Saturday, December 3, 2011

அமலாபாலுக்கு மாங்கல்யம் தந்துனானே...

வதந்திகளை ஆரம்பத்தில் மறுப்பதும், அதுவே பின்னர் உண்மையாகிவிடும்போது வழிவதும், நம்ம கோடம்பாக்கத்து ஆசாமிகளுக்கு வழுவல கால வகையினானே.

இப்போ இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர்கள் தெய்வத்திருமகன்’ விஜயும் தெய்வத்திருமகள் அமலாபாலும்.

சில தினங்களுக்கு முன் நீக்கப்பட்ட அமலாவின் மேனேஜர் கிரி என்பவரின் வட்டார செய்திப்படி பார்த்தால் ,இரு வீட்டாரின் சம்மதத்தோடு அமலாவும், விஜயும் சுமார் இரு வாரங்களுக்கு முன்பே வா என் அன்பே வா ‘என்று ஏதோ ஒரு சர்ச்’சில் மோதிரம் மாற்றியிருக்கிறார்கள்.

அமலாவின் பெற்றோர்கள் விஜய் வீட்டுக்கும், விஜயின் பெற்றோர் அமலா வீட்டுக்கும் பல முறை போய் வந்ததன் பின்னணி இதுதான்.

எமி ஜாக்சன் ,அனுஷ்கா போல தான் அமலாவுடனும் பழகுகிறேன்’ என்று விஜய் சொல்வது உண்மையானால், புதிய B M W  கார் டெலிவரி எடுக்கப்போகும்போது எமியையும்,அனுஷ்காவையும் அழைக்காமல் அமலாவை மட்டும் அழைத்துப்போனது ஏன்? புது வண்டி டெலிவரி எடுக்க போகும்போது வருங்கால மனைவியை அழைத்துப்போவதுதானே மரபு?

 எனிவே இந்த ஜோடி வெகுசீக்கிரமே கல்யாணமாலையோடு வந்து ‘ஹிஹி’ என்று வழியப்போவது உறுதி.

என்னத்த சொல்றது....’மைனா’வுக்கு றெக்க முளைச்சுடுத்து விஜய் கூட பறந்து போயிடுத்து.........

No comments:

Post a Comment