‘சிநேகாவின் காதலர்கள்’ படம் இயக்குவது
சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டவுடன், இணைய நண்பர்கள்
காட்டிய ஆதரவு ஒருவகையில் என்னைப் புல்லரிக்க வைத்தது என்றே சொல்வேன்.
இதற்கு முந்தைய எனது பதிவுகளில் ‘என்னை அழ
வைத்த தல’ என்ற அஜீத் தொடர்பான பதிவுக்கு அடுத்த படியாக, இசைஞானி
குறித்து நான் எழுதியிருந்த, ‘ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்’ பதிவுக்குத்தான்
நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்திருந்தன. அதில் எனக்கு
உடன்பாடற்ற, ரகுமான் வெறியர்களாயிருக்குமோ என்று சந்தேகித்த, சில கடிதங்களை
மட்டும் பிரசுரிக்காமல் விட்டிருந்தேன். அந்த இரண்டு பதிவுகளுக்கு
அடுத்த படியாக, பட அறிவிப்புக்கு, என்னை மனதார
வாழ்த்தி வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கடிதங்களில், ஒன்றைக்
கூட, ஒரு உள்நோக்கம் கருதி, இங்கே வெளியிடவில்லை.
‘அதென்னய்யா உள்நோக்கம்?
எல்லாம் பட ரிலீஸ் டைம்ல ’சும்மா ஒரு வெளம்பரத்துக்காக
பாஸ்’.
‘சரி மெயின் மேட்டருக்கு வாங்க’.
‘ராஜாவின் பாடல்களில் ‘அவள் அப்படித்தான்’-ல் மிக
எளிய இசையில், மனதை கனமாக மீட்டும், ‘உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை,..
ஒரு கதை என்றும் முடியலாம்,.. முடிவிலும் ஒன்று
தொடரலாம்’ அடிக்கடி நான் கேட்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பாட்டு.
மும்பையில் இரண்டு ஆண்டுகள் ஒரு தின இதழில் பணியாற்றி விட்டு, நான் சென்னைக்கு
வந்த ஆண்டு அநேகமாக 1988. ஆக இது ஒரு வகையில் வெள்ளிவிழா ஆண்டு என்றே கொள்ளலாம்.
![]() |
’கல்லிலே ‘கலை’ வண்ணம் கண்டார்- கலைக்கோட்டுதயம் |
இந்த 25 ஆண்டுகளில் பத்திரிகை உலகிலும், சினிமா
உலகிலும், ஒரே ஒரு வேலையைத்தவிர, நான் செய்யாத
வேலைகளே இல்லை என்று சொல்லலாம். ‘நக்கீரன்’ 5 வது இதழில் நிருபராக
வேலைக்குச் சேர்ந்ததில் துவங்கி, தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளது வரை, நான் சந்தித்த
அனுபவங்கள் மனிதர்கள், உத்தமர்கள், மத்திமர்கள், கடையர்கள் என லிஸ்ட் பல ஆயிரங்களைத் தாண்டும்.
[அதை ஒழுங்காக உட்கார்ந்து எழுதினாலே புக்கர் பரிசு என் அபார்ட்மெண்ட்ஸ்
கதவைத்தட்டும். ஆனால் பாவம் சாரு, அவரு சபலப்பட்ட ‘சரக்கை’ நாம வாங்கி நக்க ஆசைப்படலாமா?]
இவர்களில் எனக்கு நண்பர்களே அதிகம். நண்பர்களால்
ஆனவன் நான் என்று கூட என்னைச் சொல்லலாம். அந்தக் கதைகளை அப்புறம்
பாக்கலாம்.
இனியும் கிளைக்கதைகளுக்குப் போகாமல் நேரடியாக நடப்பு கதைக்குள்
வந்து விடுகிறேன்.
பெரிய பெரிய மனிதர்களிடம் பெரிய பெரிய வேலைகளெல்லாம் பார்த்தேனே
ஒழிய, சினிமாவில் நான் ஒரு குறிப்பிட்ட முகத்தோடு பயணிக்கத் தவறிவிட்டேன்.
பாடல் ஆசிரியராக மாறி, பேசாமல் பேட்டாவும், செகண்ட் கிளாஸ் ட்ரெயின் டிக்கெட்டும் கொடுத்து வைரமுத்துவை வடுகபட்டிக்கே பேக்-அப் பண்ணி விடலாமா என்று யோசிப்பேன். அடுத்து உடனே, ‘அப்ப கபிலனும், கார்க்கியும் எப்பிடி கஞ்சி குடிப்பாய்ங்க? என்ற அநாவசிய கவலை வந்தவுடன் அத்திட்டத்தை அடியோடு கைவிடுவேன்.
திடீரென்று உதவி இயக்குனராக இருப்பேன். அடுத்த
சில மாதங்களில், புரடக்ஷன் மேனேஜராக ஆக்கப்பட்டிருப்பேன். இன்னும்
கொஞ்ச நாள் கழித்து நடிகரின் மேனேஜராக ஆகியிருந்தேன். [நம்ம சிநேகாவும்
கூட என்னை விட்டுவைக்கலை. அவங்களும் கொஞ்சநாள் என்னை வச்சிருந்தாங்க மேனேஜரா ].
நானே நன்றாக
[?] எழுதுவேன் என்பதைத் தெரிந்துகொண்டே ‘மொக்கை’ எழுத்தானளுகெல்லாம்
என் கையாலாயே அட்வான்ஸ் கொடுத்து வஜனம் எழுத வைத்த இயக்குனர்களிடமும் குப்பை கொட்டினேன்.
உதவி இயக்குனராக வேலை பார்த்துவிட்டு, மீண்டும்
வேறுவழியின்றி ‘குமுதம்’ சினிமா நிருபராகி
பேட்டி எடுக்கப்போனபோது, அஜீத், சத்யராஜ் சார், விஜயசாந்தி மேடம்
உட்பட, என்னை உதவி இயக்குனராகப் பார்த்த பலரும் என்னைக் குழப்பத்துடன்
பார்த்தார்கள். நமது ’பழைய தொழில்’ அது என்று அவர்களுக்குத்
தெரியாததால் அடைந்த குழப்பம் அது.
இயக்குனர் ஆசை துறந்து, அங்கே மூன்றரை
ஆண்டுகள், சினிமா நிருபராக குப்பைகள் கொட்டிய காலம் மிகக் கொடூரமானது. இதுக்குப்
பதில் துபாயில ஒட்டகம் மேச்சி பொழைக்கிறது பெட்டரோ என்று நான் பல சமயங்களில் எண்ணியதுண்டு. அந்தப்
பத்திரிகை நிருபராக சினிமாக்காரர்களிடம் கிடைத்த மரியாதையை நான் ஒருபோதும் விரும்பியதே
இல்லை.
குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த பால் பவுடரை பணயம் வைத்து
ஆடிய ராஜ்கிரணே வெட்கித்தலை குனியும் அளவுக்கு, வேலை போக
ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் சீட்டாட்டம் கொடிகட்டிப் பறந்தது.
அன்பின் மிகுதியால் ’சினிமா
முயற்சி என்னாச்சி?’ என்று கேட்ட நண்பர்களுக்கு நான் அளித்து வந்த மொன்னையான பதில்,..’
புலி பதுங்கிக்கிட்டிருக்கு’…
‘புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பது கொஞ்சநாட்களுக்கு
ஓக்கே. ஆனால் அதுவே நீண்டகாலம் என்றால், பதுங்கி
இருந்த இடத்தின் பள்ளம் பெரிதாகி, ஒரு கட்டத்தில் சொந்தக்காலில் எழுந்து நிற்பதற்கான எனர்ஜி
கூட இல்லாமல் பலிகடா ஆகிப்போவதுதானே
சாஸ்வதம்?.
அப்படித்தான் ஆகிப்போயிருந்தேன் நான்.
ஆனால் வாழ்க்கை, எப்போதும்
தனது உள்ளங்கைக்குள், அடுத்த நொடிகளின் ரகஸியங்களை ஒளித்து வைத்தபடியேதான் நம்மை
பயணிக்க வைக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள்… வழக்கம்
போல ஒரு சிறிய பண நெருக்கடி,..
தமிழன் தொலைக்காட்சி உரிமையாளரும், எனது 25ஆண்டு
கால நண்பருமான கலைக்கோட்டுதயத்திற்கு போன் போட்டேன்.
[ நோ வெயிட்டிங் பிசினஸ்,.. 48 மணி நேரத்துல
தொடருவேன்]
Looks almost like my story except in a different field.
ReplyDeleteGoodluck with the new venture
-Surya
thank u surya. it's all in the game.
ReplyDelete//அதை ஒழுங்காக உட்கார்ந்து எழுதினாலே புக்கர் பரிசு என் அபார்ட்மெண்ட்ஸ் கதவைத்தட்டும். ஆனால் பாவம் சாரு, அவரு சபலப்பட்ட ‘சரக்கை’ நாம வாங்கி நக்க ஆசைப்படலாமா?// சாருவை பத்தி கவலைய விட்டுட்டு அதை முதல்ல எழுதுங்க பாஸ்.. ஏன்னா உங்க எழுத்து நடை மட்டுமில்ல நீங்க அரைகுறையா சொன்ன சில சம்பவங்களே பயங்கர சுவாரஸ்யமா இருந்தது.
ReplyDeleteநன்றி தமிழ். நான் இலக்கிய ரீதியா எழுத ஆரம்பிச்சா நாடு தாங்காது. அப்பிடி எதாவது விபரீதம் நடந்தே தீரனுமுன்னா??/
Deletei am waiting! (thuppakki vijai style la padinga) :-p
ReplyDeleteசரிங்ணா,..
Deleteமீதிக்காக வெய்ட்டிங்.
ReplyDeleteஇருப்பினும் அதுக்கு முன்னால ... வாழ்த்துகள் .
நன்றி தருமியாரே,...
Deleteவாழ்த்துக்கள் அண்ணே. மீதிக்காக வெய்ட்டிங்.
ReplyDeleteநன்றி. 48 மணி நேரத்துல 24 மணி நேரம்தான ஆயிருக்கு?
Deleteஎல்லாம் சரி. தலைப்பு ஏன் இப்படி வைத்தீர்கள்? தெரிந்துகொள்ளலாமா?
ReplyDeleteச்சும்மா,..
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி மித்ரன்,.....
Delete48 Hours Over !!!
ReplyDeleteOver Calling !
Over Calling!
Director .
இன்னும் சில மணிநேரங்களில் கமிங் கமிங்
Delete