Thursday, September 13, 2012

போறாளே பூனம் பாண்டே போகுற போக்கில் ட்விட்டரை விட்டு…

இன்று காலை, ஒரு தினசரியில், பூனம் பாண்டே ட்விட்டரை விட்டு வெளியேறப்போவதாக விட்டிருந்த எச்சரிக்கையைப் படித்தவுடன் எனக்கு சோறே இறங்கவில்லை

தோசை மாவு பிள்ளைகளுக்கு மட்டும்தான் பத்தும். நீங்க வேணும்னா பொடி நடையா போயி, ஒரு வடைய வாங்கிட்டு வந்து இருக்க பழைய சோறை கொட்டிக்கிட்டுப்போங்க

தற்செயலாக மனைவியிடமிருந்து இப்படி ஒரு இன்சல்ட்டும் கலந்துகொள்ள, நான் சாப்பிடாமல்தான் வீட்டைவிட்டு கிளம்பினேன்.

வெறும் வயிறோடு இருந்தால் எனக்கு எப்போதுமே, கண்ணு கட்டும், கவிதை கொட்டும். அதைப்படிக்கிறதுங்கள்லாம் என்னைத்திட்டும்.

 


எனவே இதுகாறும் ட்விட்டரில் வாலிப வயோதிக அன்பர்களை தனது கிளுகிளுப்பான மற்றும் வளுவளுப்பான படங்களால் குஷிப்படுத்திக்கொண்டிருந்த பூனம் பாண்டேவுக்குகருத்தம்மாவில் ராஜ்யஸ்ரீக்காக [?] நான் வய்யிறமுத்து எழுதிய ராகத்தில் ஒரு பாடலைப் புனைய முயன்றிருக்கிறேன்

இதை ராகம் போட்டு பாடாமல், வெறும் வசனம் போல் படிப்பது, பூனம் உள்ளத்துக்கு நீங்கள் ஏற்படுத்தும் ஊனம்.
 
போறாளே பூனம் பாண்டே, போகிற போக்கில் மனச தொட்டு
படம் காட்டி பழக்கப்பட்ட ட்விட்டரை விட்டு

போறாளே பூனம் பாண்டே பொசைகெட்டு திசையும் கெட்டு
ஃபேக் ஐடி ட்விட்டனுகளுக்கு கட்டுப்பட்டு

வெள்ளாமை நீதான்
வெள்ளாடு நாங்கதான்
வெக்கத்தை ட்விட்டுத்தள்ளம்மா


ஃபேக் டி திறந்து
உன் பிட்டுப்படம் போட்டா
சட்டப்படி சுட்டுத்தள்ளு
பட்டணத்து பூனம்மா [ போறாளே ]


மேற்கொண்டு தொடர்ந்தால் கவிப்பேரரசுவின் வன்முறைப்படைகிடை எதாவது கிளம்பி வந்து நம்மை வகுந்து விடுவார்களோ என்ற பயம் வருகிறது. எனவே பாண்டேவின் பிரச்சினையை உரைநடையிலேயே உராய்வோம்.

சமயலறை, பூஜையறை தவிர்த்து மீதி எல்லா அறைகளிலும் எடுத்த போட்டோக்களை வஞ்சனையின்றி வழங்கி வந்த பூனத்துக்கு ட்விட்டரை விட்டு கோபமாக வெளியேறும் அளவுக்கு என்ன பிரச்சினை

தன் பெயரில், ஃபேக் ஐடிஎனப்படும் போலி அக்கவுண்டர்கள் நிறைய உலாவி, இவரை மூட்-அவுட் செய்கிறார்களாம். அதுவும் கொஞ்சநஞ்ச போலிகள் அல்லர் .சுமார் 700 பூனம் பாண்டேக்கள்.
இவர் தனது நிர்வாணப்படத்தை போட்ட அடுத்த சில நொடிகளில் அவர்களும் போட்டுவிடுகிறார்களாம்.

 

‘’இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க, யுவகிருஷ்ணா,அதிஷா உட்பட யாருமேயில்லையா? [ஒருவேளை அந்த 700மே அவிங்க வேலைதானோ?]  என் படத்தை நான் மட்டும்தானே நிர்வாணமாக வெளியிட முடியும்.அந்த உரிமையை போலி அக்கவுண்டர்களுக்கு யார் கொடுத்தது?  எனவே இதற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டே நான் ட்விட்டரை விட்டு வெளிநடப்பு செய்கிறேன். மவனுகளே காய்ஞ்சி கெடங்க’’   இதுதான் சங்கதி

அதுசரி, ’ஐயா எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகனும்பாணியில கேக்குறேன். இப்ப இந்த அளவுக்கு ஒரு டகால்டியான ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ட்விட்டரை விட்டு வெளியேறுறது ஒரிஜினல் பூனம் பாண்டேதான்னு நாங்க எப்பிடி தெரிஞ்சிக்கிறது?/ 

போறது போறீங்க. அதை ஸ்ட்ராங்கா நிரூபிக்கிற மாதிரி டபுள் ஸ்ட்ராங்கா ஒரு ஸ்டில்லை வெளியிட்டுட்டுப்போங்க

அடியேனோட வேண்டுகோள் சரிதானுங்களே?

1 comment:

  1. இது ரொம்ப முக்கியமாகும்....வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete