Friday, March 16, 2012

என்ன அழ வைத்த ‘தல’ அஜீத்

முன் குறிப்பு: இந்த இடுகை கொஞ்சம் நீளம் அதிகமாயிடுச்சி. அதனால நீங்களே ஏதாவது ஒரு இடத்துல இண்டர்வெல் விட்டுட்டு,மீதியை அப்புறமா வந்து படிச்சிக்கங்க.

’சேது’ ஹிட்டாகி மொத்த இண்டஸ்ட்ரியுமே பாலாவை வைத்து படம் தயாரிக்க ஆளாய்ப் பறந்தபோது, அவர் ஒரு வித்தியாசமான தயாரிப்பாளரைத் தேர்ந்தெடுத்தார்.அவர் பெயர் பூர்ணசந்திரராவ். இவர்தான் நமது அடுத்த புரடியூசர் என்று பாலா முடிவு செய்த காரணத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.  இது தல ஏரியா .மத்த மேட்டருங்க தலயிடக்கூடாத ஏரியா.

அப்போது இருந்த நிலவரப்படி பாலா-பூர்ணசந்திரராவ் கூட்டணியில்  ‘நந்தா’ படத்துக்கு ஹீரோ என்று முதலில் முடிவு பண்ணப்பட்டவர் அஜீத்தான்.

ஜெயா ஃபிலிம் சிடி காட்டேஜில் ஏகப்பட்ட பாம்புகள், மனிதர்களை விட தைரியமாக நடமாடிக்கொண்டிருந்த பகுதியில், டிஸ்கசனுக்கு தயாரிப்பாளர் தரப்பில் ரூம் போட்டிருந்தார்கள்.

‘பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பாலாக்கள் நடுவினிலே நான் அமர்ந்திருக்க,’நந்தா’ கதையைக் கேட்க அஜீத் வந்தார்.
இவ்வளவு பெரிய ஹிட் குடுத்திருக்கோம். அதுக்கப்புறமும் கதை சொல்லனுமா? என்ற கேள்வி ஒருபுறமும், வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க’ என்கிற நிதர்சனம் ஒரு புறமுமாக அன்று அஜீத்துக்கு, சும்மா ஒரு பத்து வரிகளில்தான்  பாலா கதையே சொன்னார்.

இந்த பத்து வரியைக்கேக்கத்தானா இவ்வளவு தூரம் வந்தேன் என்பது போல் அஜீத் பார்க்க, ’’வெயிட் பண்ணுங்க .ஒரு அஞ்சி நிமிஷத்துல, அடுத்து முழுக்கதையை எப்ப சொல்றேன்னு முத்துகிட்ட சொல்லி அனுப்புறேன்’ என்றார் பாலா.
(அவர் தல, நான் தறுதல)
அஜீத் ரூமுக்கு வெளியே காத்திருக்க,’’முழுக்கதையும் சொல்ல இன்னொரு பத்து நாளாவது ஆகும்னு சொல்லி அனுப்பிச்சிட்டு வாங்க’ என்று என்னை அனுப்பி வைத்தார் பாலா.

’எங்கே செல்லும் நந்தா’ கதை என்ற ரீ-ரெகார்டிங் மட்டும் பின்னணியில் ஒலிக்க, அடுத்த பத்து நாட்களும் டிஸ்கசன் என்ற பெயரில் ஒரு எழவும் நடக்கவில்லை.

ஆனால் கம்பெனியிலிருந்து கரெக்டாக நாள் குறித்து மறுபடியும் அஜீத்தை அனுப்பி வைத்துவிட்டார்கள். என்னிடம் சொல்லவில்லையென்றாலும்,நந்தா’ வுக்கு அஜீத் தோதுப்பட மாட்டார் என்று பாலா முடிவு செய்து வைத்திருப்பதை நான் முன்பே யூகித்துவிட்டேன்.

தயாரிப்பாளர் தரப்பைப்பொறுத்தவரை  அந்த முடிவை தான் எடுத்ததாகக்காட்டிக் கொள்ளாமல், அஜீத்தே எடுத்ததாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் பாலா  வீரியமாக ஒரு காரியம் செய்தார்.

அஜீத் ஒரு நீண்ட கதை கேட்கபோகும் ஆவலில், காட்டேஜ் அறைக்குள் அமர, மேலும் பத்து நாட்கள் ’பட்டை’ தீட்டப்பட்ட ‘நந்தா’ கதையை பாலா சொல்ல ஆரம்பித்தார்.அது முதலில் சொன்ன பத்து வரியில் எட்டு வரி காணாமல் போய் வெறும் ரெண்டே வரியில் முடிந்து விட்டது.

பாலாவின் உள்குத்து’ புரியாமல் அஜீத் கொஞ்ச நேரம் முழித்தார். பிறகு சுதாரித்து, தர்மசங்கடமான ரியாக்‌ஷன் எதுவும் கொடுக்காமல் கிளம்பிப்போனார்.

அஜீத் இல்லை என்று ஆகிப்போன சில தினங்களிலேயே, தயாரிப்பாளர் பூர்ணசந்திரராவும் இல்லாமல் போய், அமெரிக்காவில் இருந்து   தயாரிப்பாளர்களாக நான்கு புன்னகை மன்னன்கள் வந்தனர். அடுத்த நந்தாவாக பாரதிராஜாவின் பிள்ளை  மனோஜ் முடிவு பண்ணப்பட்டு,அது கடைசியில் சூர்யாவாக மாறிய பெருங்கதை எல்லாம் பிறகு. இது ‘தல’ ஏரியா. மத்த மேட்டருங்க தலயிடக்கூடாத ஏரியா.

சினிமாவுல மட்டும்தான் ஃப்ளாஷ்பேக் போடுவாங்களா?  இப்ப நான் போடுறதுக்குப் பேரு ப்ளாக்பேக்’.

அப்பிடியே ஒரு ரெண்டு வருஷம் பின்னாடி வாங்க.

‘அதர்மம்’ரிலீஸாகி வெற்றிப்படம்னு ஆன உடனே, ரமேஷ்கிருஷ்ணன் தன்னோட பாண்டி பஜார் ரூமை எனக்குத்தாரை வார்த்துட்டு, முழுநீள உதவி இயக்குனரா வச்சிக்கிட்டான்.

படம் ஹிட்டே ஒழிய ரமேஷுக்கு அடுத்த படம் அவ்வளவு சீக்கிரமே வரலை. பாக்குறதுக்கு ஸ்டண்ட் யூனியன் ஆளு மாதிரியே இருப்பான். இந்தி ஆர்டிஸ்ட் மாதிரியே ட்ரெஸ் பண்ணியிருப்பான். பேச்சுல ஒரு தெனாவெட்டு. சதா ரே-பான் கூலிங் கிளாஸ். பென்சன் -ஹெட்ஜஸ் சிகரட். மொத்தத்துல ஒரு மார்க்கமான மதுரைக்காரன்.

’அதர்மம்’ ரிலீஸாகி பதினைஞ்சி மாசமாச்சி. காலையில ஒரு டிஸ்கசன்ல இருப்போம். அது மத்தியான லஞ்ச்சோட கேன்சல் ஆயிருக்கும். மறுநாள் வேற ஹீரோ வேற புரடியூசருக்கு டிஸ்கசனுக்கு உட்கார்ந்திருப்போம். அது காலை டிபனோடவே கதை முடிஞ்சிருக்கும்.  

(பகைவன் கிளாப் போர்டுடன் நான்)

எல்லாத்துக்கும் ஒரு முடிவு வந்தாகனுமே, ரமேஷ் தன்னோட நிலை உணர்ந்து சகஜ நிலைக்கு வந்த ஒரே நாள்ல அவனுக்கு ரெண்டு படங்கள் கமிட்’ஆனது. ஒண்ணு விஜயசாந்தி-ராம்கி நடிச்ச ‘தடயம்’ ரெண்டாவது சத்யராஜ் சாரும், நம்ம தல அஜீத்தும் நடிச்ச ‘பகைவன்’.

‘பகைவன்’ படத்தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தர் சார் ஆபிஸ்ல தான் அஜீத்தை முதமுதல்ல மீட் பண்றேன். அப்ப ‘காதல் கோட்டை’ படத்துல நடிச்சி முடிச்சிருந்தார்,ஆனா ரிலீஸாகலைன்னு நினைக்கிறேன்.
‘நேசம்’ உல்லாசம்’ன்னு அவர் மார்க்கட் ’பல மாசமா ரொம்ப  மோசமா’தான் இருந்தது. ரமேஷ் ஒரு சுமாரான கதை சொல்ல, 4லட்ச ரூபாய் சம்பளம் பேசி ஒரு இருபத்தையாயிரத்துக்கு செக் வாங்கிட்டு கிளம்பிப்போனார் அஜீத். படத்தோட ஹீரோயின் அஞ்சலா ஜவேரி,கோவேறிக் குதிரை மாதிரி இருக்குன்னு சொல்லி புரடியூசர் எங்க தலையில கட்டிவிட்டார்.

இந்த ‘பகைவன்’ கதையும் இன்னொரு சந்தர்ப்பத்துலதான் சொல்லனும்.

நான் வேலை பாத்த ரெண்டு படங்களுமே,ஊத்தி மூடிக்கிட்டதுனால, கழுதை கெட்டா குட்டிச்சுவரு மாதிரி’ குமுதத்துல’ சினிமா நிருபரா வேலைக்குச்சேர்ந்தேன்.அங்க நடந்ததை அப்புறமா தான் எழுதுவேன்னு குமுதம் அண்ணன்களுக்கு சத்தியம் பண்ணிக்குடுத்த மாதிரியே,ஆபீஸுக்குள்ள கூட நுழையாம நேரா அவுட்டோருக்கே போறேன்.

இடம்: ஹைதராபாத் ‘ரெட்’ பட ஷூட்டிங். அஜீத் சாரை ஒரு பேட்டி எடுக்கலாமுன்னு போயி, பழைய கதையெல்லாம் பேச ஆரம்பிச்சி ரொம்ப நெருக்கமாயிட்டோம். அன்னிக்கே கிளம்பலாமுன்னு முடிவு பண்ணினப்ப அஜீத் சார் என்னப்போக விடலை.

அஜீத்துக்கு ‘குமுதம்’ ஆபீஸ் பத்தி சில விஷயங்கள் சொல்லி புரிய வச்சப்ப, ‘’நீங்க ஒரு மூனு நாள் தங்குறதுக்கு ஆபீஸ்ல என்ன காரணம் சொன்னாதான் அனுமதிப்பாங்கன்னு கேட்டார். நான் உடனே ஒரு சின்ன தொடர் எழுதுறதா ஒத்துக்கிட்டீங்கன்னா, அதை எழுதிக்குடுத்துட்டு வேலையை விட்டுட்டு ஓடிப்போனா கூட கவலைப்பட மாட்டாங்க. அவிங்க அவ்வளவு நல்லவிங்க ‘’ என்றேன்.
 
பாலாவின் அந்த ‘நந்தா’ மேட்டர் உட்பட யாரைப்பத்தியும் காண்ட்ரவர்ஸி பண்ணாம எழுதுறதா இருந்தா பண்ணலாம் என்றவர், நான் கூடத்தங்கியிருந்த மூன்று நாட்களுமே ‘முத்துஜி’என்று தாங்கு தாங்கென்று தாங்கினார்.
சாப்பிடும்போது குறைவாகச்சாப்பிட்டால் சொந்த சகோதரர் போலவே சண்டை போடுவார்.
அப்போது தான் அவருக்கு புதிதாக போட்டோகிராபியின் மீது ஆசை வந்திருந்தது. எனக்கு கேமரா மீது இருந்த தீராத ஆர்வத்தைப் பற்றியும்  கேட்டுக்கொண்டார்.

கடைசி நாளில் அவரிடம் சொல்லிவிட்டு ரயில்வே ஷ்டேசன் கிளம்பிய போது பின்னாலேயே துரத்தி வந்த காரில் ‘கன்வேயன்ஸ்’ என்ற பெயரில் ஒரு பெரிய கவர்’ வந்தது. அதைக்கொண்டு வந்த மேனேஜரிடம் வலுக்கட்டாயமாகத் திருப்பிக்கொடுத்துவிட்டு வந்த போது, மறுநாள் போனில் என்னை அழைத்து ரொம்பவும் வருத்தப்பட்டார்.

அடுத்து அவர் சென்னை வந்தவுடன் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, ‘நீங்கள் எனக்கு எதாவது பரிசளிப்பதாக இருந்தால், குமுதத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்த பிறகு அளியுங்கள் என்று மட்டும் அவரை சமாதானப்படுத்திவிட்டு வந்தேன்.

இது நடந்து பல மாதங்கள்  இருக்கும். ஒரு நாள் ‘குமுதம்’ வேலையை ராஜினாமா செய்துவிட்டு,எல்லோருக்கும், தகவல் தெரிவிப்பது போல்  அஜீத்துக்கும் தெரிவித்து விடுவோமே என்று நினைத்து படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்று விசாரித்தால், அது எனது வீட்டுக்கும் குமுதம் ஆபிசுக்கும் நடுவில் உள்ள குஷால்தாஸ் கார்டனாக அமைந்தது.

கேரவனுக்குள் இருந்த அஜீத் உள்ளே வரச்சொன்னார். வேலையை ஏன் விட்டீர்கள்? என்று பதறினார். பதற வேண்டியதில்லை. சினிமாவில்தான்  நான் செல்லுபடியாகவில்லையே ஒழிய ,பத்திரிகைகளில் எப்போதுமே என்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்வார்கள், அதனால் பதறத்தேவையில்லை. விரைவில் ஒரு நல்ல செய்தியுடன் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினேன்.

அங்கிருந்து கிளம்பி நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும் வேளையில் அஜீத் ஒரு சாகஸம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் எனபதை அறியாத என் பயணம் அது.

 நான் காலிங் பெல் அடித்து வீட்டுக்குள் நுழையும்போது என் குட்டிப்பையன் நந்து தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஒரு புத்தம் புதிய கேமரா பேக்குடன் நிற்கிறான்.

திறந்து பார்த்தால் ஒரு நிகான் எஃப்.எம் 2 கேமரா, உடன் ஒரு 70 டு 210 ஜூம் லென்ஸ். குமுதத்தில் இல்லாத முத்துராமலிங்கத்துக்கு அன்புடன் அஜீத்’ என்ற அந்தக்குறிப்பு, சற்று நேரத்திலேயே என் கண்ணீரால் நனைந்தது.

98 comments:

 1. நானும் ஒரு மாசமா உங்க கருப்ப (அட தாங்க பிளாக்கை) படிச்சுகிட்டு வர்றேன். இத்தனை நாள்ல நீங்க நல்லவிதமா எழுதுன ஒரே ஆள் அஜீத்தான். அஜித் நல்லவர்தான், அது சரி. நீங்க நல்லவரா கெட்டவரா?

  ReplyDelete
  Replies
  1. நல்லவனுக்கு கெட்டவன். கெட்டவனுக்கு நல்லவன். எங்க பெரிய ‘தல’ ராஜாவைப்பத்தி நான் எழுதினதை நீங்க படிக்கலையா?

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அருமை :) பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 4. அஜீத் பற்றி கேள்வி படும் விஷயங்கள் வியக்க வைக்கின்றன !

  ReplyDelete
  Replies
  1. என்னைப்போல் ஆயிரம் பேர் இதைவிட உணர்ச்சிகரமான கதைகளோடு காத்திருக்கிறார்கள். மருத்துவம், படிப்பு தொடர்பாக அவர் செய்த,செய்துகொண்டிருக்கிற உதவிகளைக்கேட்டால் மலைத்துப்போய்விடுவீர்கள்.

   Delete
 5. அஜித் பற்றி ஒரு நல்ல பதிவு.

  சே.கு. ;-) எனக்குப் புரிகிறது. எதை எழுதினாலும் ஒருவித எள்ளல் கலந்த நடையை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தனன் மொழி நடையும் இப்படித்தான் இருக்கும். ஆனால் அந்தனன் எடுத்த கிழக்கு கடற்கரை சாலை படத்தை இவர் எப்படி விமர்சிக்கிறார் என்று பார்க்க ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. ’கிழக்கு கடற்கரைச்சாலை’ யில் அந்தணனை விட என் டவுசர் தான் அதிகம் கிழிந்தது.அதில் தயாரிப்பு நிர்வாகி என்று என் பெயர்தான் இருக்கும் பாருங்கள்.

   Delete
 6. தெய்வம் எப்போதும் மனித ரூபத்தில்தான் வருமாம்..!

  ReplyDelete
  Replies
  1. அண்ணா நீங்க ஒரு தொன்மைத்தமிழன்

   Delete
 7. ஹ்ம்ம் தொடருங்க. ஆனா பொசுக்குன்னு முடிக்காதீங்க ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே பதிவு ரொம்ப நீளமா இருக்கேன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். இதுல பொசுக்குன்னு எங்கே முடிஞ்சது?

   Delete
 8. ரொம்ப நல்லா இருக்கு தல.... படிக்க சுவாரிசியமா இருக்கு..
  நந்தாவுல அஜீத் நடிக்காம போனதுக்கு காரணம் பாலா அண்ணன் தானா..???
  //அடுத்த நந்தாவாக பாரதிராஜாவின் பிள்ளை மனோஜ் முடிவு பண்ணப்பட்டு,அது கடைசியில் சூர்யாவாக மாறிய பெருங்கதை //
  நல்ல வேளை மனோஜ் நடிக்காம போனார். சூர்யாவுக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைச்சது என்கிற பெருங்கதைய சீக்கிரமா சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. அண்ணா உங்க ஆர்வத்துக்கு நன்றி.அதை விடவும் முக்கியமான விஷயங்கள் இருக்கு. முறைப்படி போவோம்.

   Delete
  2. ada ponga raj thala ya rmba kevala paduthi irukar bala... ithu nan kadaul la nadanthathu katta panchyathu panraru..., apram than arya vanthar,

   Delete
 9. நீங்க மேல பதிவு பெருசு போட்டதால தான் பதிவு பெரிசுன்னு தோணுது... படிக்கும் போது அப்படி தோணவே இல்ல....

  தல எப்பயும் பெஸ்ட் தான்........ தல போல வருமா....?

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றபடி பாத்தா பத்’தல?

   Delete
 10. thala thala dhaan! he is great goose bumps (Pullarikkudhu)

  ReplyDelete
 11. Really super g... But its short only, am wondering to heard about thala... He is great man...
  Now i got know why thala didnt act in 'nanda'... thank u for that...
  And you too a Great man g... U regret the money Because of u r in a job...

  ReplyDelete
  Replies
  1. கிரேட்னா அது அவர் மட்டும்தான்.

   Delete
 12. appo neenga kadavula neeyrula paathuting.......great thala ajith

  ReplyDelete
 13. Thala always great.........he is really a inspiration for us

  ReplyDelete
 14. Sir namma Thala kum Gautham Menon kum Enna problem ? can u xplain this ?

  ReplyDelete
 15. Sir Namma Thala kum Gautham Menon Kum enna prob ? can u Xplain this ? plz...

  ReplyDelete
 16. Romba santhosma erukku Thala pathi eppadi neraya paeru sollu rathu :-) Thank u so Much Sir :-) Waiting 4 more News abt Thala :-)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா எழுதுவேன்.காத்திருங்க..

   Delete
 17. அருமையான பதிவு சார். அஜித் இது போல பலபேருக்கு எந்த பிரதிபலனும் பார்க்காமல் நிறையவே செய்திருக்கிறார் அவர். பேனா, பென்சிலுக்கு கூட விளம்பரம் தேடும் இந்த காலத்தில் இப்படி ஒருவர் இருப்பது உண்மையிலேயே ஆச்சர்யம் தான். தல போல வருமா?

  ReplyDelete
  Replies
  1. நான் இதை எழுதினதை கூட அவர் விரும்பியிருக்கமாட்டார்னு தான் நினைக்கிறேன்.

   Delete
 18. Mikka magizchi nanum thalaya pathi nerayave kelvi patrukan ......... oru sirantha manithan nu perumaya sollalam .... Pakirnthu kondathuku nanri MuthuJi ... paroud 2 be ajith sir fan :-) A man who hates publicity :-) love u loads thala ....

  ReplyDelete
 19. Mikka magizchi nanum thalaya pathi nerayave kelvi patrukan ......... oru sirantha manithan nu perumaya sollalam .... Pakirnthu kondathuku nanri MuthuJi ... paroud 2 be ajith sir fan :-) A man who hates publicity :-) love u loads thala ....

  ReplyDelete
 20. Thala thala daan . Thala pola varuma . Thala route s different and always crystal clear

  ReplyDelete
 21. Naan itha first time padikeren, Romba Nalla irunthathu. Enaku inda marthiriyana seithigalai therinthu koluvathil aarvam.

  thanks to you

  Nagarajan

  ReplyDelete
 22. Anna ... unga thala pathi ungaloda karuthuku mikka nanri. Ungaloda posts elam padika aramichen. romba nalla iruku. Keep it up anna. innilernthu nan unga fan. unga vasagangaluku visiri. :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெயில்காலத்தில் ஆதரிக்க வந்த விசிறியே..

   Delete
 23. Thala is always Great....Great people will always do Great Things...Hats off Thala Ajith.....

  ReplyDelete
 24. Thala is always Great....Great people will always do Great Things...Hats Off Thala Ajith....

  ReplyDelete
 25. அவர "தல"னு சொல்றதுல தப்பே இல்ல.. !

  ReplyDelete
 26. அவிங்க அவ்வளவு நல்லவிங்க....hahaha

  ReplyDelete
 27. really tala tala tan it is short story only pa

  ReplyDelete
 28. Really a gud Article! Much more to come i think, thank's for sharing the moment!!!

  ReplyDelete
 29. Really a Gud Article! i think that he is such a wonderful person! thanks for the share! TRULY A VALUABLE ONE

  ReplyDelete
 30. vazhlndha thala madri valanum.............

  ReplyDelete
  Replies
  1. வாழ நினைத்தால் வாழலாம்....

   Delete
 31. SARAVANA : super article.Every time am hearding about ajith news my affection is day to day increase.please share the ajith news like this.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா இது தொடரும்...

   Delete
 32. Nice article.Every time am hearing about any news about ajith news my affection is increasing day to day.my req pls share about ajith news like this.

  ReplyDelete
 33. Its really Impressing sir, Ajith sir always be a genuine like 100000000000000%%%%%......

  ReplyDelete
 34. thanks..You are great..Thala the man of humanity..We proud to be his fans...Chanceless humanbeing,Thala da.

  ReplyDelete
 35. really touched. Thala the man of humanity..Chanceless hero...love u thala..By your work, u making all of our fans very proud everyday.Please share someother thing about our THALA. Love u thala...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா ஷேர் பண்றேன்...

   Delete
 36. படித்ததும் உண்மையிலேயே நெகிழ வைத்தது.. நீளமான பதிவு என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. படிக்கிற எங்களுக்கு அப்படித் தோன்றவில்லை. நிறை குடம் தழும்பாது -க்கு அஜித் நல்ல எடுத்துக்காட்டு என்றே தோன்றுகிறது. பொறுமை மற்றும் அல்ப விளம்பரம் தேடாத குணம் அதுவே அவரை வாழ்க்கையில் முன்னேற்றி இருக்கிறது.

  - கலாத்மிகா
  www.kalatmika.blogspot.com

  ReplyDelete
 37. pls write about Thala wht u all know abt Him.... Pls

  ReplyDelete
 38. I literally wonder Thala's greatness After One and only Thalaivar..! Gr8 Human.. Hats off Thala.. Love you a lot.. Be it in cinema or not, be it a hit film or not, i luv to watch u on the screen every moment you are on !! Thank you Muthu ji for sharing this wonderful piece of story.. Thala thala thaan..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நர்மதா சுப்ரமணியம் அவர்களே...

   Delete
 39. தல பற்றிய உங்கள் அனுபவம் என் போன்ற தல'யின் நலம் விரும்பிகளுக்கு அவர் மீதான நம்பிக்கையையும், மரியாதையையும் இன்னும் பல மடங்கு அதிகரிக்க செய்கிறது, இது போன்ற நிகழ்வுகள் எதுவும் தெரியாமலே நாங்கள் அவரை குடும்பத்தில் ஒருவர்,உயிர் நண்பர் என்ற அளவிற்கு நினைக்கிறோம். பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள். பாலா,நந்தா பிரச்சினை பற்றி விரிவாக சொல்லாதது உங்கள் நாகரீகமே.,

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி...

   Delete
 40. முக அழகு, சினிமாவில் செய்யும் சில சாகசங்களினால் கவரப்படும் நடிகருகளுக்கு மத்தியில் தல அஜித்தின் நற்குணங்களினால் கவரப்பட்டு அவரின் ரசிகனான எனக்கு இது மேலும் பெருமையாக நினைக்கத் தோன்றுகின்றது.

  ReplyDelete
  Replies
  1. நற்குணங்கள் இல்லாவிட்டால் நீண்ட நாள் யாரும் தாக்குப்பிடிக்க முடியாது.

   Delete
 41. thank you so much for this post.

  ReplyDelete
 42. thank you so much for this post about thala

  ReplyDelete
 43. Thala is King Maker Avar Valura life ku nan Frist Fan AParam than Cinima Thanks sir Sagum vari Thala Rasigan Jith Laksh

  ReplyDelete
 44. but nice to know about some one like this... :)

  ReplyDelete
 45. மிக அருமையான பதிவு சார்...

  ReplyDelete