Thursday, March 13, 2014

சிநேகாவின் காதலருக்கு இன்று பிறந்தநாள் ’
’சிநேகாவின் காதலர்கள்’  முதல் ஷெட்யூல் முடிஞ்சிருந்த சமயம். கல்லூரி மாணவர் சந்தோஷ்[திலக்] கேரக்டர் தவிர மத்த யாருமே முடிவாகலை.பத்து மணி ட்ரெயினுக்கு 9.59க்கு எக்மோர்ல இறங்குறவங்களாச்சே நாம?. கொடைக்கானல் ஷெட்யூல் ஆரம்பிக்கிற அன்னைக்குதான் இளவரசன் [உதய்] வந்து இணைந்தார்.

கதைக்கு இன்னும் ரெண்டு நாயகர்கள் வேணும். நிறைய பேர்கிட்ட அந்த தேவையை சொல்லியிருந்தாலும், உதய் மட்டும் கொஞ்சம் சின்சியராவே நிறைய பேரை சிபாரிசு செஞ்சார்.அந்த கேரக்டருக்கு மட்டும் கொஞ்சம் ஸ்மார்ட்டான லுக் இருந்தா நல்லார்க்கும்னு யோசிச்சப்ப வந்தவங்கள்லாம் என் ரேஞ்சுலயே இருந்தாய்ங்க. எதுவும் செட்டாகலை. அடுத்து ஒரு நாலைஞ்சு நாள்ல ஷூட்டிங் கிளம்பவேண்டிய அவசரம்.
சில வேலைகளை அன்பா சொல்ல ஆரம்பிச்சி, ஒருக்கட்டத்துல அதட்ட ஆரம்பிச்சிருவோம். அப்பிடித்தான் உதய்க்கு ஓவரா இம்சையை குடுக்க ஆரம்பிச்சேன்.

’தேதி ரெண்டாச்சி, ஆறாம் தேதி ஷூட்டிங் கிளம்பனும் உதய்?’

‘அண்ணா இன்னைக்கு அதிஃப்ன்னு என் ஃப்ரண்ட் ஒருத்தனை அனுப்புறேன். நீங்க சொல்ற கேரக்டருக்கு செட் ஆக நிறைய சான்ஸ் இருக்குண்ணா’- உதய்.

‘என்ன பண்ணிக்கிட்டிருக்காரு?’

‘சாஃப்ட்வேர் கம்பெனியில ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கான். ஒண்ணுரெண்டு குறும்படங்கள்ல நடிச்சிருக்கான்’ -உதய்.

‘சாஃப்ட்வேர்ன்னாலே நமக்கு கொஞ்சம் அலர்ஜியாச்சே,[ வேற என்ன, நம்மளைவிட  அதிகம் படிச்சவங்களாச்சேங்குற இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்தான்] சரி வரச்சொல்லுங்க பாக்கலாம் உதய்’.

மறுநாள் சொன்ன நேரத்துக்கு அந்த இளைஞர் நம் அலுவலகத்துக்கு வந்தார்.

காஸ்ட்லியான ஆடைகள். ஹன்சிகா மோத்வானியின் நிறம். ஆறு அடி, பத்துநாள் தாடி. மொத்தத்தில் நான் தேடிய எழில் என்கிற கேடி.

கண்டதும் காதல் போல, என் எழில் கேரக்டர் அவர்தான் என்று முடிவுக்கு வந்து, அவரது கேரக்டரை சொல்லி பட்ஜெட் நிலவரம் குறித்த கலவரத்தையும் அவருக்குள் ஏற்றி முடித்தபோது கூலாக ‘ஓ.கே சார். நான் நடிக்கிறேன்’ என்று நம் டீமுக்குள் வந்தார்.

ஷூட்டிங் தேதிகள் சொன்னபோது, அதில் ஒருநாள் மட்டும் முடியாது என்று காரணம்  சொன்னபோது, அவர்மீது அநியாயத்துக்கு ஒரு மரியாதை வந்தது.

’சாஃப்ட்வேர் பசங்கள்ல இவ்வளவு சாஃப்டானவய்ங்களும் இருக்காய்ங்களா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, படத்தில் பணியாற்றிய இருபது தினங்களும் இருந்த இடம் தெரியாமல், அவ்வளவு அமைதி. சொன்னபோதெல்லாம் லீவு போட்டார். சொந்த உடைகள் கொண்டுவந்தார். இவ்வளவுக்கும் மேலாக, கூட நடிக்கும் பெண்களை கவரும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. [இவ்வளவு அட்ராக்டிவா இருந்திருந்தா நானெல்லாம் ஏகப்பட்ட லவ்லெட்டர்களை எழுதி வீசியிருப்பேன்].

சிநேகாவின் தோழர், எழில் என்கிற அதிஃப் ஜெய்க்கு, இன்று பிறந்த நாள். என் அடுத்த படத்துக்கும் கால்ஷீட் கொடுத்து, அவர் எழில்மயமான எதிர்காலம் கண்டு, நீடூழி வாழ,[ வாழ்த்தும் வயதில்லை], ஆனாலும் வாழ்த்துகிறேன்.

11 comments:

 1. கலாட்டாவாக கலாய்ப்பது தங்களுக்கு கைவந்த கலையா இயக்குனர் ஐயா, அருமையாய்...வாழ்த்து....சிநேகாவின் காதலர்களில் ஒருவராய் வந்த எழிலுக்கு வாழ்த்துக்கள்.....சூர்யா

  ReplyDelete
  Replies
  1. நன்றி சூர்யா ஐயா....நமக்கு தெரிஞ்ச ஒரே பொழப்பு இதுதான?

   Delete
 2. சுகமாய் கலாய்த்து கலாட்டா செய்யும் எழுத்து.....எழிலுக்கு பிறந்த நாள் வாழத்துக்கள்....சூர்யா

  ReplyDelete
 3. //என் அடுத்த படத்துக்கும் கால்ஷீட் கொடுத்து...//

  அடடே ... அடுத்த படமும் ரெடியா ...? ரொம்ப மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. படம் ஏறத்தாழ. உங்க சகவாத்தியாரின் பின்னணி இசைக்காக சிநேகா வெயிட்டிங்.

   Delete
  2. நான் அடுத்த படம் பற்றியல்லவா சொன்னேன் ........

   Delete
 4. மறுபடியும் "ஓஹோ"ணு எழுத தொடணங்கீட்டீங்களா!!!!"!! ரொம்ப நாள் miss பண்ணேன்! :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. எதுவும் எழுதமுடியாம நான் மட்டும் சந்தோஷமாவே இருந்தேன்னு நெனச்சீங்களா?

   Delete
 5. engala maathiri allungalukku chance kodukka maateengale..Mothvaani color la irunthaa thaan payanuke chance... Ennamo ponga boss.. :(

  ReplyDelete
  Replies
  1. அடுத்த படத்துல, அப்பிடி ஒண்ணு எனக்கு கிடச்சா?’, உங்களை நடிக்கவைக்கிறேன் பாஸ்.

   Delete
  2. மறந்திரமாட்டீகளே.....

   Delete