Sunday, September 23, 2012

’மாற்றான்’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண்ண ஆரம்’பிச்சுட்டாங்க’





 
எப்போ ஒரே மாதிரியான ரெட்டையர்கள் கதைய எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்தே ‘மாற்றான்’ பிரதர்ஸுக்கும்’ சாருலதா’ சிஸ்டர்ஸுக்கும் இடையில ஒரே புகைச்சல், குமைச்சல்,நமைச்சல்.
இவங்க பிரச்சினையை சிம்பிளா தீர்த்துவைக்க ஒரு ’சப்ஜெக்ட்’ ரெடி பண்ணினா?

ஒட்டிப்பிறந்த ரெட்டயர்ஸான சாருவுக்கும், லதாவுக்கும் வித்தியாசம் காட்டுறதுக்கே வித்தியாசமான மேட்டர் ஒண்ணு வைக்கிறோம். எப்பவுமே சாரு வாயில ஒரு லாலிபாப் வச்சிக்கிட்டே இருப்பாங்க. லதா தலையில ஒரு கேப் வச்சிருப்பாங்க.

சாருவும் லதாவும் ஒரு குச்சுப்புடி டான்ஸ் கிளாஸுக்குப் போறப்ப, மாற்றான் பிரதர்ஸ் அகிலனையும் முகிலனையும் முதன் முதலா பாக்குறாங்க.
 

அகிலனுக்கும் முகிலனுக்கும் நடுவுல வித்தியாசம் காட்ட, அகிலனை அழுக்கா பயங்கரமா காட்டுறோம். முகிலனை பயங்கர அழுக்கா காட்டுறோம்.

பார்த்த முதல் நொடியிலயே சாருவுக்கு முகிலன் மேலயும், லதாவுக்கு அகிலன் மேலயும் லவ்வு ஸ்டார்ட் ஆயிடுது. ஆனா முகிலனுக்கு லதாவைத்தான் புடிக்குது. அகிலனுக்கு சாருவைப் புடிக்கலை. அவளைப் பாத்ததும் மனசு துடிக்கலை. அதுக்கு என்ன காரணம்னு சொல்லப்புடிக்கலை.

கதை இப்ப ஒரு வழியா ட்ரை ஆங்கிள் லவ் ஸ்டோரியா வந்து நின்னுடுச்சா. இப்பதான் புதுசா ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம்.
சாருவுக்கும் லதாவுக்கும் குச்சிப்புடி டான்ஸ் சொல்லித்தர்றவர் மாஸ்டர் கேரள விஜய ஆனந்த். அதாவது சுருக்கமா சொல்றதா இருந்தா கே.வி.ஆனந்த்

அவருக்கு, டான்ஸ் கத்துக்க வந்த குட்டிங்க, உடான்ஸ் உட்டுட்டு, லவ்ஸ்ல விழுந்தது மெல்ல தெரிய வர ஆரம்பிக்குது.

பொண்ணுங்க டான்ஸ் கத்து முடிக்கிறதுக்குள்ள ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கனுமுன்னு பிளான் பண்ணினா இப்பிடி நடுவுல அகிலன்,முகிலன்னு ரெண்டு சனியனுங்க பனியன் போட்டுட்டு சாரு, லதா பின்னால அலையும்னு கொஞ்சமும் எதிர்பார்க்காத அவரு அப்பிடியே ஷாக் ஆயிடுறாரு

குச்சிப்புடி சொல்லித்தரவேண்டிய ஆசான் மனசு, காதல் சபலத்துல, கதகளி ஆட ஆரம்பிக்குது. சாரு, லதாக்களை ஒண்ணா கைப்பற்றனுமுன்னா, இந்த அகிலனையும்,முகிலனையும் அகிலத்தை விட்டே அனுப்புறதுதான் ஒரே வலின்னு முடிவெடுக்கிறாரு.

கட் பண்ணா, ஜார்ஜியாவுல ஒர் டீப் ஃபாரஸ்ட்ல, 24 கேரள மாந்த்ரீகர்களுக்கு மத்தியில அட்டணக்கால் போட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்கார் கே.வி.ஆனந்த்.

‘’பிரிக்கனும், பிரிக்கனும் அவிங்க காதலை பிரிக்கணும். ஐடியா சொல்லுங்கடான்னு உங்களை கூப்பிட்டுட்டு வந்தா, குத்துப்பாட்டு ஆட அனுஷ்கா வருவாங்களா கேக்குறீங்களே உங்களுக்கு வெக்கமா இல்லையாடா? என்று ஆனந்த் ஆக்ரோஷமாகக் கத்த மாந்த்ரீகர்கள் ரியாக்‌ஷன் எதுவும் தராமல் மந்துன்னு உட்கார்ந்திருக்காங்க..

வேறுவழியில்லை. இவனுகளுக்கு அனுஷ்காவோட குத்துப்பாட்டை ஏற்பாடு செய்யலைன்னா, யாகம் வளக்காம, நமக்கு சாரு,லதா கிடைக்கிற யோகம் இல்லாம பண்ணிடுவாய்ங்க போல என்று முடிவு செய்து, அனுஷ்காவின் குத்துப்பாடல் ஒன்றை ஆனந்த் ஏற்பாடு செய்ய, ‘தேகம் யாவும் தீயின் தாகமாக மாற மாந்த்ரீகர்கள் மர உயரங்களுக்கு தீ பற்றி எரிய யாகம் வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்.

கட் பண்ணி சென்னைக்கு வந்தால்,…அகிலனும்,முகிலனும் சோறு தண்ணி மறந்து சாருவை ஒருதலையாய்க் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். லதாவோ தானுண்டு தனது லாலிபாப் உண்டு என்று இருக்கிறாள்.
தேமே என்று போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் மாந்த்ரீக சக்தி மத்தளமேளம் முழங்க நுழைகிறது.

அகிலனும்,முகிலனும் ஆபரேஷன் பண்ணி பிரிந்துவிட முடிவெடுக்கிறார்கள்.

அவர்கள் பிரிந்துவிட்டால், அதில் யாராவது ஒருவரைத்தானே அடையமுடியும் என்று கன்ஃபியூஸ் ஆகி, லதாவிடமிருந்த லாலிபாப்பை பிடுங்கி தனது வாய்க்குள் வைத்துக்கொள்கிறார் சாரு.



இப்படி லாலிபாப் வாய் மாறியவுடன் நம்மில் யார் லதா, யார் சாரு என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே மறந்துவிடுகிறது.

தான் காதலுக்கு வைத்த சூன்யம் ஒர்க்-அவுட் ஆக ஆரம்பித்திருப்பதை ஜார்ஜியா காட்டிலிருந்து மானிட்டரில் கே.வி.ஆனந்த் பார்த்து கேவிக்கேவி சிரிக்க ஆரம்பிக்கிறார்

அவரது ஆனந்தம் மேலும் மேலும் அதிகமாக, தொடர்ச்சியாக ரெண்டுமூனு பெக்குகளைப் போட்டுவிட்டு, அனுஷ்காவின் இடுப்பில் கைபோடும்போது கொஞ்சமும் நாகரீகம் இன்றி அந்த இடத்திற்கு டைட் க்ளோசப் போட்டு விடுகிறோம்… 

        இடைவேளை

 [ எனக்கென்னவோ இடைவேளைக்கு அப்புறம் யாரும் தியேட்டருக்குள்ள இருப்பீங்கன்னு தோணலை. அதனால மீதிக்கதைய சொல்லலை.]



6 comments: