Friday, December 30, 2011

மகான் கணக்கு-விமரிசனம்.கணக்கு,பிணக்கு,ஆமணக்கு

 பன்னி பல குட்டி போட்டமாதிரி இந்த வெள்ளியன்று மட்டும் மூனு டப்பிங் படங்களையும் சேர்த்து மொத்தம் பதின்மூன்று படங்கள் ரிலீஸாகியிருப்பதாக தகவல் சொன்னார்கள்.

எல்லாப்படங்களுக்குமே அழைப்பு இருந்தும்.வருஷக்கடைசியில் வருத்தமான வாழ்க்கை வேண்டாமே என்று அந்தப்படங்கள் போட்ட தியேட்டர்கள் இருக்கிற திசையைக்கூட நான் திரும்பிப்பார்க்கவில்லை.


நேற்று கொஞ்சம் ஃப்ரியாக இருந்ததால் ‘பதினெட்டான்குடி’ என்ற படத்தை இடைவேளை வரை பார்க்க நேர்ந்தது.
நேர்ந்தது என்று எழுதும்போதே என் கதை தீர்ந்தது என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.படத்தில் மொத்தம் பதினெட்டு இடங்களில் குடிக்கிறார்கள். இனிமே எங்களைப்பார்க்க வருவியா என்று ரசிகர்கள் மண்டையில் ‘மடேர் மடேர்’ என்று அடிக்கிறார்கள் என்பதைத்தாண்டி இந்தப்படத்தைப் பற்றி எழுதி உங்கள்
பழி பாவத்துக்கு ஆளாக விரும்பவில்லை.
இன்று மாலை’ மகான் கணக்கு’ என்று சென்சாரால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட’காந்தி கணக்கு’ படம் பார்த்தேன்.இடைவேளைக்குப்பிறகு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பத்திரிகையாளர்கள் கைதட்டிக்கொண்டே இருந்தார்கள். அதனால் இதை ஒரு நல்ல படம் என்று நான் சொல்ல வரவில்லை.
ஆனால் இந்தப் படம் பேசப்படவேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லை.
படத்துக்காக டைரக்டர் தொட்டிருக்கும் மேட்டர் அப்படிப்பட்டது.
‘’ மாப்ள மயித்தைக்கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை.போனா மசுரு’ மதுரைப்பக்கம் ரொம்ப பேமஸான இந்த டயலாக்கைத்தான் டைரக்டர் செயல்படுத்தியிருக்கிறார்.
அவர் வம்பிழுத்திருக்கும் மலை ஐ.சி ஐ.சி வங்கி.
கதை இதுதான். ஹீரோ ரமணாவின் மாமா  அவரை  நன்றாக படிக்க வைப்பதற்காக ஓசிஓசி வங்கியில்
லோன் வாங்குகிறார்.லோனை அவர் ஒழுங்காக கட்டிய பிறகும், பல பித்தலாட்ட வேலைகள் செய்து, லேட் பேமெண்ட், வட்டி, அதுபோடும் குட்டி போன்றவைகளை கட்டச்சொல்லி,  அடியாட்களை வைத்து அவரை டார்ச்சர் செய்கிறது ஓசி ஓசி வங்கி.
இதனால் ரமணாவின் மாமா, அக்கா ஆகியோர் தங்கள் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இடைவேளை.
இதன்பின் குறுக்கு வழியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஓசிஓசி வங்கியை ஏமாற்றி கடன் வாங்கி அவர்களின் பித்தலாட்டங்களை கோர்ட்டில் அம்பலப்படுத்துகிறார் ரமணா.
கதை என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்த முடியாது. டைரக்டர் சம்பத் ஆறுமுகம் எடுத்துக் கொண்டிருக்கும் ‘மேட்டர்’ உண்மையிலேயே சூப்பர்தான்.
அடியாட்களைக் கொண்டு தனியார் வங்கிகள் நடத்தும் அடாவடித்தனத்தை செருப்பால் அடித்திருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை. இதை ஒரு சுவாரசியமான கதையாக மாற்றுவதில் அவருக்கு சாமர்த்தியம் போதவில்லை .
‘’இந்தியா கூட தான் உலக வங்கியில கடன் வாங்கியிருக்கு. அதுக்காக தினமும் நாலு ரவுடிகளை
பார்லிமெண்டுக்கு அனுப்புனா எப்பிடி நிம்மதியா ஆட்சி நடத்த முடியும்? என்ற வசனம் ஒரு சில்வர் ஜூப்ளி தரக்கூடிய உதவி இயக்குனர் யாரோ சம்பத்திடம் இருக்கிறார் என்று சொல்கிறது.
மற்றபடி மேக்கிங்கில் மிகச்சாதாரணமான படம்தான்.
 ராஜபாட்டையில் பல கெட் அப் போட்டதால், தன் ஒரே சொந்த கெட் அப்பையும் மறைத்துக்கொண்டு விக்ரமே தலைமறைவாக அலைவது தெரியாமல், ரமணவும் ஒரு பாடலில் பல கெட் அப்புகளில் காட்சி அளிக்கிறார்.தாங்க முடியலைடா சாமியோவ்.
 கதாநாயகியை எங்கே கண்டெடுத்தார்கள்: என்பது தெரியவில்லை.பிரம்மா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பாதியில் பூலோகம் கொண்டுவந்துவிட்டதைப்போல ஏகப்பட்ட manufacturing defuct' டுடன் இருக்கிரார். சும்மா தொட்டுக்க’ மட்டும் அவ்ரைப்பயன்படுத்தியிருக்கிறார்கள்
வெள்ளைக்காரர்கள் முன்பு வியாபாரம் செய்யவந்து நம்மை அடிமைப்படுத்தியதுபோல், இப்போது அந்நிய நாட்டு வங்கிகள் நம்மை நாஸ்தி பண்ண வந்திருக்கின்றன என்ற மலை போன்ற கருத்தை .............கட்டி இழுத்ததற்கு பதில் கொஞ்சம் நல்ல கயிரு கட்டியே இழுத்திருக்கலாம் இயக்குனர்.

Thursday, December 29, 2011

    குமுதத்தில் என் முதல் நாளும் மாலனின் கடைசி நாளும்
    
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்புவரை இந்த ப்ளாக்’குகள் குறித்து யாராவது பேச ஆரம்பித்தால் அது ஏதோ ஒரு
’காத்து கருப்பு’ சமாச்சாரம் போல என்று கருதி, ஒரு எட்டடி தள்ளி நிற்பேன்.


 இப்போது விதிவசத்தால் நானாக
வலியவந்து மாட்டிக்கொண்டேன்.


 கடந்த மூன்று நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை எனும்போது கொஞ்சம்
சலிப்பாக இருக்கிறது.


 எந்த பத்திரிகையைத் திறந்தாலும் ‘கொலவெறி’செய்தியே முன்னால் வந்து நிற்கிறது.

நேற்று
ரத்தன் டாடாவுடன் விருந்து சாப்பிட்ட தனுஷ், இன்று இந்திய மற்றும் ஜப்பானிய பிரதமர்களுடன் விருந்து
சாப்பிடுகிறார் என்று விழுந்துவிருந்து எழுதுகிறார்கள்.
நமக்கெல்லாம் விருந்து கொடுக்க யாருமில்லை என்ற
வயித்தெரிச்சலுடன், பழைய சோறும் பக்கோடாவும் சாப்பிட்டபடியே நான் கேட்கிறேன்,

’’ஒரு கொலவெறி’
ஹிட்டுக்காக இந்தியா முழுக்க இத்தனை இடங்களில் விருந்து சாப்பிட்டீர்களே தனுஷ், இதன் பிறகாவது உங்களால் ஒரு
நூறு கிராம் ஆவது வெயிட் ஏறமுடிந்ததா? இப்போதும் அதே முப்பத்து மூனுகிலோ முன்னூறு கிராம்தானே நீங்க?

சரி,நம்ம கதையே நாறிக்கெடக்கு. ஊர்க்கதை நமக்கெதுக்கு?
என் கதை எழுத ஆரம்பிக்கிறப்ப தொடக்கத்திலெயே நான் சொல்லியிருந்தமாதிரி,எங்க ஆரம்பிச்சி
எது வழியா போறதுன்னு இன்னும் விளங்கலைதான்.  குமுதம்’ ஆபிஸ் பக்கம் நான் இவ்வளவு
சீக்கிரம் வந்திருக்கக்கூடாது. அவங்க ரொம்ப கோவமா இருக்கங்க.


 அண்ணன் நக்கீரன் கேபால் கூட இருந்த மூன்றரை வருஷங்கள மறக்க
முடியுமா? ‘சத்திரியன்’ நடத்தி பட்ட கஷ்டங்களை,50 ஆயிரம் பிரதிகள் வித்த பத்திரிகைக்கு பூட்டு போட்டதை
எழுதாம இருக்க முடியுமா?

ஆனாலும் இதுக்கு முந்தின சாப்டர்ல  அறிவிச்சிட்டோமேங்கிற ஒரே காரணத்துக்காக குமுதத்தை எட்டிப்பாத்துட்டே வெளிய போவோம்....
...ஒரு கேபினைக்காட்டி உள்ளே போகச்சொன்னார்கள். அங்கே மாலன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்
அல்லவா?

 இதற்கு முன்பு மும்பையில்’ போல்டு இந்தியா’ என்றொரு தமிழ் தினசரி,நக்கீரன்’உட்பட ஏழெட்டு
பத்திரிகைகளில் குப்பை கொட்டியிருந்த நான் ஒரு ஆசிரியர், அதுவும் ஒருகாலை  வேலை நேரத்தில், இவ்வளவு
கம்பீரமாக தூங்கியதை அதுவரை பார்த்ததில்லை என்பதால் சற்று அதிர்ச்சிதான் அடைந்தேன்.

 இவரை எப்படி எழுப்புவது? நமக்கு ‘குமுதம் ‘ஓபனிங்கே ரொம்பக்கேவலமா இருக்கே என்னசெய்வது என்று விழித்துக்
கொண்டிருந்தேன். என் கையிலிருந்த என்குறிப்பு ஃபைலை அவரது டேபிளில் வைத்தேன். அவரது சங்கீத
குறட்டைக்கு முன்னால் நான் ஃபைல் வைத்த சத்தம் கொசு குறட்டை விடுவது போல் பிசுபிசுத்தது.

லேசாக கனைத்துப்பார்த்தேன். கச்சேரி மேலும் களை கட்டியதே தவிர மாலன் எழுந்திருக்கிறபாடாயில்லை.

சரி, ஊருக்கு கட்டின பொட்டிபடுக்கைய பிரிக்காமதான வந்திருக்கோம்.ஆனது ஆகட்டும் என்று சற்று
சத்தமாகவே எழுப்பினேன். ரெண்டு கண்களும் விஜயகாந்தாய் சிவந்திருக்க எழுந்தார் மாலன்.

எதிரில் ஒருஜந்து எதற்காக உட்கார்ந்திருக்கிறது என்பது அவருக்கு
தெரிவிக்கப்படவில்லை என்பதை உடனே புரிந்து கொண்டேன்.

‘’ரிப்போர்ட்டர் வேலைல ஜாயின் பண்றதுக்காக இன்னைக்கு வரச்சொல்லியிருந்தாங்க.’’
இதற்குள் எனது தன்குறிப்பு அவர் கைக்கு போயிருந்தது.சற்று நேரம் பார்த்துக்கொண்டே இருந்தவரின்முகம் இறுக்கமாகியது
.

’நக்கீரன்ல குமுதத்தையும்,பிராமிண்ஸையும் அடிக்கடி திட்டி எழுதுறது நீங்களும்’ துரையும்தான்னு சொல்லுவாங்க
. பிறகு எந்த முகத்த வச்சிக்கிட்டு இங்க வேலைக்கு வர்றீங்க?’’இது மாலன்.
கேள்வி நியாயமானதுதான் என்றும், இது எல்லாம் தெரிந்தேதான், மணா என்னை அழைத்து வந்தார் என்றும் .நான்
அவரிடம் வேலை கேட்டுப்போகவில்லை. குமுதத்துக்கு புள்ள புடிக்கும் வேலையின் ஒரு பகுதியாகவே
மணா என்னை அழைத்து வந்ததையும் நான் சொல்லமுயல, அதை அரைகுறையாகக் கேட்டுவிட்டு,
‘இங்க ஒரு ப்ரூப் திருத்துறவர் வேலைதான் பாக்கி இருக்கு.அதுக்கு ஒகேன்னா சொல்லி அனுப்புறேன்’என்றபடி என்னை வெளியே அனுப்பினார்.
.
அதற்கு முன், பத்திரிகை நிருபராக.இணை ஆசிரியராக, ஆசிரியராக  நான் எதுவும் சாதிக்கவில்லை எனினும் மாலன்
அளவுக்கு நான் மங்குனி இல்லை.

 இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் உணர்வாளர்கள் பொங்கி வழிகிறார்கள்.
ஆனால் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சமயம்.புலிகளுக்கு ஆதராவாக செய்தி வெளியிட்டால் ஏழு
ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று அரசு அறிவித்திருந்த போது, நான் ஆசிரியராக இருந்த’சத்திரியன்’
 பத்திரிகையில் நெடுமாறன் அவர்களை’ வைத்து  ‘மாவீரன் பிரபாகரன்’ என்றதொடரை வெளியிட்டவன் நான். அதனால்தான் சொன்னேன் நான் மாலன் அளவுக்கு மங்குனி இல்லை.

‘ப்ரூப்’ திருத்தும் பணி சாதாரண பணி இல்லை .ஆனால் அதை மாலன் சொன்ன பாணி,எனக்குள் கொந்தளிப்பை
உண்டாக்கியது.

கேபினை விட்டு வேகமாக வெளியே வந்து மணாவைத்தேடினேன்.

[கொஞ்சம் கருணை காட்டுங்கள். எனக்கும்
மாலனுக்குமான கட்டப் பஞ்சாயத்தை நாளை அல்லது மறுநாள்  கண்டிப்பாக முடித்து விடுகிறேன். ]
                    **********************************************************************
நண்பர்களுடன் இன்னொரு முக்கியமான செய்தியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.தொடர்ந்து
எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றி.ஆனால் நான் சொந்தமாகத்துவங்கியிருக்கும் வெப்சைட்’
பணிகள் என்னைத் தின்றுதீர்க்கின்றன.

 ப்ளாக் பொழுதுபோக்கு என்றால் அது பொழப்பு.இதுவரை நிறைய பேருக்கு
நிறைய நிறைய உழைத்து சம்பளம் அனுபவிக்காமல் வந்த சவலைப்பிள்ளை நான்.

காரை சம்பளமாக வாங்க வேண்டிய இடத்தில்
நான் வெறும் சைக்கிளோடு திரும்பிய கதைகள் ஏராளம்.

இப்போதுதான் முதன்முறையாக எனக்கே எனக்கு என்று
ஒரு வெப்சைட் துவங்கியிருக்கிறேன். அதன் முகவரி hellotamilcinema.com.இனி இதில் நிறைய எழுதுவேன்.’ப்ளாக்’கில்
கொஞ்சமாக எழுதுவேன்.

Sunday, December 25, 2011

திண்டுக்கல்லுக்கு மாலன் ஏன் போனார்?என்கதைஎழுதும் நேரம் இது-2

 ஞாபக சக்தி விஷயத்தில் நான் ரொம்ப பரிதாபமான ஆள்.

அமெரிக்கன் கல்லூரியில் டிகிரி முடித்த வருடம் [1985 ] தவிர வேறு எதுவுமே அவ்வளவு சுலபத்தில் ஞாபகத்துக்கு வருவதில்லை.என் முன்னாள் நண்பர் ஒருவர் இருக்கிறார்.  ஞாபகத்திலகம் என்றே கூட அவரை அழைக்கலாம். தன் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை தேதி வாரியாக, இடம் வாரியாக, நேரம் வாரியாக , சம்பவத்தன்று போட்டிருந்த ஜட்டியின் நிறம் வாரியாக எல்லாவற்றையும் சரியாகச் சொல்லுவார். நான் எழுதப்போகும் சம்பவம் நடந்த வருடம் ஞாபகம் இல்லை.அநேகமாக 98 ஆக இருக்கக்கூடும்.
 சம்பவத்துக்குப் போகுமுன், கடந்த வாரம் நடந்த ஒரு சர்ச்சைக்குள் போய்விட்டு வருவோம். சர்ச்சைக்குள் போவதற்கு முன் ஒரு சிறு சந்துக்குள் போய்விட்டு வருவோம்.
 அது எழுத்தாளர் மணாவின் சந்து.
. ‘அகிலா நியூஸ் ஏஜென்ஸி’ என்று ஒன்று வைத்துக்கொண்டு ஏறத்தாழ தமிழகத்தின் அத்தனை பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர் நம்ம மணா.  எங்கேயும் எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டே இருப்பார். துக்ளக் தொடங்கி குமுதம் வரை கடந்த 26 ஆண்டுகளில்  ஆண்டுக்கு ஆயிரம் வீதம் சுமார் 26000 கட்டுரையாவது எழுதியிருப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவர் தனது அயராதஉழைப்பால், கமலைப்பற்றி இதுவரை எல்லாபத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து கடந்த வாரம் ‘நம் காலத்து நாயகன்’ என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் எழுத்துலக மேதை, மாலன், கமலைப் பற்றி எழுதியதை மட்டும் மணா போடாமல் விட்டுவிட்டாராம். இதைப் பற்றி மாலன் ஒன்றும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று நினைத்த மணா, மாலனையும் புத்தகத்தை பாராட்டிப் பேச தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருக்கிறார்,.

ஒரு எடிட்டருக்கான அடிப்படைத் தகுதி நீளம் கால அளவு பற்றிய அறிவு இருப்பது தான். அதுவும் ஒரு விழாவில் பேச வரும் போது மொத்தம் எத்தனை  பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அதில் தான் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று உணர்ந்து நேரம் எடுத்துக் கொள்வது தான் பொது அறிவு. பொது அறிவும் அதுதான். பொதுவாவே அறிவும் அதுதான். ஆனால் மாலனுக்கு இந்த அறிவு துளியும் கிடையாது. சமீபத்தில் பன்னிரெண்டு விஐபிக்கள் பங்கெடுத்த இறையன்பு அவர்களின் புத்தக வெளியீட்டில் இவர் ஒருவர் மட்டுமே நாற்பது நிமிடங்களை எடுத்துக் கொண்டு பத்திரிக்கைகளில் இழவுச் செய்தி என்று அவராகவே ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு மொத்த அரங்கத்தையுமே இழவு வீடாக்கினார்.

அந்த அனுபவத்தில் மணா நிகழ்ச்சியிலும் , அடுத்து மாலன் பேசப்போறார், எப்பவும் போல ஒரு மணி நேரம் தூங்கி முழிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சியைக் கொடுத்தார் மாலன். ’வெகுஜன ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கிடயாது. அந்த வகையில்  இந்த புத்தகம் ஒரு குப்பை’ என்று மாலன் பேச ஆரம்பிக்க, புத்தக வெளியீட்டாளர் மனுஷ்யபுத்திரனுக்கு அதிர்ச்சி. மணாவுக்கோ பேரதிர்ச்சி. அடுத்து கொஞ்ச நேரத்துக்கு ஆளாளுக்கு பார்வைகளாலேயே கெட்ட வார்த்தைகளைப் பரிமாரிக்கொண்டு விழாவை முடித்தனர்.

மாலன் பத்திரிகை உலகில் ஒரு புண்ணாக்கும் சாதிக்காதவர். சுமார் இரண்டு டஜன் பத்திரிகைகளுக்காவது எடிட்டராகப் பொறுப்பேறறிருக்கிறார். புதிதாக ஒரு பத்திரிகையில் எடிட்டராகப் பதவி ஏற்பதற்கு முன்னர் அந்த நிர்வாகத்திடம் வேலையில் சேர்ந்து கொள்ள ஒரு நாள் அவகாசம் கேட்பாராம் மாலன்.அந்த ஒரு நாள் அவகாசம் எதற்கு என்பது பத்திரிக்கை உலகத்துக்கு நீண்ட நாள் புரியாத புதிராக இருந்ததாம். பிறகு ஒரு நிருபர் அந்த ஒரு நாள் அவரை விடாமல் ஃபாலோ பண்ணியபோதுதான், திண்டுக்கல்லில் போய் பூட்டு வாங்கி விட்டுத்தான் வேலையிலேயே சேருகிறார் என்கிற சீக்ரெட் வெளியே வந்தது.

சுவாரசியமாக ஒரு கட்டுரை எழுதத்தெரியாது. ஒரு தலைப்பு வைக்கத்தெரியாது. ஆனால் பத்திரிகை ஆபிஸில் பிரமாதமமாக சுதிபிசகாமல் சங்கீதக்குறட்டையோடு தூங்குவார்.  பக்கத்தில் ராவ் இருந்தாரானால் இவர் ஆரோகணமென்றால் அவர் அவரோகணம்.
 எனக்குத்தெரிந்து ஞானமே சற்றும் இல்லாதவர்கள் அதிகம் ஆசிரியராக இருப்பது நம் தமிழ் நல்கூறு பத்திரிகை உலகில்தான் என்று நினைக்கிறேன்.
முதலாளிகளே தங்களை ஆசிரியர் என்று போட்டுக்கொள்ளும் மூடத்தனமும் இங்கேதான் அதிகம் என்று நினைக்கிறேன்.
ஒரு அரசியல் பத்திரிகையின் ஆசிரியர் பத்திரிகை ஆரம்பித்த முதல்
 ஆறு மாதங்களுக்கு தன் கையெழுத்தைக் கூட கேபால் என்றே போட்டுவந்தார்.

சரி அதப்பத்தியெல்லாம் பிறகு பேசலாம்’

சம்பவத்துக்கு வருவோம். அண்ணே சம்பவம் சம்பவம்னு ஏதோ சொல்ல வர்றீங்க .அப்புறம் குறுக்க நீங்களே புகுந்து உங்களையும் குழப்பி எங்களையும் குழப்புறீங்களே? என்ற உங்க மனக்குமுறல் கேக்கத்தான் செய்யுது.

அது நடந்தது 98 ல் தான் என்று மீண்டும் நினைக்கிறேன். இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து என்னிடமிருந்த‘ திலகாஷ்ட மகிஷ பந்தனங்களை ’பேக் அப் பண்ணி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். ஊரில் போய் ஒரு அஞ்சு வருஷத்துக்கு பலசரக்கு கடைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல், நன்றாகச் சம்பாதித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி வந்து பட வாய்ப்புகள் தேடி பழையபடி சீரழிவது என்பது அப்போதைய உத்தேசம். இதை  எப்படியோ கேள்விப்பட்டு மனஉணர்ச்சிக் கொந்தளிப்பு நிலையை அடைந்த மணா என்னை அழைத்தார். பிரித்திஷ் நந்தியோ,குஷ்வந்த் சிங்கோ,பத்திரிகை துறையை விட்டுவிட்டு, பலசரக்குக் கடைக்கு போவது போல கொஞ்சம் ஓவராகவே இருந்தது அவரது ஃபீலிங்ஸ். பட் ஐ லைக் தேட்.
அவரே எனக்காக ஒரு ‘என்குறிப்பு’ தயாரித்தார். வேற எதுவும்  பேசக்கூடாது. நாளைக்குக் காலைல என்னை ‘குமுதம் ‘ ஆபிஸ்ல வந்து பாருங்க’ என்றபடி
கிளம்பினார். நான்கொஞ்சம் குழம்பினேன்.மறுநாள்,  குமுதம்  அலுவலகம். கேட்டில் காத்திருந்து என்னை அழைத்துப்போனார் மணா. கொஞ்ச காலமாக எழுதுகிற வேலையை விட்டுவிட்டு  இப்படி குமுதத்துக்கு இந்த ‘புள்ள புடிக்கிற’ வேலையை மட்டும்தான் பார்க்கிறார் என்பது அப்போதுதான் தெரிந்தது.
 ரிஷப்சனில் உட்கார வைத்து, எனக்கு ,குமுதத்தில் என்ன மாதிரி பாலிட்ரிக்ஸ் நடக்கும் அதை சமாளிப்பது எப்படி என்று பாடம் நடத்தினார் மணா.
ஒரு வழியாக  ஆசிரியரை சந்திக்க அழைப்பு வந்தது.ஒரு கேபினைக்காட்டி உள்ளே போகச்சொன்னார்கள்.உள்ளே போனால் ஆசிரியர் மாலன் அயர்ந்து
நான்


மணா

[மாலன்]
தூங்கிகொண்டிருந்தார்....[தொடரும் போடுவதற்கு இதுவே சரியான இடம் என்று நினைக்கிறேன்.அடுத்த கட்டுரை குமுதத்தில் என் முதல் நாளும் மாலனின்  கடைசி நாளும்].

Saturday, December 24, 2011

விக்ரமை அறைந்த நிருபர்

செய்திக்கு வருவதற்கு முன், எனக்கு சினிமா ஸ்கூப் நியூஸ்களைத் தொடர்ந்து பொன்னுச்சாமியைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்
உளறி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். பழம் தின்று கொட்டை போட்டவர் மாதிரி
சினிமா தின்று ஃபிலிம் போட்டவர் நம்ம அண்ணன். சினிமா நியூஸைப் பொறுத்தவரை
'give and take' அதாவது போட்டு வாங்குறதுதான் அண்ணனோட பாலிசி. கொஞ்சம் பழைய
ஆளுங்கிறதால காது கொஞ்சம் மந்தம்.இவரு புராணத்தை அப்புறம் பாக்கலாம்.
நேத்து ரிலீஸான விக்ரம் பட ரிப்போர்ட் பத்தி பொன்னுசாமி சொன்ன பகீர் தகவல்கள்.
படத்தோட மொத்த பட்ஜெட் 38 கோடி ரூபாய்
விக்ரம் சம்பளம்                        8 கோடி
சுசீந்திரனுக்கு                              2.50 கோடி
யுவனுக்கு                                     1கோடி
ஹீரொயின் தீஷா                     25 லட்சம்
மற்ற டெக்னிஷியன்கள்           2கோடி,,,,விக்ரமின் ஸ்பெஷல் வேண்டுகோளுக்காக ஒரு பாட்டுக்கு
குத்தாட்டம் போட்ட ஷ்ரேயாவுக்கு 25 லட்சம், ரிமாசென்னுக்கு 15 லட்சம். மத்தது கொஞ்சம் கூட
பொறுப்பில்லாம நடந்த 150 நாள் சூட்டிங் செலவு.
பொதுவா ஒரு படத்தோட தலை எழுத்து படம் ரிலீஸான ரெண்டாவது ஷோவுலயே தெரிஞ்சிடும்.
 சனிக்கிழமை 3 மணி ஷோ நிலவரப்படி ‘ராஜபாட்டை’ வெறும் ரெண்டு வாரப்படம்தான்.
சில ஏரியாக்களை புரடியூசரே ரிலீஸ் பண்ணியிருக்கதா தகவல்.
மொத்தமே எட்டுக்கோடிதான் வசூலாகுமாம் இந்தப்படத்துக்கு. ஆக புரடியூசருக்கு முதல்
படத்துலயே முப்பது கோடி நாமமாம்.
இவ்வளவு பெரிய நாமத்தை பொட்லுரி .வி. பிரசாத் நெத்தி தாங்குமா?
என்ற கேள்வி ஒருபுறமிருக்க, யாரும் தப்பாக விமரிசனம் எழுதிவிடக்கூடாதே என்பதற்காக, அவசர அவசரமாக இன்று மதியம் மட்டன் பிரியாணி பிரஸ்மீட்டுக்கு எற்பாடு செய்திருந்தார் விக்ரம். முதல் நாள் படம்பார்த்து நொந்து வெந்து அந்து போயிருந்த நிருபர்கள், கேள்விகளால் அனல் கக்கிணார்கள்.
‘’தசாவதாரம்’ படத்து மேல என்ன கோபம் உங்களுக்கு, கமலைக் கிண்டல் பண்றமாதிரி இவ்வளவு கெட் அப்?  என்று ஒருவர் ஆரம்பிக்க தொடர்ந்து
விக்ரமை நிருபர்கள் கொத்துக்கறி ப்போட ஆரம்பித்தார்கள். விக்ரமின் மேனேஜர் கிரி ஏடாகூடமாக கேள்வி கேட்பவர்கல்ளை திசை திருப்ப எடுத்த முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை.சரி இன்னைக்கி சாருக்கு ‘அரிகிரி அசெம்பிளி’தான் ஒரு ஓரமாய் ஒளிந்துகொண்டார்..
‘’ இவ்வளவு மட்டமான படத்துல நடிக்க எப்பிடி ஒத்துக்கிட்டீங்க விக்ரம்? இப்படி ஒரு கேள்வியுடன் விக்ரமின் செவிட்டில் ஓங்கி அறைந்தார் இன்னொரு நிருபர்.
‘’கதை எனக்கு பிடிச்சிருந்தது அதான் நடிச்சேன்.சத்யம்’ தியேட்டருல நல்லா ரசிக்கிறாங்க. எங்கூட வாங்க ,காட்டுறேன்’ போன்ற விக்ரமின் பரிதாபமான பதில்களை  நிருபர்கள் எகத்தாளச்சிரிப்புடன் தான் ரசித்தார்கள்..தன்னை  வைத்து நிருபர்கள் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டதை விக்ரம் புரிந்து கொண்டாலும் தப்ப வழியில்லாமல் தவித்தார்.
உச்சக்கட்டமாக இன்னொரு நிருபர், ‘’விக்ரம் ஹாலிவுட் படங்கள்ல எப்ப நடிக்கப்போறீங்க? என்று கேட்டு சக நிருபரகளை விலா நோகச்சிரிக்க வைத்தார். இப்படி ஒரு சிக்கலான கேள்வியை எதிர்பாராத விக்ரமுக்கு திடீரென விக்கல் வந்துவிட்டது.. அருகிலிருந்த அக்காபினா பாட்டிலை எடுத்து அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்..ஆனால் கேல்விக்கு பதில் சொல்லாமல் தன்னை ரொம்ப கேவலமாக பேச ஆரம்பித்து விடுவார்களே என்று நினைத்து,’’ ஹாலிவுட்லருந்து எப்ப கூப்பிடுறாங்களோ அப்ப நடிக்கலாமுன்னு இருக்கேன் பாஸ்’’ என்றார்.
இந்த பதிலின்போது, நம்மை ஒரு கை லேசாக சுரண்டியது. திரும்பிப்பார்த்தால்...அட நம்ம புரடக்‌ஷன் பொன்னுச்சாமி.. தம்பி கொஞ்சம் காதைக்குடுங்க என்றார். வேற வழி? க்டுத்தேன்.
தம்பி படம் ரிலீஸான அன்னைக்கி விக்ரமோட பொண்டாட்டியும் புள்ளைங்களும் பாத்தாங்களாம்.அம்மாவைவிட புள்ளைங்க ரொம்பவேஅப்செட்.    அப்பாவோட 14 கெட் அப்புமே எங்க ஸ்கூல் டிராமாவை விட ரொம்ப கேவலமா இருக்கு.அதனால  அவர ஒரு ஆறு மாசத்துக்கு வீட்டுல சேக்கவேண்டாம் என்று பிள்ளைகள் அம்மாவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்களாம். என்றார் பொன்னுச்சாமி.
இந்த நேரத்துல இந்த நியூஸ் எதுக்குண்ணே?
‘’தம்பி ஹாலிவுட்ல கூப்பிட்டா இவரு போவாராம். முதல்ல வீட்ல கூப்பிடுறாங்களான்னு பாருங்க’’ அப்பிடீன்னு ஒரு ஃபினிஷிங் போடுங்க’’ என்றார் பொன்னுச்சாமி.
போற போக்குல அண்ணன் நம்மள ஃபினிஷ் பண்ணிடுவார் போல இருக்கே?

Friday, December 23, 2011

ராஜபாட்டை விமரிசனம்.’ 70 எம்.எம். சைஸ் ஒட்டைநமது தமிழ்சினிமா ஹீரோக்களை அவ்வப்போது ஏதாவது ஒரு வியாதி பிடித்து ஆட்டும்.

இப்போதைய லேட்டஸ்ட் வியாதி கெட் அப் சேஞ்ச்.
 அது ‘ராஜபாட்டை; யில் விக்ரமை
கொஞ்சம் ஓவராகவே பிடித்து ஆட்டியிருக்கிறது.

சில நூறு கோடிகளோடு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படும்
பொட்லூரி.வி.பிரசாத் தயாரிப்பில் வந்திருக்கும் முதல் படம்.
பட விமரிசனம் எழுதும்போது
இந்த தகவல்கள் எல்லாம் எதுக்கு என்ற கேள்வி வரலாம்.
 அதை கடைசியில் பார்ப்போம்.

சில நல்ல படைப்பாளிகள் கூட குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு
 வயது மூப்பு, தன்னைப்புதுப்பித்துக்
கொள்ளாமை போன்ற சில காரணங்களால் தடுமாறி , ஒரு சில நல்ல படைப்புகளோடு ஓய்ந்து போய்விடுவதுண்டு.

‘வெண்ணிலா கபடிக்குழு’ மற்றும் ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற இரு தரமான படங்களைத்
தந்த இயக்குனர் சுசீந்திரனின் பெயரை திரைக்கதை இயக்கம் என்று போடுகிறார்கள்.
டைட்டில்
கார்டு எழுதும்போது தப்பு எதுவும்  நடந்துவிட்டதோ என்று சந்தேகிக்க வேண்டிய அளவுக்கு
மொத்த படமும் இருந்தால் என்ன செய்வதாம்?

விமரிசகனுக்கு விதிக்கப்பட்ட ஒரு சாபம்.படத்தில் அப்படி என்று ஒன்று இல்லாவிட்டாலும்
கூட ,கதை என்ற ஒன்றை எழுதவேண்டியிருப்பது.

நாயகன் விக்ரம் சினிமாவில் பெரிய வில்லன் ஆகத்துடிக்கும் ஒரு ஸ்டண்ட் பார்ட்டி.பெரியவர்
கே. விஸ்வநாத்துக்கு அவரது பிள்ளை மூலமே ஒரு பிரச்சினை வருகிறது.அனாதைக் குழந்தைகள்
 படித்து வரும் அவரது ஆசிரம நிலத்தை அப்பாவை மிரட்டி எழுதி வாங்க நினைக்கிறார். அந்த
நிலத்தை அரசியல் புள்ளி‘ அக்காவுக்கு ’எழுதி வைத்துவிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பது
விஸ்வநாத் பிள்ளையின் நோக்கம்.

 இந்த ஆபத்திலிருந்து  கே.விஸ்வநாத்தைக்காப்பாற்ற நினைத்து
 அவரைத்தன்னோடு தங்க வைத்துக்கொள்ளும் விக்ரம்.....
.
அடுத்து ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நீங்கள் பார்த்துச் சலித்த காட்சிகளோடு
கர்ணகொடூரமாய் நகர்கிறது ‘ராஜபாட்டை.’.

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் எது ஒரிஜினல், எது சினிமா சண்டைக்
காட்சி என்று புரிந்து கொள்வதற்குள் நம் மண்டை தீப்புடிக்கிறது.

காமெடியாய் ஃபைட் பண்ணுகிறேன் என்ற எண்ணத்தில்  விக்ரம்  அடிக்கும் லூட்டிகள்  ஜித்தன்ரமேஷ்
ரேஞ்சில் பார்க்க பரிதாபமாய் இருக்கிறது.

 58 வயசிலும் காலேஜ் பையனாட்டம், 5வது சீனில் லவ்
பண்ண ஆரம்பித்து 7 வது சீனில் டுயட் பாடி  ரசிகர்களை  வன்கொடுமை செய்வது நியாயமா சியான்?

[இந்தப்படம் டெல்லியில ரிலீஸாகாம பாத்துக்கங்க..இதுல உங்க நடிப்பைப்பாத்தா கண்டிப்பா தேசிய
விருதைத் திரும்ப கேப்பாங்க]

எதோ தேச்சா பாத்திரம் மாதிரி காட்சி அளிக்கும் தீச்சா சேத் தான் ஹீரோயின். நம்மளை விட ஒரு
 முப்பத்தஞ்சு வயசு மூத்தவரை லவ் பண்ண விட்டுட்டாங்களேங்கிற  பரிதாபப் பார்வையைத் தவிர நடிக்கிற
முயற்சி எதுலயும் ஈடுபட்ட மாதிரி எந்த அறிகுறியும் தெரியலை.

‘சலங்கை ஒலி’ சங்கராபரணம்’ போன்ற காவியங்களைத் தந்த கே.விஸ்வநாத் முதல் பாதியில்  விக்ரமுக்கு ஹீரோயினை
லவ் பண்ண ஐடியா தருவதெல்லாம் மட்டமான சீன்கள். இதுக்குப்பதில்
கே. விஸ்வநாத்தே கூட தீச்சாவை லவ் பண்ணியிருக்கலாம்.

கொஞ்சம் போனால் முதலமைச்சராகவே ஆகப்போகும் அக்கா [ பாக்க பக்கா ]  விக்ரமை அடிக்க தொடர்ந்து
அடியாட்களை அனுப்புவதும், எல்லா தினுஷான ஆயுதங்களோடும் வரும் கும்பல் விக்ரமிடம் மட்டும்
வெறுங்கையாலேயே அடிபட்டுச்சாவதும்.. ஆண்டவா இன்னும் எத்தனை படங்கள்லதான் பாக்குறது?

.இசை யுவன் ஷங்கர் ராஜா. கதையே இல்லாத படத்துக்கு நல்ல இசை மட்டும் என்னத்துக்கு என்று
நினைத்திருப்பார்போல. ஒளிப்பதிவு மதி. மற்றும் நன்றி கார்டில் 4பேர்.

 கதைப்படி, படம் முடியும்போது, வில்லனாக விரும்பும்  விக்ரம் ஹீரோவாக மாறி 2 கோடி சம்பளம் வாங்கும்
நிலைக்கு உயர்ந்து ரீமாசென்னோடும், ஷ்ரேயாவோடும் டூயட் பாட ஆரம்பிக்கிறார்.
 உண்மையில் விக்ரம் இந்தப் படத்துக்கு
எட்டுகோடி சம்பளம்  வாங்கினாராம். அது இனிமேல் இரண்டு கோடியாக மாற விக்ரமுக்கு இந்த ஒரு படமே
போதும்.

சுசிந்திரனைப் பற்றி என்ன எழுதுவதென்றே புரியவில்லை.
 மொத்தத்தில் ‘ராஜபாட்டை’ ஹீரோவும், டைரக்டரும்
தங்களுக்கும் தங்களை நம்பி படமெடுக்க வந்த தயாரிப்பாளருக்கும் சேர்த்து கட்டிய ராஜ’பாடை’ என்றுதான்
சொல்லவேண்டும்.

Thursday, December 22, 2011

ஆம், விஜயைக்காதலிக்கிறேன், அதுக்கென்ன? அமலா பால் அதிரடி 
ஹோட்டல் க்ரீன் பார்க். ’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு
வந்திருந்தார் அமலா பால். கோடம்பாக்கத்தின் ஹாட்டஸ்ட் குட்டிப்பிசாசு. நமது ஹல்லோ தமிழ் சினிமாவுக்காக
பிரத்தியேக பேட்டி என்றதும் உடனே சம்மதித்தார். ஆனால் கேள்வியை முதலில் துவங்கியது அமலா தான்.
 
ஏன் நீங்க தமிழ் பிரஸ்காரங்க எப்பப்பாத்தாலும் என் லவ் மேட்டரப் பத்தியே எழுதுறீங்க?
 
மொத்தமா எல்லா ரிப்போர்ட்டர்களையும் வ்ச்சி கேக்க வேண்டிய கெள்விய தனி ஆளா உங்ககிட்ட மாட்டுன என்கிட்ட கேக்குறது எந்த ஊர்
நியாயம்? என்று சமாளித்தபடி பேட்டியை ஆரம்பித்தேன்.
 
முப்பொழுதும் உன் கற்பனைகள்’ அனுபவம் எப்படி இருந்தது?
 
முதல்ல இந்தப்படத்தோட கதையைச்சொன்னவர் கணேஷ்ன்னு ஒரு புதுமுக டைரக்டர். அவரை மாத்திட்டு புரட்யூசர் எல்ரெட்குமாரே
டைரக்ட் பண்ணப்போறார்னு நியுஸ வந்தப்ப நான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். ஆர்வக்கோளாறுல அவரே டைரக்ட் பண்ண இறங்கிட்டாரு
போல இருக்குன்னு மனசுல நினைச்சிக்கிட்டேன். ஆனா ஷூட்டிங் ஸ்பாட் போன உடனே அது தப்பான பயம்னு உடனே புரிஞ்சிக்கிட்டேன். குமார் 
சார் தான் ஒரு பிரமாத்மான டைரக்டருன்னு அவர் ஷூட் பண்ண ஆரம்பிச்ச முதல் நாள்லயே எங்க எல்லாரையும் உணர வச்சிட்டாரு.
 
ஹீரோ அதர்வா?
 
அவர் ஒரு பயங்கரமான கூச்சசுபாவி. பாத்தாலே பாவம்னு தோணுற அப்பாவி.இவர் கூடல்லாம் இணைச்சி கிசுகிசு எழுதுறாங்களேன்னு எனக்கு
சிரிப்புதான் வரும்.
 
அப்ப எந்த கிசுகிசு வுமே உண்மை இல்லையா?
 
 எதைக்கேக்குறீங்கன்னு புரியுது. டைரக்டர் விஜய் கூட எனக்கு இருக்கிறது வெறும் ஃப்ரண்ட்ஷிப்தான்.அதுக்கு மேல அவர் கூட சுத்துறது. அவர்
வீட்டுக்குப் போறது, அவர் என்னோட விட்டுக்கு வர்றது எல்லாமே என்னோட பர்சனல் பக்கங்கள். அதைப்புரட்டிப் படிக்க யாருக்கும் அனுமதி இல்ல.
இன்னும் சொல்லப்போன இந்தப்படத்தோட டைரக்டர் எல்ரெட் குமார் சார் கூடவும் வெளிய சுத்தியிருக்கேன். அதையும் லவ்வுன்னு சொல்றதாயிருந்தா
நான்  வேலை செய்யிற எல்லா படத்தோட டைரக்டர்களையும் ,அந்தப்படத்தோட ஹீரோக்களையும் லவ்  பண்றேன்னுதான் சொல்லனும். அப்படி பேசுறவங்களைப்பத்தி
எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்ல.
தெய்வத்திருமகள்’ படத்துல நடிச்சப்ப விக்ரமையும் என்னையும் கூட இணைச்சி எழுதினாங்க. இப்ப அவரோட அடுத்த படத்துல நான் இல்லைன்ன உடனே,
அந்த கிசுகிசு காணாமப்போகலையா? அதே மாதிரி இன்னொரு புதுப்படம் வரும் அப்ப ஒரு புது லவ்வர் வருவார். அந்த டைரக்டர் விஜையையும் என்னையும் சேர்த்து
பேசுறதை நிறுத்திடுவாங்க.
 
மக்காச்சோளம் பாப்கார்னாக மாறும்போது பார்த்தது போல் இருந்தது அமலாபால் பொரிந்தபோது.

Wednesday, December 21, 2011

என் கதை எழுதும் நேரம் இது

சுமார் ஒரு மாத காலமாக ’எவண்டா இவன்’ என்று என்னைத்தெரியாமலேயே என் ‘பளாக்’ படித்து வரும் நண்பர்களே, என்னை மன்னியுங்கள்
.பெயரையும்,என்னைப்பற்றிய விபரங்களையும் மறைத்து, மறைந்திருந்தே பார்க்கும் மர்மமும் எனக்குத்தேவையில்லை.

என் கதையை எங்கே இருந்து துவங்குவது என்று தெரியவில்லை.அதனால் சற்றே தாமதம்.

'forrest gump' படத்தில் டாம் ஹேங்ஸ், பஸ்  ஸ்டாப்பில் அமர்ந்தபடி, பலபேர் நம்பாத, தனது சொந்தக்கதையைச்சொல்லிக்கொண்டிருப்பார்.

 எனக்கு நெருக்கமான நண்பர்களைத்தவிர, வேறு யாருமே நம்ப முடியாத என் கதைகள் என்னிடம் ஏராளம்  இருக்கின்றன.

நல்லமநாயக்கன்பட்டியில் துவங்கி, மும்பை வரை சூடான என் கால் அடிபட்ட இடங்கள் ஏராளம்.

உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, ஒரு வயதிலேயே சுடுகாட்டில் புதைக்க,  குழி தோண்டப்பட்ட குழந்தை நான்.

எனது 46 வயதில், அந்தக்கதையை எழுதவேண்டியிருந்து, நான் அப்போது பிழைத்திருக்கிறேன்’ என்றுதானே  இன்று நினைக்கவேண்டி இருக்கிறது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘குமுதத்திலிருந்து’ வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தவுடன் நான் செய்த முதல் காரியம். என்னிடமிருந்த பேனாவை மூன்றுமுறை தலையைச் சுற்றி வீசி எறிந்ததுதான். இனிமேல் பேனா எடுத்து எழுதும் வேலை மட்டும் வேணா’ என்று நான் நம்பாத ஆண்டவனிடம் வேண்டுகோள் வைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

அதை எட்டு வருடங்களாக கட்டிக்காத்து வந்த என்னால்,தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை. என்ன செய்வது நான் படங்களில் வேலை பார்க்கப்போனால் ‘பாம்புகள்’ என்னை நோக்கி படமெடுக்கிறது.

 பட்டாசு விக்கபோனால், தீபாவளிக்கு பதினாறு மணி நேரம் மழை பொழிகிறது?
[ஆரம்பத்துல இப்பிடி கொஞ்சம் குழப்பமா இருக்கும்..போகப்போக அதுவே உங்களுக்குப்பழக்கமாயிடும்]      தொடருவேன்....

கழுதைய நாம கடிக்கலாமா?

கண்மாய்ப்பக்கம் போய்க்கொண்டிருக்கிறீர்கள்.ஏதோ ஒரு ஆசையில் ஒரு கழுதை உங்களைக்கடித்து விட்டு ஓடிவிடுகிறது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்? .முடிந்தால் கழுதையை நோக்கி, ஒரு கல்லை வீசிவிட்டு ஊசி போட்டுக்கொள்ள டாக்டரைத் தேடி ஓடுவீர்கள்.

 ஆனால் எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர், அந்தக் கழுதையை பதிலுக்கு கடிக்காமல் விடமாட்டேன் என்று கண்மாய் கண்மாயாக வெறிகொண்டு அலைகிறார்.

அவர் பெயர் கார்த்திக்ஜெய். மிருகம்’ நெல்லு’ ‘சமீபத்தில் வந்த வெண்மணி’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்.’மிருகம்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த இவருக்கு தானும் அஜீத், விஜய் ரேஞ்சுக்கு பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசை.

உடனே ‘நெல்லு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

போட்டது நாப்பது பிரிண்ட். மறுநாளே திரும்பி வந்தது நாப்பத்தி ரெண்டு பிரிண்ட்.
.எக்ஸ்ட்ரா ரெண்டு பிரிண்ட் எப்படி வந்தது  என்று யோசித்து அன்றே திருப்பூருக்கு திரும்பி போயிருந்தால், சில கோடிகள் மிச்சமாகியிருக்கும்.
ஆசை யாரை விட்டது?

அஜித் போகட்டும். ஒரு விஷால் இடத்தைப் பிடித்தால் கூட விட்ட காசைப்பிடித்து விடலாம் என்று, உக்கிரமாக யோசித்து, கிருபாகரன் என்ற கேரக்டரில் ஹீரோவாக’வெண்மணியில் நடித்தார். இந்தப்படமும்’ பொட்டி சுட்டதடா’  கதைதான்.

இவர் கடந்த வாரம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்தார்.

பரவாயில்லையே, பொதுவா,ஊருக்குப் பொட்டியக் கட்டுறப்ப, யாரும் சொல்லிட்டு போறதில்ல..இவரு வித்தியாசமான ஆளா இருக்காரே, டாட்டா சொல்லி அனுப்பிட்டு வருவோம்  என்று நினைத்துதான் நானும் போயிருந்தேன்.

ஆனால் மைக்கைப்பிடித்தவுடன், அந்த சினிமாவை ஒரு கடி கடிக்காமல் நான் திருப்பூர் திரும்ப மாட்டேன்’’ என்று கொக்கரிக்க ஆரம்பித்தாரே  பாருங்க ‘ நான் ஒரு கணம் வெலவெலத்துப் போயிட்டேன்.’

‘’மிருகம்’ படம் எடுத்தேன்.டைரக்டர் சாமி , சொன்ன பட்ஜெட்ல எடுக்காத்துனால ,அதில எனக்கு ஒரு கோடி நஷ்டம்.

’நெல்லு’ வெண்மணி’ படங்களால எனக்கு 5கோடி நஷ்டம்.

இந்த மூனு படங்கள் மூலமா ,சினிமாவுல எப்பிடியெல்லாம் சீட்டிங் பண்றாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

ஒரு ஒட்டு தாடி கேட்டா, மூவாயிரம் ரூபாய்க்கு பில்லை நீட்டுறாங்க. ஒரு துண்டு பீடி கேட்டா கிங்ஸ்  சிகரட் விலை எழுதுறாங்க.

 இந்த சினிமாவை நான் விடுறதாயில்ல.இங்க விட்ட காசை நான் இங்கயே எடுப்பேன்.’’[எடுப்பேன் எனக்கு மட்டும் வேற மாதிரி கேட்டுச்சி] என்று அகோர சினிமாப் பசியுடன் முழங்க ஆரம்பித்த கார்த்திக்,’பாவி’ என்ற பெயரில் மீண்டும் தானே ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தையும் ஆரம்பித்து விட்டாராம்.

 சார், கழுத ஒதைக்கும். அத கடிக்க கண்மாய் கண்மாயா அழையாதீங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாரு.

Tuesday, December 20, 2011

நிக்கட்டுமா ...போகட்டுமா நீல நயன் குயிலே...

 மாஸ்டர் பிரபுதேவாவைத் திருமணம் செய்துகொண்டு, இண்டஸ்ட்ரியை விட்டு பிரியாவிடை பெறப்போகிறார் நயன் தாரா  என்ற பீதியிலும், கூட ரெண்டு பெக்’ அடித்து வீதியிலும் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சற்றே ஆறுதலான சேதி ஒன்று கிடைக்கும்போல தெரிகிறது.

‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ படத்தில் சீதையாகவே வாழ்ந்து  ராமபக்தர்களை புல்லரிக்க வைத்த நயன் தாரா, அதைத்தான் தன் கடைசி படம் என்று அறிவிக்கவும் செய்தார்.

இதை ஒட்டி ரசிகர்கள் அடைந்த மனக்கொந்தளிப்பை அறிந்தோ என்னவோ, இறைவன் தன் நவீன திருவிளையாடலை, இயக்குனர் ராம்கோபால் வர்மா மூலம் துவங்கிவிட்டான்.
 ஸ்ரீராம ராஜ்யம்’ பார்த்து மற்றவர்களை விட அதிகமாக, அதாவது பெரும்புல்லரிப்பு அடைந்த வர்மாவுக்கு, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பத்தாவது நிமிடமே ஒரு கதை உதயமானதாம்.

சீதையாக நடித்த நயன் தாரா மண்டோதரியாக நடித்தால் எப்படி இருக்கும்? என்று அவரது மண்டையைத்தடவ ஆரம்பித்திருக்கிறார்.
.
‘நவீன ராமாயணா’ என்று டைட்டில் பிடித்து மெல்ல அதில் டிராவல் பண்ண ஆரம்பித்தார்.

அடுத்து நாகார்ஜுனாவுக்கு போனைப்போட்டு ‘’உங்களுக்கு பொருத்தமா ராவண ராஜுன்னு ஒரு கேரக்டர் புடிச்சிருக்கேன். உங்களுக்கு ஜோடியா மண்டோதரியா நயன் தாரா நடிக்கிறாங்க.’’

‘’அவங்க தான் இனிமே படம் நடிக்கப்போறதில்லைன்னு சொல்றாங்களே’’
நாகார்ஜுனா.

உங்களுக்கு ஓகேன்னா நயன் தாராவை திரும்ப நடிக்க வைக்கிறது என் பொறுப்பு’ என்றபடி பிரபுதேவாவை பார்க்கக்கிளம்பினார் வர்மா.

கல்யாணத்தை இன்னும் கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைக்க ஏதாவது சாக்கு கிடைக்காதா என்று காத்திருந்த பிரபு தேவாவுக்கு, ராம்கோபால் வர்மா ஒரிஜினல் ராமர் போலவே தெரிந்தார்.

மண்டோதரியோ, குண்டோதரியோ, நீங்க உடனே படத்தை ஆரம்பிங்கண்ணா’ என்று கும்பிட்டு வழி அனுப்பி வைத்தாராம் பிரபுதேவா.

அடுத்த கட்டமாக,மண்டோதரியிடம் மண்டியிட வந்தபோது, குழந்தைத் தனமாக ‘அவரு என்ன சொல்லுவாருன்னு தெரியலையே’ என்றாராம்.
பிரபுதேவாவிடம் ஆல்ரெடி ஓ.கே வாங்கியதை வர்மா சொல்ல சற்றே கன்ஃபியூஸ் ஆனாராம் நயன்.

தனக்கு யோசிக்க சில தினங்கள் அவகாசம் வேண்டும் என்று வர்மாவை அனுப்பி வைத்துவிட்டு ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’ ஒன்று பண்ணலாமா என்று யோசித்து வருகிறாராம்.
தகவல்களை புட்டுப்புட்டாக வைப்பது உங்கள் புரடக்‌ஷன் பொன்னுசாமி.

தமிழ்சினிமாவுக்கு 77 கோடி நஷ்டம் ஏற்படுத்திய எழுத்தாளர்

’சினிமா எக்ஸ்பிரஸ்’ வாங்கிப்படிக்கிற பழக்கத்தை விட்டு வெகுகாலமாகி விட்டது.காரணம் அந்தப்பத்திரிகை காலமாகி வெகு காலமாகி விட்டது.

நேற்று போனில் வந்த நண்பர் ஒருவர், உங்க நண்பர்,உங்க ஊர்க்காரர்  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பத்தி  சினிமா எக்ஸ்பிரஸ்’ல ஏடாகூடமா எழுதியிருக்காங்க பாருங்க’ என்றார்.

ஒரு நண்பரைப்பற்றி ஏடாகூடமாக எழுத இன்னொரு நண்பர் இருக்கும்போது.  கண்டபயலுக கண்டபடி ஏன் எழுதனும்?  என்று யோசித்தபடியே சினிமா எக்ஸ்பிரஸ் வாங்கிப்படித்தேன்.

‘வசன விபச்சாரிகள்’ என்று தலைப்பிட்டு, சினிமா வஜனகர்த்தாக்களை மிக மட்டமான வார்த்தைகளில் கிழித்து தோரணம் கட்டித்தொங்க விட்டிருந்தார்கள்.

.....தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நல்ல இலக்கியவாதிகள் தங்கள் ‘கற்பை' இழக்க மட்டுமே சினிமாவுக்கு வருகிறார்கள்.விபச்சாரம் செய்யும் பெண்கள் பணத்துக்காக தொழிலுக்கு வந்ததாக உண்மையை ஒத்துகொள்வார்கள். ஆனால் நம் இலக்கிய வாதிகள்? காசுக்காகவும் சினிமா கவர்ச்சிக்காகவும் சோரம் போகத்தயாராகி விடுகிறார்கள்....

இந்த ரீதியில் கொஞ்சம் நீளம் அதிகமாகவே தொங்குகிறது அந்தக்கோவணம் ஸாரி அந்தத் தோரணம்.

இதை ஒட்டி சினிமா எக்ஸ்பிரஸுக்கு ஒரு ஒச்சரிக்கை விடுகிறேன்.
இனி இது போன்ற இலக்கியவாதிகளை திட்டி நீங்க எழுதக்கூடாது. அதுக்குதான் நாங்க இருக்கோம்ல...
முதல்ல எஸ்.ராமகிருஷ்ணன் ல இருந்தே ஆரம்பிப்போம்.

இவரே சொல்ற மாதிரி, கோணங்கி லுங்கிய புடிச்சபடி எழுத ஆரம்பிச்சவர். கோணங்கி ஆறு மாசத்துக்கு ஒருதடவை கூட எழுத மாட்டார்.
ஆனால் எஸ்.ரா சாப்பிடுறப்ப,தூங்குறப்ப, தும்முறப்ப கூட எழுதிக்கிட்டே இருப்பார். அம்மாவோட தாலாட்டு மாதிரி,  இவரோட எழுத்த  பத்தாவது வரி  படிக்கிறப்பவே ஒரு சுகமான தூக்கம் வரும் பாருங்க. அந்த தூக்க நடைய தூக்கலா வச்சி எழுதியே மனுஷன் பிரபலம் ஆயிட்டாரு.

நதிகள் இறங்கி நீராடிய போது, வாழ்வின் தரிசனங்களை ஆழமாக ஊடுருவிச்சென்று  செறிவானதொரு பரவச தருணங்களை பருக.....

 இப்பிடி கமா,கைமா எதுவுமில்லாம போயிக்கிட்டே இருக்கும் இவரோட எழுத்து.

இவர் சினிமாவுக்கு வசனம் எழுத ஆரம்பிச்ச முதல் படம்’ஆல்பம்’ .கம்பெனி கவிதாலயா.டைரக்டர் இவரோட ஊர்க்காரரான வசந்தபாலன்.

முதல் கோணல் முற்றிலும் கோணல்ங்கிற மாதிரி, அடுத்து வரிசையா பல ஊத்தல் படங்களுக்கு எழுத ஆரம்பிச்சார்.

சரி, ஒரு படம் ஓடலைன்னா அடுத்த படத்துக்கு கூப்பிட மாட்டாங்களே? இவருக்கு மட்டும் எப்பிடி இவ்வளவு படங்கள் வந்தது?

அண்ணன்கிட்ட ஒரு அருமையான வசிய மருந்து இருக்குது .அது இல்லாம எங்கேயும் போகமாட்டார்.

எழுதுற நேரங்கள் போக மீதி நேரங்கள்ல, அசராம உலக சினிமாக்களை டி.வி.டி யில பாக்குறதுதான், இவரோட முக்கியமான வேலை.
பாத்துட்டு அதைப்பத்தி மணிக்கணக்குல பேசுறதுல நம்ம அண்ணன் ஒரு மன்னன்.

 இவரோட பேச்சுக்கு ஆனானப்பட்ட ரஜினியே கொஞ்ச காலம் அடிமையாக்கிடந்தார்னு சொன்னா  உங்களுக்கு நம்புறதுக்கு கஷ்டமா இருக்கும்.ஆனா உண்மை அதுதான்.

தினமும் மதியத்துக்கு மேல காரை செல்ஃப் டிரைவ் பண்ணிக்கிட்டு ராமகிருஷ்ணன் வீட்டுக்கு அவரை  பிக்கப் பண்ணப்போவார் ரஜினி.
கார் அங்கருந்து நேரா ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்குப்போகும்.

 உள்ள ஒரு வெட்டவெளியில நின்னுகிட்டு, தத்துவம்,சினிமா,ஆன்மிகம்னு எதாவது ஒரு டாபிக் எடுத்து ராமகிருஷ்ணன் பேச ஆரம்பிக்க
 ,குறுக்க ஒரு வார்த்தை கூட பேசாம,
 வாய்ல ஈ,காகா,கொக்கு,குருவி எது போறதும் தெரியாம
 மணிக்கணக்குல ’மயக்கம் என்ன’ தனுஷ் மாதிரி மயங்கிக் கேப்பார் ரஜினி. இதுக்காக எஸ்.ராவுக்கு .மாசச் சம்பளமும் தந்துட்டு வந்தார் ரஜினி.
. அப்படிப்பட்ட வசியப் பேச்சுக்கு சொந்தக்காரர் அண்ணன் ராம்கி. .பப்பரப்பான்னு போன ‘பாபா’ பட வாய்ப்பும் இப்பிடி ரஜினி மூலமா தான் கிடைச்சது.

அதுக்கப்புறம் எஸ்ரா. வசனம் எழுதின படங்கள், நாசரோட ‘பாப்கார்ன்’ போட்ட காசெல்லாம் நாசமாப்போனதாலஅத்தோட படம் எடுக்கிறதையே நிறுத்தினார் நாசர்.

அடுத்து இவர் வசனத்துல.’பீமா’ தயாரிச்ச ஏ.எம்.ரத்னம் முதல் முறையா கோமா ஸ்டேஜுக்கு போனார்.

 ஓளிப்பதிவாளர் ஜீவா ‘தாம்தூம்’னு ஒரு படத்துக்கு இவரை வசனம் எழுதச்சொல்லிட்டு இந்த உலகத்தை விட்டே போனார்.

 அடுத்து வசனம் எழுதின ’மோதி விளையாடு’ சரணுக்கு பேதி ஆயிடுச்சி.’சிக்குபுக்கு’ன்னு ஒரு படம் கெக்கேபிக்கேன்னு சிரிச்சாங்க.

. 18 கோடியில் தயாரான பாலாவின்’அவன் இவன்’ படத்துக்கும் எஸ்.ரா தான் வசனம் எழுதினார். படத்தில வந்த சில வசனங்கள்னாலேயே பாலா பஞ்சராகி கொஞ்ச நாள் டிஞ்சர் போட்டுக்கிட்டு திரிஞ்சார். அடுத்து’ யுவன் யுவதி’ன்னு ஒரு படம்.மொத்த யூனிட்டுக்கும் அவதி.

கடைசியா ‘பேசு’ன்னு ஒரு படத்துக்கு எழுதியிருக்கார்.
அந்தப்படம் தியேட்டர் வரிக்கும் வந்து பேசுமான்னு தெரியலை.

இதுல ‘சண்டக்கோழி’ மட்டும் விதிவிலக்கு. [அந்தப்படத்துலயும் குட்டிரேவதிங்கிற,ஒரு கவிஞரைப்பத்தி ஏடாகூடமா எழுதி ஏகப்பட்ட பொண்ணுங்க நம்ம எஸ்.ரா வீட்டுக்கு விளக்கமாத்தோட போனகதை பழையகதை.]

மேற்படி படங்களோட பட்ஜெட்டை கூட்டிக்கழிச்சி ,பாக்கிறப்ப நம்ம எஸ்.ரா கதை வசனம் எழுதின படங்கள்ல மட்டும் தமிழ்சினிமா 77 கோடி ரூபா நஷ்டப்பட்டிருக்கு.

எஸ்.ராமகிருஷ்ணன் ஏரியாவுல ஒரு சொலவடை மிகப்பிரசித்தி பெற்றது.

‘முள்ளு முனையில மூனு குளம் வெட்டி வச்சேன்.ரெண்டு குளம் பாழு.ஒண்ணு தண்ணியே இல்ல.

அது மாதிரியே எஸ்.ரா. பதினோரு படத்துக்கு வசனம் எழுதினார். பத்து ஓடவே இல்ல. ஒண்ணு இன்னும் ரிலீஸே ஆகலை.

[ஓ சினிமாஎக்ஸ்பிரஸே உன்னை மறுபடியும் ஒச்சரிக்கிறேன்,
 நம்ம எழுத்தாளர்களைப் பற்றி ஏடாகூடமாக எதுவும் எழுதவேண்டாம். அப்புறம் எங்க பொழப்பு என்னாகுறது? ]

Monday, December 19, 2011

அறிக்கை மன்னன் அமீர்

'
....இத்துடன் நமது அறிவிப்பை ஏற்று சங்கத்தின் மரியாதையை காப்பாற்றும் விதத்தில் சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கும் சங்க அறிவிப்பை கவனத்தில் கொள்ளாமல் விழாவில் கலந்து கொண்ட ஒரு சில  இயக்குநர்களுக்கும்,  சில உதவி இயக்குநர்களுக்கு சங்கத்தில் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...... "

’தென்மேற்கு பருவக்காற்று’ செங்கடல்’ ஆகிய இரு படங்களை சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சுகாசினி,அடிபணிந்து ஒத்துக்கொண்ட பிறகு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை இது.

சங்கத்தின் மரியாதையை  காப்பாற்றும் விதத்தில் ஒத்துழைப்பு அளித்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கும், அறிவிப்பை கவனத்தில் கொள்ளாமல் திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் ஒரே மாதிரியான நன்றியைத்தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு ரெண்டுங்கெட்டான் அறிக்கையை யார் தயாரித்தது என்று தெரியவில்லை.?


சங்கத்தின் ‘சொல்பேச்சு கேட்காமல்’  திரைப்பட விழாவுக்குப் போனவர்களைக் கொஞ்சமாவது கண்டிக்காவிட்டால் ,எதிர்காலத்தில் சங்கம் எடுக்கும் தீர்மானங்களை யாரும் கண்டுகொள்ளாமல் போகும் ஆபத்து நேராதா?
ஆரம்பத்தில் ஓவராக ரூல்ஸ் பேசிய ருக்குமணி சுகாசினியே சங்கத்தின் ஒற்றுமையான தீர்மானத்துக்கு பயந்துதானே மேற்படி படங்களைத்திரையிட சம்மதித்தார்?

தங்கர் பச்சான், சேரன், மற்றும் அமீர் போன்றவர்களுக்கு தங்கள் பெயர் எப்போதும் பத்திரிகைகளில் வந்துகொண்டேயிருக்கவேண்டும். இந்த வியாதிக்கு அறிக்கை அரிப்பு என்று சொல்வார்கள். உலகத்தின் எந்த மூலையிலும் இன்னும் இந்த அரிப்புக்கு தைலம்’ கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏற்கனவே, தலைவர் பாரதிராஜாவைக் கலந்து ஆலோசிக்காமல், அமீரே எதுக்கெடுத்தாலும் பத்திரிகைகளை அழைத்து  பேட்டிகளும், அறிக்கைகளும் தருவதாகவும், அதனால் அமீர் மீது பாரதிராஜா கடும் கோபத்தில் இருப்பதாகவும் ஒரு வதந்தி நொண்டியடிக்கிறது.

 ஒருவேளை மேற்படி அறிக்கையும் அறிக்கை மன்னன் அமீரால்  அப்படி அவசர அடியாக வந்ததுதானோ என்னவோ?

Sunday, December 18, 2011

விகடனைவிட்டு வெளியேறுகிறா ரா.கண்ணன்?

விரைவில் ஆன்லைனில் வரவிருக்கும் எனது hellotamilcinema.comல்‘ நாலாம் உலகம்’ என்ற தலைப்பின்கீழ் தொடர்ந்து பத்திரிகைகளைப்பற்றியும், பத்திரிகையாளர்களைப்பற்றியும் நல்லது கெட்டதுகளை  எழுதவிரும்புகிறேன். நம்புங்க குவார்ட்டருக்கு மேல அதிகமா அடிச்சா ,என்னைப்பத்தி கூட நானே எழுதுவேன்.

பொதுஜனங்களுக்கு பாவம், நகரசபை,சட்டசபையில நடக்கிற கூத்துகளைவிட பத்திரிகை
ஆபிஸ்கள்ல நடக்கிற  கூத்து இன்னும் சுவாரசியமானதுங்கிறது தெரிய வாய்ப்பில்லை.

கட்சி விட்டு கட்சி தாவுற மாதிரி,காலங்காலமா குமுதம் நிருபர்கள் விகடனுக்கு போறதும்,விகடன் பார்ட்டிங்க குமுததுக்கு போய் கும்மியடிக்கறதும் சகஜம்.போன வாரம் கூட சேஷையா ரவியும்,வெங்கட்டும் விகடன்ல்ருந்து குமுதத்துக்கு போயிருக்காங்க.

அதுவும் சமீபத்துல,நடக்குற உள்நாட்டுச்சண்டையால , குமுதத்துல நடக்குற கூத்துக்கள் கொஞ்சநஞ்சமில்ல.

 ஒரு வயசான பாட்டிய படிதாங்கலா கூட்டிட்டுப்போன போனதுக்காக ( அந்த பாட்டி யாருங்கிறதுதான் மேட்டரு)  ரிப்போர்ட்டர்  பொண்ணை பத்து நிமிஷத்துல சஸ்பெண்ட் பண்றாங்க.

 பச்சைக்கலர் சட்டை போட்டுட்டு போனா சப்-எடிட்டரை  பம்பாய்க்கு டிரான்ஸ்பர் பண்றாங்க. மஞ்ச கலர் சட்டை போட்டுட்டு போனா மைசூருக்கு மாத்துறாங்க.

அஞ்சு நிமிஷம் ஆபிஸுக்கு லேட்டா வந்தா அரைநாள் சம்பளத்தை கட் பண்றாங்க, ஆனா ஆனந்தவிகடன் லருந்து வேலைக்கு வந்தா மட்டும் அம்பதாயிரத்துக்கு மேல சம்பளம் தர்றாங்க.

இப்படிக்கொதித்துப்போயிருக்கும் குமுதம் அன்பர்களே..., கிசுகிசு எழுதியே களைத்துப்போன  வம்பர்களே, ..விரைவில் இன்னொரு இடியாப்பச்செய்தி உங்கள் செவிகளில் இடியாய் வந்து இறங்கப்போகிறது.

தற்போதைய ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணன் மிக விரைவில் குமுதம் ஆசிரியராகப்பொறுப்பேற்கப்போகிறார்.இது தொடர்பாக கடந்த வாரம் மட்டும் மூன்று சந்திப்புகள் நடந்து முடிந்துள்ளன.

இருப்பதிலேயே உயர்ந்த ஆசிரியர் பொறுப்பு,பெரிய சம்பளம்,  இன்னும் சில உபரி அந்தஸ்துகள் என்று இருக்கும்போது கண்ணன் ஏன் விகடனை விட்டு வெளியேற வேண்டும்?

கேள்வி நியாயமானதுதான்.ஆனால் இதற்கான பதில்தான் உங்களுக்கு சற்று அநியாயமாகப்படும்.

இயக்குனர் பாலாவுடன் கண்ணனுக்கு இருக்கும் நெருக்கம்  கண்ணன் ஒரு கைக்குழந்தைகளும் அறிந்தது.அந்த நெருக்கம் பாலா விகடனில் ‘இவன் தான் பாலா’ தொடரை எழுதியபோது அதிகரித்தது.(பாலாவின் அந்தத்தொடரை கண்ணன் தன் சொந்தக்கையால் எழுதினார்.)

இதன்பிறகு பாலாவின் டிஸ்கசன்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார் கண்ணன்.அதுவும் தற்போது நடந்து வரும் ‘எரியும் தனல்’ படத்துக்கு ஒரு புரடக்‌ஷன் மேனேஜர் போல வேலை செய்ய ஆரம்பித்தார் கண்ணன்.
படத்துக்காக பாலாவால் மொட்டை அடிக்கப்பட்ட 200 பெண்களும் கண்ணன் செலக்‌ஷன் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால் அடிக்கடி விடுமுறை எடுப்பதும்,குறைந்த நேரத்தையே விகடனில் செலவழிப்பதுமாக இருந்தார் கண்ணன்.

இதை பல முறை விகடன் எம்.டி சீனிவாசன் கண்டித்துப்பார்த்தார்.எடிட்டராச்சே கண்டிப்பு எடுபடவில்லை.

கடந்த வாரம் ஒரு நாள் கண்ணனை தன் அறைக்கு அழைத்த சீனிவாசன், இனிமேல் பாலா படத்துக்கு வேலை செய்வதாக யார் மூலமாவது கேள்விப்பட்டேன் என்றால், புத்தாண்டு உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று கொஞ்சம் ஓவராகவே எச்சரித்தாராம்.

என் லட்சியம் சினிமாதான் என்றாலும்  விகடனுக்காக 25 வருடங்களாக உழைத்து வருகிறேன், எனக்கே எச்சரிக்கையா என்று எரிச்சலடைந்த கண்ணன், குமுதத்திலிருந்து ஏற்கனவே  பலமுறை தனக்கு வந்த ஆஃபரை இந்த முறை ஏற்றுக்கொள்வது என்ற முடிவெடுத்துவிட்டாராம்.

இதே போன்ற ஒரு முடிவை சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் முன்பு எடுத்து அப்பாயின்மெண்ட் ஆர்டரில் கையெழுத்துப்போட வந்திருந்த கண்ணனை த்தடுத்து நிறுத்தி’’ உங்களுக்கு இந்த ஆபீஸ் ஒத்து வராது பாஸ். பேசாம விகடன்லேயே கண்டினியூ பண்ணுங்க’’என்று சொல்ல ஒரு  நல்ல நண்பர் இருந்தார். பாவம் நடுவுல ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்ல அவர் செத்துப்போயிட்டார். குமுதம் நிலைமை இப்பவும் அதேதான் கண்ணனுக்கு தடுத்துச்சொல்ல யாரு இருக்கங்களோ?

மேட்டரு கடைசியில இவ்வளவு சோகமா முடியும்னு நான் எதிர்பார்க்கலை.இனிமே இப்பிடி நடக்காம பாத்துக்கிறேன்.

எப்பொழுதும் வெட்டி கற்பனைகள்

சற்றுமுன்னர்தான்,’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ஆடியோ வெளியீட்டு விழா பிரஸ்மீட் அட்டெண்ட் பண்ணி, பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

 தினமலர்க்காரன் அடிக்கடி,’கோழிபிரியாணி நிருபர் சங்கம்’ என்று கிண்டல் பண்ணி வந்ததாலோ என்னவோ, இப்போதெல்லாம் பிரஸ்மீட்களில் கோழி பிரியாணியைப்பார்க்க முடிவதில்லை.
ஒன்லி மட்டன் பிரியாணிதான்.
 கோழி பிரியாணி என்றபோது விடாது கேலி செய்து வந்த தினமலர் பிரியாணி நிருபர், மட்டனுக்கு மாறியதும் எழுதுவதை நிறுத்தி விட்டார்.

தயாரிப்பாளரில் தொடங்கி, யங் மேஸ்ட்ரோ’ என்று தன்னைத்தானே அழைத்துகொள்ளும்,படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வரை எல்லோரும் கொஞ்சமாக பேசியது விழாவின் சிறப்பு அம்சம்.

 படத்தின் ட்ரைலரையும், இரண்டு பாடல்களையும் ஒளிபரப்பினார்கள். இதைப் பார்க்கும்போது படத்தின் தலைப்புக்கும், எடுத்திருக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத்தெரியவில்லை.படத்தை முதலில் இயக்கி வந்த முரளி என்பவரை பேக் அப் பண்ணிவிட்டு படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரே இயக்குனராகவும் ஆகிவிட்டதால் கதை என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ  படம் முழுக்க பணத்தைக் கொட்டியிருப்பது தெரிகிறது.அதை திரும்ப எடுப்பதற்கான சாத்தியக்கூறு மட்டும்  ட்ரைலர் பாடல்கள் விளம்பர டிஸைன்கள் எதிலும் தெரியவில்லை.

அதர்வா பாலா படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால்,இந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்று பலரும் நினைத்திருக்க, தலையில். இதற்கு முன்னர் எங்கும் பார்த்திராத வினோதமான குல்லாய் ஒன்றை மாட்டிக்கொண்டு வந்திருந்தார் .(.பாலாவே தன் கைப்பட தைத்துக் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.)

 மாலை விமானத்தில் ,சிவகங்கை படப்பிடிப்புக்கு திரும்பி விடவேண்டும் என்ற கண்டிஷனோடு, அரை நாள் மட்டும் லீவு கொடுத்து அனுப்பி வைத்தாராம் பாலா.

அதர்வா மைக்குக்கு முன்னால் பேச எழுந்தபோது, எங்கிருந்தோ வந்து வேகமாய் மைக்கை பிடுங்கிய படத்தின் பீ.ஆர்.ஓ ‘திகில்’முருகன்,  அதர்வா பாலா படத்திலும் நடித்து வருவதால், இந்தப்படத்தைப்பற்றி மட்டும் கேள்விகளைக் கேளுங்கள் என்றார்.

 விடுவாங்களா நம்ம ஆளுங்க? ஒரு நிருபர்,
’’உங்க அப்பா வருஷத்துக்கு ஏழெட்டு படங்கள்ல நடிச்சார். நீங்க என்னடான்னா ரெண்டு வருஷத்துக்கு ஒரு படத்துலதான் நடிப்பீங்க போல இருக்கு? என்ற பொருள் பொதிந்த கேள்வியைக்கேட்டார்.

அந்த நிருபர் கேட்ட கேள்வியில் பாலா படம் முடிய ரெண்டு வருடமாவது ஆகும்’ என்ற ஆப்பு இருப்பதை புரிந்துகொள்ளாத அதர்வா,அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று இன்னொரு ஆப்பையும் தனக்குத்தானே வைத்துக்கொண்டார்.’’என்ன செய்யிறது சார்  நான் செலக்ட் பண்ற கதைகள் அப்படித்தான் அமையுது’’ இது அதர்வாவின் பதில்.

அப்ப பாலாவோட கதைய, தம்பி அதர்வா தான் செலக்ட் பண்ணினாரா?
இது பாலாவுக்கு தெரியுமா?

பாலா படத்தை முடிக்கிற வரைக்கும், பகல்ல அக்கம்பக்கம் பாத்து பேசுங்க, ராத்திரியில அதுவும் பேசாதீங்க அதர்வா தம்பி.
தேவையில்லாத பீதியக்கிளப்பி விட்டுடுவாய்ங்க..ஆமா,.

Saturday, December 17, 2011

மவுன குரு் விமரிசனம்..பேச வைக்கிறார் இயக்குனர்

அம்மா ஹீரோவுக்கு சாப்பாடு வைக்கிற முதல் காட்சி’’இதே குழம்பத்தான் மூனு நாளா வேறவேற  பாத்திரத்துல வச்சி ஊத்துற போல தெரியுது’’என்ற வசனத்தின்போதே, நாம் வந்திருப்பது வழக்கமான தமிழ் சினிமா இல்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார் அறிமுக இயக்குனர் சாந்தகுமார்.

 அப்பா மு.க.தமிழரசு தயாரிக்க ,மகன் அருள்நிதி நடிக்க,  டைரக்டர் ரெண்டு பஞ்ச் டயலாக் அடிக்க ..ரசிகர்கள் கிடந்து துடிக்க ஒரு படம்  என்ற நினைப்பில் தான் தியேட்டருக்குப்போனேன்.

மூத்தவன் போல் விவரமா இல்லையே என்று சதா அம்மாவால் சலித்துக்
கொள்ளப்படும் சாதாராண மாணவன் கருணாமூர்த்தி. ஒரு அடிதடி பிரச்சினைக்காக, கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு,  சென்னையில் அண்ணனின் சிபாரிசால் வேறொரு கல்லூரியில் சேருகிறான். அண்ணியின் தங்கை இனியா தங்களுடன் இருப்பதால், கருணாமூர்த்தியை ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள்.

இப்படி ஒரு ட்ராக்கில் கதை பயணித்துக்கொண்டிருக்குபோதே,.
..
நாலு போலீஸ்காரர்கள் ஆக்ஸிடெண்ட் ஆன ஒரு காரிலிருந்து கோடிக்கணக்கில்  பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இறந்து விட்டதாக நினைத்த டிரைவர் உயிரோடு எழுந்து வர, அவனைப்போட்டுத் தள்ளுகிறார்கள். இந்த ரகஸியம் ஒரு போலீஸ்காரரின் கள்ளக்காதலிக்கு தெரிய வரவே, அவளையும் தற்கொலை செய்கிறார்கள்.சாகும்போது தன்னிடமிருந்த வீடியோ ஆதாரத்தை, மாணவன் ஒருவன் திருடிக்கொண்ட தகவலை அந்த கள்ளக்காதலி சொல்லிவிட்டுச்சாக மாணவனைத்தேடிப்போகும் இடத்தில்,சம்பந்தப்பட்ட மாணவனுக்குப்பதில்  தவறுதலாக ஹீரோ,மாட்டிக்கொள்ள,...இங்கே கதை டாப் கியரில் சூடு பிடிக்கிறது.
இனியாவின் முதல் சமையலை கிண்டல் பண்ணும்போது,’’எதையுமே எடுத்தவுடனேவா சரியா செய்ய முடியும்? சைக்கிள் ஓட்டப்பழகுறப்ப,ரெண்டு மூனுதடவை கீழ விழுந்துதான கத்துக்கிறோம்’?
என்ற வசனத்தை அருள்நிதிக்காகவே எழுதியிருப்பார்கள் போலும்.
.
நடிப்பில் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம்‘ விழுந்து எழுந்திரிக்க’ ஆரம்பித்திருக்கிறார்.

கதாநாயகனுக்கு அணுசரனையாக தோள்கொடுப்பது, காபி போட்டுக்கொடுப்பது, டிபன் செலவுக்கு காசு கொடுப்பது என்று சின்ன ரோலாக  இருந்தாலும் மனம்கொத்தும் இனியா தமிழ்சினிமாவுக்கு ஒரு இனிய வரவு.
டூயட் எதுவும் வைக்காமல் மிக நாகரீமாக இவர்கள் காதலைச்சொன்னவிதத்தில் நம்பிக்கை அளிக்கிறார் இயக்குனர்.

கறார் மற்றும் கர்ப்பிணி இன்ஸ்பெக்டராக வரும் உமா ரியாஸ்கான், மேற்படி கேஸை தனி ஆளாக துப்புத்துலக்குவது ஒரு புறம் இருக்கட்டும்.
க்ளைமேக்ஸில் யாரோ ஒரு பெரிய ஆபிசர் சொன்னார் என்பதற்காக, கொல்லத்துடிக்கும் வில்லன்களிடம் ஹீரோவை அம்போ என்று விட்டுவிட்டு’’நீ போய் பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிக்கோ’என்று சொல்வது கதையில் ஒரு சிறு சறுக்கல்.

ஒருவேளை அப்படி விட்டுவிட்டுப்போனால்தான், ஹீரோ வில்லன்களைப் பழி வாங்கமுடியும் என்று இயக்குனர்  நினைத்திருப்பாரோ என்னவோ.?

மற்றபடி, தெளிவான ஒளிப்பதிவு,விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளிவந்திருக்கும் மவுன குரு’.படத்தின் இயக்குனரைப்பற்றி பேச வைக்கிறது.

Friday, December 16, 2011

மெத்த வாங்குனேன்..தூக்கத்த வாங்கலை..டி.ஆரின் புதிய படம்

என்ன செய்யிறது ,சில துக்கச்செய்திகளை, அந்த ஆண்டவனே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாதுங்கிறப்ப,
ஒத்த மனுஷியா நின்னு உஷாக்கா மட்டும் தடுத்து நிறுத்திட முடியுமா என்ன?
‘வீராசாமி; படம் பார்த்து வீரமரணம் அடைஞ்சவ்ங்களோட ஆத்மா அரைகுறையா சாந்தி அடையிறதுக்குள்ள,
 அண்ணன் டி.ஆர் அடுத்த படத்தை ஆரம்பிச்சிட்டார்.

’அப்பா வேண்டாம்பா, நிறைய தற்கொலை கேஸ்லாம் நம்ம மேல வரும்னு சிம்புவும், எவ்வளவோ தடுத்துப்பார்த்திருக்கார்.

’’எடுக்காதே படம் எடுக்காதே’’ன்ன, சிம்பு கிட்ட ‘’தடுக்காதே என்னை தடுக்காதே’ன்னு, பதிலடி குடுத்துட்டு, கிங்கு மாதிரி நமக்கு சங்கு ஊதக்கிளம்பிட்டாரு அண்ணன்.

படத்தோட பேரு’ஒருதலைக் காதல்’ .என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைங்கிற மாதிரி அண்ணன் படத்துல மதுரை பாஷை பேசி நடிக்கிறாராம்.
கதைப்படி, அண்ணன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத வாலிப வயசு இளைஞர்.ஒரு கட்டத்துல அண்ணனுக்கு ஒரு அண்ணி மேல லவ் மூட் ஸ்டார்ட் ஆகுது..மெத்தப்படித்த மேதையான மும்பை அண்ணி அண்ணனை கொஞ்சமும் கண்டுக்காம இன்சல்ட் பண்றாங்க.( இந்த சிச்சுவேசனுக்கு அண்ணன் எழுதின ஒரு பாட்டு..
மழைக்கு கூட ஒதுங்கலை பள்ளிக்கூடம்...
விலைக்கு கூட கிடைக்கலை வெள்ளிக்குடம்’’
கொலவெறியில எழுதியிருக்கார்.)
சரி கதைக்கு வருவோம்.
 அண்ணன் படிப்புலதான் வீக்கே ஒழிய, மியுசிக்ல அவர் ஒரு பெரிய டெர்ரர். அண்ணிக்கு இது புரியல.
இத புரிஞ்சிகிட்ட வேற ரெண்டு பொண்ணுங்க அண்ணனை லவ் பண்றதுக்காக பின்னாடியே ஹட்ச் டாக் மாதிரி அலயிறாங்க.நம்ம அண்ணன் தான் எல்லாபடத்துலயும் ஏகபட்டினிவரதனச்சே, இவங்களைக் கண்டுக்கிறதேயில்ல.
க்ளைமேக்ஸ்ல அண்ணனோட அருமை, ஒரு பாட்டு மூலமா அண்ணிக்கு தெரிய வர்றப்ப...இனி பாண்டிய நாட்டில் அண்ணனைத்தவிர ,ஒரு பயலும் வாயத்தொறந்து பாட முடியாதுங்கிற சிச்சுவேசன்ல.,.அண்ணி தன்னோட லவ்வ  சொல்றதுக்காக  அண்ணனைத்தேடி வர்றப்ப...
...
. ஓ  நோ....மீதிய நான் சொல்லமாட்டேன்.

இன்னொரு முக்கியமான நியூஸையும் உங்க கூட பகிர்ந்துக்கலைன்னா எனக்கு தலை வெடிச்சிடும்.

கோடம்பாக்கத்தில இது காம்பினேசன் சீஸன்.இதைப் புரிஞ்சிக்கிட்ட டெர்ரர் ஸ்டாரும்,  பவர்ஸ்டாரும் அடுத்து கூட்டணி அமைச்சி மல்டிஸ்டார் படம் ஒண்ணு பண்ணப்போறதா ஒரு படபடப்பான நியூஸ்  நடமாடிக்கிட்டிருக்கு..
யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.தொடர்ந்து பிரார்த்தனை பண்ணுங்க.

எப்பவுமே சோதிக்கிற ஆண்டவன், என்னைக்காவது ஒருநாள் கண்ணு முழிச்சி பாக்காமயா போயிடுவான்?

மம்பட்டியான் -விமரிசனம்.வெட்டிப்பயதான்....

சில வருடங்களுக்கு முன்பு ரசித்துக்கேட்ட, சில பாடல்களை, ரீமிக்ஸ் ஆகிக்கேட்கும்போது‘ என்ன கொடுமைடா இது’ என்று தோன்றும்.
.5 நிமிட பாடல்களுக்கே அப்படி எனும்போது, நாம் ரசித்துப்பார்த்த  இரண்டரை மணி நேரப்படம் ரீமேக்காகி வந்து, நம்மை சோதித்தால்...?

இந்தக்கேள்விக்கான பதிலை,சுமார்  6கோடி செலவில் சொல்லியிருக்கிறார்கள்  பழைய மம்பட்டியான் தியாகராஜனும் ,மாடர்ன் மம்பட்டியான் பிரஷாந்தும்.
1983 -ல் வெளிவந்த மம்பட்டியானின் கதை,இந்த தலைமுறைக்கு தெரியாது என்பதாலும், கதகேட்டு, கதகேட்டே  வளந்த சனம்,நம்ம சனம்ங்கிறதுனாலயும்,  மாடர்ன் மம்பட்டியானோட கதைய  கொஞ்சம் சுருக்கமா பாப்போம்.

பணக்காரங்க கிட்ட கொள்ளை அடிச்சி ,ஏழைகளுக்கு கொடுக்கிற மலையூர் காட்டு ராபின்ஹுட் நம்ம மம்பட்டியான். அவரோட அப்பா,அம்மாவை உள்ளூர் பண்ணையார் கொன்னு போடவே,திருவிழா சமயத்துல ஊருக்குள்ள நுழைஞ்சி பண்ணையாரையும்  அவரோட ஆளுங்க 7பேரையும் வெட்டிச்சாச்சி ‘ ஆறுகொலை ஆறுமுகம்’ மாதிரி,எட்டுக்கொலை ஏகாம்பரம் ஆயிடுறார் நம்ம மம்பட்டியான்.

இவரை பிரகாஷ்ராஜ் தலைமையில  ஒரு போலீஸ் கூட்டம், படம் முழுக்க தேடிக்கிட்டே இருக்காங்க.  இங்க ஒரு ஃபைட் வச்சா நல்லா இருக்குமேன்னு, அப்பாவும் மகனும் நினைக்கிற
 இடத்துல எல்லாம்  மம்பட்டியான் போலீஸ் கிட்ட மாட்டி,அவரோட வீரதிர பராக்கிரமங்களால தப்பிக்கிறாரு.

நடுவுல வீரத்துக்கு ஓரத்துல, கொஞ்சம் காதலையும் வச்சா நல்லா இருக்குமே, தன்னைக்காப்பாத்துன மம்பட்டியான ஆரம்பத்துல, மீரா ஜாஸ்மின் ஒருதலையாக் காதலிக்கிறாங்க..செகண்ட் ஆப்ல மம்பட்டியான் கொஞ்சம் இறங்கி வந்ததும்,  இருதலையா காதலிக்க ஆரம்பிச்சி,ஊரை விட்டே ஓடி வாழலாம்னு முடிவு எடுக்கும்போது, மாடர்ன் செந்தில் ஒருத்தரு, போலீஸ் அறிவிச்ச காசுக்கு ஆசைப்பட்டு மம்பட்டியான சுட்டுக்கொல்றாரு.
இந்தப்படம் 83 ல் வெளிவந்து சக்கைப்போடு ,போட்டதோடு இந்தி உட்பட நாலைந்து மொழிகளில் ரீ-மேக் ஆகி அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றது. காரணம் புதிய கதைக்களம்.படத்தில் இருந்த யதார்த்தமான எளிமை.ராஜாவின் சொக்க வைத்த பாடல்கள்.ரீ-ரெகார்டிங்.

மாடர்ன் மம்பட்டியானில், மேற்படியில் கடைசி மூன்றுமே மிஸ்ஸிங்.
கதை எப்போது நடக்கிறது என்கிற பீரியட் உணர்வு ஒரு இடத்திலும் வரவில்லை.
சொந்த பேனர் என்பதாலோ என்னவோ, கலைராணி மாதிரி பிரஷாந்தும் வாங்கின மீட்டருக்கு மேலேயே நடிக்கிறார்.

 ஒளிப்பதிவு என்று அரைடஜன் பேர் பெயர் போடுகிறார்கள்.

இசை தமன்.‘ காட்டு வழி போற பொண்ணே’ மற்றும் ‘சின்னப்பொண்ணு சேலை ‘ஆகிய பாடல்களை பழைய மம்பட்டியானில் இருந்து எடுத்து
 ரீ-மிக்ஸ் பண்ணியிருக்கார்.
சென்னையிலிருந்து திருப்பதி வரை கால் நடையாகப்போய் வந்தால்தான் தான் ராஜா பாட்டைக்கெடுத்த பாவம் தீரும்.

படத்தில் போலி மம்பட்டியான் ஒருவர்,பெண்களைக்கற்பழித்தும், சாராயம் காய்ச்சியும்  நல்ல மம்பட்டியானின் பேரைக்கெடுக்கிறார்.
பழைய மம்பட்டியானோடு ஒப்பிட்டால்  இந்த மாடர்ன் மம்பட்டியானே ஒரு போலி மம்பட்டியான் தான்.

Thursday, December 15, 2011

சுகாசினியின் சீட்டிங்...அம்பலப்படுத்தும் அமீர்சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே  எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ போன்ற நல்ல படங்க:ளைப் புறக்கணிக்கிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே,  இன்னொரு அதிர்ச்சி செய்தி அமீரின்  அறிக்கையின் மூலம் வெளி வந்திருக்கிறது..

சுகாசினி நடத்தும் இந்த சர்வதேச திரைப்பட விழா ஒன்றும் ,தேச சேவை அல்ல, ஆனாலும் தமிழக அரசு இந்த விழாக்கமிட்டிக்கு ரூ 25 லட்சம் மானியம் வழங்கியிருந்தது, சரி, ஜெயா டி வியில மாங்குமாங்குன்னு ஹாசினி பேசும்படம் புரோகிராம் நடத்தினதுக்கான சம்பளத்தை அம்மா கவர்மெண்ட் கஜானாவுல இருந்து எடுத்து தர்றாங்க போலருக்கு என்று பலரும் மனசுக்குள் புகைந்து கொண்டிருக்க. ,, இன்று வந்த அமீரின் அறிக்கை மூலம் புதிய பூதம் புறப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்துக்கு வைத்த மானியக்கோரிக்கையில்,தனது இந்தோ ஃபிலிம் அப்ரிசியேசன் கமிட்டியில், இயக்குனர் சங்கத்தலைவர் பாரதிராஜாவும், செயலாளர் அமீரும்  இடம் பெற்றிருப்பதாக சுகாசினி குறிப்பிட்டிருந்தாராம், இது பற்றி அமீரிடமோ,பாரதிராஜாவிடமோ சும்மா ஒரு பேச்சுக்கு கூட சொல்லவில்லையாம் .

இதற்காக சுகாசினி மீது ஃபோர்ஜரி கேஸ் போடலாமா என்று இயக்குனர் சங்கம் ஆலோசித்து வருகிறது,

இவ்வளவு நடந்தபிறகும் .பொய்சினிக்கு கொழுப்பு கொஞ்சமும் குறையவில்லை.தான்  எடுத்த முடிவுக்கு  மூனே  கால் என்று பிடிவாதம் பிடித்த அவர்.நேற்று  தொலைக்காட்சிகளிடம் பேசும்போது,..’’அது மணிரத்னமாக இருந்த்தாலும்’’என்று மீண்டும் மீண்டும் தன் கணவர் பெயருக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டேயிருந்தார்.

அதாவது மணிதான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒண்ணாம். ஸோ அவராக இருந்தாலும் நம்ம ஆபீஸரம்மா ரூல்ஸ் பிரகாரம்தான் நடந்துக்குவாங்களாம்.
சீனுராமசாமி, வெற்றிமாறன்கள்லாம் வந்த பின்னாடி உங்க வூட்டுக்காரரு  முதல் 20 இடத்துல கூட இல்லீங்க மாமி.
தமிழ்நாட்டு நெலவரமே தெரியல, நீங்கள்லாம் சர்வதேச லெவல்ல பேசுறீங்க.

Wednesday, December 14, 2011

கொதித்தது இயக்குனர் சங்கம்...குதித்தது புறக்கணிப்பில்...
இன்று துவங்கி எட்டு நாள் நடைபெறவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடிகர் விவேக் பாணியில்‘ சென்னை  போடா வெண்ணை’ என்றபடி புறக்கணிக்கிறது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம்.
இந்தோ பிலிம் அப்ரிசியேஷன் கமிட்டி என்ற ஒரு அமைப்பை,  ஹாசினி சினிமாஎன்ற பெயரில் பல சமயங்களில் காமெடி சினிமா வழங்கும் சுஹாசினி மணிரத்தினமும் ,இன்னும் சில ஆழ்வார்ப்பேட்டை ஐயங்கார்களும் நடாத்தி வருகிறார்கள்.

இதன் 9 வது திரைப்பட விழாவைத்தான் இயக்குனர் சங்கம் புறக்கணிக்கிறது.
உலக அளவில் 44 நாடுகளின் 154 படங்களும், தமிழில்’ஆடுகளம்’மைதானம்’ எங்கேயும் எப்போதும்’,அவன் இவன்’வாகைசூடவா’,கோ’தெய்வத்திருமகள்’’முரண்.’வர்ணம்’,’தூங்காநகரம்’மற்றும்
வெங்காயம்; ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில்,தனது ‘தென்மேற்குப்பருவக்காற்று’படமும் இடம் பெற வேண்டுமென்று இயக்குனர் சீனு ராமசாமி எவ்வளவோ முயற்சித்துப்பார்த்தார்.

‘’ வெப்-சைட்டுல விளம்பரம் குடுத்தப்ப நீங்க ஏன்வரலை?’’ என்று சில அல்ப  காரணங்களை சொல்லி சுஹாசினி, சீனுவின் படத்தை திரையிட மறுத்துவிட்டாராம்.

இப்படி மறுக்கப்பட்ட ‘தென்மேற்குப்பருவக்காற்று’ கடந்த ஆண்டு தமிழுக்கு
மூன்று தேசியவிருதுகளை வாங்கித்தந்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

இதேபோல் அனுமதி மறுக்கப்பட்ட இன்னொரு படம் ‘செங்கடல்’.இந்தியன் பனொரமாவில் தேர்வு செய்யப்பட்ட‘ இயக்குனர் லீனாமணமேகலையின் இந்தப்படத்தையும் திரையிட சுஹாசினி மறுத்தார்..

‘’தேசிய விருதுகள் பெற்ற எங்கள் படத்தை திரையிட மாட்டீர்கள்.உங்களுக்கு தமிழக அரசின் மனியம் 25லட்சம் ஒரு கேடா’’ என்று கொந்தளித்த சீனு ராமசாமியும்,லீனா மணிமேகலையும், தங்கள் குமுறலை இயக்குனர்கள் சங்கத்தில் கொட்டினார்கள்.

இதற்கு சில தினங்கள் முன்பு,சுஹாசினியின் சித்தப்பா (அதாங்க நம்ம கமலு ) இயக்குனர் சங்கத்துக்கு, ஃபார்மலிடிக்கு ஒரு தகவல் கூட சொல்லாமல் ஒரு விழா நடத்தி வெறியேத்தியிருந்தார். சித்தப்பாவைக்கண்டித்து அப்போதே அறிக்கை விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களிடம்,
அதற்கும் சேர்த்து சித்தப்பாவின் பாப்பா வந்து மாட்டவே சற்றும் யோசிக்காமல் தில்லான முடிவை எடுத்தது இயக்குனர் சங்கம்.
ஒரு பருவக்காற்று இப்படி புயலாய் மாறும் என்று சற்றும் எதிர்பாராத சுஹாசினி,தனது கணவர் மணியை இயக்குனர் சங்கத்துக்கு தூது அனுப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.


பட்டணத்து ராணி...கெட்ட பின்பு ஞானி.

உச்சிதனை முகர்ந்தால்..விமரிசனம்..தமிழுணர்வு வியாபாரம்?


ஈழத்தமிழர்களின் மீது பரிவு பாராட்டி ஏற்கனவே,’காற்றுக்கென்ன வேலி’ எடுத்த புகழேந்தி தங்கராஜின் மற்றுமொரு தமிழுணர்வுப்படம்' உச்சிதனை முகர்ந்தால்’.

நடந்தது ஒரு நிஜ சம்பவம் என்பதற்கு அழுத்தம் தரும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றோடுதான் கதையே துவங்குகிறது. ஈழத்தமிழ் உணர்வாளரான நடேசன் (சத்யராஜ்) அவரது மனைவி சங்கீதா மற்றும் அவர்களது குடும்ப டாக்டர் மூவரும் அமர்ந்து நடந்ததை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

லட்சக்கணக்கான தமிழர்கள் சிங்களவெறியர்களால் கொல்லப்பட்ட முல்லிவாய்க்கால் கோரத்தில்,  ஒரு இளம் சிறுமிக்கு என்ன நடந்தது என்பதை மட்டும் சொல்லத் துவங்குகிறார் இயக்குனர் புகழேந்தி.பதின்மூன்று வயதே ஆன சிறுமி புனிதவதி.,சிங்களவெறியர்களால் கும்பலாகக் கற்பழிக்கப்பட்டு, கர்ப்பிணி ஆகிறாள். இந்த கர்ப்பத்தை கலைக்கும்பொருட்டு, புனிதவதியும் அவளது தாயாரும் கள்ளப்படகில் தமிழகம் வந்து சத்யராஜிடம் தஞ்சமடைகிறார்கள். சத்யராஜின்,குடும்ப டாக்டரோ,புனிதவதி கர்ப்பமடைந்து 4 மாதத்துக்கும் மேல் ஆகியிருப்பதால்.கலைப்பது புனிதாவின் உயிருக்கு ஆபத்து என்கிறார். அதேசமயம், இந்தக்குழந்தையைப் பிரசவிக்கும் சக்தியும் புனிதாவுக்கு இல்லை என்றும் டென்சன் ஏற்றுகிறார்..
இதே நேரத்தில் சத்யராஜின் மனைவி சங்கீதாவும் கர்ப்பமாக இருக்கிறார்.20 வருடங்களுக்கு முன்பே,(திருமணம் ஆகாமல் கர்ப்பமானதால்),தனது தாயால் வலுக்கட்டாயமாக அபார்ஷன்’ செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட கர்ப்பமாம் இது.
இந்த இரண்டு கர்ப்பவதிகளையும் வைத்துக்கொண்டு சத்யராஜ் படாதபாடு படுகிறார். இந்த சோதனை போதாதென்று இடைவேளை விடும்போது, புனிதாவுக்கு எய்ட்ஸ் இருப்பதாக இன்னொரு குண்டைத்தூக்கிப் போடுகிறார் இயக்குனர்.

இடைவேளைக்குப்பிறகு வேதனைமேல் வேதனையாக காட்சிகள் நகர்கின்றன. க்ளைமேக்ஸில் ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தையைப்பெற்றுவிட்டு புனிதா இறந்துவிடுகிறார்.அந்தக்குழந்தைக்கும் எய்ட்ஸ் இருந்தது என்று முடிக்கிறார்கள்.

ஈழத்தமிழன் மீது உணர்வு இல்லாதவன் ஒரு தமிழனாகவே இருக்கமுடியாது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த ’7ம் அறிவு’ ஈழ உணர்வு வியாபாரத்தை சிறப்பாக செய்தது.
 இந்தப்படமும் அப்படிப்பட்ட முயற்சியோ என்று சந்தேகிக்காமல் இருக்கமுடியவில்லை.

இந்த சூழலில் தமிழச்சி ஒருத்தி சிங்களகும்பலால் கற்பழிக்கப்பட்டதை காட்டுவதனால் என்ன பயன்? உண்மைச்சம்பவம் என்றாலும் நாம் கேவலப்பட்டதை 2/30 மணி நேரம் பிடில் வாசிப்பதால் (அதுவும் ஈழத்தமிழர்கள் செலவிலேயே) என்ன பிரயோசனம்?

இதற்குப்பதில் ,கற்பனையாகக்கூட இருந்து விட்டுப் போகட்டும், இப்படி தன்னைக் கற்பழித்த சிங்கள வெறியர்களைத் தேடிக் கண்டுபிடித்து,அவர்களின்......சை அறுத்தாள் நம் தமிழச்சி என்று எடுத்திருந்தால் கூட பாராட்டியிருக்கலாம்.

இயக்குனருக்கு இது நாலாவது படம் என்கிறார்கள்.70 வதுகளுக்குப்பின் வந்த படங்கள் எதையும் பார்க்கும் வழக்கம்  இல்லை போலிருக்கிறது இயக்குனருக்கு .அவ்வளவு பழைய டைப்பில் இருக்கிறது படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை எதிலும் சமீபத்திய கால படத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை.

. பாடல்கள் படுகுப்பை.பெண்புலிகள் ஆடிப்பாடுவதாகக்காட்டி வதைப்பது என்னநியாயம்?

படத்தின் ஒரே ஆறுதல் புனிதா.தெத்துப்பல் தெரிய அவள் சிரிக்கும் சிரிப்பில் உள்ளம் கொள்ளை போகிறது. ஆனால் இவளுக்கா இப்படி ஒரு பயங்கரம் நடந்தது என்ற உணர்வை துளி கூட கொண்டுவரத்தவறி விட்டார் இயக்குனர்.
புனிதாவின் நடிப்பும் அபாரம்.

சீமானும்,நாசரும் சிறுபாத்திரங்களில் வந்துபோகிறார்கள்.

 மேடைப்பேச்சாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியிருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் சீமானின் மேஜையில் அசோக சக்கரத்தைப்பார்த்து,’’அங்கிள் இந்த பொம்மையை நான் எடுத்துக்கட்டுமா?’’என்ற உச்சபட்ச நக்கல் வசனத்தை தமிழருவிமணியனைத்தவிர வேறு யாரும் எழுதியிருக்கமுடியாது. தியேட்டரில் விசிலையும் கைத்தட்டல்களையும் அள்ளப்போகும் வசனம் இது(,யாராவது வந்தால்..)

ஒருவேளை,தலைப்புக்கு அர்த்தம் விளங்காமல் போய்விடும் என்றபயத்திலோ என்னவோ படம் முழுக்க யாராவது ஒருத்தர் புனிதாவின் உச்சிதனை முகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

உச்சிதனையில்’ மெச்ச எதுவுமில்லை. 

Tuesday, December 13, 2011

அமலா ‘பால் நழுவி பழத்தில் விழுந்தது...

தினத்தந்தியில் கிசுகிசு படிப்பதே தனி த்ரில் தான். த்ரிஷாவை மூனுஷா என்று எழுதுவார்கள். ஜெயம்ரவியை ஜெயமான ஒரு வி நடிகர் என்று எழுதுவார்கள். கஷ்டப்பட்டு’ கண்டுபிடிப்பதற்குள் நமக்கு தாவு தீர்ந்து போய்விடும்.
இன்று அதிகாலை,காஜல் அகர்வாலுடன் நெருக்கமான கனவில் இருந்தபோது, சனியன்புடிச்ச செல்போனில் நண்பர் ஒருவர் அழைத்தார்.’’’தலைவா தினத்தந்தி’ பாத்தீங்களா? நீங்க ப்ளாக்’ல ரெண்டு வாரத்துக்கு முந்தியே எழுதினதை  பரபரப்பான கிசுகிசுவாப்போட்டுருக்காங்க’’
’’அடடா,இப்படி ஒரு அல்பத்தகவலுக்காக அருமையான கனவைக் கெடுத்தாரே ’என்று நொந்தபடி தந்தியைப்புரட்டினால்,.
..அமலமான பால் நடிகை மேனேஜரை மாற்றினார்.என்று .பத்துபேரை உதவிக்கு அழைத்தால்தான் புரிந்துகொள்ளமுடியும் என்கிற அளவுக்கு ஒரு கஷ்டமான கிசுகிசுவைப் போட்டிருந்தார்கள்.
காஷ்ட்யூம் சேஞ்ச் மாதிரி தான் நடிகைகளுக்கு மேனேஜர் சேஞ்சும்.
சொல்லப்போனால் அது ஒரு முக்கியமான செய்தியே இல்லை. முக்கியமான செய்தி இதுதான். தனது மேனேஜரை அமலா மாற்றிய செய்தியைக்கேள்விப்பட்டு தொடர்பு கொண்ட புதிய மேனேஜர்கள் யாரையும் அமலா கண்டுகொள்ளவில்லையாம்.
காரணத்தை தினத்தந்தி கிசுகிசு பாணியிலேயே சொல்லிவிடுகிறேன்.
கேரள வரவான அமலமான பால் நடிகை..தெய்வமான திருமகள் படத்தை இயக்கியவரிடம் தன்னை இயக்கும் வேலையை ஒப்படைத்து விட்டாராம்.
விஜயமான அந்த இயக்குனரே நடிகையின் மேனேஜராகவும் இருப்பதால்,அந்த பால் நடிகையை அணுக பலரும் தயங்குகிறார்களாம். இதுதான் அந்த கிஸ்ஸு கிஸ்ஸு
விளங்குறதுக்கு
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். உங்க சவுகரியத்துக்கு எத்த மாதிரி தலையைச்சொறிஞ்சோ, தாடியைச் சொறிஞ்சோ ட்ரை பண்ணுங்க.
 அப்பிடியும் முடியலைன்னா குருவியார்கிட்ட கேட்டா உங்க குழப்பத்தை தீர்த்து வைப்பாரு.

Monday, December 12, 2011

கமல் என்ற கேடியும் 120 கோடியும்...

அண்டப்புளுகர்,ஆகாஸப்புளுகர்களெல்லாம் நம்ம கோடம்பாக்கத்து ஆசாமிகளிடம், துண்டக்காணோம் துணியக்காணோம் என்று ஓட வேண்டும்.

 ஒண்ணேமுக்கால் கோடிக்கு படம் எடுத்துவிட்டு பதினொண்ணே முக்கால் கோடி என்று பச்சையாகப் புளுகுவார்கள். சின்னப்புரடியூசர்களே இப்படி எனும்போது சகலகலா’வல்லவர்,சமுகம் போற்றும் நல்லவர் கமல்  சாதாரணமாக இருந்துவிட முடியுமா? பெரும் இளிச்சவாயன் எவனாவது சிக்கமாட்டானா என்ற நப்பாசையில், இன்று ஒரு தினசரியில் தனது ‘விஸ்வரூபம்’ படத்தின் பட்ஜெட்டைப்பற்றி பேட்டி கொடுத்திருக்கிறார் கமல். படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடியாம்.அதில் 52 கோடி ஏற்கனவே செலவாகிவிட்டதாம்.

இந்தப்படத்தைப் பற்றிய முன்கதைச்சுருக்கம் கொஞ்சம் தெரிந்து கொண்டால்தான், கமல் இவ்வளவு பெரிய பொய்யை அவிழ்த்துவிட முன்வந்தது ஏன் என்பது புரிய வரும்?

தமிழ் சினிமாவில்தான் ‘குனிவேன்’ என்று அவ்வப்போது சிலபண முதலைகள் வரும். அப்படி வரும் முதலைகளின் கொட்டையை கசக்கி, நகத்தை நசுக்கி, பல்லைப்பிடுங்கி பல்லியாக்கி அனுப்புவது நம்ம கோடம்பாக்கத்து ஆசாமிகளுக்கு கைவந்த கலை. ’செத்துச்செத்து விளையாடுற மாதிரி, புரடியூஸர்களை சாகடிச்சி சாகடிச்சி விளையாடுறது இவங்களுக்கு தமாஷான பொழுதுபோக்கு.இந்த வரிசையில் சமீபத்திய வரவு பொட்லூரி வி. பிரசாத்.தற்போது ‘ராஜபாட்டை’ படத்தை தயாரித்து வரும் இவர்தான்( அடுத்து பாலாவிடமும் செல்வராகவனிடமும் குனியக்காத்திருப்பது தனிக்கதை)விஸ்வரூபம்’ படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்.
.
தனது சம்பளம்15 கோடி மேலும் ஒரு 15 கோடிக்குள் படத்தை முடித்துவிடலாம் என்றுதான் படம் துவங்கும்போது கமல் இவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் எப்போதும்போல் அது நடக்கவில்லை.
முக்கால்வாசி தமிழ்சினிமா டைரக்டர்களைப்பிடித்து ஆட்டும் ‘ஓவர்பட்ஜெட்டோமேனியா’ கமலை மட்டும் விட்டுவிடுமா என்ன?
பட்ஜெட் 50 கோடியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, "க்ளைமேக்ஸுக்கு நெருங்கிட்டோமா சார்?"  என்று கமலிடம் தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார்.’
அதற்கு, "இன்னும் இண்டர்வெல்லக்கூட நெருங்கலை சார்’’ என்று பதிலளித்தாராம் கமல்.

இந்த திமிரான பதிலை தயாரிப்பாளர் ரசிக்கவில்லை. "மூனு லாங்குவேஜ்லயும்சேத்து  உங்களுக்கு 40 கோடிதான் பிசினஸ் இருக்கு. அதுக்குள்ள முடிக்கலைன்னா உங்க சம்பளம் முழுசா வராது’’ இது தயாரிப்பாளரின் பதிலடி. இருவருக்குமிடையில் கருத்துவேறுபாடு அதிகரிக்க படத்தை விட்டு வெளியேறுங்கள். வேறு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் உங்களுக்கு செட்டில் பண்ணுகிறேன் என்று பொட்லூரியை பொட்டலம் கட்டி அனுப்பிவிட்டார் கமல்.

நேத்து வந்த ஆர்யா, சூர்யால்லாம் தனக்கு 70,80 கோடி பிசினஸ் இருக்குன்னு சொல்றாங்க. 80 வருட தமிழ் சினிமாவப்பத்தி போஸ்டர் அடிச்சி ஒட்டுறாங்க. இவங்களைத்தாண்டி நம்ம பிசினஸ் இருக்கனும் என்று முடிவு செய்து, எல்லாரும் பாத்துக்கங்க நானும் ரவுடிதான் என்று வடிவேலு ஸ்டைலில் தனக்குத்தானே வைத்துக்கொண்ட விலைதான் அந்த 120 கோடி.

ஏதாவது ஒரு பலி ஆடு மாட்டினால், இதில் பாதியைக்கறந்தாலும் லாபம்தானே என்பது கமலின் கணக்கு.கையில 60 கோடி இருக்கவங்க உடனே கமலை அணுகுங்க. விஸ்வரூபம்’ படத்தோட தயாரிப்பாளரா மாறுங்க. ஆல் த வேஸ்ட் ஸாரி ஆல் த பெஸ்ட்.

Sunday, December 11, 2011

மெல்லத்தமிழ் இனி SUICIDE பண்ணும்
ரியல் எஸ்டேட் அதிபர்
நா.முத்துக்குமாரில் தொடங்கி வாரிசுப்பாடலாசிரியர் வைரமுத்து கார்க்கி வரை, தமிழ்சினிமாவில் சுமார் ஒரு டஜன் பாடலாசிரியர்கள் பாட்டெழுதி ‘பொழப்பு ‘ நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டில் இவர்கள் நிலைமை என்ன ஆகும் என்பதை நினைத்தால் எனக்கே சரியாக தூக்கம் வரமாட்டேன்  என்கிறது என்றால், சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
என்னதாம்பா உன் பிரச்சினை என்கிறீர்களா?
கடந்த இரு மாதங்களில், செல்வராகவன், தனுஷ், சசிக்குமார், சமுத்திரக்கனி, சிம்பு, உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களின் படங்களில் டைரக்டர்களும்,நடிகர்களுமே பாடல்’ எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போது, கவிஞர்களின் ‘அடிவயுத்துல அடிக்கிற’ இந்தப் பட்டியலில் புதுசாக சேர்ந்திருப்பவர்,நடிக்கிறேன் பேர்வழின்னு, தாடிய சொறிஞ்சே 60 லட்சம் சம்பளம் வாங்கிய சுந்தர்.சி.

‘பசங்க’ விமலை வைத்து இவர் இயக்கப்போகும் ’மசாலா கபே’ படத்துக்கான அத்தனை பாடல்களையும் இவரே எழுதப்போறாராம்.
சொல்லி வைத்ததுபோல் இப்படி எல்லா டைரக்டர்களும் பாட்டெழுத கிளம்பியதின் பின்னணி என்னவாக இருக்கும் என்று அறிய முதலில் செல்வராகவன் ஏரியாவில் துளாவினேன்.
நா.முத்துக்குமாரும் இவரும் நல்ல உறவில்தானே இருந்தார்கள்.திடீரென அவரைக்கழற்றி விட்டுவிட்டு அண்ணனும் தம்பி இப்படி ‘கொலவெறியுடன் கோதாவில் இறங்க காரணம் என்ன என்று விசாரித்தபோது,ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்தது.
பாட்டு எழுத என்று நா.முத்துக்குமாருடன் எப்போது அமர்ந்தாலும், ஒரு மணி நேரத்தில் ஐம்பது நிமிடத்தை ரியல் எஸ்டேட் பற்றி பேசியே நா.மு. கழிப்பாராம்.நெசப்பாக்கத்துல சீப் ரேட்டுல ரெண்டு கிரவுண்ட் வாங்குனேன்,சாலிகிராமத்துல ஓரு இடத்துல மூனு கிரவுண்ட் வருது ,சீக்கிரமே அதை வளைச்சிப்போடனும்...இப்படியே பேசிக்கழித்துவிட்டு, கடைசி பத்து நிமிஷத்தில் ‘பாட்டு’ என்று ஒன்று எழுதிக்கொடுத்துவிட்டுப் போவாராம்.நம்ம காசுல கிரவுண்டுகளை வாங்கிப்போட்டுட்டு, நம்ம கிட்டயே உதாரா? ஏன்  நாம ஒரு ரவுண்டு எழுதிப்பாக்கக்கூடாது’ என்று செல்வா எடுத்த முடிவுதான்,’’ஓட ஓட ஓட ஓட்டம் முடியலை’ என்று ஆரம்பித்து கடைசியில’’ யாரு வேணும்னாலும் பாட்டு எழுதலாம். அசிஸ்டண்டுங்க கிட்ட கேட்டும் எழுதலாம் என்று ஆகிவிட்டது.
எனக்குத்தெரிந்த வரையில், இனி கதை,திரைக்கதை,வசனத்தோடு,பாடல்களையும் அனைத்து டைரக்டர்களும் தாங்களே எழுதிக்கொல்வார்கள் என்றே தெரிகிறது. வரிகளின் தரம் தரைமட்டமாகும். தமிழ் தற்கொலை செய்துகொள்ளும்.பின்னர் அதுவே பழகிப்போகும்
.டைனோசர் என்ற உயிரினம் ஒன்று இருந்தது என்று ஸ்பீல்பெர்க் படம் எடுத்துக்காட்ட வேண்டி வந்தது போல், கவிஞர்கள் என்று கொஞ்சபேர் இருந்தார்கள் என்று பெர்க்ஸ்பீல் என்பவர் படம் எடுத்து விளக்கவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.
வைரமுத்து பையனுக்கு பட்டா கொடுத்துவிட்டு போய்விட்டார். நா.முத்துக்குமார் நாலு தலைமுறைக்கு கிரவுண்டுகள் வாங்கிப்போட்டுவிட்டார்.அதனால் அவரும்கவலைப்படத்தேவையில்லை.
மற்ற கவிஞர்களை நினைத்தால்தான்  குவார்ட்டர் வாங்கி அடிக்கணும்போலத்தோணுகிறது.‘
’குவார்ட்டர் வாங்கிக்குடிக்க காசு குறையுது..
சைடிஷ் வேணும்னு நினைச்சா தலையை சுத்துது..நம்ம
கவிஞர்கள் நிலையை நினைச்சா கண்ணைக்கட்டுது..
கண்ணுமுழிக்குள்ள தண்ணிமுட்டுது..
.( அட எனக்கும்கூட பாட்டு எழுத வரும்போல?)

இதய பலஹீனமுள்ளவர்கள் இதைப்படிக்க வேண்டாம்...

தமிழ் சினிமாவில் முதல் இடத்தைப்பிடிக்கும்வரை, என் தாகம் அடங்காது என்ற அலட்சிய  வெறியோடு ,மீண்டும் ஒரே நேரத்தில் இரு படங்களோடு களம் காணுகிறார், அண்ணன் பவர்ஸ்டார் சீனிவாசன்.
இன்றைய தினசரியில் வந்த ‘தேசிய நெடுஞ்சாலை’ விளம்பரத்தை நீங்களே பார்த்திருப்பீர்கள். இதோடு சேர்ந்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கட்டுமே என்று 'மன்னவன்' என்ற ஒரு படத்தையும் துவக்கியிருக்கிறார் நம்ம அண்ணவன்.
‘தேசிய நெடுஞ்சாலை’யில் தீவிரவாதிகளை டீல் பண்ணும் நம்ம பவர் மன்னவனில் சாஃப்டாக லவ் மேட்டரை டச் பண்ணுகிறாராம். இதில் நமது அண்ணியாக நடிக்கும் பாக்கியம் பெற்றவர் ஃபுளோரா.(ஃபர்ஸ்ட் ஃபுளோரா..செகண்ட் ஃபுளோரா..என்று நீங்கள் நக்கல் அடிப்பது காதில் விழுகிறது.டாக்டர் அண்ணன்கிட்ட சொல்லி ஊசிபோட சொல்லிருவேன் ஜாக்கிரதை,)
அடுத்து டாக்டரோட மம்மியா சுகன்யா நடிக்கிறாங்க.நம்ம டாக்டருக்கு நெருக்கமான நர்ஸ் ஒருத்தரை ஒரு வாரமா வெரட்டி, ஒரு ஓரமா மடக்கி இந்தப்படத்தோட கதைய கறந்துட்டேன்.

கதைப்படி நம்ம டாக்டரு ஒரு ஸ்ட்ரிக்கான போலிஸ் ஆபிசரு.நம்ம ஆபிஸரோட பரம்பரையே ஒரு பொறம்போக்கு..ச்சீ..ஒரு பொறுப்பான போலீஸ் பரம்பரைங்கிறதால,இவரும் அதே டைப் ஆளுதான். ஆனா கதையில ஒரு ட்விஸ்ட் வேணுமே.இங்கதான் அண்ணன் ஒரு புது ரூட் புடிக்கிறார்.  எல்லாமே நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு’ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, திடீரென, ‘’இவரு போலீஸ் இல்லடா பொறம்போக்குன்னு எல்லாரும் சொல்றமாதிரி நடந்துக்க ஆரம்பிச்சுடுறார். மம்மி,பொண்டாட்டி,புள்ளைங்க கூட நம்ம  ஆபிசரை வெறுக்க ஆரம்பிச்சுடுறாங்க.அப்புறம் என்ன ஆச்சின்னு வாயப்பொளக்காதீங்க.

மீதிய பிரியாணி பொட்டலம் குடுத்து வெண்திரையில அண்ணனே காட்டுவாரு.
அண்ணி ஃபுளோரா பத்தி ஒரு முக்கியமான தகவல சொல்லமறந்துட்டேன். இவங்க ஏற்கனவே ‘கேப்டன்’ கூட ஜோடியா நடிச்சிருக்காங்க..இவங்களோட ஜோடி சேர்ந்ததுக்கு அப்புறமாதான், கேப்டனுக்கு அரசியல் சுக்ரதிசை ஆரம்பிச்சி 29 எம்.எல்.ஏக்களோட எதிர்க்கட்சி தலைவராக்கியிருக்கார்.
இந்த செண்டிமெண்ட் தெரிஞ்சிதான் நம்ம பவர்ஸ்டாரும் அண்ணி ஃபுளோராவ புக் பண்ணினாராம்.
சரிங்க ‘மன்னவன்’ படத்தோட கதையை சொன்னீங்க ‘தேசிய நெடுஞ்சாலைய பத்தி ஒண்ணும் சொல்லாம போறீங்களே, என்று ஆதங்கப்படுபவர்களின் பட்டியல் எவ்வளவு பெருசு என்று எனக்குத்தெரியும்.
மறுபடியும் சந்திக்கத்தானே போறோம்.கொஞ்சம் பொறுங்க பாஸ்.
(ரெண்டாவது ஸ்டில்ல அண்ணன் தூங்கிட்டாரோ?)

Saturday, December 10, 2011

குமுதத்தின் மீது கொலவெறியில் சிம்பு....

இந்த கொலவெறி என்றவார்த்தையை யாரும் அடுத்த 6 மாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று கோர்ட்டில் யாராவது தடை வாங்க மாட்டார்களா? ‘ஏங்கும் உண்மைத்தமிழன்களில் நானும் ஒருத்தன்.
ஆனால் என்ன செய்வது இது கொலவெறி மாசம்போல. எதைத்தொட்டாலும் அதிலேயே போய் முடிகிறது.
விஜய்க்கு அடுத்தபடியாக, வம்புத்தம்பி சிம்புவுக்கு எதிரிகள் ஜாஸ்தி.
இந்த முறை ‘ஒஸ்தி’ ரிலீஸை ஒட்டி, அவரை பண்ணிவிட்டார்கள் நாஸ்தி.
இப்படி தன்னை நாஸ்தா பண்ணுபவர்கள் பட்டியலில் குமுதமும் வந்து குந்தும் என்று சிம்பு கொஞ்சமும் எதிபார்க்கவில்லை.
ஏனெனில் கொஞ்சகாலத்துக்கு முன்புவரை, சிலம்பு எங்கேயாவது கிளம்பினால்கூட,’’எங்கேயோ கிளம்பிட்டீங்க போல? என்று பேட்டி எடுத்துப்போட்டது குமுதம்.
ஆனால் சமீபகாலமாக சிம்புவுக்கு எதிரான நிலையைக்கையாண்டு,அவரைப்பற்றிய காண்ட்ரவர்ஷிகளை தேடித்தேடி போட ஆரம்பித்தார்கள்.
பாரில் ரெகுலராக நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி குமுதம் ரிப்போர்ட்டரில் கவர்’ ஸ்டோரியானது.
புதைத்த இடத்தில் மரமே முளைத்துவிட்ட ‘மன்மதன்’ பிரச்சினையை மீண்டும் ஆழமாகத்தோண்டினார்கள்.’மன்மதன் முருகன் தன் பங்குக்கு சிம்புவை தின்னுதீர்த்தார்.
சினிமாவில் திரைக்கு வருகிற படங்களைவிட,டிராப் ஆகிற படங்களே அதிகம் என்றிருக்கக்கூடிய சூழலில், அப்படி டிராப்பான ஒரு படமான ‘கெட்டவன்’ பட டைரக்டரைத்தேடிப்பிடித்து,சிம்புவைத்திட்டோ திட்டென்று திட்ட வைத்தார்கள்.
இதையும் படித்தபிறகு சிம்புவுக்கு அந்த’ வெறிதான் வந்தது.
முந்தி அப்பிடி இருந்தவங்க, இப்ப ஏன் இப்பிடி ஆயிட்டாங்க ,என்று குழம்பிப்போயிருக்கும் சிம்புவுக்கு..
குமுதம் பாணியிலேயே ஒரு சின்ன பிட்டு நியூஸ்.
அங்கே நடக்கும் நிர்வாகச்சண்டை ஊர் அறிந்தது.(தெரியாதவங்க கூச்சப்படாம கேட்டுத்தெரிஞ்சுக்கங்க)

சிம்புவின் பெஸ்ட் ஃப்ரண்டான தற்போதைய சினிமா நிருபர் ஜவஹர் பழனியப்பனின் ஆள். தனக்கு வேண்டாத சில சப்-எடிட்டர்களை டெல்லிக்கும் மும்பைக்கும் டிரான்ஸ்பர் செய்வதாக மிரட்டி  தன்பக்கம் பணிய வைத்தது போல் இதுவும் ஒரு வகையான மிரட்டல் டெக்னிக்.
நிருபருக்கு மிகவும் வேண்டியவர்களைப்பற்றி தொடர்ந்து தாக்கி எழுதினால்,அந்த நிருபர் என்ன செய்வார்? ஒன்று பத்திரிகையை விட்டுவிட்டு ஓடுவார்.அல்லது சரணாகதி அடைவார்.
இதுதான் இப்போதைய குமுதம் நிர்வாகத்துக்கு வேண்டும்.
தொடர்ந்து உங்களையே ஏன் திட்டித்திட்டி விளையாடுறாங்கன்னு இப்ப புரியுதா வம்புத்தம்பி?
(ரெண்டாவது ஸ்டில்ல ‘அது’ க்காக நான் வச்சிருக்கேன்)

கடைசியில எங்கள வச்சே காமெடியா?

ாஅரசல்புரசலாக அந்தச்செய்தி நடமாடியபோது, அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.ஏனெனில் சினிமாவில் சம்பந்தப்பட்டவர்களின் வாய்வழியாக வரும் வரை,அதை நம்பவேண்டியதில்லை.
அந்த நியூஸையும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு எல்லோரும் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் அந்த நிம்மதி இன்று காலைவரைதான் நீடித்தது.
இன்றைய காலை தினசரி ஒன்றில் அவரே அவரது சொந்தவாயால் அது உண்மைதான் என்று சொல்லிவிட்டார்.
தகவல் அறிந்ததும் ஸ்டண்ட் யூனியன் ஒரு நிமிடம் கிடுகிடுத்தது.
தமிழ்சினிமா வில்லன்கள் ஐயய்யோ நம்ம கதை முடிஞ்சது’ என்று எச்சில் முழுங்க ஆரம்பித்தார்கள்
.பிரகாஷ்ராஜ் பின்னங்கால் பிடறியில் பட பெங்களூர் கிளம்பிவிட்டதாக தகவல்.
பொன்னம்பலம் பொட்டிபடுக்கைகளை கட்டிக்கொண்டு எங்கோ போகக்கூடாத இடத்துக்கு போகப்போவதாக தகவல்.
.மகாநதி’ சங்கர் காசிக்குப்புறப்பட்டு, அகோரியாக மாறப்போவதாக அறிக்கை.
பசுபதி பழையபடி கூத்துப்பட்டறைக்குப்போய் தூத்திப்பெருக்கப்போவதாக நியூஸ்.
என்ன ஆச்சி இந்த வில்லன்களுக்கு? ஏன் இப்படி தெரிச்சி ஓடுறாங்க??
ஒண்ணுமில்லிங்கண்ணா,’வழிப்போக்கன்’ங்கிற படத்தில, நம்ம காமெடி நடிகர் விவேக் வில்லனா நடிக்கிறாராம்.
அது ஒர்க் அவுட் ஆனா, வில்லனாவே கண்டினியூ பண்ணலாம்னு பாக்குறாராம்.படங்கள்ல வரவர, வில்லன்கள வச்சி டைரக்டர்கள் காமெடி பண்ண ஆரம்பிச்ச ஒரே காரணத்துக்காக,இண்டஸ்ட்ரியே கதிகலங்கி,முழிபிதுங்கி நிக்கிறமாதிரி இப்பிடி ஒரு முடிவை விவேக் எடுத்திருக்கவேண்டாம்.

Friday, December 9, 2011

கோச்சடையான்’ என்று ஒரு படமே கிடையாது’’

மருத்துவமனையில் இருந்து திரும்பும்போது ரஜினிக்கு டாக்டர்கள் சொன்ன முக்கியமான அட்வைஸ் ,இனி சினிமாவைப்பத்தி நினைக்காதிங்க’ என்பதுதான்.
தனது மீதி வாழ்க்கையை நல்ல ஓய்வுடன் நிம்மதியாகக் கழிக்கவே ரஜினியும் விரும்பினார். ஆனால் 'சுல்தான் தி வாரியர்’ எடுக்கிறேன் பேர்வழி என்று பெரும் கடன்சுமைக்கு ஆளாகியிருந்த தனது மகள் சவுந்தர்யாவை மீட்க ஆரம்பிக்கப்பட்ட ‘ராணா’வைத்தொடர வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் ரஜினி கன்பியூஸ் ஆக ஆரம்பித்தார்.இந்த கேப்பில் ,ஃபைனான்சியர்கள் மீண்டும் சவுந்தர்யாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இதை சமாளிக்க ரஜினியின் அனுமதி இல்லாமலே புனையப்பட்ட கப்ஸா’தான் ‘கோச்சடையான்’.
இந்த கோச்சடையான் செய்திகள் திசைக்கு ஒரு டைப்பாய் வந்தபோது, முதலில் மீடியா மீது எரிச்சலடைந்த ரஜினி, இதன் பின்னணியில் மகள்தான் இருக்கிறார் என்று தெரிந்ததும், விரக்திச்சிரிப்போடு மவுனமாகி விட்டாராம்.
லேட்டஸ்ட்டாக, இல்லாத ஒரு படத்துக்கு நான் ஏன் டைரக்டரா இருக்கணும் என்று கே.எஸ் ரவிக்குமார் ஒதுங்கிக்கொள்ள, 3’ படத்தை இயக்கிவரும், ஐஸ்வர்யாவே இதையும் இயக்குவார் என்று புது புரளியைக் கிளப்பி விட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதில் பெரிய கொடுமை, ஸ்நேகா ரஜினியின் தங்கையாக நடிக்கிறார் என்று ஒரு கிசுகிசு  கிளம்பி போய்க்கொண்டிருக்கும்போதே,ஷ்ரேயா கொழுந்தியாளாக நடிக்கிறார் என்று இன்னொரு செய்தி கிளம்பும்.அதற்கு அந்த நடிகைகள் பதிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.சில பத்திரிகைகள் புத்திசாலித்தனமாக யோசிப்பதாக நினைத்துக்கொண்டு ;கோச்சடையான்’ பெயரில் தொடர் வேறு ஆரம்பிக்கிறார்கள்.
இல்லாத படத்துக்கு எத்தனை வதந்திகள்? கோச்சடையான் ஒரு நோ’ ச்சடையான் தான் என்பதை விரைவில் ரஜினியே அறிவிப்பார்.

யாரோடது அந்த காண்டம்?

சில மாதங்களுக்கு முன்பு திரைக்குவந்து, வந்தசுவடு தெரியாமல் மீண்டும் பெட்டிக்குள் படுத்துக்கொண்ட படம் ‘ஆரண்ய காண்டம்’’.எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் வந்த இந்தப்படத்தை குமாரராஜா என்ற புதுமுகம் இயக்கியிருந்தார். ரொம்பப்புதுமையான முறையில்,இந்தி நடிகர் ஜாக்கிஷெராபின் முழு நிர்வாணகாட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருந்தன.
இப்ப என்னாத்துக்கு அந்த பழைய நியூஸு ?
தோல்விப்படம் தந்த சில டைரக்டர்கள் அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் மக்கள் ரசனையின் மீது பழியைப்போடுவார்கள். இந்த ‘காண்டம்’ குமாரசாமி அந்த ரகம்.தான் சர்வதேச தரத்தில் படம் எடுத்ததாகவும்,அதை தயாரிப்பாளர் சரண் சரியான முறையில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார்.சரண் அதைக்கண்டுகொள்ளவில்லை.
சர்வதேசம் சர்வதேசமென்று சுற்றிக்கொண்டிருந்த குமாரராஜா, சென்னையில் வரும் 14ம் தேதி துவங்கி 22 வரை நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது தனது படத்தை திரையிட்டு விடவேண்டும் என்று துடியாய்த்துடித்தார்.
படத்தின் பிரிண்டுக்காக பலமுறை அலையவிட்ட சரண், கண்ட சோனாகீனால்லாம் என்னை தரைமட்டத்துக்கு பேசுற அளவுக்கு காலி பண்ணினதே நீ தானடா..உனக்கு சர்வதேச விருது ஒரு கேடா? என்று அடித்து விரட்டாத குறையாக வெறுங்கையோடு அனுப்பிவைத்தாராம்.
வுடுங்ணா இந்த காண்டத்துல வுட்டத அடுத்த காண்டத்துல புடிப்போம்.

தானும் மொட்டை அடித்துக்கொல்கிறார் பாலா...

’எரியும் தனல்’ பாலாவின் அடுத்த படம். டிஸ்கஷன் துவங்கி படம் ரிலீஸ் வரை தான் எதுவும் பேசாமல் தன்னைப்பற்றி எல்லோரும் ஏதாவது பேசும்படி நடந்து கொள்வது பாலாபாணி.எரியும் தனலைப் பற்றிய செய்திகளும் இப்போதே பற்றி எரிய ஆரம்பித்துவிட்டன.கேரள தேயிலைத் தொழிலாளர் களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல் தான் அப்படியே படமாகிறது. கதையைப் பற்றி எதுவுமே சொல்லாமல் முதலில் நாயகன் அதர்வாவின் அரைமண்டையை மொட்டை அடித்துவிட்டு தொப்பி மாட்டிக்கொள்ள சொன்ன பாலா,அடுத்து சுமார் 200 பெண்களை வரவழைத்து, அவர்களை மொட்டை அடிக்கும் வேலையில் இறங்கினார். இப்படி மொட்டை அடிக்க சம்மதிக்க  வைக்க  பெரிய தொகையை பாலா தர தயாராக இருந்தும் சுமார் 5000 பேரை அணுகியதில்தான் 200பேரைத்திரட்டமுடிந்ததாம்.

பெண்களின் இந்த மொட்டை வைபவம் நடந்துகொண்டிருந்தபோது,சில பெண்கள்,’’எப்படித்தான் பொம்பளைங்களுக்கு மொட்டை அடிக்க இவருக்கு மனசு வருதோ ‘’என்று முணுமுணுத்திருக்கிறார்கள்.

இதைக்கேட்ட பாலா,’’ஷூட்டிங் ஆரம்பிக்கிற அன்னைக்கி நானும் மொட்டை அடிச்சிக்கத்தான் போறேன். மூனு மாசத்தில திரும்ப முளைக்கப்போற மசுத்துக்கு இவ்வளவு புலம்புறீங்களே’’ என்றாராம்.

ராசா மசுரு மூனு மாசத்தில முளைச்சிரும்,ஆனா உங்க ஷூட்டிங் முடிய மூனு வருஷம் ஆகுமே என்று மனசுக்குள் மருகுகிறார் புரடக்‌ஷன் பொன்னுச்சாமி.