Wednesday, November 14, 2012

விமர்சனம் ‘போடா போடி’ பாத்துட்டு போய்ச்சேர வேண்டிய இடம் ஏர்வாடி








என்னது சிவாஜி செத்துட்டாரா மாதிரியே, என்னதுபோடா போடிகதை லீக் ஆயிடிச்சா? என்று சிம்பு சமீபத்தில் ஷாக்கானது எவ்வளவு பெரிய நடிப்பு, அதற்கு எத்தனை ஆஸ்கார் கொடுக்கலாம் என்பது படத்தை பார்க்கநேரும் பரிதாப ஜீவன்களுக்கு மட்டுமே புரியும்.

பின்ன என்னங்க,கதைன்னு ஒண்ணே படத்துல இல்லாதப்ப, அது எப்பிடிங்க லீக் ஆக முடியும்? அந்த விஷயம் தெரிஞ்சிக்கிட்டே ஷாக் எக்ஸ்பிரசன் குடுக்கிறதுக்கு சிம்புவுக்கு எவ்வளவு தில்லு வேணும்?

வெளிநாட்டுல வசிக்கிற சிம்புவும், வரலட்சுமியும் முதல் சந்திப்பிலேயே, ‘கத்திரிக்கா கிலோ என்ன விலைன்னு கேக்குற மாதிரியே, ‘ நீ என்னைக் காதலிக்கிறியா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு லவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்திலேயேபோடா போடின்னு பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே பிரிஞ்சிடுறாங்க. பழைய படி சேர்ந்துக்கிறாங்க. கட்டிக்கிறாங்க. பிள்ளை ஒண்ணு பெத்துக்கிறாங்க.

பாலே டான்சரான வரலட்சுமி, கல்யாணத்துக்கு அப்புறமும் கண்ட ஆம்பிளைங்க கட்டிப்புடிக்க டான்ஸ் ஆடுறது, சிம்புவுக்குப் புடிக்கலை. தான் டான்ஸ் ஆடுறது புடிக்கலைன்னு சொல்ற சிம்புவை வரலட்சுமிக்கு புடிக்கலை. அவிங்க ரெண்டு பேருமே ஆடுற அழுகுணி ஆட்டம் புடிக்கலைங்கிறதால என்ன ஆனாய்ங்கன்னு நான் எழுதி முடிக்கலை.

இது ஒரு கதையாம். இதை தங்களோட வாழ்க்கையில நடந்த ஏழு எபிசோடுகளா பிரிச்சி சிம்புவும் வரலட்சுமியும் சொல்ல ஆரம்பிக்கிறப்பவே, ஏழரை நாட்டுச்சனியன் நம்ம மேல ஏறி உட்கார்ந்துர ஆரம்பிச்சிடுது.

அச்சன் பெருந்தச்சன் டி. ஆர். பாணியிலேயே பாடலை இயற்றி, பாடி, ஆடி நம்மை ஏறத்தாழ ஒரு டெட்பாடி ஆக்குகிறார் இழைய சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். ‘ங்கொய்யால பேசாம ஏதாவது ஒரு ட்ரெயின்ல டி.டி.ஆரா வேலைக்குச் சேர்ந்திருந்தா தமிழனுக எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாய்ங்க’ என்று உள்மனசு கல்மனசாய் மாறுகிறது.

சரத்குமாரின் வாரிசு வரலட்சுமி கவர்ச்சிகரலட்சுமியாக கவனம் ஈர்க்கிறார். கிளைமாக்ஸை ஒட்டியுள்ள குத்துப்பாடலில் இவரது கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்தால் நமீதாவின் நாலுநாள் தூக்கம் கெடுவது உறுதி.

ஒரு புதுமுகமாக, வரலட்சுமி ஆர்வக்கோளாறில் தானே டப்பிங் பேச ஆசைப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கம்பீரமான அவர் குரலைக் கேட்டபிறகாவது மனித வதைச்சட்டத்தின் கீழ் அதை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டாமா? அட என்னமோ போங்க, நம்ம தமிழ் சினிமாவுல மிருக வதைகளுக்கு எதிரா இருக்கிற அளவுக்கு மனித வதைகளுக்கு எதிரா சட்டங்கள் இருக்கிறதா எனக்குத்தெரியலை.

படத்துல இவங்க ரெண்டு பேரைத் தாண்டின ரொம்ப முக்கியமான விஷயம் எசை. அனிருத் மாதிரியே அரை கிலோ எலும்பும் முக்கால் கிலோ கறியோட அலையிற தரண் குமார்தான் மியூசிக் பண்ணியிருக்கார். சகிக்கலை. காதுக்கு கால் செண்டி மீட்டர் தூரத்துல ஒரு ஏழெட்டுக் கழுதைகளை கட்டிப்போட்டு கத்தவிட்டா எப்பிடி இருக்குமோ அப்படி ஒரு எஃபெக்ட்ல இருக்கு ஒவ்வொரு பாட்டும். இது போதாதுன்னுஅப்பன் மவனே, டண்டணக்கா, டமுக்கணக்கா,ங்கொக்காமக்காஎன்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய வரிகள் வேறு.

  ஒரு ரெண்டுமணிநேரம் இவர்கள் பஞ்சாயத்தைப் பார்த்து முடித்தவுடன், என்னையும் அறியாமல் ஏர்வாடியை நோக்கி பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். உங்க சவுகரியம் எப்படி?

5 comments:

  1. படம் அவ்லொ மொக்கயா?

    ReplyDelete
  2. அவ்லோ மொக்கையில்ல, அவ்வளவும் மொக்கை

    ReplyDelete
  3. படம் கெடக்கட்டும்ங்க..
    உங்க விமர்சனம் படிச்சுட்டு ஸ்டான்லியில் அடிமிட் ஆனவங்க கூட்டம் வராண்டா வரையில் இருக்குதாமே.. வயிற்று வலின்னு.

    கொஞ்சமாவா சிரிக்க வைக்கிறீங்க...

    நல்ல நகைச்சுவைப் பதிவு. படம் பத்தி அந்த மொகரங்கள... பாத்தாவே தெரியுதே..

    ReplyDelete
  4. இப்போ தான் படிச்சேன். செமையா சிரிச்சேன். ஆமா இந்த சினிமா காரங்க கேஸ் போட மாட்டாங்களா ? எப்படி தைரியமா இப்படி எழுதுறீங்க ??

    ReplyDelete
  5. சினிமா எடுத்து போரடிக்கிற நேரங்கள்ல நாங்களும் சிம்புவும் இப்பிடி சில ‘டிராமாக்கள்’ போடுவோம். படிச்சி எஞ்சாய் பண்ணுங்க அவ்வளவுதான்,...

    ReplyDelete