Sunday, July 1, 2012

கோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன், அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகால்லாம் வெடவெடன்னு நடுங்க ஆரம்பிச்சிருச்சி. இப்ப என்னடான்னா பாரதிராஜாவும் இங்கதான் வந்து
படமெடுக்கப்போறேன்னு எங்கள படபடப்புக்குள்ளாக்குறாங்க.  இன்னொருத்தரு பேரு என்னவோ டங்கர் பச்சானோ, டங்குவாரு அத்தானோ அவரும் இங்கதான் கிளம்பி வர்ற மூட்ல புதுசா டவுசருல்லாம் வாங்கி அடுக்குறாராம். இதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா நீங்கதான் சொல்லனும்’’


அமெரிக்கநேரம் அதிகாலை ஐந்துமணி. அந்த ஹாலிவுட் சாமியார் அரைபோதையில் கண்ணைத்திறந்தபோது, ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ஜேம்ஸ் கேமரூன்,  ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், டிம் மார்ட்டின், கிறிஸ்டபர் நோலன் டேவிட் பிஞ்சர், ஜார்ஜ் லூகாஸ், மார்ட்டின் ஸ்கார்சிஸ், ரைட்லி ஸ்காட், ஜோயல் சியான்,டேன்னி பாயல்,  டாம் ஹாங்ஸ், மெல் கிப்சன், என்று ஒரு பெரும்பட்டாளமே கண்களில் மரண பயத்தை காட்டியபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
 

‘’ஆஹா என்னைக்குமே இந்தப்பக்கம் எட்டிப்பாக்காத பயலுக எல்லாம் ஒண்ணுகூடி வந்திருக்கீங்கன்னா மேட்டர் கொஞ்சம் சீரியஸாதான் இருக்கும், ‘’ மார்ட்டின் மச்சான் ஒரு குவார்ட்டர் சொல்லு. மத்தவங்க எல்லாம் மனசுல ஏசு நாதரை வேண்டிக்கிட்டு மண்டிபோட்டு உக்காருங்க’’ என்றபடி ஹாலிவுட்டின் சினிமா ஜாதகத்தை வாங்கிப்புரட்ட ஆரம்பித்தார் அந்த குவார்ட்டரோ டி பீரோ என்ற சாமியார்.

‘’பொதுவாவே உங்க ஹாலிவுட் சினிமாவ ஏழரை நாட்டு அஷ்டமச்சனி புடிச்சி ஆட்ட ஆரம்பிச்சிருச்சின்னுதான் சொல்லனும். ஏன்னா வர்றவங்க அவ்வளவு சாதாரண ஆளுங்க கிடையாது

ஒருத்தரு சப்பாணியா இருந்து ஃபியூச்சர்ல சண்டியரா மாறுனவரு. இன்னொருத்தரு நல்ல வலுவான சண்டியரா இருந்து இப்ப சப்பாணியானவரு.

மூனாவதா சொன்னீங்களே ஒரு இது. அது ஒரு பத்து பலாப்பழத்தை உரிக்காம அப்பிடியே முழுங்கிட்டுஅய்யோ தமிழனா பொறந்த ஒரே காரணத்துக்காக நான் பட்டினியா கிடக்கனுமான்னு வெட்டி ஞாயம் பேசும்.

   
சனி பகவான் இரண்டரை வருஷத்துக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். வாக்கிய ரீதியாக  அவர் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு பெயர்ச்சியடைந்த நேரத்துலதான் கமலுக்கு ஹாலிவுட்ல படம் எடுக்கனும்ங்கிற ஆசை வந்துருக்கு
 

கமலோட பார்வை, நீச்சவீடான மேஷம் மீது விழுகுது.  உச்சம் பெற்ற கிரகம் ,அதாவது நம்ம கமல், நீச்ச வீட்டை பார்க்கும்போது, அதாவது நம்ம ஹாலிவுட்டைப்பார்க்கும்போது, நீச்சவீடு நாசமாப்போகும் என்பது ஜோதிட விதி.

சுவாமிகள் அதுக்குதான உங்கள தேடி வந்துருக்கோம்.எங்களுக்கு பரிகாரம் சொல்றத விட்டுட்டு பரிகாசம் பண்றீங்களே?’’

‘’மனசுக்குள்ள ஏசுவை பிரார்த்தனை பண்ணிக்கிட்டு சைலண்டா இருங்க. யாரும் குறுக்க பேசப்புடாது’’

டைரக்டர் மார்ட்டின் ஸ்கார்சிஸ் வாங்கி வந்த குவார்ட்டரை அப்படியே ராவாக குடித்துவிட்டு, சைடிஷுக்கு டேவிட் பிஞ்சரின் புறங்கையை சற்று நக்கியபடி தொடர்கிறார் சுவாமிகள்.

’’கமல் மேட்டர்ல கூட அவ்வளவு ஆபத்து இருக்கிறமாதிரி தெரியலை. நம்ம ஊர்ல அத்தனை டி.வி.டி. கடைகளையும் ஆசிட் ஊத்தி கொளுத்தப்போறொம்னு சொன்னா, ப்ளைட் டிக்கட்டை கேன்சல் பண்ணிட்டு பின்வாசல் வழியா பின்லாந்துக்கு ஏதாவது ஒரு ஃபிகரை பிக் அப் பண்ணிக்கிட்டுப்போயிருவார்.

ஆனா இந்த பாரதிராஜா முடிவுல ஒரு விஸ்வருப பயங்கரவாதம் தெரியுது. டங்கர் மச்சான் முடிவுல ஏதோ ஒரு டகால்ட்டி வேலை தெரியுது.

துலா ராசியில் சஞ்சாரம் செய்யிற சனி பகவான்  செவ்வாய் கிரகத்துக்கு உரிய சித்திரை 3,4 பாதங்களயும் ராகுவின்  நட்சத்திரமான சுவாதியிலயும்,  சஞ்சாரம் செய்யிறதால, இவிங்க ஹாலிவுட் சினிமாவையே பஞ்சராக்கப்பாக்குறாய்ங்க.

ரெண்டு மாசத்துக்கு முந்தி, தேனியில,’அன்னக்கொடியும் கொடிவீரனும்ஷூட்டிங்ல இருந்தப்ப சனி இவரை கொஞ்சம் உக்கிரமா தாக்குனதுல, நாம ஹாலிவுட்ல படம் பண்ணப்போறது அக்கிரமம்னு தெரிஞ்சும் இவ்வளவு வக்கிரமா மாறிட்டாரு.’’

ஒரு மாசத்துக்கு முந்தி நெய்வேலியில அம்மாவின் கைபேசிஷூட்டிங்ல இருந்தப்போ, யாரோ டங்கரோட கடலைமுட்டாய் ஒண்ணை களவாடிட்டு போயிட்டாங்க. அந்தக்கவலை அவரோட கபாலம் வரைக்கும் போயி, ‘ என் கடலைமுட்டாயை களவாண்ட தமிழனுக்கு இனிமே நான் படம் எடுக்க மாட்டேண்டான்னு முண்டாசு தட்டுறாராம்.
 

’’சுவாமிகள் ஜாதக விவகாரம் போதும். பரிகாரம் என்ன பண்ணனும்னு சொன்னீங்கன்னா, பண்ணவேண்டிய ஃபார்மாலிட்டிகளைப் பண்ணிட்டு அடுத்த வேலையை பாக்க்கிளம்பிடுவோம்’’ – பொறுமையிழந்து எழுகிறார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

ஸ்டீபனைத்தொடர்ந்து மற்றவர்களும் பொறுமை இழந்தவர்களாய் எழ ஆரம்பிக்க, இனி இவனுகளை வைத்துக்கொண்டு ஜல்லி அடிக்க முடியாது என்பதை புரிந்துகொள்கிறார் சுவாமிஜி.

‘’ சரி இவ்வளவு நேரம் பொறுமையா இருந்துட்டீங்க. இப்ப நான் கடைசியா சொல்லப்போறதையும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க.

இவங்க மூனுபேருமே ஹாலிவுட் வர்றதை தடுக்கிறதுக்கு, நான் தேடுன வரைக்கும் ஜாதக ரீதியா பரிகாரம் எதுவும் இல்லை.
 

உங்கள்ல மூனுபேர் உடனடியா சென்னைக்கு கிளம்பிப்போய், நாங்க இனிமே தமிழ்லதான் படம் இயக்கப்போறோம்னு பேட்டி குடுத்துப்பாருங்க. .ஒருவேளை உங்களுக்கு கைமேல பலன் கிடைக்கும்.
 
உடனே கிறிஸ்டபர் நோலன் இடைமறிக்கிறார்,’’ முள்ளை முள்ளாலதான் எடுக்கனும். பல்லை பல்லாலதான் உடைகனும்ங்குறீங்க.  அது ஓ.கே. சாமி.ஆர்டிஸ்டுகளுக்கு என்ன பண்றது?’’

சுவாமிகளுக்கு கோபம் கொப்பளிக்கிறது, ‘’ஹே ஹே ஹே.. குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டுற ஃபூல்ஸ் . கோடம்பாக்கம் ஆர்ட்டிஸ்டுகளோட சொர்க்கம்டா. பூவர் ஸ்டார், பவர் ஸ்டார்,எவர் ஸ்டார் அவ்வளவு நம்ம ட்வின் டவர் ஸ்டார் வரைக்கும் அங்க டேலண்டுகள் குவிஞ்சி கிடக்குதடா. ஒரு வெரைட்டி டைரி எடு. இவங்களோட மேனேஜர்கள விரட்டிப்புடி’’ என்று சாமியார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ், ஜோயல், ஸ்டீபன் உட்பட அனைவருமே சென்னை எண்ணைச்சுழற்ற ஆரம்பிக்கின்றனர்.
 ‘’ஹலோ திகில் முருகன் சாரா, நாங்கோ ஹாலிவுட் டைரக்டர்ஸ் டென் மெம்பர்ஸ் கமிங் டு யுவர் கோடம்பாக்கம். ப்ளீஸ் ஹெல்ப் அஸ் ப்ரதர்’’

9 comments:

 1. பிரமாதமான காமெடி சார்.. கலக்கிட்டீங்க..

  ReplyDelete
  Replies
  1. நன்றி. இந்த வாரம் விமர்சனம் எழுதுறதுக்கு படமே இல்லை.கடைசியில இந்த சவலைப்பிள்ளைக்கு இந்த சண்டியருங்கதான் மாட்டுனாங்க....

   Delete
  2. //விமர்சனம் எழுதுறதுக்கு படமே இல்லை//

   நெலம அப்டி ஆகிப் போசசா ...?

   Delete
 2. ஹாலிவுட் பத்து தலை இராவணன்கள், நம்மூர் கோலிவுட் வந்தாலும் பயப்படதேவையில்லை, ஆனால் நம்மூர் கோலிவுட் மும்மூர்த்திகள் ஹாலிவுட் செல்வதுதான் கிலியை ஏற்படுத்துகிறது.

  அவங்க படத்தின் பிரிவியூவை ஹாலிவுட்லே வைப்பாங்களா இல்லை கோலிவுட்தானா?. ஹாலிவுட்னா உங்களுக்கு ஜாலி.

  ReplyDelete
  Replies
  1. ஹாலிவுட் கூப்பிட்டுட்டு போயி நம்மள காலி பண்ணிட மாட்டாங்க?

   Delete
 3. நல்லாவே நையாண்டி பண்றீங்க!

  ReplyDelete
 4. பிரேம்: என்ன கொடும சார் இது!!!! கவுண்டமணி: அய்யோ ராமா…………, ஒபாமா: பாரதி ராஜாவுக்கு ஆஸ்கார், கமலுக்கு நோபல்!!! டங்கருக்கு என்ன குடுக்கறது????

  ReplyDelete
 5. அடுத்து பிரபுதேவாதான். ஒரு தெலுகு பாலகிருஷ்ணா படத்தோட டிவிடியோட போய் இறங்கிருவாரு ஹாலிவுட்ல! ஆனா ஒரு பிரச்னை அங்கேயும் அவருக்கு ஏதாவது பிகர் செட்டாகி பிரச்னையாகிடும்.

  ReplyDelete