்போது தன்னம்பிக்கை தேவைதான். ஆனால் சிலருக்கு அது ரொம்ப ஓவராக இருக்கிறது.
’நான் படம் ஷூட்டிங் கிளம்புறது தெரிஞ்சா அன்னக்கே சேரன் பொட்டியக்கட்டிட்டு, ஊருக்குக் கிளம்பிருவாருன்னு நினைக்கிறேன் ’ என்கிற ரகம் சண்முக ராஜா என்பதை, அவரை சந்தித்த பத்தாவது நிமிடத்தில் புரிந்துகொண்டேன்.
அதை வேலுவுக்கு நாசூக்காக தெரிவித்தபோது,’சார் அதெல்லாம் எனக்குத்தெரியாது. அந்தக்கதையில உங்களுக்குப் புடிக்காத ஏரியாவுல கரெக்ஷன் சொல்லி ’பட்டி பாத்து டிங்கரிங் பண்ணியாவது அவருக்கு நாம ஒரு படம் குடுக்கணும் சார் என்கிறார்.
சண்முகராஜாவோ கரெக்ஷன் சொல்ல பக்கத்துல வந்தா கடிச்சி வச்சிருவேன்’ என்பது மாதிரியே பார்க்கிறார்.
அந்தணனோ, ‘மவனே நீ என்ன ஸ்டான்லிகிட்ட மாட்டிவிட்டல்ல, உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’ என்று மைண்ட் வாய்ஸில் சவுண்ட் விடுகிறார்.
‘கிழக்குக்கடற்கரைச் சாலையே நொண்டி அடிக்க ஆரம்பித்திருக்கும்போது, இன்னொரு வடக்கம்பட்டி ராமசாமி வந்து சேர்ந்திருப்பதை நினைத்து,அவ்வ்வ்வ் என்று ஒரு வாரம் அழுது திரிந்தேன்.
சரி இவருக்கு படம் இல்லையென்று சொன்னால்தானே பிரச்சனை.கி.க.சா’ முடிஞ்ச உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று நானும் அந்தணனும் பேசி வைத்து, சண்முகராஜா படத்தை சவ்வாக இழுக்க ஆரம்பித்தோம்.
ஒரு ரெண்டு வாரம் போயிருக்கும், ‘சார் உங்கள உடனே பாக்கனும்’ வேலுவிடமிருந்து ஒரு பதட்டமான குரலில் போன்.
ஆபீஸுக்கு வாங்க வேலு’ என்றபடி போனால்,சண்முகராஜா இல்லாமல் வேலு மட்டும் தனியே வந்திருந்தார். ‘சார் சண்முகராஜா இப்ப என் வீட்லதான் இருக்கார். உங்களப்பாத்தா, அவர் படத்த எடுப்பீங்கங்கிற நம்பிக்கையே வர மாட்டேங்குதாம்.அதனால ...
அதனால..?
’’இன்னும் ஒரு பத்து நாள்ல விளம்பரம் குடுத்துட்டு ஷூட்டிங் கிளம்பலைன்னா உங்க பேரையும் அந்தணன் பேரையும் எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்குவாராம்.’’
எனக்கு அதைக்கேட்டவுடன் , எங்க நல்லமநாயக்கன்பட்டியில் சாராயத்துக்காக தினமும் எங்க ஊர் ஜனங்களோடு ‘செத்துச்செத்து விளையாண்ட ஒரு மாமாதான் திடீரென ஞாபகத்துக்கு வந்தார். அவருக்கு சரக்கு அடிக்க காசு இல்லாத போது, ஏதாவது ஒரு கரண்ட் கம்பத்துக்கு கீழே நின்றுகொண்டு,’ இப்ப எவனாவது நான் சாராயம் குடிக்க காசு தரலைன்னா, நான் ஊர்க்காரங்க பேரெல்லாம் எழுதி வச்சிட்டு, கம்பத்துமேல ஏறி கரண்ட புடிச்சிருவேன்’ என்று மிரட்டியே பல பேரல்கள் குடித்து வந்தார்.
எங்க மாமா மிரட்டிக்கேட்டது பட்டைக்காக, இந்த சண்முகராஜா அண்ணன் மிரட்டுறது படத்துக்காக. ஆக ரெண்டுமே ‘போதை’ சமாச்சாரம்தானே?
அதிலும் வேலு, சண்முகராஜாவின் தற்கொலை முடிவை, ஏதோ சரவணபவன்ல சாம்பார்ச்சாதம் சாப்பிடப்போறாராம்... மாதிரியே சொல்ல, நானும் பதிலுக்கு,’’ வேலு இதுவரைக்கும் நான் யார் தற்கொலை பண்றதையும் நேர்ல பாத்ததில்ல, அதனால அத கொஞ்சம் லைவ்வா பாக்க ஏற்பாடு பண்ணுனா நல்லாருக்கும்’’என்றேன்.
அவ்வளவு ஒரு கொடூரமான பதிலை வேலு என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
அன்று தற்கொலை மிரட்டல் விடுத்தபோது நான் செவி மடுத்திருந்தால், தற்போது திரைக்கு வந்து பலபேரை தற்கொலை முயற்சிக்கு தூண்டிக்கொண்டிருக்கிறாளே தேன்மொழி, அவளது ஆயிரம் முத்தங்களை தலா ஆளுக்கு ஐநூறாக நானும் அந்தணனும் வாங்கி, கன்னம் வீங்க வேண்டியதிருந்திருக்கும்.
ஒரு மண் குறிப்பு: திராபையான படம் என்றால் என்ன மூன்றே வார்த்தைகளில் விளக்குக ? என்று கேட்டால் எங்கள் பதில் ‘கிழக்கு கடற்கரை சாலை’ என்றே வரும்.
அதையும் மீறி இந்தக் கட்டுரை படித்த தோஷத்துக்காக இணையத்தில் நீங்கள்’கி.க.ச. பார்க்க முயன்றால் அதனால் ஏற்படும் உடல் உபாதை, மன உபதை போன்றவற்றுக்கு நான் பொறுப்பாக முடியாது.
வேண்டுமானால் கீழே உள்ள லிங்கில் க்ளிக் பண்ணி 40 வது ஸெகண்டில் வரும் முத்துராமலிங்கன்’ என்ற என் பெயரை மட்டும் பார்த்துவிட்டு முன்னப்பின்ன பாத்துராம, உங்கள மாதிரியே மத்தவங்களும் பாத்துராம ‘பத்திரமா பாத்துக்கங்க.

ஆபிராம் Lincoln எல்லாம் உயிரோடு வந்து “தயாரிப்பு வடிவமைப்பு” செய்தும் கிழக்கு கடற்கரை சாலை பாண்டிச்சேரி நோக்கி ஓடாமல் பொட்டிக்குள் நேராக ஓடியது கொஞ்சம் வருத்தம் தான். ஏங்க லிங்கன் சார் கொஞ்சம் எடுத்து சொல்லியிருக்ககூடாது.
ReplyDeleteஅண்ணா யாரு கிட்ட எடுத்து சொல்லச்சொல்றீங்க. டைரக்டர்கள் கொஞ்ச பேருக்கு அட்வான்ஸ் வாங்கின பிறகு ‘காது கேக்’காது. இந்தப்படம் ஆரம்பிச்ச உடனே ஸ்டான்லியோ டமாரச்செவிடராவே ஆயிட்டார். அப்புறம் எங்க நாம சொல்றது கேக்கப்போகுது?
ReplyDeleteகி.க.சாலையைப் பத்தி எழுதியது சூப்பர். ஆனாலும் செம நக்கல் சார் உங்களுக்கு. உங்கள மாதிரி ஆட்களுக்கே தண்ணி காமிச்சிருக்காங்களே இந்த இயக்குனர்கள். அத நெனச்சாத்தான்... படம் ஆரம்பிச்சப்புறம் கரெக்ஷன் சொல்லவே முடியாதா?
ReplyDeleteகரெக்ஷன் சொல்லலாம், ஆனா அவிங்க கேக்கமாட்டாய்ங்க...
Deleteஅண்ணே.. நொறுக்கிட்டீங்க. சிரிச்சு மாளலை.. இத்தனை நாளா ஏண்ணே எழுதாம இருந்தீங்க..? ஒரேயொரு கட்டுரைல எத்தனை எதுகை, மோனைகள்.. எசப்பாட்டுகள். நக்கல்கள்.. குத்தல்கள்..!? அசத்திட்டீங்க..! அந்த அந்தணனையும் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க.. அதிகமா எழுத மாட்டேன்றாரு..!
ReplyDeleteஅந்தணன் இப்பத்தான் பாஷா ஸ்டோர்ல ஒரு புது பேனா வாங்க கிளம்பிட்டிருக்கார். உங்களை மாதிரி உண்மைத்தமிழன்களுக்காகவே அவர் சீக்கிரமே களம் இறங்கப்போறதா ஒரு வதந்தி.
Deletesuuper
ReplyDeleteஅண்ணே ரொம்ப நன்றிண்ணே... உங்க சாப்பாட்டுக்கடைக்கு சமையல் குறிப்பு ஏதாவது வேணும்னா சொல்லி அனுப்புங்கண்ணே...
Deleteproduction designerன்னு
ReplyDeletehollywood - ல போடுவாங்க . . .
தமிழ் சினிமாவுல மொதோ ஆளு . . .
அண்ணே நீ பெரிய ஆளுண்ணே . . .
அது ஒரு அல்ப ஆசைதான்.
Deleteஆயிரம் முத்தங்களோடு பேரை பார்த்து கிர்ரடிச்சிப் போயிருந்தேன். நல்லவேளை தற்கொலையிலிருந்து என்னைக் காப்பாத்தீட்டீங்க. என்னிக்காவது உங்களைப் பார்க்குறப்போ ஒரு குவார்ட்டர் மானிட்டர் வாங்கித்தாறேன்.
ReplyDeleteஆளப்பிறந்தவன்னு ஆசைப்பட்டதால, என்னைக்காவது ஒரு நாள் உங்கள எங்க பஞ்சாயத்துபோர்டு பிரசிடெண்டாவவது ஆக்கிப்பாக்கலாம்னு ஆசைப்பட்டேன். மானிட்டர்னு டம்மியா இறங்கி அந்த ஆசையில மண்ணைபோட்டுட்டீங்க யுவா...
Delete:)
ReplyDeleteMUTHURAMA LINCOLN!!
ReplyDeleteBOSS UNKA STORY VERY NICE
ReplyDelete