Sunday, January 22, 2012

தொடரும் ஸ்ருதி-தனுஷ் பஞ்சாயத்து: ரஜினி கலரு ப்ளாக்கு.. ப்ளாக்கு..


 
ஆலமரத்தடி பஞ்சாயத்துல உங்கள கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணச்சொல்லிட்டு நான் ரொம்ப ஓவரா ரிலாக்ஸ் ஆயிட்டேன்.  ஒண்ணுமில்ல செல்வாவுக்கு குட்டிப்பாப்பா பொறந்ததால எல்லாருமே கொஞ்சுறதுக்காக போயிட்டாங்க. இதோ எல்லாரும் பழையபடி பத்திரமா  அதே ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்துட்டாங்க. பஞ்சாயத்து, அராத்து, அட்ராசிட்டி  ஸ்டார்ட்ஸ் நவ்.... 

[காதல் கொண்டேன் க்ளைமேக்ஸ் பாணியில் தனுஷ் அனைவருக்கும் ஜெர்க் கொடுக்க அவரை நோக்கி ஓடி வருகிறார் டாடி கஸ்தூரிராஜா]  

கஸ்தூரி: யாரும் டென்சன் ஆகவேண்டாம். தம்பி மேல ஆத்தா இறங்கியிருக்கா. அதனாலதான் அவருக்கு வெறி ஏறியிருச்சி. பொறுங்க உடனே இறக்கிருவோம்...ஏ.. இங்க ஒரு குட்டிப்பையனை பேட்டா பேசிக் கூட்டியாந்தமே அவன எங்கப்பா... என்று கொலவெறி பிடித்த இசையமைப்பாளர் அனிருத்தைத் தேட ஆரம்பிக்கிறார் கஸ்தூரிராஜா. சிலமணித்துளிகளின் சலசலப்புக்குப் பின், அருகே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பள்ளிச்சிறுவர்களுக்கு, அனிருத்  பந்து பொறுக்கிப்போட்டுக்கொண்டிருப்பதை அறிந்து, கஸ்தூரிராஜா , அனிருத்தின் காதைப் பிடித்து தரதரவென்று இழுத்து வருகிறார். 

அனிருத்: ஐயோ அங்கிள் என் மூக்கு, கண்ணு, நாக்கு எதை வேணும்னாலும் கிள்ளுங்க. காதை மட்டும் விட்டுறுங்க.இது வழியா தான் நான் எதையும் காப்பி அடிக்க முடியும்.

கஸ்தூரி ராஜா: சரி வெட்டி நாயம் பேசாம, தனுஷ் மேல எறங்கியிருக்க ஆத்தா மலை ஏறுற மாதிரி உன் ஆர்மோனியப்பெட்டியில ஒரு டியூன் போடு.
அனிருத் ஆர்மோனியத்தில் விரல்களை வைக்க ஸ்ருதி, ஐஸ்வர்யா, செல்வா, ஆகியோர் குஷியாகி விடுகிறார்கள்.

அனிருத்: சார் பாட்டு யாரு எழுதுறது?

கஸ்தூரி: நம்ம செல்வா தான். மயக்கம் என்ன’ படத்துக்கு செல்வா எழுதின பாட்டைக்கேட்டு, அமரர் கண்ணதாசன் தன்னோட சமாதிய வேற நாட்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாராம். செல்வா பேசினா அது வசனம். அவன் மோட்டுவளைய பாத்தா அது நாட்டு. அவன் எதையாவது கிறுக்கினா  அது பாட்டு. . நீ டியூனை ஸ்டார்ட்டு. 

அனிருத் : தாரணன தான ரணனா தாரனணனே

செல்வா: மச்சி செம டியூன் மச்சி. அப்பிடியே கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ. சுண்டு விரல்ல ஊறுகாய் எடுத்து நக்கிக்கோ.
‘குமுதம் எழுதுறது சரியில்ல, ஸ்ருதியோட சுத்துனது தப்பில்ல,சரக்குக்கு சைடிஷ் கிடைக்கல...ஆக மொத்தம் எதுவும் தப்பில்ல..
ரஜினி அங்கிள் ப்ளாக்கு ப்ளாக்கு   ராணா வந்தா ஃப்ளாப்பு 
கமலு அங்கிள் ஒயிட்டுஒயிட்டு அவர் மூளை ரொம்ப வெயிட்டு
ஒய் திஸ் பஞ்சாயத்து பஞ்சாயத்து டா... 
கண்களில் அக்னிக்குழம்போடு கமல் வந்து  ஆர்மோனியப்பெட்டியை எட்டி உதைக்கிறார்.

கமல்: நீங்க இப்பிடி  கூத்தடிக்கிறது உங்களுக்கே நல்லாருக்கா.  பொண்ணு வாழ்க்கை பொசுங்கிப்போறது மண்ணு நம்ம கைய விட்டுப்போறதுக்கு சமம்னு நெனச்சி  ரஜினி மனசு  ரணகளமா ஆயிடுச்சி. இது தெரிஞ்சிருந்தும், அந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பைத் தேடுறீங்களே இது அடுக்குமா? 

செல்வா: இந்த டைட்டில் ரொம்ப நல்லாருக்கே. பேசாம என்னோட ‘இரண்டாம் உலகம்’ங்கிற சப்பையான டைட்டிலை மாத்திட்டு, ‘ரணகளத்துல ஒரு கிளுகிளுப்பு'ன்னே வச்சிடலாமான்னு பாக்குறேன்.

ரஜினி: இவங்கள்லாம் பொறந்தாங்களா இல்ல எங்க இருந்தாவது செஞ்சி எடுத்துட்டு வந்தாங்களான்னே தெரியலை. நாம இவங்க கிட்ட பஞ்சாயத்து பேசி இன்னும் கொஞ்சம் பஞ்சராகுறதை விட, பட்ட காயத்துல கொஞ்சம் டிஞ்சர் வாங்கித் தேய்ச்சிட்டு பேட்டா வாங்கிட்டு ஜூட்டாயிடலாமுன்னு நினைக்கிறேன்.
 
சரத்: [கொஞ்சம் பவ்யமாக] எனக்கும் இன்னும் பேட்டா காசு வந்து சேரலை சார். பேட்டா வாங்காம வீட்டுக்குப் போனா சித்தி சுத்திச்சுத்தி அடிப்பாங்க சார்.   மத்தியானம் கூட ஆமைக்கறி போடுறேன்னு சொல்லிட்டு எருமைக்கறியப்போட்டு எகத்தாளம் பண்றாங்க சார்.

ரஜினி: சரத் உங்களுக்கு பாடி ஸ்ட்ராங்க் ஆனா பேஸ்மெண்ட் தான் கொஞ்சம் வீக்குன்னு நினைச்சேன்.நீங்க டோட்டலாவே ரொம்ப வீக்கா இருக்கீங்க. வாரத்துக்கு 40 ஆஃப் பாயில் சாப்பிட்டு ஆயில்பாத் எடுத்துக்கோங்க.போகப்போக எல்லாம் சரியாயிடும்.

கமல்: நானுங்கூட  பேட்டா  காசுல அக்‌ஷராவுக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தர்றதா ப்ராமிஸ் பண்ணிட்டு வந்தேன்.இங்க என்னடான்னா, ஒயிட்டு, ப்ளாக்குன்னு நம்மள பின்னி பெடல் எடுக்குறானுக.

ரஜினி: சம்பந்தி கஸ்தூரிராஜா இந்த கஷ்டகாலங்களை வச்சி எப்பிடி கறையேறுன்னார்னு நினைக்கிறப்போ என் கண்ணுல கண்ணீர் கரை புரண்டு ஓடுது.

கமல்: எனக்கென்னமோ விதி  இவங்க வாழ்க்கையை மட்டும் தனது இடது கரத்தால் எழுதுதோன்னு ஒரு சந்தேக ரேகை சொல்லுது.

ரஜினி: மைண்ட் வாய்ஸில்... ஆஹா பழையபடி இந்த ஆள் ஃபார்முக்கு வர்றான்யா. பேசாம எஸ்’ ஆயிர வேண்டியதுதான்.
இவர்கள் யாரையும் கண்டு கொள்ளாத யூத் கோஷ்டி பாடலை தொடருவதில் மும்முரமாக இருக்கிறது.

ஐஸ்வர்யா: டாடி நாங்க ‘3’ படத்தை ஃபர்ஸ்ட் டைமா  moon லயும் ரிலீஸ் பண்றதா இருக்கோம். அங்க நானு,தனுஷ், ஸ்ருதி மூனு பேரும் போறதா இருக்கோம்.

மூனு கலரு ஒயிட்டு ஒயிட்டு,தனுஷு ஃபிகரு வெயிட்டு. ஸ்ருதி ஃபிகரு ஒயிட்டு ஒயிட்டு..தனுஷு ஸ்ருதிக்கு ரைட்டு.. என்று ஐஸ்வர்யா பாடிக்கொண்டிருக்க...
'மச்சான் கையில கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ... நடு விரல்ல ஊறுகாய் எடுத்து நக்கிக்கோ...டியூன் சூப்பரா இருக்கு அதே ரூட்ல ட்ராவல் பண்ணு' என்றபடி நார்மலாக தனுஷ் வந்து சேர, பேட்டா கூட வாங்காமல் பின்னங்கால் பிடறியில்  பட அனைவரும் தெறித்து ஓடுகிறார்கள்.

பஞ்சாயத்து-1: குமுதம் எழுதுறது சரியில்ல,தனுஷோட சுத்துனது தப்பில்ல

 “சினிமா.. சினிமா..”

No comments:

Post a Comment