Thursday, December 15, 2011

சுகாசினியின் சீட்டிங்...அம்பலப்படுத்தும் அமீர்



சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே  எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ போன்ற நல்ல படங்க:ளைப் புறக்கணிக்கிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே,  இன்னொரு அதிர்ச்சி செய்தி அமீரின்  அறிக்கையின் மூலம் வெளி வந்திருக்கிறது..

சுகாசினி நடத்தும் இந்த சர்வதேச திரைப்பட விழா ஒன்றும் ,தேச சேவை அல்ல, ஆனாலும் தமிழக அரசு இந்த விழாக்கமிட்டிக்கு ரூ 25 லட்சம் மானியம் வழங்கியிருந்தது, சரி, ஜெயா டி வியில மாங்குமாங்குன்னு ஹாசினி பேசும்படம் புரோகிராம் நடத்தினதுக்கான சம்பளத்தை அம்மா கவர்மெண்ட் கஜானாவுல இருந்து எடுத்து தர்றாங்க போலருக்கு என்று பலரும் மனசுக்குள் புகைந்து கொண்டிருக்க. ,, இன்று வந்த அமீரின் அறிக்கை மூலம் புதிய பூதம் புறப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்துக்கு வைத்த மானியக்கோரிக்கையில்,தனது இந்தோ ஃபிலிம் அப்ரிசியேசன் கமிட்டியில், இயக்குனர் சங்கத்தலைவர் பாரதிராஜாவும், செயலாளர் அமீரும்  இடம் பெற்றிருப்பதாக சுகாசினி குறிப்பிட்டிருந்தாராம், இது பற்றி அமீரிடமோ,பாரதிராஜாவிடமோ சும்மா ஒரு பேச்சுக்கு கூட சொல்லவில்லையாம் .

இதற்காக சுகாசினி மீது ஃபோர்ஜரி கேஸ் போடலாமா என்று இயக்குனர் சங்கம் ஆலோசித்து வருகிறது,

இவ்வளவு நடந்தபிறகும் .பொய்சினிக்கு கொழுப்பு கொஞ்சமும் குறையவில்லை.தான்  எடுத்த முடிவுக்கு  மூனே  கால் என்று பிடிவாதம் பிடித்த அவர்.நேற்று  தொலைக்காட்சிகளிடம் பேசும்போது,..’’அது மணிரத்னமாக இருந்த்தாலும்’’என்று மீண்டும் மீண்டும் தன் கணவர் பெயருக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டேயிருந்தார்.

அதாவது மணிதான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒண்ணாம். ஸோ அவராக இருந்தாலும் நம்ம ஆபீஸரம்மா ரூல்ஸ் பிரகாரம்தான் நடந்துக்குவாங்களாம்.
சீனுராமசாமி, வெற்றிமாறன்கள்லாம் வந்த பின்னாடி உங்க வூட்டுக்காரரு  முதல் 20 இடத்துல கூட இல்லீங்க மாமி.
தமிழ்நாட்டு நெலவரமே தெரியல, நீங்கள்லாம் சர்வதேச லெவல்ல பேசுறீங்க.

2 comments:

  1. //முதல் 20 இடத்துல கூட இல்லீங்க மாமி.//

    இதைச் சொன்னா பல பேரு நம்புறதில்லை .. :-(

    ReplyDelete