Tuesday, May 1, 2012

பிரசன்னா அய்யருக்கும், சிநேகா நாயுடுவுக்கும் டும் டும் டும்…



எங்கள் திருமணத்துக்கு, உங்களை நேரில் அழைக்கவேண்டி, நானும் எனது வருங்கால கணவர் பிரசன்னாவும் பிரசாத் லேப் தியேட்டரில் காத்திருக்கிறோம்  முன்னாள் புன்னகை அரசி சிநேகாவிடமிருந்து அழைப்பு.

அந்த எஸ்.எம்.எஸ்ஸைப் படித்துக்கொண்டிருந்தபோது, நமது நண்பர்மைண்ட் வாய்ஸ்மாயாண்டி அநாகரீகமாக எட்டிப்பார்த்துவிட்டு, நானும் சிநேகாவப் பாத்தே தீருவேன் என்று அடம்பிடித்து என்னோடு கிளம்பிவிட்டார். பெரிய இம்சை மன்ன்ன். யார் எது பேசினாலும் அதுக்கு கவுண்டர்பேசாமல் பொத்திக்கொண்டு அவரால் இருக்கமுடியாது.’ சனியனே வந்து தொலை என்று அழைத்துப்போனேன்

 அவரது கருத்துக்கள் தான் பிராக்கெட்டுக்குள் இடம்பெற்றிருப்பவை. அவரது கருத்துக்களால் ஏற்படும் சட்டச்சிக்கல்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

இந்த திருமண அழைப்பாளிகளுக்குள் ஒரு ஆச்சரியம் இருவருமேவிரும்புகிறேன்மற்றும் ’5ஸ்டார்படங்கள் மூலம் இயக்குனர் சுசி கணேசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.[ ஒரு 5ஸ்டார் சாக்லேட்டை ப்ரசண்ட் பண்ணி முதல்ல சிநேகா கிட்டவிரும்புகிறேன்சொன்னவரே சுசிதானாமே?]

நேரில் ஆஜரானபோது, வழக்கமான, ஆனால் இனி நமக்கு சொந்தமில்லாத புன்னகையுடன் வரவேற்ற சிநேகாவை, பழைய பற்றுதல் மாறாமல் வளைத்து வளைத்துக்ளிக்கிக்கொண்டிருந்தார்கள் புகைப்படக்கலைஞர்கள். [ ஒரு நாலு ஸ்டில்ல போடுறாய்ங்க. ஆனா 400 ஸ்டில்லு எடுக்குறாய்ங்க. மீதிய வித்துருவாய்ங்களோ ?]

‘’நான் திறைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. உங்கள் முன்சிநேகாவாக நிற்பதில், உங்கள் மகத்தான பங்களிப்பு இருந்ததை, எப்போதும் மறக்கமாட்டேன். [ நயன் தாராவுக்கு முந்தி வளைச்சி வளைச்சி எழுதுனாங்களே அதைச்சொல்றீங்களோ? ]

திருமணத்துக்கு பிறகு நடிப்பதா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. பிரசன்னாவும் என் முடிவில் தலையிடாமல்,உன் இஷ்டம் போல் முடிவெடு என்று முழு சுதந்திரம் வழங்கிவிட்டார். [ ஆனா உங்க ரெண்டு பேரு முடிவை விட புரடியூசரு டைரக்டருங்க முடிவுதான் முக்கியம் மேடம்.]

திருமணம் முடிந்தவுடனான எனது முதல் ஆசை என்பது, கொஞ்சநாளைக்கு மட்டும் தனிக்குடித்தனம் போய், ஒரு சாதாரண குடும்பப்பெண், தன் கணவனுக்கு என்னென்ன பணிவிடைகள் செய்வாளோ அதையெல்லாம் செய்யவேண்டுமென்பது மட்டுமே. அதற்கு இனிமேல்தான் நான் சமைக்கவே பழகவேண்டும்’’ [பிரசன்னா நல்லா சமைப்பாருன்னு ஒரு பேட்டியிலே படிச்சிருக்கேன். ஷூட்டிங் இல்லாத சமயம் மட்டும் நீங்க சமைச்சாப்போதும்பான்னு சொல்லி வைங்க. வருஷம்பூரா உங்களுக்கு வடிச்சி கொட்டிக்கிட்டே இருப்பாரு ]

சிநேகாவின் பேச்சை அதுவரை உற்சாகமாகக் கேட்டுக்கொண்டே வந்த பிரசன்னாஇனிமேல் தான் சமைக்க பழக வேண்டும்என்று சிநேகா சொன்னதும் சற்றே ஜெர்க் ஆனார். [ இதெல்லாம் சின்ன ஜெர்க் தான் பிரசன்னா, கல்யாணத்துக்கு அப்புறமா அதுவே பழகிப்போயிடும்}

பின்னர் காதல்ல இதெல்லாம் சகஜமப்பாஎன்று நினைத்தபடி மைக்கைப்பிடித்தார்.
நானும் சிநேகாவும்அச்சமுண்டு அச்சமுண்டுஎன்ற படத்தில் இணைந்து நடித்தபோதே நாங்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுத ஆரம்பித்தார்கள்.அப்போதெல்லாம் எங்களுக்குள் இருந்தது வெறும் அறிமுகம் மட்டுமே.பின்னர் அதுவே ஒரு நல்ல நட்பாக மாறி, பின்னர் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்த பிறகே காதலிக்கத் துவங்கினோம். [கடைசி லைன்ல லாஜிக் உதைக்குதே. நல்லா புரிஞ்சிக்கிட்டவங்க காதலிச்சதா இதுவரைக்கும் சரித்திரத்துலயும் இல்லை. பூகோளத்துலயும் இல்லை.]

அந்த சமயத்தில் வந்த கிசுகிசுக்களை மறுத்ததற்கு காரணம், அதுவரை நாங்கள் இருவருமே எங்கள் காதலை பெற்றோர் தரப்பில் சொல்லாமலிருந்தோம். இரு தரப்பிடமிருந்தும் அனுமதி வாங்கியபிறகே எங்கள் காதலை மீடியாவில் சொல்லவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். இதோ இப்போது திருமண அழைப்பிதழோடே வந்துவிட்டோம்[கிசுகிசு எழுதாத பத்திரிகையாளரும், அதை மறுக்காத நடிகர்,நடிகைகளும் பூமியில பொறக்குறதே வேஸ்ட்]

என்றபோது ஒரு நிருபர் எழுந்து, ‘’பிரசன்னா ஒருவேளை உங்க பெற்றோர் சம்மதிக்காமப்போயிருந்தா ?  என்றவுடன், வடிவேலு மாதிரியேஅவ்வ்வ்வ்என்று சற்று அழுத பிரசன்னா ‘’அதுதான் சம்மதிச்சாட்டாங்கள்ல பாஸ். அப்புறம் ஏன் பத்திரிக்கை  குடுக்கிற இந்த நேரத்துல டென்சன் பண்றீங்க’’ என்றார்.

அடுத்து, அதிமிகு உற்சாகத்தில், ‘’எங்க ரெண்டுபேரோட ஜாதி வழக்கப்படியும் கல்யாணம் நடக்கப்போகுது. அதனால சிநேகாவுக்கு ரெட்டைத்தாலி கட்டப்போறேன்என்றதும் மற்றொரு நிருபர், ‘’ இந்த கம்ப்யூட்டர் காலத்துலயும் ஜாதியை விட மாட்டேங்குறீங்களே. நீங்க அய்யர்ங்கிறதும், சிநேகா நாயுடுங்குறதும், இப்ப நீங்க சொல்றதுக்கு முந்திவரைக்கும் எங்களுக்கே தெரியாது தெரியுமா ? என்று ஒரு உடும்புப்பிடி போட்டதும் வெலவெலத்துப்போன பிரசன்னா,’எல்லாம் மம்மி டாடியை சந்தோஷப்படுத்தத்தான் மத்தபடி எனக்கும் உங்களை மாதிரியே ஜாதி, சடங்குகள்ல நம்பிக்கையில்லைஎன்றபடி மம்மியின் மடிசாருக்குள் போய் ஒளிந்துகொண்டார்.


[ அப்ப ரெண்டு ஜாதி வழக்கப்படியும் தாலியக்கட்டி முடிச்ச உடனே, மூனாவதா, அய்யா சுபவீரபாண்டியன், அண்ணன் அறிவுமதி தலைமையில ஒரு சுயமரியாதைக் கல்யாணமும் பண்ணிக்கிட்டாதான் நீங்க சொல்றதை நம்புவோம் பிரசன்னா அய்யர்வாள் ]

No comments:

Post a Comment