Friday, April 27, 2012

அண்ணிகள் காஜலும்,சமந்தாவும், பின்னே அண்ணன் சண்முகபாண்டியனும்….டந்த வாரம், முதல்முறையாக, ஒரு பதிவு கூட எழுதாத வாரம்.

வாரத்துக்கு ஒரு மூன்று பதிவுகளாவது எழுதிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஏனோ அது நடப்பதில்லை.

சினிமா தவிர்த்து, கவிதைகளும், சமையல் குறிப்புகளும் எழுத ஆரம்பித்தால் இந்த கேப் குறைய வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.

‘அய்யய்யோ கவிதையா என்று யாரோ அலறும் குரல் கேட்கிறது. அலறல் அவசியமில்லை. ஒரு கழுதையை நீங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு ரசிக்கும்படி என் கவிதைகள் இருக்கும்.

என் ப்ளாக்கில்  ஒரு நூறு கவிதைகள் சேர்ந்தவுடன், தொகுப்பு போட அனுமதி கேட்டு வெகுமதியோடு நிற்பவர்கள் கியூவில் நீங்களும் நிற்பீர்கள்.[உ. ம். கீழே வருகிற பதிவில் இடம் பெறும் அண்ணன் சண்முக பாண்டியனுக்காக,சில வாரங்கள் முன்பு  நான் எழுதிய  பழைய  பதிவு ‘கோலிவுட்டை ஆளப்போகும் மண்ணே ]
 
கேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியனார்  எப்படா திரைத்துறைக்குள் வருவார் என்று தவியாய்த் தவிக்கும் உள்ளங்களுக்கு, உங்கள் தாகத்தை அரைகுறையாய்  அடங்கவைக்கும் ஒரு குட்டியானைசெய்தி.[நான் டைப் பண்ணும்போது குட்டியான என்றுதான் அடித்தேன்.அது என்னவோ குட்டியானை என்றே வருகிறது.இதுல டபுள் மீனிங் எதுவும் இல்ல ,அண்ணே மன்னிக்கனும்.]

அண்ணன் பன்முகப்பாண்டியனுக்காக, கோடம்பாக்கத்தின் முக்கால்வாசி ஜனத்தொகைகளிடம் கதை கேட்டும் எதிலும் திருப்தி அடையாத கேப்டன், சில தினங்களுக்கு முன்பிருந்தாவனம்என்ற தெலுங்குப்படத்தின் ரீ மேக் உரிமையை ரகஸியமாக வாங்கி  வைத்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், 2010 ல் ஆந்திராவில் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய அந்தப்படம் தனது வாரிசுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்த கேப்டன்,படம் ரீமேக் தானே என்பதால் முதலில் படத்தை தானே இயக்கிவிடலாம் என்று முடிவு செய்திருந்தாராம்.

இதைக்கேட்டு கொதித்துப்போன இளைய கேப்டன்,பழைய கேப்டனைப்பார்த்து, நாக்கைத்துருத்தியபடியே,’’ஏற்கனவே நீங்க எடுத்த வறுத்த கறியைசாப்பிட்டு அஜீரணத்துல ஆஸ்பத்திரியில அட்மிட் ஆன, ஒரு ஆயிரம்பேர் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகாம இருக்காங்க. நாமல்லாம்  நடிச்சா யாரு பாப்பாங்கன்னு டவுட்டுல,வவுத்துல நெருப்பைக்கட்டிக்கிட்டு அலைஞ்சிக்கிட்டிருக்கேன். அதுல உங்க டைரக்‌ஷனும் சேர்ந்தா, படம் ரிலீஸாகுற சமயத்துல நம்ம ரெண்டுபேரு மேலயும் ஏகப்பட்ட கொலை, தற்கொலைப்பழிகள் விழ வாய்ப்பிருக்கு. அதனால ரீமேக்கை வாங்கி விட்டமா, கட்டிங்கைப்போட்டமா கவுந்து படுத்தமான்னு கம்முன்னு கிடங்கஎன்று கேப்டனை பதில் பேசவிடாமல் கேப் டவுன் ஆக்கிவிட்டாராம்.

தான் அறிமுகமாகப்போகும் பிருந்தாவனம்படத்தை பலமுறை பார்த்த சண்முகப்பாண்டி அண்ணனுக்கு சின்னதாக ஒரு சபலம்.

அதை வெளியில் சொன்னால் அண்ணன் வன்முகப்பாண்டியாக மாறி, என்னை ஆள் வைத்து அடித்தாலும் அடிப்பார். இருந்தாலும்,அடிதடி இல்லாத அண்ணன் தம்பி உறவு ஒரு உறவா என்று என்னை நானே கலவரப்படுத்திக்கொண்டு சொல்கிறேன்.
 
பிருந்தாவனத்தின் ஒரிஜினலில், ஜூனியர் என்.டி.ஆரின் ஜோடிகளாக, தற்போது தமிழில் நம்பர் ஒன்,டூ நடிகைகளான காஜல் அகர்வாலும், சமந்தாவும் நடித்திருந்தனர். அந்த இருவருமே தனக்கு ஜோடியாகக்கிடைத்தால் நல்லது என்பதுதான் சின்ன கேப்டனின் சின்னத்தனமான சபலம். 

 படம் பார்க்கும்போது, ஜூனியர் என்.டி.ஆரை டெலீட் செய்துவிட்டு அந்த இடத்தில் தன்னை நினைத்துக்கொண்டு மேற்படி அண்ணிகளோடு ஆசை ஆசையாய் வாழவே ஆரம்பித்துவிட்டாராம்.

அதை கேப்டனிடம் சொல்ல பயந்து, தங்கள் நிறுவனத்தில் நீண்ட காலமாக புரடக்‌ஷன் மேனேஜராக இருக்கும் மல்லியம்பட்டி மாதவனின் காதைக்கடிக்க, ‘இந்தா ஒரு பத்து நிமிஷத்துல பேசிட்டு வந்துர்றேன் தம்பி’ என்று போன மாதவன், சண்முக பாண்டிக்காக சமந்தாவிடமும், காஜல் அகர்வாலிடமும் கால்ஷீட் கேட்டு, அதை ஒட்டி  நடக்கவிருக்கும் ஏழரையை சந்திப்பதற்குப்பதில்,’பேசாம, இதோட நம்ம ரிடயர்மெண்டை அறிவிச்சிட்டு, மறுபடியும் தன் சொந்த ஊரான மல்லியம்பட்டிக்கே குடியேறிவிடலாமா’ என்று யோசிப்பதாக தகவல்.

ஷூட்டிங்  நடக்கிற தருணங்களில் அந்த ஏரியாவில் அரை பர்லாங்கு தூரம் தள்ளியிருப்பவர்களைக்கூட அழைத்து வந்து சாப்பாடு போடக்கூடிய புண்ணியவான் இந்த மல்லியம்பட்டி.

மேற்படி நியூஸை, முதன்முதலாக வெளியிட்டவன் என்ற முறையில், இதைப்படிக்க நேரும் சமந்தாவோ, காஜல் அகர்வாலோ  சினிமா நியாயதர்மங்களுக்கு கட்டுப்படாமல், சட்டத்துக்கு புறம்பாக எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் நான் பொறுப்பல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே சமயம் சூர்யா,விஜய் ,ஜீவா போன்றவர்களுடன் ஜோடி சேர்வது மட்டும் நடிப்பல்ல. அண்ணன் சண்முகப்பாண்டியன் கூட டூயட் பாடவும் எங்களுக்குத்தெரியும் என்று காட்டுங்கள். அப்போதுதான்  உங்களை பன்முகம் கொண்ட நடிகைகளாக எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியும் என்பதை சற்றே சஞ்சலத்தோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அண்ணே, பாண்டியண்ணே, நானும் மதுரைக்காரன்தாண்ணே. உங்களையெல்லாம் அவ்வளவு லேசுல விட்டுக்குடுத்துருவமா?

ஒரு’ சன்’: குறிப்பு : மேற்படி அண்ணிகளோட படத்துல குடும்பம் நடத்தப்போறாரோ இல்லையோ, இப்போதைக்கு புகைப்படத்துலயாவது நடத்தட்டும்னு நெனச்ச என்னோட ஆசைக்கு வடிவம் தந்த நண்பர் கமாலுக்கு நன்றி.

9 comments:

 1. என்னது...காஜல் அப்புறம் சம்ந்தாவா...இனி இதுக்கு அப்புறம் நடிப்பாங்க,,,?

  ReplyDelete
 2. அண்ணனுக்கு இந்த மாதிரி அண்ணி கிடைக்கிறது மாதிரி தெரியலை ஏதாவது பன்....(இதற்க்கு மேல் சென்சார்) கிடைக்குமானு பாருங்க‌

  ReplyDelete
 3. அண்ணே ஏன் எப்பவுமே டெரராவே இருக்காரு இப்படி இருந்தா எப்படி அண்ணிகளுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகும்

  ReplyDelete
 4. அண்ணே, உங்க பதிவ பாக்காம ஒரு வாரமா தவிச்சுப் போய்ட்டேன்னே. சண்முகப் பாண்டியன் நவரசத்தையும் காட்றார்னே. பொன்னுங்க கூட இருக்கும் போது அவர் முகத்துல தெரியும் ரொமான்ஸ் களை அப்படியே கண்ணப் பறிக்குதுன்னே.

  ReplyDelete
 5. நண்பர் கமால் அருமையான வேலை செஞ்சிருக்கார்னே.

  ReplyDelete
 6. எங்கே போட்டோ ஷூட் முடிஞ்சிருச்சோன்னு ..... பயந்து....ஜன்னி... ஷ்ஷ் கமால் என்ற வரியைப்படித்தவுடன் தண்ணி குடிச்சி தெளிஞ்சிட்டேன். அம்மா, மாரியாத்தா காப்பாத்திட்டம்மா

  ReplyDelete
 7. இந்நேரம் வீட்டுக்கு ஆட்டோ வந்திருக்குனுமே???

  ( தப்பிக்கும் வழியை வடிவேலுவிடம் கேளுங்கள்)

  ReplyDelete
 8. அண்ணே இதை அவரு படிச்சுட்டு

  கண்ணு சிவக்க ஆரம்பிசிடுசாம்

  ஜாக்கிரதை

  ReplyDelete
 9. தல...நான் கூட எதோ பாக்க கூடாத படத்த பாத்துட்டு மயக்கத்துல இருகீங்கலோனு நெனச்சேன்...Back to form...சமந்தா ...சமந்தா......
  இந்த வீக் நிறைய எதிர்பாக்குறேன் உங்ககிட்ட...குறிப்பா நம்ம ஜூனியர் படம்...

  ReplyDelete