ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள்
இருக்கும்காமக்குரோதஉணர்ச்சிகளை வென்றுவிடுவது அதிகக்கஷ்டமாக எனக்குத்தோன்றுகிறது
- தனது சத்திய சோதனையில் ’வெறும்’ காந்தி
![]() |
| இந்த அருமையான் ஸ்டில் நடிகர் கபீர்பேடியின் ட்விட்டரில் சுட்டது |
![]() |
| நாங்கல்லாம் துப்பாக்கிய தூக்க ஆரம்பிச்சா’-காந்தி |
![]() |
| மீதிப்பரிச்சையை நான் பிட் அடிச்சாவது எழுதாம மேலோகம் போக மாட்டேன் |
சற்றுமுன்னர்தான் ஃபோர் ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில்,’முதல்வர் மகாத்மா’ படம் பார்த்துவிட்டு வந்தேன். ஏற்கனவே ‘காமராஜ்’ படம் எடுத்து,பெருந்தலைவர் காமராஜர் மேலிருந்த மதிப்பை கணிசமான அளவில் காலி செய்திருந்த அதே பாலகிருஷ்ணன் தான், இப்ப காந்தியையும் கையில் எடுத்து, எழுதி, இயக்கி தயாரித்து வியாபாரித்தும் இருக்கிறார்.
ஸ்கூல் பசங்களின் நாடகம் போல என்று இப்போதெல்லாம் எழுத பயமாக இருக்கிறது.ஏனென்றால், ஸ்கூல் பசங்க பல விதங்களிலும் நம்ம கோடம்பாக்க ஆசாமிகளை விட ஷார்ப்பாகவே இருக்கிறார்கள். ஸ்கூல், காலேஜ் நாடகங்கள், இங்கே வருஷத்துக்கு ரிலீஸாகும் 90 சதவீத பிணாத்தல் படங்களை விட நன்றாகவே இருக்கின்றன.
நாம பாலகிருஷ்ணனின் ‘முதல்வர் மகாத்மா’வுக்கு வருவோம்.
கோட் ஷேவால் சுடப்பட்டு மேலோகம் போய்க்கொண்டிருக்கும் காந்தி, நடுவழியிலேயே முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார். நான் இந்தியாவுக்காக பாதிப்பரிட்சை தான் எழுதியிருக்கேன்.இன்னும் கொஞ்சம் மக்களை டார்ச்சர் பண்ண வேண்டியிருக்கு, அதனால பூலோகத்துக்கு உடனே ஒரு ‘ரிடர்ன்’ டிக்கட் போடுங்க’ என்று எமனிடம் அடம்பிடித்து, வழக்கம் போல் அவனிடமும் உண்ணாவிரத டார்ச்சரைக் கையாண்டு பழையபடி பூமிக்கே வந்துவிடுகிறார்.
அப்படி வந்தவர், கரம் சந்த் காந்தி என்பதை மறைத்து, தனது பெயரில் மோகன் தாஸ் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, பழையபடி மக்களுக்காக போராட ஆரம்பிக்கிறார்.
இறுதியில், வெள்ளைக்காரர்களைவிட, இப்போதிருக்கிற அரசியல் கொள்ளைக்காரர்கள் அதி பயங்கரமானவர்கள் என்பதைப்புரிந்து கொண்டு ‘ரிடர்ன் டிக்கட்டை கேன்சல் செய்து கொண்டு அவசர அவசரமாக மேலோகம் பறக்கிறார்.
என்ன கதையில் இன்னும் முதல்வர் வரவில்லையே என்று பார்க்கிறீர்களா?
மேற்படி கதையை, அவரிடம் பயின்று ஒரு மாநிலத்தின் நல்ல முதல்வராக இருக்கும் அனுபம் கேர் ,அனுபவம் கேராக மாறி சொல்லி வருகிறார்.மகாத்மா காந்தியிடம் பயின்று முதல்வரானதால் ‘முதல்வர் மகாத்மா’.
படம் முடிந்து வெளியே வந்தவுடன், வாசலில் வழிமறித்து நின்று கொண்டிருந்த இயக்குனர் பாலகிருஷ்ணனிடம்,’’ பொதுவா எடிட்டருக்கு அனுப்பி, படத்தை எடிட் பண்ணினதுக்கு அப்புறம் தான் பிரஸ் ஷோ வே போடுவாங்க. நீங்க ஷூட்டிங் முடிஞ்சி டெவலப் பண்ணுன உடனே அப்பிடியே எங்களுக்கு போட்டு காட்டீட்டிங்களே சார்? என்று கேட்க தொண்டை வரை வார்த்தைகள் வந்துவிட்டன.
இன்னைக்கி காலைல ஷேவ் பண்றப்பவே ரத்தக்காயம் பாத்தாச்சி, மறுபடியும் எதுக்கு ரிஸ்க் என்று அதை மென்று தின்றுவிட்டேன்.
எடிட்டிங் மட்டுமின்றி படத்தின் அத்தனை அம்சங்களுமே, தொழில் நுட்பமா அப்பிடின்னா என்னாங்க என்று நம்மை பகடி பண்ணி கபடி ஆடுகின்றன.
இந்த விநோத கற்பனையின் உச்சக்கட்டமாக , விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனும், காந்தியும் ஒரு கடற்கரையில் அவசர அவசரமாக சந்தித்துக்கொள்கிறார்கள். பிரபாகரனுக்கு காந்தி அஹிம்சையின் அவசியத்தைப்பற்றி வண்டி வண்டியாக அட்வைஸ்களை அள்ளி வழங்குகிறார்.
யாராவது ரொம்ப அறுக்கும்போது, நமக்கு நாமே மிஸ்டு கால் கொடுத்து எதிரில் இல்லாத ஒரு ஆளிடம், ‘ஹலோ ஸாரிம்மா லேட்டாயிடுச்சி.அஞ்சே நிமிஷத்துல அங்க இருப்பேன்’ என்று சொல்லாமல்கொள்ளாமல் எஸ்கேப் ஆவோமே, அதே போலவே ஒயர்லெஸ்ஸில் ஒரு கால் வர காந்தியிடமிருந்து அவசரமாகத் தப்பி ஓடுகிறார் பிரபாகரன்.
எல்லோருக்குமே, சில பிடித்த தலைவர்கள் இருப்பது மாதிரி, சில பிடிக்காத தலைவர்களும் இருப்பார்கள்.
அப்படி உங்களுக்கு மட்டும் பிடிக்காத ஒரு தலைவரை, எல்லாருக்கும் பிடிக்காத தலைவர் ஆக்க விரும்பினால், கொஞ்சமும் யோசிக்காமல் உங்க காடுகரையை வித்தாவது, பாலகிருஷ்ணர டைரக்டரா வச்சி படம் எடுங்க.அப்ப பாப்பீங்க கைமேல் பலனை.











