’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா?’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என்று சொல்கிற அளவுக்கு, எழுதுவதென்பது அவ்வளவு சோம்பலாய் இருக்கிறது.
தினமும் சகட்டுமேனிக்கு எழுதிக்குவிக்கிற நபர்களைப்பார்த்தால் கெட்ட கோபம் வருகிறது. ’எழுதுவியா எழுதுவியா தெனமும் எழுதுவியா?’ என்று அவர்களது நடுமண்டையில் நங்கு நங்கென்று நாலு குட்டு வைக்க கை துடியாய் துடிக்கிறது. வா.மணிகண்டன், அ.ராமசாமி போன்ற நண்பர்களும் அந்தப்பட்டியலில் இருப்பதால் அப்படிப்பட்ட செயலில் இப்போதைக்கு இறங்கமுடியாது.
சரி அதைப்பிறகு யோசிப்போம். ஒரு சிறிய ஸ்டார்ட்டிங் ட்ரபிளைக் கடந்து எனது அடுத்த படவேலைகளை இன்று முதல் தொடங்கிவிட்டேன் நண்பர்களே. கதை மற்ற விபரங்கள் குறித்து அடுத்தடுத்து அறிவிக்கிறேன்.
முதல் படம் போலவே இந்தப்படமும் ஏழ்மையான பட்ஜெட் என்றாலும் முதல் படத்தில் கற்றுக்கொண்ட பாடத்தால் அதை விட பலமடங்கு சிறப்பாக இப்படத்தை இயக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை.

இதில் என்னுடன் உதவி இயக்குநராக, தொழில் நுட்பக்கலைஞராக, நடிகர்களாக தோள் கொடுக்க விரும்புபவர்கள் எனது மெயில் ஐடிகளில் தொடர்பு கொள்ளுங்கள்.
புகைப்படங்களுடன் [பத்து வருஷத்துக்கு முந்தி எடுத்ததெல்லாம் அனுப்பினா இ.பி.கோ.செக்ஷன் 418-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஆனா இது எனக்குப் பொருந்தாது.] கூடுமானவரை உங்களைப்பற்றிய அதிக விபரங்களை அளித்து விண்ணப்பிக்கவும். நான் எனது அலைபேசி எண்ணை உங்களுக்குத் தரும்வரை போனில் தொடர்புகொள்ள முயலவேண்டாம்.
நாளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன்
எனது மெயில் ஐடிகள்
muthuramalingam30@gmail.com
ohoproductionss@gmail.com
movie.funding.network@gmail.com
முகங்களை பதிந்து முகவரிகளை கொடுக்கும் தமிழ் சினிமாவில் கால்பதிக்க வரவேற்கிறோம்....வாரீர். ....சூர்யா
ReplyDelete//இப்படம் தொடர்பாக நான் இனி தொடர்ந்து எழுதுவேன்.//
ReplyDeletepromises are made to be broken / gentle man never promises - இந்த இரண்டில் எது உங்களுக்குச் சரியாக இருக்கும்?
மேலே கூறியது நீங்கள் கொடுத்த இந்த ஒரு வாக்குறுதிக்காகத் தான் ... //இப்படம் தொடர்பாக நான் இனி தொடர்ந்து எழுதுவேன்.//
ReplyDelete