Monday, February 6, 2012

கோலிவுட்டை ஆளப்போகும் கண்ணே.... கருநிற மண்ணே...

சற்று முன்னர் நடந்த கிரிக்கெட் மேட்சிலும் டோனி அண்ட் கோ தோற்றதும், ஒரிஜினல் கேப்டன் விஜயகாந்த், நாக்கைத்துருத்தி, விழிகளை சற்று வெளியே அனுப்பி, பின் பற்களை கடமுடாவென்று கடித்தாராம்.
விக்கெட்டும் எடுக்க முடியலை, ரன்னும் ஓடமுடியலை. இந்த டோனிப்பயலுக்கு கேப்டன் பதவி ஒரு கேடா? இனிமே கடலுக்கு ஒரு கப்பல், கண்ட்ரிக்கு ஒரு கேப்டன் ‘ என்று அறிக்கை தயாராகிக்கொண்டிருப்பதாக அரசல் புரசல் தகவல். அது கிடக்கட்டும். இன்னைக்கி நம்ம சப்ஜெக்டே வேற. ஆங்..
ஆரம்பத்தில் நம்ம கேப்டன் உண்மையில் ஹீரோ ஆக்க ஆசைப்பட்டது தனது மூத்த மகன் ஜெய பிரபாகரனைத்தான். பெயரைக்கேட்டவுடன் ,சரி ஏதோ பெரிய வீரனுக்குத்தான் கதை சொல்லப்போகிறோம் என்ற நம்பிக்கையில் கேப்டனின் வீடு தேடி வந்து கதை சொல்ல வந்தவர்கள், கேப்டனின் மூத்த வாரிசைப்பார்த்தவுடன்,’’ கேப்டன் . இப்பல்லாம்' animal welfare board' ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்க. அதனால யானைய வச்சி சப்ஜெக்ட் எதுவுமே ரெடி பண்ணலை. தப்பா நினைச்சுக்காதீங்க’ என்று தப்பி ஓடினார்களாம்.
அவங்க ஃபீல் பண்றதுல ஒண்ணும் தப்பில்லையே’ என்றபடி பிரபாகரனை உடம்பைக் குறைக்கும்பொருட்டு, கொஞ்ச நாள் வாக்கிங், ஜாக்கிங் போகச்சொன்னார் கேப்டன்.
தம்பி வாக்கிங் போய்த் திரும்புமுன், தெருவிலுள்ள அத்தனை கடைக்காரர்களும்,’’ ஐயா இதெல்லாம் தம்பி வாங்கி சாப்பிட்டதுங்க. வளர்ற வயசு நல்லா சாப்பிட வேண்டியதுதான். அதுக்காக வேற யாருக்குமே யாவாரம் பாக்க முடியாம இவரு ஒருத்தரே எல்லாத்தையும் சாப்பிட்டா எப்பிடிங்க ஐயா? என்று பெரும் பில்லோடு வந்து நின்றார்களாம்.

சரி இது உதவாக்கறை.  இவனுக்கு நடிப்பு சரிப்பட்டு வராது,.எது கிடைச்சாலும் முழுங்கி ஏப்பம் விடுறதால, அரசியல்ல இவன ஆழமா இறக்கி விட்டுற வேண்டியதுதான் ‘ என்று முடிவெடுத்த பின்னரே தன்  இளைய வாரிசு சண்முகபாண்டியனை நடிகனாக்கும் முடிவை எடுத்தார் கேப்டன்.

சண்முக பாண்டியன் தமிழ்சினிமாவை விஜயகாந்துக்கு பதிலாக ஆள வருகிறார் என்றவுடன் எத்தனை கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருக்கும் என்பதை என் மனக்கண்ணால் பார்க்கமுடிகிறது.

எனக்கு உடனே 1958-ல் வெளிவந்த’ பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்ற படத்தில் வரும் ’புருஷன் வீட்டில் வாழபோகும்  பொண்ணே  தங்கச்சி கண்ணே ’என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. சரி ,தம்பிக்கு நம்மளால முடிஞ்ச ஒரு பாட்டு கிறுக்கி வைப்போமேன்னு தோணிச்சி.

. ஒரு முன்குறிப்பு.

 தயவுசெய்து எனக்காக ஒரு முறை ஒரிஜினல் பாடலைக்கேட்டுவிட்டு, இதைப்பாடிப்பார்க்கவும்.

கோலிவுட்டை ஆளப்போகும் கண்ணே..கருநிற மண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு அண்ணே..

கேப்டன் வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும்...தம்பி
சரியா நடிக்கக்கூடாது எந்நாளும்..
கோலிவுட்டை ஆளபோகும் BUNனே..அரைப்படி மண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே

டைரக்டரையும், புரடியூசரையும் மிதிக்கனும் உன்
நடிப்பப்பாத்து ரசிகனுங்க கொதிக்கனும்...
ஃபைட்டு சீனில் காலை சுவத்தில் உதைக்கனும்
நாக்கை துருத்தி முழியை உருட்டிமிரட்டி
எதிரி கதைய முடிக்கனும்..
கோலிவுட்டை ஆள வந்த அண்ணே, மண்ணெண்ணை டின்னே
சில புத்திசதிகள் சொல்லுறன் கேளு தின்னே

நல்லகதைகள் சொல்லும் பயல்களிடம் போகாதே-அது
படம் பார்க்கும் ரசிகனுக்கு ஆகாதே-இந்த
நொண்ணேன் சொல்லும் ஐடியாவத்தள்ளாதே
நம்ம கேப்டன் பாட்டன் பேரை நீயும் போட்டுத்தள்ளாதே
கோடம்பாக்கம் குதிக்கபோகும் கன்னே..கேப்டன் சன்னே
சில புத்திமதிகள் சொல்லுறங்கேளு அண்ணே


புரடியூசர் சூட்கேசுல இருக்கனும் நம்ம கண்ணுதான்
நம்ம வச்சி படம் எடுத்தா அவர் கதையோ  அதோட மண்ணுதான்
படம் ஓடாட்டியும் போஸ்டர்கள்ல விண்ணுதான் ஆனா
பாவம் புரடியூசரோ சொந்த ஊருக்கு ரன்னுதான்
கோடம்பாக்கம் ஆள வந்த கண்ணே குவார்ட்டர் ஜின்னே
சில அட்வைஸுகள் சொல்லுறங்கேளு நின்னே

ஹீரோயின் கூட நீ இருந்து கிஸ்ஸுகிசுவுல மனம் மகிழ்ந்து
பார்ட்டிகளில் பங்கு எடுத்து எதிரிகளின் சங்கு உடைத்து
பதி  நெட்டுப்பட்டிகளின் பஞ்சாயத்து முடித்து
ஆ...... ஆ.......ஆ......
ஹிட்டுகள் தந்து அட்டுகள் தந்து
அட்டுகள் பாத்தவன் நட்டுகழண்டு
நட்டுகழண்டவன் கெட்டு உழன்று
பாயாவுல புரோட்டா தொட்டு
நூறு புரோட்டா திங்கப்போற தம்பி நீ
நமக்கு கேப்டன் துணையிருக்கார் நம்பு நீ
நம்ம புரோட்டாவ கேப்டன் தின்னுமுடிப்பார் நம்பு நீ...
கேப்டன் தின்னு முடிப்பார்  வெம்பு நீ..


பின் அரிப்பு:
இதைப்படிச்சிட்டு தம்பி சண்முகபாண்டியன் படத்துக்கு பாட்டெழுத
கூப்பிட்டுருவாங்களோன்னு பயமா இருக்கு.






1 comment: