Saturday, May 4, 2013

'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்?

படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம், அந்த வாசகங்கள், பரிதாபத்துக்குரிய சினிமா பத்திரிகை நிருபர்களாகிய எங்களுக்காக எழுதப்பட்டது போலவே எனக்குத் தோன்றும்.
நாங்க  தினந்தோறும் 50 நோயாளிகளைப் பாக்குறோம். மாசத்துக்கு ஆயிரத்துக்கும் மேல’. நாங்க தினந்தோறும் ஒரு படத்தையாவது பாத்துர்றோம். மாசத்துக்கு 25க்கும் மேல.
அதுல பெரும்பாலான படங்கள்ல தம் அடிக்கிற காட்சியும் தண்ணி அடிக்கிற காட்சியுமா வச்சி எங்கள சகலவிதமான சபலத்துக்கும் ஆளாக்குவாங்க.
சினிமா கொடியது. அதிலும் தமிழ் சினிமா மிகவும் கொடியது.
அதை இன்றே விட்டு விடுங்கள்.
இப்படி பொருத்திப்பாருங்க. எல்லா டயலாக்கும் கனகச்சிதமா எங்களுக்குன்னே எழுதினமாதிரி பொருந்தும்.
 என்ன செய்யிறது, விதி வலியது?
பதிவுகள் எழுதுறதுல முதல் வருஷம் காட்டுன அக்கறை எங்கே போச்சி? அதுலயும், கொஞ்ச நாளாவே படங்களுக்கு விமர்சனங்கள் எழுதிட்டு வர்றதையும் குறைச்சிட்டு வர்றீங்களே?
ஒண்ணு, யாராவது வீட்டுக்கு ஆட்டோ அனுப்பியிருக்கனும். இல்லைன்னா,? இல்லைன்னா??
ஆமாண்ணா அதேதான்.  சினிமா சரித்திரத்துல டாக்டர்கள் அதிகமா பேசுன வசன பாணியிலயே சொல்லனும்னா இட்ஸ் எ சினிமா மிரக்கிள்’. அந்த மிரக்கிளை நிகழ்த்தி என்னை நெகிழ வச்ச தயாரிப்பாளர் பத்தியும், இன்னும் எக்கச்சக்க சமாச்சாரங்களும் தொடர்ந்து எழுத ஆரம்பிக்கிறேன். ஸோ ப்ளீஸ் ஸ்டே TUNED.
இனி நம்ம ‘ஓஹோபுரடக்‌ஷன்ஸ்’ பழையபடி ஓஹோன்னு வர்றதுக்கான சமாச்சாரங்கள் நிறைய இருக்கு.

நம்மஓஹோவை ஒரு காலத்துல, அதாவது நான் தொடர்ந்து ஒழுங்கா எழுதிக்கிட்டு வந்த காலத்துல, தினமும் குறைஞ்ச பட்சம்  ஒரு ரெண்டாயிரம் பேராவது, பின் தொடர்ந்து வந்தீங்க. அந்த நட்பு வட்டத்தை தொடர்ந்து எழுதாம கொஞ்சம் கொஞ்சமா இழந்தேன். அடிப்படை வருமானத்துக்கே பின்னங்கால் பிடறியில் பட ஓடி உழைக்க வேண்டிய நெருக்கடிகளால, தொடர்ந்து எழுத முடியாத சூழல்.

சோம்பேறித்தனத்தால எழுதாம இருக்கிறதா நினைச்சி, அன்பின் மிகுதியால, என்னைத் திட்டித்தீர்த்த நண்பர்களுக்கு, என்ன சொல்லுவேன்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் தர்மமே வெல்லும்?
 அது எப்படா வெல்லும், எண்ட் கார்டு போட்டு, இடுகாட்டுக்கு கிளம்புவமே அப்பவான்னு பல சமயங்கள்ல நினைக்கிறது உண்டு.
பட், சில படங்கள் செகண்ட் ஆஃப் நல்லாருக்குமே? அது மாதிரி, நம்ம வாழ்க்கையிலயும் ஒரு நல்ல விசயம் நடந்திருக்கு.

ஆக்சுவலா வர்ற பத்தாம் தேதிக்கு மேலதான் இது சம்பந்தமா எழுத ஆரம்பிச்சி, அப்பிடியே பட ரிலீஸ் வரைக்கும் தொடரலாமுன்னு நினைச்சேன்

லஞ்ச் முடிஞ்சி ஆபிஸ் திரும்புற வழியில, அண்ணாச்சி கருணாஸை சந்திச்சி ரொம்ப நாளாச்சின்னு ஒரு ரெண்டு மணிநேர மீட்டிங் போட்டுத்திரும்பினா ‘soundcameraaction.com’  ஜெய்லானி சார் கிட்டருந்து போன்.
 ‘சார் படத்துக்கு பப்ளிசிட்டியை ஆரம்பிச்சிட்டீங்க போலருக்கு?’ 

எனக்கு முதல்ல எதுவும் வெளங்கலை. ’ஃபேஸ்புக்கை ஓப்பன் பண்ணிப் பாருங்க தெரியும்னு சொல்லி போனை வச்சிட்டார்.

அட ஆண்டவா.
அண்ணன் மூத்த பத்திரிக்கையாளர் சிவராமன் தன்னோட பக்கத்துல ‘ இயக்குனர் முத்துராமலிங்கனுக்கு வாழ்த்துக்கள்’ன்னு தலைப்பிட்டு, ஓவர் பாசத்துல ஒரு பதிவு போட்டிருந்தார்.
[‘நீ படம் இயக்குற தகவலை ஃபேஸ்புக்குல பாத்துதான் தெரிஞ்சிக்கனுமான்னு சில நண்பர்கள் செல்போன் மூலமாவே செவிட்டுல அறைஞ்சாய்ங்க’]

சிவராமன் பதிவு, ஸாரி கொஞ்சம் ஓவர்ன்னாலும்,
அதை அப்படியே இங்கே தந்திருக்கேன். இதில் சில திருத்தங்கள் இருக்கு. அதைப்பற்றி அப்பால பேசலாம்.


இயக்குநர் முத்துராமலிங்கனுக்கு வாழ்த்துகள்

by கே. என். சிவராமன் (Notes) on Friday, May 3, 2013 at 4:07pm
நன்றாக நினைவில் இருக்கிறது. எம்ஜிஆர் காலமாகி, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்த நேரம். ஏறக்குறைய 'நக்கீரன்' வார இதழும் அப்போதுதான் துளிர்விட்டிருந்தது. நிச்சயம் அதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்ற ஜா - ஜெ அணியினர் முயல்வார்கள் என அப்போது 'நக்கீரன்' ஆசிரியராக இருந்த துரையும், கோபால் அண்ணாச்சியும் கணக்கு போட்டார்கள். இதை எப்படியாவது படம் பிடிக்க வேண்டும்... என்ன செய்யலாம்..? யோசித்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்திரிகையே அப்போதுதான் அரும்புவிட தொடங்கியிருந்தது. வேலைப் பார்த்த அனைவரும் எல்லா பணிகளையும் செய்து வந்தார்கள்.

இந்த நேரத்தில்தான் அந்த இளைஞர் முன் வந்தார். புகைப்படங்களை எடுப்பது அவருக்கு பிடித்த விஷயம். கையில் இருந்ததோ டப்பா கேமராதான். என்றாலும், படங்களை, தான் எடுப்பதாக துரையிடமும், அண்ணாச்சியிடமும் உறுதியளித்தார்.

கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் என்று நினைக்கிறேன். அதிமுக அலுவலக கட்டடத்துக்கு எதிரில் இருந்த கட்டடத்தின் மாடியில் பழியாய் கிடந்தார். கட்சி அலுவலகத்தை கைப்பற்ற யாரும் வரவில்லை. அதற்காக அந்த இளைஞர் பின் வாங்கவும் இல்லை. அதே இடத்தில் இரவு, பகல் பாராமல் அப்படியே இருந்தார்.

எதிர்பார்த்தது போலவே ஒருநாள் ஜா - ஜெ அணியினர், கட்சி அலுவலகத்தை கைப்பற்ற வந்தார்கள். அப்போது நடைப்பெற்ற கலவரத்தின் ஒவ்வொரு நொடியையும் அந்த இளைஞரின் கேமரா படம் பிடித்தது. மற்ற பத்திரிகைகளுக்கு செய்தி கிடைத்து அவர்கள் வந்து சேருவதற்குள் அந்த இளைஞர் கிட்டத்தட்ட 200 படங்களை எடுத்திருந்தார்.

அந்தப் படங்கள்தான் அடுத்து வந்த 'நக்கீரன்' இதழை முழுமையாக அலங்கரித்தன. அந்த இதழிலிருந்துதான் 'நக்கீரன்' இதழின் விற்பனையும் அதிகரித்தது.

அந்த துடிப்புமிக்க இளைஞர், வேறு யாருமல்ல அண்ணன் முத்துராமலிங்கம்தான்.


தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த அவர், உதவி இயக்குநராக, பத்திரிகையாளராக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை அதிபராக இருந்திருக்கிறார். கைக் காசை செலவழித்து 'ஹலோ சினிமா' என்ற திரைப்பட மாத இதழை நடத்தியிருக்கிறார். அரசியல் வார இதழாக 'சத்ரியன்' இதழை கொண்டு வந்திருக்கிறார்.

நக்கல், நையாண்டியுடன் சினிமா விமர்சனங்களை எழுதுவதில் அண்ணன் கில்லாடி. 'ரமணா' வெளிவந்த நேரம். 'ஹலோ சினிமா'வில் விமர்சனம் வந்தது. அதில் இடம்பெற்ற கடைசிப் பத்தி இப்படி இருந்தது:

'
விஆர்எஸ் வாங்கும் நிலையில் இருக்கும் விஜய்காந்தை மேலும் பத்து தோல்விப் படங்களை கொடுக்கும் அளவுக்கு தெம்பாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்'.  

அண்ணனுடன் இணைந்து 'குமுதம்' வார இதழில் பணிபுரிந்திருக்கிறேன். 'பிதாமகன்' உருவாகி வந்த நேரம் அது. இதழாசிரியராக இருந்த என்னிடம் ஒரு சினிமா கட்டுரையை கொடுத்தார். அந்தக் கட்டுரைக்கு அவர் வைத்திருந்த தலைப்பு, 'பாலா லைலா காதலா'.

இதுதான் அண்ணன். தலைப்பு வைப்பதிலும், செய்திக் கட்டுரைகளுக்கு பன்ச் கொடுப்பதிலும் மனிதர் கில்லாடி.

தன்மானமும், சுய மரியாதையும் அண்ணனுடன் பிறந்தவை. அதனாலேயே எந்த பத்திரிகையிலும் அதிக நாட்கள் அவர் பணிபுரிந்ததில்லை. வாழ்க்கையில் எதிரிகளால் பட்ட காயங்களைவிட நண்பர்களால்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவரது முதுகில் குத்தியவர்களின் எண்ணிக்கையை எண்ணுவதும், கடற்கரை மணலை எண்ணுவதும் ஒன்றுதான்.

அவர் சந்தித்த அவமானங்களையும், நண்பர்களால் இழந்த பணத்தையும் கணக்குப் போட்டால், நாடு தாங்காது.

ஆனால், ஃபீனிக்ஸ் பறவையாக ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நிற்கிறார் பாருங்கள்... அதுதான் அவரை தனித்துக் காட்டுகிறது.

http://ohoproduction.blogspot.com/ , http://www.hellotamilcinema.com/
ஆகிய வலைத்தளங்களை நடத்தி வரும் அவர், இப்போது முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

வரும் ஜுன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. 'சிநேகாவின் காதலர்கள்' என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

படப்பிடிப்பு தொடங்கியதும் அண்ணனின் விரிவான பேட்டியை பத்திரிகையில் வெளியிடும் எண்ணம் இருக்கிறது. இது வெறும் அட்வான்ஸ் வாழ்த்துதான் ;-)Top of Form
Jeevasundari Balan வாழ்த்துக்கள் முத்துராமலிங்கன்.....
Yuva Krishna வாழ்த்துகள் முத்தண்ணே!

நக்கீரனில் ஒரு கட்டுரைக்கு அண்ணன் வைத்த தலைப்பு என்று யாரோ சொன்னார்கள். ஒரு பாதிரியார் அஜால்குஜாலில் மாட்டிக்கொண்டபோது, அக்கட்டுரைக்கு வைத்த தலைப்புஅப்பா ஆகிறார் ஃபாதர்
Athisha Vino ஐ நோ திஸ் மேன்.. அன்ட் ஐ லவ் திஸ் மேன்
Velmurugan Ganapathy வாழ்த்துக்கள் சார்!
முருகேஷ் பாபு வாழ்த்துகள்!
கோவி. லெனின் அண்ணனுக்கு வாழ்த்துகள்...
Avadi Suresh Kumar Best Wishes Nuthu Anna !!
Muthu Ramalingam அந்த சிவராமன் அண்ணனிடம் சேதி சொல்லடி. அதை ஃபேஸ்புக்கில் இப்ப ஷேர் பண்ணவேணாமேன்னு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
Athisha Vino படத்தின் பெயர் சினேகாவின் காதல்கள் இல்ல..

சினேகாவின் காதலர்கள்!
Muthu Ramalingam சிவராமன் உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லையா?
Muralikannan Rengarajan வாழ்த்துகள் முத்தண்ணே!
Muthu Ramalingam நன்றி உரையை நாளைக்கு ஓஹோவுல எழுதலாமுன்னு இருக்கேன்
கே. என். சிவராமன் நன்றி Athisha Vino மாற்றிவிட்டேன்
கே. என். சிவராமன் Muthu Ramalingam அண்ணே, இப்பத்தான் இந்த மகிழ்ச்சியை கொண்டாடணும். உங்களோட ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானதுணே... நீங்க ஜெயிக்கப் பிறந்தவர்...
Selvam Marimuthu ஐ டோண்ட் நோ திஸ் மேன்.. ப‌ட் ஐ லவ் திஸ் மேன்
Alfred Thiagarajan நீண்ட காலம் எதிர்பார்த்த ஒன்று , தம்பி முத்து லேட்டா வந்தாலும் >>>>>>>>>>>>>>>
நந்தன் ஸ்ரீதரன் காலையில்தான் அண்ணன் என்னிடம் தகவல் சொன்னார்.. வாழ்த்துகளையும் சொல்லிவிட்டேன்..
Ramesh Vaidya ஆஹா.... வாழ்த்துகள் வாழ்த்துகள் முத்துஜீ..!
மணி ஜி வாழ்த்துக்கள்.
Ravithambi Ponnan வாழ்த்துகள் பல.
Jeyapaul Prakash pirakashikkapoohuthu intha muthu...... vazhthukkal mrlingam.... i heard one month back , the story discussion was done in a place where no mobile tower is available at madurai
Nellai Raj கிராமத்து நையாண்டியும் கேலியும் கிண்டலும் அவருக்கு கைவந்த கலை... வாழ்த்துக்கள் மிஸ்டர் முத்துராமலிங்கம்...நீங்க எப்பவுமே ச்க்சஸ் மேன் தான்!
Sakthi Vel வாழ்த்துகள் அண்ணே...
Saravanan Savadamuthu வாழ்த்துகள்ண்ணே..!
Bottom of Form


12 comments:

 1. அவங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே, விடமாடீன்களா

  ReplyDelete
 2. யாரைப்பத்தி சொல்றீங்ணா?

  ReplyDelete
 3. சார்


  இந்த பதிவுல ஸ்மார்ட்டா ஒருத்தர் சிந்திக்குற மாதிரி போஸ் குடுக்குறாரே, அவருதான் ஹீரோ'காருங்களா?

  படம் ஹிட்டுங்கன்னா

  ReplyDelete
 4. பாவங்க அவரு, சேது’வா இருந்து சமீபகாலமா ரொம்ப சாதுவா மாறுனவரு. பிட்டு கேரக்டர் எதாவது குடுத்தா வெளுத்து கட்டுவாரு,..

  ReplyDelete
 5. /// பிட்டு கேரக்டர் ///

  பிட்டு பட கேரக்டருங்களா?

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் டைரக்டர் சார்.....!

  ReplyDelete
 7. பதிவர்கள் அனைவரும் இயக்குனர் அவதாரம் எடுக்க ஆரம்பிசுடிங்க வாழ்த்துக்கள் தல

  ReplyDelete
 8. இதைப் பார்த்துட்டு நீங்களும் weird க்ரூப் தானா ...என்று சொல்லுங்கள்.

  ReplyDelete
 9. ஓஹோ சார்,

  வாழ்த்துக்கள்!

  சுஜாதாவின் "அனிதாவின் காதல்கள்" வாசம் அடிக்குது டைட்டிலில், ஃபீமேல் வெர்ஷன் ஆட்டோகிராப் ஒன்னு ஓடும் போல தெரியுதே!

  இப்போவே விமர்சனம் எழுதி ஒரு கைப்பார்க்க துடிக்குது கரங்கள் :-))

  ReplyDelete
 10. ஓஹோ சார்,

  வாழ்த்துக்கள்!

  சுஜாதாவின் "அனிதாவின் காதல்கள்" வாசம் அடிக்குது டைட்டிலில், ஃபீமேல் வெர்ஷன் ஆட்டோகிராப் ஒன்னு ஓடும் போல தெரியுதே!

  இப்போவே விமர்சனம் எழுதி ஒரு கைப்பார்க்க துடிக்குது கரங்கள் :-))

  ReplyDelete
 11. ரெண்டும் இல்லை. செமையா ஏமாறப்போறீங்க வவ்வால்

  ReplyDelete