Monday, January 28, 2013

‘பரதேசி’ படத்தை எங்களுக்குப் ‘போடாமல்’ ரிலீஸ் பண்ணக்கூடாது’- பிச்சைக்காரர்கள் பெக்கிங்




மேட்டர் கொஞ்சம் சிக்கலா இருக்கு.அதனால கோர்ட்டுக்கு வெளிய நீங்களே போய்ப்பேசித் தீத்துக்கங்கஎன்று நீதிபதியே கமலுக்கு, ’கட்டப்பஞ்சாயத்தே மேல்என்று அட்வைஸ் வழங்கியிருப்பதும், ‘ஆதிபகவன்என்ற இந்துக்கடவுளர்களின் பெயரை டைட்டிலாக வைத்துக்கொண்டு இஸ்லாமியரான அமீர் எப்படிப் படம் இயக்கலாம்என்று சில வக்கீல்கள் கோர்ட்டுக்கும் கமிஷனர் அலுவகத்துக்கும் புகார் செய்யக்கிளம்பியிருப்பதுமாய் ஒரு புரட்சிப்பாதையை நோக்கிப் பீடைநடை,.. ஸாரி,.. பீடுநடை போட ஆரம்பித்திருக்கிறது தமிழ்சினிமா.
ஐந்து வேளை தொழக்கூடிய தீவிர இஸ்லாமியரான அமீர், ஏற்கனவே இந்துக்கடவுளானராம்பெயரில் படம் எடுத்து, அவனை புத்தி சுவாதீனமில்லாதவனாக்க் காட்டியதை, இப்போது தோண்டி எடுக்க ஆரம்பித்திருக்கும், சில இந்து ஆர்வலர்கள்ஆதிபகவன்என்று
விநாயகர், சிவபெருமான் ஆகிய இரு கடவுள்களைக் குறிக்கும் பெயரை வைத்துக்கொண்டு இந்துக்கடவுளகளை அநியாயத்துக்கு நையாண்டி பண்ணியிருக்க வாய்ப்புண்டு என்று சந்தேகித்து படத்தை அவர்களுக்கு போட்டுக்காட்டச் சொல்லியிருக்கின்றனர். அதில் ஆதியோ, பகவனோ அரவாணியாகத் தோன்றுவதாக சில ஊர்ஜிதமாகாத செய்திகளும் உண்டு.
ஏற்கனவே வெளியான படத்தின் ஸ்டில்களில்ஆதிபகவன்சரக்கடிக்கும் ஸ்டில்களையும் தங்களது போதைக்கு ஊறுகாயாய் யூஸ் பண்ண ஆரம்பித்திருக்கும், அந்த இந்து ஆர்வலர்கள், சும்மா கிடந்த தன் படத்துக்குவிஸ்வரூபவிளம்பரம் தர ஆரம்பித்திருப்பதை எண்ணி உள்ளூர உற்சாகமடைய ஆரம்பித்திருக்கும் அமீர், கமல் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஷோ போட்டுக்காட்டியதைப் போல் முன்கூட்டியே படம் போட்டுக்காட்ட மட்டுமே கொஞ்சம் தயங்குகிறாராம்.
இவர்களைப் போன்ற பொழுதுபோகாத பொம்முகள் வேறுசிலர், மற்ற படங்களையும் இதே போல் கைப்பற்ற, தயாரிப்பில் இருக்கும் தமிழ்ப்படங்களின் லிஸ்ட் கேட்டு, திருவாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் கதவைத்தட்டுகிறார்களாம்.
எல்லாப்படங்களுக்கும் இதே ரீதியில் பிரச்சினைகளைக் கிளப்ப ஆரம்பித்தால் 2013-ன் பிற்பாதியில் இருந்து பார்க்க எதுவும் படங்கள் இன்றி மக்கள் நிம்மதியாக வாழ ஆரம்பிக்கலாம் என்பது, மெல்ல அழிந்து வரும் தமிழினத்துக்கு, ஆகச்சிறந்த செய்திதான் எனினும், சினிமாவை இவ்வளவு சிம்பிளான ரூட்டில் அழிக்க நாம் சம்மதிக்கலாகாது.
சிந்தனைக்குதிரை, இந்த ரூட்டில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சற்றுமுன்னர், நமது பிச்சைக்கார பிரதர்ஸ் அசோஸியேசனிலிருந்து, பிரத்யேகமாக நமக்கு ஒரு சூடான அறிக்கை வந்திருக்கிறது.
அம்மா தாயே நமஸ்காரங்கள்,..
பிரியாணியோ, பழைய சோறோ எதுவாக இருந்தாலும் நீங்கள் போட்டதைத் தின்று வஞ்சனையில்லாமல் வளர்ந்தவர்கள் நாங்கள். ‘பிச்சை புகினும்ஒரு சுடுசொல் பொறுக்காதவர்கள் நாங்கள் என்பதை இந்த ஒட்டு மொத்த பூகோளமும் உணரும். சமூகத்தில் எங்களுக்கென்று அசைக்கமுடியாத அந்தஸ்தொன்றும் உண்டு. பிச்சைக்காரர்களாகிய எங்களை, சிலர் சில சமயங்களில், ‘பரதேசிஎன்று செல்லமாக பறைவதை இந்தப் பார் அறியும்.
நிலைமை இப்படியிருக்க, ‘பரதேசிஎன்ற பெயரில், இயக்குனர் பாலா எடுத்திருக்கும் படத்தில், எங்களை இழிவு படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்குமோ என்று  இதயம் பதைபதைக்கிறது. எங்கள் சதையும் சந்தேகிக்கிறது. ஏற்கனவே அவர் நக்கலுக்கும்,விக்கலுக்கும் பேர் போனவர் என்பதை இந்த நாடறியும், பாடறியும், பள்ளிக்கூடம் தானறியும்.
இதில் எங்கள் மனது சங்கடப்படும்படியான காட்சிகள் இடம் பெற்றிருக்க்க்கூடிய வாய்ப்பு இருக்கும் என்று நாங்கள் சந்தேகிப்பது ஒருபுறமிருக்க, படத்தை எங்களுக்குப் போட்டுக்காட்டாமல் சென்சார் பார்த்து, அதற்கு சர்டிபிகேட்டும் தந்தது கண்டு, நாலு தெரு நடந்து வெறும் தட்டோடு திரும்பினால் ஏற்படுமே, அப்படியொரு விரக்தியும் வேதனையும் அடைந்தோம்.
எனவேபரதேசியை எங்களுக்குப் போட்டுக்காட்டி, அதில் எங்களைப்பற்றிய அவதூறுகள் எதுவுமில்லை என்று நாங்கள்,கே.தாயீசொன்னவுடன் ரிலீஸ் பண்ணவும் என்று பிச்சைப்பாத்திரம் ஏந்திக்கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
யாசிக்க மட்டுமல்ல,.. யோசிக்கவும் ஆரம்பித்துவிட்ட
பிச்சைக்கார பிரதர்ஸ் அசோஸியேசன்.

10 comments:

  1. பாஸ் செம காமெடி பாஸ் ... சிரிப்பை அடைக்க முடியல ...
    ஆனாலும் அதுபோல நடக்க வாய்ப்புண்டு

    ReplyDelete
    Replies
    1. சிலர் நடக்காதென்பார் நடந்துவிடும்,..

      Delete
  2. அருமை தோழரே!

    நிலமை இப்படியே தொடம்ர்ந்து கொண்டிருந்தால் இந்த நிலை தான் வரும் என்ன செய்வது நாம் ஜன்நாயக நாட்டில் பிறந்து விட்டோம்

    ReplyDelete
  3. அட்ரா சக்கை!! அட்ரா சக்கை!!

    ReplyDelete
  4. அதையும் மீறி பாலா படத்தை வெளியிட்டால் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு பிச்சை எடுத்து எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் சாமியாவ்...

    ReplyDelete
  5. மறக்காம கூட என்னையும் கூட்டிட்டுப் போங்க சாமியோவ்,...

    ReplyDelete
  6. \\எனவே ‘பரதேசி’யை எங்களுக்குப் போட்டுக்காட்டி, அதில் எங்களைப்பற்றிய அவதூறுகள் எதுவுமில்லை என்று நாங்கள் ‘ஓ,கே.தாயீ’ சொன்னவுடன் ரிலீஸ் பண்ணவும் என்று பிச்சைப்பாத்திரம் ஏந்திக்கேட்டுக்கொள்கிறோம்.
    இப்படிக்கு
    யாசிக்க மட்டுமல்ல,.. யோசிக்கவும் ஆரம்பித்துவிட்ட
    பிச்சைக்கார பிரதர்ஸ் அசோஸியேசன்.\\ ஹா......ஹா......ஹா......ஹா......ஹா......

    ReplyDelete
  7. 1000 பேருக்கு மட்டன் பிரியாணி போடுவீங்களா டைரக்டர் ஷாமியோவ் ?

    ReplyDelete
  8. நல்ல நகைச்சுவை பதிவு, சிந்திக்கவும் வைக்கிறது.

    ReplyDelete