Saturday, September 1, 2012

விமர்சனம் ‘முகமூடி’- உடனே டிஸ்போஸ் பண்ணவேண்டிய டெட்பாடியூ.டி.வி. மோசம் போன பிக்ஷர்ஸ் நிறுவனத்தினரால் செய்தித்தாள்களில் இன்று தரப்பட்டுள்ள விளம்பர வாசகங்களின்படி, உலகம் முழுவதும் வசூல் ரெகார்டுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும்முகமூடிபடத்தின், நேற்றைய முதல் காட்சியினை [காலை 10.30] வத்தலக்குண்டு கோவிந்தசாமி தியேட்டரில் பார்த்தேன்.

முதல் நாள், முதல்காட்சி. அதுவும் மிஷ்கின் படம். டிக்கட் கிடைக்காத பட்சத்தில், உள்ளூரில் இருக்கும் அண்ணன் ஒருவரின் செல்வாக்கைப்பயன்படுத்தி நின்றுகொண்டாவது பார்த்துவிட வேண்டுமென்பது எனது திட்டம்

தியேட்டரை நான் அடைந்தபோது மணி 9.55. இடம் மாறி வரவில்லை என்பதை போஸ்டர்களும், பேனர்களும் உறுதிப்படுத்த, அங்கே மொத்தம் என்னையும் சேர்த்து கூடியிருந்த கூட்டம் பத்துப் பேரைத்தாண்டவில்லை.

சுமார் 10.30 க்கு கவுண்டரைத் திறந்து டிக்கட் தந்து 11 மணிக்கு படம் துவங்கியபோது, குழுமியிருந்த என்னைப்போன்ற இளிச்சவாயர்களின் எண்ணிக்கை மொத்தம் 47. [தனஞ்செயன் சார் டி.சி.ஆரை கரெக்டா செக் பண்ணிக்குங்க ]

டிக்கட்டின் விலை ஃப்ளாட்டாக அறுபது ரூபாய். பி.ஆர்.சி பஸ் டிக்கட்டையும் விட மினி சைஸில்,’அட்வான்ஸ் டோக்கன்என்று எழுதப்பட்டுமாற்றத்தக்கதல்ல. வாபஸ் கிடையாதுஎன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கு இணையான டிக்கட்  அது.

எதிர் வரிசை, லெப்ஃட்,ரைட்டு என்று எந்தப்பக்கம் வேண்டுமானாலும் காலைத்தூக்கிப்போட்டுதியேட்டருக்குள்ளேயேதம்பத்தவைத்துக்கொண்டு பார்க்க வாய்த்த  அனுபவம் மனதில் சற்றே மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தவேளையில்,அட்டனக்கால் போட்டு அமர்ந்தபடி, ஆறுமாத கேப்புக்குப்பிறகு ஆசையாய் நானும்  ஒரே ஒரு சிகரட் பற்றவைத்தவேளையில், சனியன் பிடித்தமாதிரி படத்தைப்போட்டுத்தொலைத்தார்கள்.

அறிவுஜீவிகளை விட்டுத்தள்ளுங்கள். அவர்களை மெய்யாலுமே அறிவுஜீவியாய் படைத்ததை விட பெரிய தண்டனையை ஆண்டவன் இனிமேல் நினைத்தால்கூட தந்துவிட முடியாது. ஆனால் அறிவுஜீவி மாதிரி நடித்து தன்னையும் சித்திரவதை செய்துகொண்டு, மற்றவர்களையும் சித்திரவதை செய்கிறார்களே, அவர்களை என்ன செய்வது என்பது குறித்து பாமர ஜனங்கள் உடனே பொசோமாநாடு மாதிரி ஏதாவது கூட்டினால்தான் நாம் மிஷ்கின் போன்றவர்களிடமிருந்து தப்பிப்பிழைக்க முடியும்.

குழப்பமாக இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் இன்னும்முகமூடிபார்க்காத, கொடுத்துவைத்த புண்ணியவான்கள்.

முகமூடியின் பூஜையில் துவங்கி, ரிலீஸுக்கு மூன்று தினங்கள் முந்தி வரை, படத்தின் தயாரிப்பு இன் சார்ஜ் தன்ஞ்செயனும், இயக்குனர் மிஷ்கினும், படம் பற்றி பீத்திய பெருமைகளைக் கேட்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

ஜீவாவுக்கு தயார் பண்ணின முகமூடி இதுவரைக்கும் உலக சினிமா பார்த்ததில்லை. அதைப்போட்டு அவர் நடிச்சப்ப, யுனிவர்சல் லெவல்ல வேற யாருக்கும் இந்த அளவுக்கு வேர்த்ததில்லை.

ஃபைட்டுக்கு மட்டும் சைனாவுலருந்து, புரூஷ்லீயை புதைச்ச இடத்துலருந்து தோண்டி எடுத்துட்டு வந்தோம். வில்லன் நடிப்புல நரேன், 120 ஃபீட் கிரேன் அளவுக்குப் போயிட்டார்

இப்படி வகைதொகையில்லாமல் மீடியாக்கார்ர்களிடம் பூ சுற்றினார்கள் இருவரும்.

கதை என்னவென்று சொன்னால் அடிக்கவருவீர்கள். உங்களுக்கும், எனக்குமிடையில் சட்டை கிழியுமளவுக்கு சண்டை வரும். ஆனால் என்ன செய்வது வடிவேலு பாணியில் சண்டையில கிழியாத சட்டை ஏது என்று வழக்கம்போலவே சமாதானமாகப்போகவேண்டியதுதான்.

கதாநாயகன் ஜீவா, வழக்கம்போல வேலவெட்டி, வெட்டிவேல எதுவும் இல்ல்லாத தண்டச்சோறு. அப்பா எப்போதும் அவரை கரித்துக்கொட்டினாலும், வீட்டில் இருக்கிற இரண்டு தாத்தாச்சோறுகள் அவரை சப்போர்ட் பண்ணுகிறார்கள்

அவர் செல்வா மாஸ்டரிடம் குங் பூ கற்றுக்கொள்கிறார்.

சென்னைப்போலீஸை வெண்ணையாக நினைத்து, நரேன் என்ற முகமூடி கொள்ளைக்காரன் கொலை, கொள்ளை என்று அட்டகாசம் புரிகிறான்.

இதைதுப்புத்துலக்குவதற்காகவே நியமிக்கப்படும் கமிஷனர் நாசர், கையைப்பிசைந்துகொண்டு நிற்க,[ இந்தப்பிசையலை சப்பாத்திமாவுல காட்டுனீங்கன்னா, ஒரு கூட்டுக்குடும்பம், ஒரு வாரத்துக்கு குத்தவச்சி சாப்பிடலாம்] பஞ்சத்து முகமூடி ஜீவா, பரம்பரை முகமூடி நரேனின் கதையை முடிக்கிறார்.

சரி, ஜீவா நரேனோட கதையை முடிச்சது இருக்கட்டும், நீங்க இன்னும் படத்தோட கதையை சொல்லவேயில்லையே? என்று கேட்கவிரும்புபவர்கள், அப்பாவி என்னை விட்டுவிட்டு,  டிஸ்கசன் என்ற பெயரில் பல லட்சங்கள் பில்லைப்போட்ட மிஷ்கினின் சட்டைக்காலரைப்பிடிக்கவும்.

இதில் இன்னும் வெறி ஏத்தும் இன்னொரு தகவலை விட்டுவிட்டேன். பட்த்தின் நாயகி பூஜா, கமிஷனர் நாசரின் பொண்ணு என்று புதுசாய் சீன் பிடித்திருக்கிறார்கள்.

முகமூடிஎன்றாலே நைட் எஃபெக்ட் தான் சரியாக இருக்கும் என்று வேறொரு எஃபெக்டில் இருந்தபோது மிஷ்கின் எடுத்த முடிவின் விளைவாக, படம் முழுக்க கையில் தீப்பெட்டி கூட இல்லாமல் வீரப்பன் காட்டில் நள்ளிரவில் மாட்டிக்கொண்ட அவஸ்தை. சத்யா மிஷ்கினோட தொடர்ந்து வேலை செய்யிறது ஆபத்யா.

இசை கே. பார் சாங் தவிர்த்து படம் மொத்தமும்  ஒரே ஜார்ராக இருக்கிறது. தமிழில்கோஎன்றால் அரசன் என்று ஒரு அர்த்தம் இருப்பது மாதிரிகேஎன்றால் கேட்கக்கூடிய இசை என்று எழுத ஆசையாக இருக்கிறது. .கே சொல்லும்படி என்றாவது நிறைவேற்றுவீர்களா கே?

முகமூடியை அணிந்து நடித்த்தன் மூலம் இந்தப்பட்த்தில் , ஜீவாவுக்கு அவரதுஜாவாஅடிவாங்கியதுதான் மிச்சம்.

நாயகி பூஜா ஹெக்டே. கொத்தவரங்காய்க்கு கைகால், மற்ற சமாச்சாரங்கள் முளைத்தவர் போலவே இருக்கிறார்.

இவருக்கு பட்த்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்று எழுதினால், வேறு யாரோ நடித்திவிட்டார்கள் போல என்ற தப்பர்த்தம் வந்துவிடும் என்பதால், அதை நாம் தவிர்க்கிறோம்.

நாசர்,கிரீஷ் கர்னாட், செல்வா மற்றும் டைட்டில் கார்டில் இடம் பெற்ற சில சைன டெக்னீஷியன்கள் விழலுக்கு இறைத்த வெந்நீர்.

சித்திரம் பேசுதடிஅஞ்சாதேபோன்ற சுமாரான படங்களை இயக்கிய மிஷ்கின் கழுதை தேய்ந்து மிஷ்கின் ஆன கதையாக, யுத்தம் செய்நந்தலாலாவழியாக இறங்கி, இனி வெளியே தலை காட்ட முடியாமல் தனக்குத்தானே முகமூடிபோட்டுக்கொண்டு அலைய வேண்டிய நிலைமைக்கு கொண்டுவந்திருக்கும் படம்.

ஒரு கொடூர பின் குறிப்பு

 எப்படிப்பட்ட விபரீதங்களும் அரங்கேறக்கூடிய இடம் கோடம்பாக்கம். ஆகையால் இதற்குப்பிறகும் ஏதாவது ஒரு தயாரிப்பாளர், மிஷ்கினுக்குப் படம் தர முயற்சிக்கும் நிலையில், அந்தத்தயாரிப்பாளருக்கு தமிழ் சமூகம் வேண்டிவிரும்பி வைக்கும் மூன்று கோரிக்கைகள்.

1.   சி.டி. டி.விடி. போன்ற ரவுண்ட் சைஸில் இருக்கும் எதையும் மிஷ்கின் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனது உதவியாளர்கள் மூலமாகவோ தீண்டக்கூடாது.

2.   தயவு செய்து கதைகேட்கும் முன்பே வரிடம் இருக்கும் கூலிங் கிளாஸை பறிமுதல் செய்து, படம் ரிலீஸான மறுநாள் தான் திருப்பி தரப்படும் என்று அட்லீஸ்ட் பத்துரூபாய் பாண்ட்பேப்பரில் எழுதிவாங்குங்கள்.

3.   படம் துவங்கி முடியும் வரைஸ்டார்ட், கட்சொல்வது, சாப்பிடுவது தவிர வேறு எதற்கும் வாயைத் திறக்கக்கூடாது.

ஆமென்.

2 comments:

 1. //நாயகி பூஜா ஹெக்டே. கொத்தவரங்காய்க்கு கைகால், மற்ற சமாச்சாரங்கள் முளைத்தவர் போலவே இருக்கிறார்.//

  அந்த "முளைத்த"சமாச்சாரங்கள் பற்றிய மேலதிக விவரங்கள் கொடுக்காமல் இதென்ன விமர்சனம். :-))

  வத்தல "குண்டு'வில் படம் பார்த்துவிட்டு கொத்தவரங்காய் தான் கண்ணுக்கு தெரிந்ததா,"குண்டு" தக்காளி எல்லாம் நியாபகம் வரலையா? :-))

  தொப்புள் என்ன வடிவம்,நீள,அகலம் எல்லாம் வர்ணித்து எழுதவோ,வளைவு,நெளிவு கோணங்கள் பார்க்கவோ இன்னும் கற்றுக்கொள்ளவில்லையா:-))


  போங்க பாஸ், உங்களை எல்லாம் கட்டிப்போட்டு மிஷ்கினின் முகமூடியை ஒரு வாரம் பார்க்க வைக்கணும் :-))

  ReplyDelete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyagam.com/vote-button/

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete