Monday, March 12, 2012

ப்ளாக்’எழுதினா மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி ஆயிடுவ

அன்பு வலைஞர்களே வணக்கம்,

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு , தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியிடமிருந்து, மார்ச்12 முதல் 19 வரை தமிழ்மணத்தின் சிறப்பு விருந்தினராக உங்களை தேர்வு செய்திருக்கிறோம். கலந்து கொள்ள சம்மதமா ? என்ற கேள்வியுடன் ஒரு கடிதம் வந்தது.  ஒரே ஒரு நண்பனுக்கு மட்டும் போன் செய்து தகவலைச் சொன்னபோது, அவன் சொன்ன பதில்,

‘மெயிலை நல்லா செக் பண்ணிப்பாரு அட்ரஸ் மாத்தி  அனுப்பிச்சிருப்பாங்க’.

நாலு மாசத்துக்கு முந்தி வரை “ப்ளாக்’ன்னா கருப்புக்கலர்ல  இருக்குமான்னு கேட்டுக்கிட்டு திரிஞ்ச நாதாரிக்கு அதுக்குள்ள ‘சிறப்பு விருந்தினர்’ அழைப்பு விட்டுட்டு, கெடா வெட்டி இவருக்கு பிரியாணி வேற போட்டு அனுப்புவாங்கன்னு கனவு காண்றான்  பாருங்க’- இந்த ரெண்டாவது வரி கண்டிப்பாக அவனது மைண்ட் வாய்சாகக்கூட இருந்திருக்கும்.

அவன் அப்படி நினைப்பதிலும் தப்பில்லை. காரணம் ’பொண்ணு ஊருக்கு புதுசு’ மாதிரி, இந்தப்பையன் ப்ளாக் ‘ஏரியாவுக்கு புதுசு.
நான் இதற்கு முன் நடமாடிய எல்லா இடங்களிலும் கணிசமான எண்ணிக்கையில்  கணினிகள் இருந்தபோதிலும், அதை ஒரு தீண்டத்தகாத பொருளாகவே பாவித்தவன் நான்.


‘’இன்னொரு பத்து நிமிஷத்துல ஆபிஸுக்கு வந்துருவேன். பாஸ்வேர்டைத் தட்டி சிஸ்டத்தை ஆன் பண்ணி வையிங்க’ என்று யாராவது சொன்னால், ஏதோ என் சொத்தில் பங்கு கேட்ட மாதிரி அவ்வளவு கோபம் வரும் எனக்கு.

அப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்ட கதை பெருங்கதை என்பதால், அதை பிறகு பேசுவோம், சுருக்கமாக ஒரு வரியில் சொல்வதானால், கடந்த தீபாவளி அன்று பெய்த பதினாறு மணிநேர மழைதான் என்னை ஒரு ப்ளாக்கராக மாற்றியது என்று சொல்லவேண்டும்.

என்னங்க கிடந்து குழப்புறீங்க’?

இதுதான் என்னிடம் இருக்கும் சிக்கல். நான் எதைப்பற்றியாவது விளக்கப்போனால், அது உங்களை மேலும் கொஞ்சம் குழப்பமான இடத்தில் கொண்டு போய் நிறுத்தும்.

ஆனால் பெரியவங்க சொல்லியபடி பார்த்தால், குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும். ஐ மீன், நீங்க என்கிட்ட மீன் பிடிச்சி, ஃப்ரை பண்ணியோ குழம்பு வச்சோ சாப்பிடனுமுன்னா கொஞ்சம் குழம்பித்தான் ஆகனும்.
 
கடந்த நவம்பர் 21- தான் நான் முதல் பதிவு போட்ட நாள். பார்த்திபனோட வித்தகன்’ படம் பார்த்துட்டு,லேசா மரை கழண்ட ஒரு நேரத்துல என்னோட க’ வலைப்பயணம் துவங்கிச்சி.
ஆரம்பத்துல ‘ப்ளாக்கை’ படிக்க வக்கிறதுக்கு பக்கத்து வீட்டுப் பிள்ளைங்களான மாயா, அஸ்மிதாவுக்கெல்லாம் ஐஸ்கிரீம் வாங்கித்தந்த வகையில நிறைய செலவாச்சி. ’’ஒவ்வொரு மேட்டர் படிக்கிறதுக்கும் ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீம்  கேக்குறீங்களே, இது உங்களுக்கே அநியாயமாத்தெரியலையான்னு வடிவேலு மாதிரியே ‘அவ்வ்வுன்னு’ அழுதும் பாத்தேன்.


அந்த ஐஸ்நெஞ்சக்கார பிள்ளைங்க அசைஞ்சி குடுக்கிற மாதிரி தெரியலை.’’அங்கிள் எங்கள இப்படி கட்டாயப்படுத்தி படிக்க வைக்கிறதுக்கு கூட, இ.பி.கோ.வுல  ஏதாவது செக்‌ஷன் கண்டிப்பா இருக்கும். நாங்க வெறுமனே ஐஸ்கிரீமோட நிறுத்திட்டமேன்னு சந்தோஷப்படுங்க.’’

இப்படி எக்கலுக்கும் நக்கலுக்கும் ஆளாகி தான் ஏழெட்டு ஹிட்டுகளே வாங்க முடிந்தது.
எனது பிளாக்குக்கு ‘ஓஹோ புரடக்‌ஷன்ஸ் ‘ என்று சினிமாப் பெயர் வைத்திருந்தாலும், எனக்கு சகட்டுமேனிக்கு கவிதை வரும் என்பதால், நான்  இதில் ‘இலக்கியம்’ எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தேன்.

மேற்படி, இருவகையினரையும் பார்த்தபோது, மொள்ளமாரிகள் மற்றும் முடிச்சவிக்களின் எண்ணிக்கை, சினிமாவை விட  இலக்கிய ஏரியாவில் அதிகம் தென்பட்டதால்,சரி உடம்பில் கொஞ்சம் தெம்பு வரும்வரை சினிமாவே எழுதுவோம் என்று முடிவு பண்ணி இங்கே வந்தேன்.

 • ‘’ப்ளாக்’ குல 20 வரிக்கு மேல எழுதுனா யாரும் படிக்க மாட்டாங்க’’
 •  தகவல் சூடா இருந்தா போதும். ரைட்டிங் ஸ்டைல இன்னைக்கு எவனும் மதிக்கிறதில்ல’
 • தலைப்பு கவர்ச்சியா இருந்தா போதும், உள்ள சப்ப மேட்டர்கூட எழுதலாம்’
 • எப்பவுமே இடுகைகளைப் போடுறப்ப வாஸ்து பாத்துப் போடனும்’’-
 • ‘ப்ளாக்’ எழுதுற வேலையெல்லாம் வேணாம்.அப்புறம் நீ மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி ஆயிடுவ’
 • ‘சிலபேர் கனவுல வந்தெல்லாம் எழுப்பி,அப்புறம் நாளைக்கி என்ன எழுதப்போறன்னுல்லாம் கேப்பாங்க’

இப்படி ஆரம்ப  நாட்களில் சில குத்துமதிப்பான ஆலோசனைகள், எச்சரிக்கைகள் கிடைத்தன.

ஒரு மூன்று மாத முடிவில், ‘அண்ணே சினிமாவுல மவுத் டாக் கேள்விப்பட்டிருக்கேன். இப்ப உங்க ‘ஓஹோ புரடக்‌ஷன்ஸ்’ தான் மவுஸ் டாக்’ என்று ஒரு சக ப்ளாக்கர் பாராட்டி அலெக்‌ஷா ரேங்க்ல உங்க ப்ளாக் நிலவரம் படிங்க’ என்றபோது, அப்படி என்ற ஒன்று இருக்கிறதா? என்று பார்த்து,திரும்ப அவருக்கே போன் செய்து,

‘’என்னோட ப்ளாக் மதிப்பு 30ஆயிரம் யூ.எஸ். டாலர்கள்னு போட்டிருக்கே,அதை எதாவது சேட்டுக்கடையில வெறும் ஆயிரம் டாலருக்காவது அடமானம் வைக்கமுடியுமான்னு கேட்டப்ப, ‘ அடமானம் போகாது .உங்க மானம்தான் போகும்’ன்னு போனை வச்சவர் அதுக்கப்புறம் ஏன் என்கிட்ட பேசவேயில்லைன்னு இதுவரைக்கும் தெரியலை.

சரி அவர விடுங்க. ‘தமிழ்மணம்’ எனக்கு தந்திருக்க இந்த தங்கமான வாய்ப்பை,என்னால முடிஞ்ச வரைக்கும் சிறப்பா செய்ய விரும்புறேன்.

என்னோட தொழில்நுட்ப அறிவுகுறைவு காரணமா,இதுவரைக்கும் ப்ளாக் படிக்கிற உங்களோட முறையான தொடர்புல இல்லாம இருந்திருக்கேன்.இனியும் அது தொடர வேண்டாம்.

இந்த ஒரு வாரத்துல, கொஞ்சம் சினிமா,.. ஞ்சம் அனுபவம், ...சம் இசை,.....ம்  சமையல் குறிப்பு எழுதலாமுன்னு இருக்கேன்.அப்புறம்,  நீங்க ஒருவேளை விடுவிச்சிட்டா , என் சொத்து மொத்தத்தையும் உங்க பேருக்கே எழுதி வக்கிற மாதிரி ஒரு புதிரும் கைவசம் இருக்கு.அதை நாளைக்கு எழுதுறேன்.
 
வலைஞர்களே, அய்யா சாலமன் பாப்பையா சொன்னமாதிரி, வாங்க இந்த ஒரு வாரம் பழகிப்பாக்கலாம்.புடிச்சா உங்க வீட்டுப்பிள்ளையா நீங்க ஏத்துக்கோங்க. பிடிக்காட்டிஉங்க வீட்டு  பின்வாசல்வழியா  நானே சுவரேறி வந்திடுறேன்.

 ஆக, இனி, எப்பிடிப்பாத்தாலும் நான் உங்க வீட்டுத்தொல்லைதான்.

32 comments:

 1. வாங்க, இந்த வாரம் பூரா வழக்கம் போலவே கலக்குங்க

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கு நன்றி கண்ணன்

   Delete
 2. Replies
  1. அண்ணே உங்கள சந்திச்சி அநேக நாளாச்சி.?

   Delete
 3. வாழ்த்துக்கள் பாஸ்.. இது வரைக்கும் நான் உங்க ப்ளாக் பக்கம் வந்தது கிடையாது. முத முறைய வரேன். உங்க இந்த பதிவை படிக்கும் போது நீங்க ரொம்ப எதார்த்தமா பேச்சு தமிழ்ல எழுதுற ஆளு மாதிரி தெரியுது. எனக்கு உங்களை மாதிரி எழுத்துகள் தான் பிடிக்கும்... தொடர்ந்து சந்திப்போம்.
  உங்க எழுத்துகளால் தமிழ் ப்ளாக் உலகத்தை கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ். எனக்கு பல வழிகளிலும் தேனி’னும் இனிமையானது உங்க ஊர்...

   Delete
 4. நட்சத்திர வார வாழ்த்துகளும் & belated welcome to blogosphere...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாத்தியாரே, நன்றி நன்றி நண்பரே.

   Delete
 5. பொதுவா நான் அதிகம் ப்ளாக் படிக்கறதும் கிடையாது; அப்படியே அரிதா படிச்சாலும் மறுமொழி எழுத தோன்றியது கிடையாது. இப்போ நீங்க விதிவிலக்கா இருக்கீங்க. வழக்கமான வழவழ அல்லது வறட்டு நடைகளையே ப்ளாக் எழுத்துக்களா படிச்சிட்டு இருந்த அனுபவம் உங்களுடைய சுவாரசியமான அங்கதம் கலந்த நடையினால் மாறியிருக்கு. அதுக்கு உங்க தொழில்முறை அனுபவம் காரணமாக இருக்கலாம். காரணத்தை விட நீங்கள் தொடர்ந்து எழுதி வர வேண்டியதுதான் அவசியம். ப்ளாக் வாழ்க்கை ஆரம்பத்தில் ஆர்வம் தரக்கூடியதாகவும், போகப்போக அலுப்பூட்டுவதாகவும் இருக்கும். உங்களுக்கு அப்படி ஆகாம இருக்க வாழ்த்துகள்! சிறப்பு விருந்தினரா கலக்குங்க.

  ReplyDelete
 6. சரியா சொன்னீங்க. ஆரம்பத்துல இருந்த ஆர்வத்தை விட இப்ப குறைவு தான். ஆனா நண்பர்கள் தொடர்ந்து எழுதத்தூண்டிக்கிட்டே இருக்காங்க. நன்றி தோழர்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் அண்ணே!

  நான் உங்கள் பிளாக்கின் தீவிர வாசகன்!!

  ReplyDelete
 8. ஆஹா! ஓஹோ...அற்புதமான நடை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாழ்த்துகள்

  ReplyDelete
 10. நட்சத்திரமே! 'ஓஹோ'ன்னு இருக்கு ஆ'ரம்ப'ப் பதிவு:-)))))))))))))))

  கலக்கறீங்க!!!! இதுநாள் வரை உங்களைத் தெரிஞ்சுக்கலையேன்னு இருக்கு:(

  இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
  Replies
  1. இனிமே, ஏண்டா இவரத்தெரிஞ்சிக்கிட்டோமுன்னு ஆகப்போகுதான்னு பாருங்க.

   Delete
 11. நட்சத்திர வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. உங்க பதிவு படிக்கிற மாதிரி இல்லை....ஹஹஹ நீங்க எங்க கூட பேசர மாதிரியே இருக்கு...!நல்ல பதிவு என்பதை விட நல்ல சிரிப்பு நண்பர் என்று சொல்லலாம்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்குமார் தோழர்.

   Delete
 13. நீ கலக்கு தலைவா..நான் உன்னோட மிகப்பெரிய ரசிகன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தலைவா.எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம்?

   Delete
 14. Replies
  1. இப்பவாவது அந்த புத்தகங்களைக்கொடுக்கலாமே?

   Delete
 15. படித்தேன்!
  ருசித்தேன்!!
  ரசித்தேன்!!!

  தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!

  -----------------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

  ReplyDelete
  Replies
  1. நானும் தறு தலைவணங்குகிறேன்.நன்றி.

   Delete