Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Sunday, July 1, 2012

கோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்



’சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன், அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகால்லாம் வெடவெடன்னு நடுங்க ஆரம்பிச்சிருச்சி. இப்ப என்னடான்னா பாரதிராஜாவும் இங்கதான் வந்து
படமெடுக்கப்போறேன்னு எங்கள படபடப்புக்குள்ளாக்குறாங்க.  இன்னொருத்தரு பேரு என்னவோ டங்கர் பச்சானோ, டங்குவாரு அத்தானோ அவரும் இங்கதான் கிளம்பி வர்ற மூட்ல புதுசா டவுசருல்லாம் வாங்கி அடுக்குறாராம். இதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா நீங்கதான் சொல்லனும்’’


அமெரிக்கநேரம் அதிகாலை ஐந்துமணி. அந்த ஹாலிவுட் சாமியார் அரைபோதையில் கண்ணைத்திறந்தபோது, ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ஜேம்ஸ் கேமரூன்,  ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், டிம் மார்ட்டின், கிறிஸ்டபர் நோலன் டேவிட் பிஞ்சர், ஜார்ஜ் லூகாஸ், மார்ட்டின் ஸ்கார்சிஸ், ரைட்லி ஸ்காட், ஜோயல் சியான்,டேன்னி பாயல்,  டாம் ஹாங்ஸ், மெல் கிப்சன், என்று ஒரு பெரும்பட்டாளமே கண்களில் மரண பயத்தை காட்டியபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
 

‘’ஆஹா என்னைக்குமே இந்தப்பக்கம் எட்டிப்பாக்காத பயலுக எல்லாம் ஒண்ணுகூடி வந்திருக்கீங்கன்னா மேட்டர் கொஞ்சம் சீரியஸாதான் இருக்கும், ‘’ மார்ட்டின் மச்சான் ஒரு குவார்ட்டர் சொல்லு. மத்தவங்க எல்லாம் மனசுல ஏசு நாதரை வேண்டிக்கிட்டு மண்டிபோட்டு உக்காருங்க’’ என்றபடி ஹாலிவுட்டின் சினிமா ஜாதகத்தை வாங்கிப்புரட்ட ஆரம்பித்தார் அந்த குவார்ட்டரோ டி பீரோ என்ற சாமியார்.

‘’பொதுவாவே உங்க ஹாலிவுட் சினிமாவ ஏழரை நாட்டு அஷ்டமச்சனி புடிச்சி ஆட்ட ஆரம்பிச்சிருச்சின்னுதான் சொல்லனும். ஏன்னா வர்றவங்க அவ்வளவு சாதாரண ஆளுங்க கிடையாது. 

ஒருத்தரு சப்பாணியா இருந்து ஃபியூச்சர்ல சண்டியரா மாறுனவரு. இன்னொருத்தரு நல்ல வலுவான சண்டியரா இருந்து இப்ப சப்பாணியானவரு.

மூனாவதா சொன்னீங்களே ஒரு இது. அது ஒரு பத்து பலாப்பழத்தை உரிக்காம அப்பிடியே முழுங்கிட்டு ‘அய்யோ தமிழனா பொறந்த ஒரே காரணத்துக்காக நான் பட்டினியா கிடக்கனுமான்னு வெட்டி ஞாயம் பேசும்.

   
சனி பகவான் இரண்டரை வருஷத்துக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். வாக்கிய ரீதியாக  அவர் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு பெயர்ச்சியடைந்த நேரத்துலதான் கமலுக்கு ஹாலிவுட்ல படம் எடுக்கனும்ங்கிற ஆசை வந்துருக்கு. 
 

கமலோட பார்வை, நீச்சவீடான மேஷம் மீது விழுகுது.  உச்சம் பெற்ற கிரகம் ,அதாவது நம்ம கமல், நீச்ச வீட்டை பார்க்கும்போது, அதாவது நம்ம ஹாலிவுட்டைப்பார்க்கும்போது, நீச்சவீடு நாசமாப்போகும் என்பது ஜோதிட விதி.

‘சுவாமிகள் அதுக்குதான உங்கள தேடி வந்துருக்கோம்.எங்களுக்கு பரிகாரம் சொல்றத விட்டுட்டு பரிகாசம் பண்றீங்களே?’’

‘’மனசுக்குள்ள ஏசுவை பிரார்த்தனை பண்ணிக்கிட்டு சைலண்டா இருங்க. யாரும் குறுக்க பேசப்புடாது’’

டைரக்டர் மார்ட்டின் ஸ்கார்சிஸ் வாங்கி வந்த குவார்ட்டரை அப்படியே ராவாக குடித்துவிட்டு, சைடிஷுக்கு டேவிட் பிஞ்சரின் புறங்கையை சற்று நக்கியபடி தொடர்கிறார் சுவாமிகள்.

’’கமல் மேட்டர்ல கூட அவ்வளவு ஆபத்து இருக்கிறமாதிரி தெரியலை. நம்ம ஊர்ல அத்தனை டி.வி.டி. கடைகளையும் ஆசிட் ஊத்தி கொளுத்தப்போறொம்னு சொன்னா, ப்ளைட் டிக்கட்டை கேன்சல் பண்ணிட்டு பின்வாசல் வழியா பின்லாந்துக்கு ஏதாவது ஒரு ஃபிகரை பிக் அப் பண்ணிக்கிட்டுப்போயிருவார்.

ஆனா இந்த பாரதிராஜா முடிவுல ஒரு விஸ்வருப பயங்கரவாதம் தெரியுது. டங்கர் மச்சான் முடிவுல ஏதோ ஒரு டகால்ட்டி வேலை தெரியுது.

துலா ராசியில் சஞ்சாரம் செய்யிற சனி பகவான்  செவ்வாய் கிரகத்துக்கு உரிய சித்திரை 3,4 பாதங்களயும் ராகுவின்  நட்சத்திரமான சுவாதியிலயும்,  சஞ்சாரம் செய்யிறதால, இவிங்க ஹாலிவுட் சினிமாவையே பஞ்சராக்கப்பாக்குறாய்ங்க.

ரெண்டு மாசத்துக்கு முந்தி, தேனியில,’அன்னக்கொடியும் கொடிவீரனும்’ ஷூட்டிங்ல இருந்தப்ப சனி இவரை கொஞ்சம் உக்கிரமா தாக்குனதுல, நாம ஹாலிவுட்ல படம் பண்ணப்போறது அக்கிரமம்னு தெரிஞ்சும் இவ்வளவு வக்கிரமா மாறிட்டாரு.’’

ஒரு மாசத்துக்கு முந்தி நெய்வேலியில ‘அம்மாவின் கைபேசி’ ஷூட்டிங்ல இருந்தப்போ, யாரோ டங்கரோட கடலைமுட்டாய் ஒண்ணை களவாடிட்டு போயிட்டாங்க. அந்தக்கவலை அவரோட கபாலம் வரைக்கும் போயி, ‘ என் கடலைமுட்டாயை களவாண்ட தமிழனுக்கு இனிமே நான் படம் எடுக்க மாட்டேண்டான்னு முண்டாசு தட்டுறாராம்.
 

’’சுவாமிகள் ஜாதக விவகாரம் போதும். பரிகாரம் என்ன பண்ணனும்னு சொன்னீங்கன்னா, பண்ணவேண்டிய ஃபார்மாலிட்டிகளைப் பண்ணிட்டு அடுத்த வேலையை பாக்கக்கிளம்பிடுவோம்’’ – பொறுமையிழந்து எழுகிறார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

ஸ்டீபனைத்தொடர்ந்து மற்றவர்களும் பொறுமை இழந்தவர்களாய் எழ ஆரம்பிக்க, இனி இவனுகளை வைத்துக்கொண்டு ஜல்லி அடிக்க முடியாது என்பதை புரிந்துகொள்கிறார் சுவாமிஜி.

‘’ சரி இவ்வளவு நேரம் பொறுமையா இருந்துட்டீங்க. இப்ப நான் கடைசியா சொல்லப்போறதையும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க.

இவங்க மூனுபேருமே ஹாலிவுட் வர்றதை தடுக்கிறதுக்கு, நான் தேடுன வரைக்கும் ஜாதக ரீதியா பரிகாரம் எதுவும் இல்லை.
 

உங்கள்ல மூனுபேர் உடனடியா சென்னைக்கு கிளம்பிப்போய், நாங்க இனிமே தமிழ்லதான் படம் இயக்கப்போறோம்னு பேட்டி குடுத்துப்பாருங்க. .ஒருவேளை உங்களுக்கு கைமேல பலன் கிடைக்கும்.
 
உடனே கிறிஸ்டபர் நோலன் இடைமறிக்கிறார்,’’ முள்ளை முள்ளாலதான் எடுக்கனும். பல்லை பல்லாலதான் உடைகனும்ங்குறீங்க.  அது ஓ.கே. சாமி.ஆர்டிஸ்டுகளுக்கு என்ன பண்றது?’’

சுவாமிகளுக்கு கோபம் கொப்பளிக்கிறது, ‘’ஹே ஹே ஹே.. குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டுற ஃபூல்ஸ் . கோடம்பாக்கம் ஆர்ட்டிஸ்டுகளோட சொர்க்கம்டா. பூவர் ஸ்டார், பவர் ஸ்டார்,எவர் ஸ்டார் அவ்வளவு நம்ம ட்வின் டவர் ஸ்டார் வரைக்கும் அங்க டேலண்டுகள் குவிஞ்சி கிடக்குதடா. ஒரு வெரைட்டி டைரி எடு. இவங்களோட மேனேஜர்கள விரட்டிப்புடி’’ என்று சாமியார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ், ஜோயல், ஸ்டீபன் உட்பட அனைவருமே சென்னை எண்ணைச்சுழற்ற ஆரம்பிக்கின்றனர்.
 ‘’ஹலோ திகில் முருகன் சாரா, நாங்கோ ஹாலிவுட் டைரக்டர்ஸ் டென் மெம்பர்ஸ் கமிங் டு யுவர் கோடம்பாக்கம். ப்ளீஸ் ஹெல்ப் அஸ் ப்ரதர்’’

Sunday, January 22, 2012

தொடரும் ஸ்ருதி-தனுஷ் பஞ்சாயத்து: ரஜினி கலரு ப்ளாக்கு.. ப்ளாக்கு..


 
ஆலமரத்தடி பஞ்சாயத்துல உங்கள கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணச்சொல்லிட்டு நான் ரொம்ப ஓவரா ரிலாக்ஸ் ஆயிட்டேன்.  ஒண்ணுமில்ல செல்வாவுக்கு குட்டிப்பாப்பா பொறந்ததால எல்லாருமே கொஞ்சுறதுக்காக போயிட்டாங்க. இதோ எல்லாரும் பழையபடி பத்திரமா  அதே ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்துட்டாங்க. பஞ்சாயத்து, அராத்து, அட்ராசிட்டி  ஸ்டார்ட்ஸ் நவ்.... 

[காதல் கொண்டேன் க்ளைமேக்ஸ் பாணியில் தனுஷ் அனைவருக்கும் ஜெர்க் கொடுக்க அவரை நோக்கி ஓடி வருகிறார் டாடி கஸ்தூரிராஜா]  

கஸ்தூரி: யாரும் டென்சன் ஆகவேண்டாம். தம்பி மேல ஆத்தா இறங்கியிருக்கா. அதனாலதான் அவருக்கு வெறி ஏறியிருச்சி. பொறுங்க உடனே இறக்கிருவோம்...ஏ.. இங்க ஒரு குட்டிப்பையனை பேட்டா பேசிக் கூட்டியாந்தமே அவன எங்கப்பா... என்று கொலவெறி பிடித்த இசையமைப்பாளர் அனிருத்தைத் தேட ஆரம்பிக்கிறார் கஸ்தூரிராஜா. சிலமணித்துளிகளின் சலசலப்புக்குப் பின், அருகே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பள்ளிச்சிறுவர்களுக்கு, அனிருத்  பந்து பொறுக்கிப்போட்டுக்கொண்டிருப்பதை அறிந்து, கஸ்தூரிராஜா , அனிருத்தின் காதைப் பிடித்து தரதரவென்று இழுத்து வருகிறார். 

அனிருத்: ஐயோ அங்கிள் என் மூக்கு, கண்ணு, நாக்கு எதை வேணும்னாலும் கிள்ளுங்க. காதை மட்டும் விட்டுறுங்க.இது வழியா தான் நான் எதையும் காப்பி அடிக்க முடியும்.

கஸ்தூரி ராஜா: சரி வெட்டி நாயம் பேசாம, தனுஷ் மேல எறங்கியிருக்க ஆத்தா மலை ஏறுற மாதிரி உன் ஆர்மோனியப்பெட்டியில ஒரு டியூன் போடு.
அனிருத் ஆர்மோனியத்தில் விரல்களை வைக்க ஸ்ருதி, ஐஸ்வர்யா, செல்வா, ஆகியோர் குஷியாகி விடுகிறார்கள்.

அனிருத்: சார் பாட்டு யாரு எழுதுறது?

கஸ்தூரி: நம்ம செல்வா தான். மயக்கம் என்ன’ படத்துக்கு செல்வா எழுதின பாட்டைக்கேட்டு, அமரர் கண்ணதாசன் தன்னோட சமாதிய வேற நாட்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாராம். செல்வா பேசினா அது வசனம். அவன் மோட்டுவளைய பாத்தா அது நாட்டு. அவன் எதையாவது கிறுக்கினா  அது பாட்டு. . நீ டியூனை ஸ்டார்ட்டு. 

அனிருத் : தாரணன தான ரணனா தாரனணனே

செல்வா: மச்சி செம டியூன் மச்சி. அப்பிடியே கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ. சுண்டு விரல்ல ஊறுகாய் எடுத்து நக்கிக்கோ.
‘குமுதம் எழுதுறது சரியில்ல, ஸ்ருதியோட சுத்துனது தப்பில்ல,சரக்குக்கு சைடிஷ் கிடைக்கல...ஆக மொத்தம் எதுவும் தப்பில்ல..
ரஜினி அங்கிள் ப்ளாக்கு ப்ளாக்கு   ராணா வந்தா ஃப்ளாப்பு 
கமலு அங்கிள் ஒயிட்டுஒயிட்டு அவர் மூளை ரொம்ப வெயிட்டு
ஒய் திஸ் பஞ்சாயத்து பஞ்சாயத்து டா... 
கண்களில் அக்னிக்குழம்போடு கமல் வந்து  ஆர்மோனியப்பெட்டியை எட்டி உதைக்கிறார்.

கமல்: நீங்க இப்பிடி  கூத்தடிக்கிறது உங்களுக்கே நல்லாருக்கா.  பொண்ணு வாழ்க்கை பொசுங்கிப்போறது மண்ணு நம்ம கைய விட்டுப்போறதுக்கு சமம்னு நெனச்சி  ரஜினி மனசு  ரணகளமா ஆயிடுச்சி. இது தெரிஞ்சிருந்தும், அந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பைத் தேடுறீங்களே இது அடுக்குமா? 

செல்வா: இந்த டைட்டில் ரொம்ப நல்லாருக்கே. பேசாம என்னோட ‘இரண்டாம் உலகம்’ங்கிற சப்பையான டைட்டிலை மாத்திட்டு, ‘ரணகளத்துல ஒரு கிளுகிளுப்பு'ன்னே வச்சிடலாமான்னு பாக்குறேன்.

ரஜினி: இவங்கள்லாம் பொறந்தாங்களா இல்ல எங்க இருந்தாவது செஞ்சி எடுத்துட்டு வந்தாங்களான்னே தெரியலை. நாம இவங்க கிட்ட பஞ்சாயத்து பேசி இன்னும் கொஞ்சம் பஞ்சராகுறதை விட, பட்ட காயத்துல கொஞ்சம் டிஞ்சர் வாங்கித் தேய்ச்சிட்டு பேட்டா வாங்கிட்டு ஜூட்டாயிடலாமுன்னு நினைக்கிறேன்.
 
சரத்: [கொஞ்சம் பவ்யமாக] எனக்கும் இன்னும் பேட்டா காசு வந்து சேரலை சார். பேட்டா வாங்காம வீட்டுக்குப் போனா சித்தி சுத்திச்சுத்தி அடிப்பாங்க சார்.   மத்தியானம் கூட ஆமைக்கறி போடுறேன்னு சொல்லிட்டு எருமைக்கறியப்போட்டு எகத்தாளம் பண்றாங்க சார்.

ரஜினி: சரத் உங்களுக்கு பாடி ஸ்ட்ராங்க் ஆனா பேஸ்மெண்ட் தான் கொஞ்சம் வீக்குன்னு நினைச்சேன்.நீங்க டோட்டலாவே ரொம்ப வீக்கா இருக்கீங்க. வாரத்துக்கு 40 ஆஃப் பாயில் சாப்பிட்டு ஆயில்பாத் எடுத்துக்கோங்க.போகப்போக எல்லாம் சரியாயிடும்.

கமல்: நானுங்கூட  பேட்டா  காசுல அக்‌ஷராவுக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தர்றதா ப்ராமிஸ் பண்ணிட்டு வந்தேன்.இங்க என்னடான்னா, ஒயிட்டு, ப்ளாக்குன்னு நம்மள பின்னி பெடல் எடுக்குறானுக.

ரஜினி: சம்பந்தி கஸ்தூரிராஜா இந்த கஷ்டகாலங்களை வச்சி எப்பிடி கறையேறுன்னார்னு நினைக்கிறப்போ என் கண்ணுல கண்ணீர் கரை புரண்டு ஓடுது.

கமல்: எனக்கென்னமோ விதி  இவங்க வாழ்க்கையை மட்டும் தனது இடது கரத்தால் எழுதுதோன்னு ஒரு சந்தேக ரேகை சொல்லுது.

ரஜினி: மைண்ட் வாய்ஸில்... ஆஹா பழையபடி இந்த ஆள் ஃபார்முக்கு வர்றான்யா. பேசாம எஸ்’ ஆயிர வேண்டியதுதான்.
இவர்கள் யாரையும் கண்டு கொள்ளாத யூத் கோஷ்டி பாடலை தொடருவதில் மும்முரமாக இருக்கிறது.

ஐஸ்வர்யா: டாடி நாங்க ‘3’ படத்தை ஃபர்ஸ்ட் டைமா  moon லயும் ரிலீஸ் பண்றதா இருக்கோம். அங்க நானு,தனுஷ், ஸ்ருதி மூனு பேரும் போறதா இருக்கோம்.

மூனு கலரு ஒயிட்டு ஒயிட்டு,தனுஷு ஃபிகரு வெயிட்டு. ஸ்ருதி ஃபிகரு ஒயிட்டு ஒயிட்டு..தனுஷு ஸ்ருதிக்கு ரைட்டு.. என்று ஐஸ்வர்யா பாடிக்கொண்டிருக்க...
'மச்சான் கையில கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ... நடு விரல்ல ஊறுகாய் எடுத்து நக்கிக்கோ...டியூன் சூப்பரா இருக்கு அதே ரூட்ல ட்ராவல் பண்ணு' என்றபடி நார்மலாக தனுஷ் வந்து சேர, பேட்டா கூட வாங்காமல் பின்னங்கால் பிடறியில்  பட அனைவரும் தெறித்து ஓடுகிறார்கள்.

பஞ்சாயத்து-1: குமுதம் எழுதுறது சரியில்ல,தனுஷோட சுத்துனது தப்பில்ல

 “சினிமா.. சினிமா..”

Thursday, January 19, 2012

குமுதம் எழுதுறது சரியில்ல,தனுஷோட சுத்துனது தப்பில்ல, '3' படமோ இன்னும் முடியல.. ஆக மொத்தம் எதுவும் விளங்கல...

தன்னையும், நடிகர் தனுஷையும் இணைத்து மீடியாக்கள் சூடாக வடை சுட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கும் எண்ணெயாகிறார் ஸ்ருதிஹாசன்.

 தனது வக்கீலை அழைத்து எல்லாப்பத்திரிகைகளுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு போட, வக்கீலோ, முதல்ல யாராவது ஒருத்தருக்கு அனுப்புவோம். அதைப்பாத்தே எல்லாரும் அஞ்சி நடுங்கி, உங்களை விட்டுட்டு அக்‌ஷராவையும் செல்வராகவனையும் பத்தி எழுத ஆரம்பிச்சிடுவாங்க’ என்று ஆலோசனை சொல்ல,அதை ஆமோதிக்கும் ஸ்ருதி,
‘உடனே அப்பாவுக்கும் ரஜினி சாருக்கும் போன் பண்ணி ஏதாவது ஒரு ஆலமரத்தடிக்கு வரச்சொல்லுங்க. இந்த மேட்டரை பஞ்சாயத்து பண்ணி ஒரு முடிவுக்குக் கொண்டு  வரணும்’ என்க..

‘.கட் ’ பண்ணினால் போரூர் தாண்டி  குன்றத்தூர் அருகே, ஒரு ஆலமரத்தடியில், ரஜினி, கமல், தனுஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா, செளந்தர்யா, கஸ்தூரிராஜா, கொலவெறி பாடலுக்கு இசையமைத்த அனிருத்,மற்றும் நாட்டாமை சரத் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள்.
 

எடுத்தவுடன்,ஒரு நெழிந்த பயங்கர அடி வாங்கிய  பழைய சொம்பு ஒன்றில்   வெத்திலையை புளிச்  என்று துப்பியபடி சரத்  தனது ஜபர்தஸ்தைக் காட்டுகிறார். 

சரத்: இந்த நாட்டாமை பேசுறப்ப யாரும் குறுக்க பேசப்படாது. பஞ்சாயத்துன்னு உக்காந்து பஞ்ச் பேசி நல்ல ல்ஞ்ச் சாப்பிட்டு  ரொம்ப நாளாச்சி. அதனால கொஞ்சம் டச் விட்டுப்போச்சி. சரி சொல்லும்மா ஸ்ருதி, குற்றம் நடந்தது என்ன?

ஸ்ருதி: அய்யோ அப்பா இவருக்குல்லாம் யாரு புரோகிராம் சொல்லி அனுப்பிச்சது. நான் கான்வெண்ட் படிக்கிறப்ப இவர் சொன்ன தீர்ப்பக்கேட்டு நாலு நாள் ஜுரத்துல படுத்தது பத்தாதா முதல்ல இவருக்கு பேக்கப் சொல்லுங்க’

கமல்:[லேசாக கணைத்தபடி] அதாகப்பட்டது ஸ்ருதி அவர்களே, நாங்கள் அனைவரும் அனுமானித்தது உண்மையெனில், யாரும் புரோகிராம் சொல்லாமலே, ஒரு பழக்க தோஷத்தின் அடிப்படையிலேயே திரு. சரத் அவர்கள் வந்திருப்பதாக அறிகிறோம்.சபை நாகரீகம் என்ற ஒன்றை தமிழன் நீண்ட நாட்களாக கட்டி மாரடிப்பதை மனதில் கொண்டும், நம் குடும்பப் பிரச்சினைக்கு வெளியில் இருந்து ஒருவர் தீர்ப்பு சொன்னால் நன்றாக இருக்குமே என்றும் நினைத்து அவர் இங்கே நீடிப்பதையே நான் விரும்புகிறேன்.

செல்வராகவன்
: மைண்ட் வாய்ஸில்] தெளிவான விஷயத்தை குழப்பமா பேசுறதை இவர்  எப்பத்தான் நிறுத்தப்போறாரோ? 

கமல்
: செல்வா நீங்க ஏதோ சீரியஸா திங்க் பண்றிங்க போல இருக்கு. அப்படியே அந்த கண்மாய் பக்கமா நடந்து போயிட்டு வந்தீங்கன்னா புதுஷா ரெண்டு சீன் கிடைச்சாலும் கிடைக்கும்.

செல்வா:சார் கண்மாய்ப்பக்கமா போனா மீன் தான் கிடைக்கும் சீன் கிடைக்காது.பொண்ண சரியா கண்டிச்சி வளக்காம விட்டுட்டு வந்துட்டாரு..சீன் சொல்றதுக்கு.

கஸ்தூரிராஜா: வந்த மேட்டரை விட்டுட்டு ஆளாளுக்கு பேசிக்கிட்டே போறீங்களே.. என் சம்பந்தி என்ன சொல்றாருன்னு கேளுங்கப்பா.

ரஜினி:[ தாடியை நீவியபடி], ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுன்னு கீதையில சொல்லியிருக்கு..அதனால

[ரஜினியை மறித்து கமல் உள்ளே பாய்கிறார்.]

கமல்: எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை என்று சொல்லுவதைவிட அது நடக்கவே இல்லை என்று சொல்லிக்கொள்வதுதான் இங்கிருக்கும் யாவருக்கும் நலம் என்பதாக நான் கருதுகிறேன். இப்படி பேசுவதால் நான் கீதையை மறுக்கிறேன் என்று சிலர் என் மீது பழி சொல்லக்கூடும்.பெற்ற பிள்ளை என்று வருகிற போது கீதையை சற்று இறக்கி வைத்துப்பார்க்கிற பேதையாக நான் இருந்துவிட்டுப்போவதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

ரஜினி: [கொஞ்சம் கோபமாகி] கமல் வரவர நீங்க பேசுறது கால்வாசி கூட புரிய மாட்டேங்குது. ‘விஸ்வரூபம்’ முடிஞ்ச உடனே ருத்ரன், மாத்ருபூதம்  மாதிரி  ஒரு நல்ல டாக்டர் கிட்ட நானே கூட்டிட்டு போறேன்.நீங்க காலாற கொஞ்சம் அந்தப்பக்கம் போயிட்டு வாங்களேன்.பிரச்சினையை நாங்களே பேசி முடிச்சிக்கிறோம். இல்லைன்னா நீங்க என்ன பேசுறீங்கங்கிறத புரிஞ்சிக்கிறதே இங்க இருக்கவங்களுக்கு ஒரு பிரச்சினையாயிடும்.

கமல்: இந்த சபை என் அமைதியைத்தான் விரும்புகிறதென்றால் நான் மவுனம் காக்கத்தயார். பொதுவாக மரம் அமைதியைத்தான் விரும்புகிறது. ஆனால் காற்றுதான் அதை அப்படி விட்டுவைப்பதில்லை.

சரத்
: இந்த நாட்டாமையை மதிக்காம ஆளாளுக்கு ஏதேதோ பேசிட்டுப்போனா எப்பிடி? ஸ்ருதி, தனுஷ் நடந்தது என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?

செல்வா: சார், கமல் சார் சொன்னாரேங்குறதுக்காக ஒரு செட் புராபர்ட்டி மாதிரி பேசாம கம்முன்னு இருந்திங்கன்னா, மத்தியானம், காட்டாமைகறியோட லஞ்சும், வழிச்செலவுக்கு கொஞ்சம் பேட்டாவும் குடுத்து விடுவோம். ஆனா குறுக்க குறுக்க பேசுறதா இருந்தா, இப்பவே ஒழுங்கு மரியாதையா ஒரு கட்டை வண்டிய கட்டிக்கிட்டு, நீங்களும் மாடுகளும் காலாற நடந்து போயிடுங்க.

லஞ்சுக்கு ஆமைக்கறி என்றவுடன் நாக்கை சப்பியபடி சைலண்டாகிறார் சரத்.


இந்த கேப்பைப் பயன்படுத்தி  வயலண்டாக மாறும் தனுஷ்,’’ஏங்க இங்க எங்கதாங்க தப்பு நடக்கல. தப்புன்னா என்னங்க .சரின்னா என்னங்க? ஒரு பையனும் பொண்ணும் சேர்ந்து பழகுறது தப்புன்னா அந்த தப்பை நானும் ஸ்ருதியும் கண்டிப்பா பண்ணுவோங்க. ஸ்ருதி....ஸ்ருதி...ஸ்ருதி... தனுஷ்...தனுஷ்....தனுஷ்... தப்பு...தப்பு..தப்பு... (காதல் கொண்டேன் க்ளைமேக்ஸ் பாணியில் பேசி அனைவருக்கும் தனுஷ் ஜெர்க் கொடுக்க, பதறியபடி அவரை நோக்கி ஒடி வருகிறார் கஸ்தூரி ராஜா.)                                                                                                                                   
           [பஞ்சாயத்து இங்கே தொடருது,வாங்க போகலாம்....]

1.மெத்த வாங்குனேன்.. தூக்கத்த வாங்கலை.. டி.ஆரின் புதிய படம்

2.இதய பலஹீனமுள்ளவர்கள் இதைப்படிக்க வேண்டாம்...பவர் ஸ்டார் 

ஹலோ தமிழ் சினிமா...