Wednesday, July 11, 2012

‘ஆனாலும் ’ஐ’ காம்பினேஷன்ல என்னமோ ஒண்ணு குறையுதே பாஸ்?’
ஷங்கர்-விக்ரம்- ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூட்டணியில் ஸ்டார்ட் ஆகவிருக்கும் படத்தில் நேற்று இல்லாத மாற்றம் இன்று நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தால் படத்துக்கு நடந்த ஏற்றம் பற்றி அறியுமுன்,    ஒரு சிறு ஃப்ளாஷ்பேக்.
 
ஒரு படத்தை பிசினஸ் பண்ணுவதற்காக, எவ்வளவோ தகிடுதத்தங்கள் பண்ணினாலும், விநியோகஸ்தர்களிடமும் மீடியேட்டர்களிடமும் தொடர்ந்து டச்சில் இருப்பவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் . படத்தின் வியாபாரத்துக்கு என்னென்ன அயிட்டங்கள் வேண்டும் என்று அவர்களிடமும் அக்கரையோடு பேசி, அவர்களது கருத்தையும் கேட்டு, அதை தனது இயக்குனர்களிடம் கன்வே பண்ணுவார்.
ஷங்கர் படத்துக்கு பல நடிகர்களை அலசி கடைசியில் விக்ரமே விதி என்று ஆனபிறகு விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்களுடன் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நடத்திய உரையாடல்களை கேளுங்கள்.
ஷங்கர்- விக்ரம் காம்பினேஷன் எப்பிடியா இருக்கு?’’
ஓ.கே.தான் பாஸ். ஆனா உண்மையைச் சொல்லனுமுன்னா ஓ.கே. இல்ல பாஸ்’’
யோவ் இப்ப சொல்லுய்யா. ஹீரோயின் ஹாட் கேக் சமந்தா. இப்பதான் ஜஸ்ட் நவ் கமிட் பண்ணியாச்சி, ஹவ் இஸ் தேட்?’’
நல்ல சாய்ஸ் பாஸ். ஆனா என்னமோ குறையுது?’’
காதைப் பக்கத்துல கொண்டுட்டுவா’. இன்னும் ஷங்கர் சார்கிட்ட கூட சொல்லலை.  நீதான் முதல் ஆள்.  மியூசிக் ஏ.ஆர். ரகுமான், கமிடட். இப்பச்சொல்லுய்யா ஒரு 100 கோடிக்கு பிசினஸ் பண்ண முடியுமா?’’
சூப்பர் பாஸ். நீங்க நெனச்ச அமவுண்டுக்கு நெருங்கிப்பண்ணிடலாம், ஆனாலும் என்னமோ ஒண்ணு குறையுதே பாஸ்?’’
யோவ் இருந்தாலும் உங்க பேராசைக்கு அளவே இல்லையா? இதுக்காக நான் ஹாலிவுட்ல போயி ஏஞ்சலினா ஜோலியவா கூட்டிட்டு வரமுடியும்? சரி உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். அநியாயமா சம்பளம் கேட்ட சந்தானத்தையும் கூட கமிட் பண்ணியாச்சி. இதுக்கு மேல பெரிய காம்பினேஷன் இந்தியாவுலேயே கிடையாதுய்யா”’
பாஸ் ஏன் தேவையில்லாம டென்சன் ஆவுறீங்க? நாளக்கே படம் பெரிய பிசினஸ் ஆனா, மொத்தமா நீங்க கல்லா கட்டிக்கிட்டு,  எங்களுக்கு கமிஷனோ, கட்டிங்கோ தான தரப்போறீங்க? நீங்க கோவிச்சிக்கிட்டாலும் பரவாயில்லை. இப்பவும் சொல்றேன். இந்த காம்பினேஷன்ல என்னமோ குறையுது’’
 இப்படி சொல்லிவிட்டு, எதாவது வாய்க்கு வந்தபடி கன்னாபின்னாவென்று ஆஸ்கார் ரவி திட்டிவிடுவாரென்று பயந்து,  அந்த மீடியேட்டர் போனை கட் பண்ணியது மூன்று தினங்கள் முன்பு.
முனுக் முனுக் என கோபம் வந்தாலும், எதிலுமே அடுத்து அடுத்து என்று யோசிக்கக்கூடியவர் ரவி. நேராய் ஷங்கரின் அறைக்குள் நுழைகிறார்.
சார் நாம  செய்யவே யோசிக்காத பல சங்கதிகளையும் சேர்த்து எவ்வளவோ சொல்லியும், நம்ம படத்துல என்னமோ குறையுதுன்னு  ஒவ்வொருத்தனும் போனை வைக்கிறான். அது என்ன எழவுன்னு அவனுகளும் சொல்றதில்லை. எனக்கும் தோணலை.
ஒரு பாட்டுக்கு சீனப்பெருஞ்சுவர்கள் முழுக்க, ஓசியில வாங்கி  ஏசியன் பெயிண்ட் அடிக்கப்போறோமுன்னு கூட சொல்லிப்பாத்துட்டேன்.  என்னமோ குறையுதுன்றானுவ.
இன்னொரு பக்கம் நயாகரா அருவியில தண்ணிக்குப்பதில் ஓல்ட் மாங்க் ஓடப்போகுதுன்னு சொன்னா, சார் நாங்களும் வந்து ஓரமா உட்காந்து குடிச்சிக்கிறோம் சார்னு அடிச்சிக்கிட்டு சாவாங்கன்னு பாத்தா, அந்த மாதிரி ரியாக்ட் பண்ணாம,  ஆனா என்னமோ குறையுதுன்றானுவ.’’
வேற வழியில்ல சார். என்ன குறையிதோ அதை சரி பண்ணிட்டு ஷூட்டிங் கிளம்பலாம் சார். வேணும்னா ஒண்ணு செய்யலாம். அது என்னன்னு கண்டுபுடிச்சி சொல்ற அசிஸ்டெண்ட் டைரக்டருக்கு 5 பவுன்ல ஒரு செயினும், திருப்பதி லட்டும் பரிசா தர்றேன் சார்’’ என்றவுடன் ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் முகம் சட்டென்று பிரகாசமாகிறது.
சார் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எதிர்பாக்குற மேட்டர் என்னன்னு எனக்குத்தெரியும். மத்த அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லாரையும் வெளிய போகச்சொல்லிட்டு நீங்க ரெண்டுபேரு மட்டும் காதைக்குடுங்க’’
அவர் சொன்ன ஐடியாவைக் கேட்டவுடன் ஷங்கர் மற்றும் ஆஸ்கார் ரவியின் முகம் மலருகிறது.
‘’இண்டஸ்ட்ரியில டாக் பரவுறதுக்கு முந்தி காதும் காதும் வச்சமாதிரி போய் உடனே கமிட் பண்ணிட்டு வந்துருங்க’’ என்று அந்த அசிஸ்டெண்ட் டைரக்டருக்கு காதில் செயின் போட்டுவிட்டு கையில் லட்டு ஒன்றையும் கொடுத்தனுப்பிவிட்டு, விநியோகஸ்தர்களுக்கு போனைச் சுழற்ற ஆரம்பிக்கிறார் ரவி,
‘’ நீங்க எதிர்பாக்குற மேட்டர் என்னன்னு தெரிஞ்சி, அரைமணி நேரம் முன்னாடி அவரை கமிட்டும் பண்ணிட்டேன். ஆனா ஏரியா எதுவும் விலைக்கு தர்ற மாதிரி ஐடியா இல்லை. ஆல் ஏரியா நானே சொந்தமா ரிலீஸ் பண்ணப்போறேன். இனிமே ஆபிஸ் பக்கம் வந்தமா சிக்கன் பிரியாணியை தின்னமான்னு போய்க்கிட்டே இருக்கணும் புரிஞ்சதா?’ என்று எக்காளச்சிரிப்புடன் போனை வைத்தால்…. வாசலில் டோட்டல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பொட்டி நிறைய துட்டுடன் கியூவில் நிற்க, ‘ஆண்டவா இவிங்கள எப்பிடி சமாளிக்கப்போறேன்னே தெரியலையேஎன்று தனது தலைமீது கைவைக்கிறார் ஆஸ்கார் ரவி.
இடம்:   அவர் அலுவலகம். உலகின் அத்தனை தொலைக்காட்சி நிருபர்களும் பொறை சாப்பிட்டபடி பொறுமையாக காத்திருக்க, ஏறத்தாழ தனது உருவத்தை ஒத்த ஒரு டபாங் டாக்குடன் நிருபர்களுக்கு காட்சி அளிக்கிறார் அவர்..
சே வெக்கங்கெட்ட பயலுகளா எனக்கு வாங்கி வச்சிருந்த பொறைய வாயில நுரைதள்ள சாப்பிடுறீங்களேஎன்று நாய் நிருபர்களை தன்னிலும் கேவலமாக பார்க்க,
‘’யெஸ் நீங்க கேள்விப்பட்டதுல பாதி உண்மை இருக்கு. பாதி தவறான தகவல் இருக்கு.
ஆஸ்கார் பிலிம்ஸ்லருந்து பேசுறோம்ன உடனே நான் ஒரு ஹாலிவுட் கம்பெனின்னு நினச்சிட்டேன். அப்புறம்தான் நம்ம கோடம்பாக்கத்துல இருக்க கம்பெனின்னு தெரிஞ்சது.
ஷங்கர்-விக்ரம் காம்பினேஷன்ல ஒரு முக்கியமான ரோல் பண்ணனுமுனு கத்துறாங்க.கதறுறாங்க.
நம்மள ஸோலோ ஹீரோவா பாத்து சொக்கிப்போன ஜனங்க மனசு மக்கிப்போயிடக்கூடாதில்லையா. அதனால கொஞ்சம் யோசிக்க டைம் கேட்டிருக்கேன்.’’
, வேட்டியை மடித்துக்கட்டியபடி,  மீடியாவுக்கு பேட்டியை ஆரம்பிக்கிறார் பவர்ஸ்டார்.
 


5 comments:

 1. ஹா ஹா ஹா இது உண்மையா நடந்தா கூட ஆச்சரியப்படுறதுக்கு ஏதுமில்லை, ஏன்னா பவர்ஸ்டாரோட பவர் அப்படி

  ReplyDelete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 3. இது கேள்விபட்ட செய்திதான் .. ஆனாலும் நல்ல காமெடியா சொல்லிருகிங்க

  ReplyDelete
 4. ஹா! ஹா! நல்ல கற்பணை!

  ReplyDelete
 5. சாவடிக்கிறாங்களே....


  பழைய மேட்டரா பாஸ், சமந்தாவுக்கு தோல் வியாதி, 3 மாசத்துக்கு ஹை வோல்ட் லைட் பக்கமே வரக்கூடாது, அதனால படத்திலிருந்து விலகல்னு ஒரு சேதி படிச்சேனே, பொய்யா?

  ReplyDelete