Friday, April 13, 2012

விமரிசனம் ’ஓ.கே. ஓ.கே’- படம் ஓ.கே. பட் உதயநிதி கொஞ்சம் வீக்கே, வீக்கே...

படம் முழுக்க ஒன்லி ரிச் கேர்ள்ஸ்தான்

ப்ளீஸ் சொல் நீயெல்லாம் ஒரு பொண்ணாடி?

ஒரு முன்[னாடி] குறிப்பு:இந்தப்படம் 2மணிநேரம் மற்றும் 53 நிமிடங்கள் ஓடுகிறது. டூ வீலர் பார்க்கிங்கின் போது ஹெல்மெட்டைக் கழட்டி வண்டியில் மாட்டி விட்டுப்போவது போல் மூளையையும் கழட்டி படம் முடியும் வரை  எங்காவது மாட்டி வைத்துவிட்டுப்போகமுடிந்தால் கொஞ்சம் சிரித்து மகிழலாம்.

பத்திரிகையாளர்களுக்கு மட்டும் என்ற அறிவுப்புடன் ஒரு ‘பயங்கரமான பின்குறிப்பு  விமர்சனத்தின் முடிவில் இருக்கிறது. அதை அவசரமாகப்போய் படிக்க வேண்டாம்.

சிவா மனசுல சக்தி’ பாஸ் [எ] பாஸ்கரன்’ படங்களை இயக்கிய அதே ராஜேஷ் , ஒரே கதையை மூன்றாவது முறையாக, நடிகர்களை ஜீவாவுக்கு பதில் ஆர்யா, ஆர்யாவுக்கு பதில் உதயநிதி என்று ஆள் மாறாட்டம் செய்து  இயக்கியிருக்கும் படம்.

ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு ஈகோ. முதல் பத்து சீன்களுக்கு லவ் சேஸிங். ஒரு பாட்டு, நடு நடுவே ’தேனே மானே’  போட்டுக்கிற மாதிரி சந்தானத்தை வைத்து காமெடி, பிறகு காதல், டூயட், அப்புறம் ஊடல், காதலைப்பற்றி சில சாடல், ரசிகர்கள் கதை எங்கேடா என்று தேடல் இப்படி ராஜேஷின் முந்தைய இரு படங்களிலிருந்து சற்றும் விலகிவிடாமல் பயணிக்கிறது ’ஒரு கல் ஒரு கண்ணாடி.

கூடவே சந்தானம் என்கிற சத்தான ‘பானத்தை வைத்துக்கொண்டு, கோ-கோ கோலா, பெப்ஸி போன்ற பானங்களை பல கோடி செலவில் லான்ச் பண்ணுவதுபோலவே, கதாநாயகன் உதயநிதியை களமிறக்கியிருக்கிறார்கள்.

படத்தில் நடிக்க வேண்டிய வேலை என்று ஒன்று இல்லவே இல்லை என்றாலும், முதல் நாள் எல்.கே.ஜி. செல்லும் பள்ளிக்குழந்தையின் பதட்டம் படம் முழுக்க உதயநிதியிடம் தெரிகிறது.பேஸ்மெண்ட் என்னவோ ஸ்ட்ராங் என்றாலும் இவருக்கு நடிப்பு என்கிற பாடி கொஞ்சம் வீக்தான்.

அதே போல பாடல்காட்சிகளில் பல இடங்களில் சாக்பீஸில் கோடு கிழித்துக்கொண்டு ஆடிய்து அப்பட்டமாகத்தெரிகிறது.

இந்த மாதிரி பணக்கார ஹீரோக்கள் அதிகமாக ‘லாஞ்ச்’ ஆவதை முன்னிட்டு அவர்களுக்கென்றே டான்ஸ் மாஸ்டர்கள் சட்டையை  ஆட்டுவது, லுங்கியை தூக்கி காட்டுவது, ஆய் போகப்போவதுபோல் பிருஷ்டத்தை ஆட்டுவது சமீபகால டான்ஸ் மூவ்மெண்ட்களில் அதிகரித்து வருவதை, எந்த மூவ்மெண்ட்டாவது கொஞ்சம் கண்டித்து வைத்தால் எதிர்கால தமிழ்சந்ததி தப்பிப்பிழைக்கும்.

நன்கு பூரித்த சோளாபூரியாகவே காட்சியளிக்கும் ஹன்ஷிகா மோத்துவாணி என்கிற குந்தாணி,  படத்தில் சிரிக்கிற காட்சிகளில் எல்லாம் அழுவது போலவும், அழுகிற காட்சிகளில் எல்லாம் சிரிப்பது போலவும் தெரிவதுதான் பாரதியார் சொன்ன காட்சிப்பிழை போலும்.

பாலசுப்பிரமணியெத்தின் பணக்காரத்தனமான  ஒளிப்பதிவும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் படத்துக்கு பக்கா பலம். அதிலும் ‘வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு’ பாடல் கொஞ்ச நாளைக்கு தேவதாஸ்களின் தேசிய கீதமாக ஒலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. [ சந்தானம் வசனமா எழுதிக்கொடுத்ததைத்தான் நா.மு. பாடலாக்கி நாமம் போட்டதா ஒரு ’ரூமர்’ ரூம் போட்டு  அலையிதே உண்மையா? ]

காமெடிப் படத்தில் ஒரு சீரியஸ் மேட்டராவது இருக்கட்டுமே என்ற நினைப்பில் டைரக்டர் ராஜேஷால் வைக்கப்பட்ட சரண்யா டிகிரி வாங்காததால் கணவன் 20 வருஷமாக பேசாம இருப்பது உச்சக்கட்ட காமெடி.

’அடுத்த படத்துல நான் இருக்கனா மச்சான்? என்று கேட்க வந்ததைப்போல், ஆர்யா,ஸ்நேகா,ஆண்ட்ரியா ஆகியோர் தலா ஆளுக்கு அரை காட்சிகளில் த’ யைக்காட்டுகிறார்கள்.

படத்தின் ஒரிஜினல் ஹீரோ சந்தானம் தான். முழுப்படத்தையும் தனது தோளில் தூக்கிக்கொண்டு, உதயநிதியையும் பல காட்சிகளில் காப்பாற்றுகிறார்.

‘’நீயெல்லாம் நல்லா வருவேடா’ என்று நண்பனை வயிற்றெரிச்சலுடன் வாழ்த்துவதில் துவங்கி,’கேக்குறவன் கேணயனா இருந்தா கேரம் போர்டைக் கண்டு பிடிச்சவர் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவீங்கடா’ போல் சுமார் நூறு பஞ்ச்களாவது தியேட்டரை அதிர வைக்கிறது.

நேற்று நடந்த ‘கண்டுபுடி கண்டுபுடி’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் மாரிமுத்து படங்களை நான்கு வகைகளாகப் பிரித்தார். 1. ஓடும் நல்ல படம். 2.ஓடாத நல்ல படம்.3. ஓடும் கெட்ட படம்.4. ஓடாத கெட்ட படம்.

மேற்படி வகையறாவில் ‘ஓகே. ஓகே’ சந்தேகமின்றி மூன்றாவது வகையைச்சேர்ந்தது.

இதை மட்டும்  சந்தானம் குரலில் படித்துக்கொள்ளுங்கள்.’டைரக்டர் ராஜேஷ் நீங்கள்லாம் நல்லா வருவீங்க பாஸ்’

ஒரு பயங்கரமான பின் குறிப்பு: ‘குமுதம்’ கிருஷ்ணா டாவின்சியின் இழப்பை நினைத்து பத்திரிகையாளர்கள்  நொந்துகொண்டிருந்த வேளையில் , ஒரு வாரம் கூட பூர்த்தியாகாத நிலையில், சரியாய் மறுபடியும் நேற்று வியாழனன்று, சினிக்கூத்து’ பொறுப்பாசிரியர் மா.முருகன் எதிர்பாராத விதமாக காலமானார்.

இன்று ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பிரஸ் ஷோ அமரர் மா.முருகனுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பிறகே துவக்கப்பட்டது.

அப்போது ஒரு பத்திரிகையாளர் ,இந்த ’வியாழக்கிழமை விபரீதம் ’ இன்னும் ஒரு அஞ்சு வாரத்துக்கு கண்டினியூ ஆகும்னு ஒரு பிரபல ஜோசியர் சொல்லிக்கிட்டு இருக்காரு. வர்ற  வியாழக்கிழமை யாரோ,எவரோ? என்று மரண காமெடி பண்ண ஆரம்பித்தார்.

நல்லவேளை நானெல்லாம் ‘பத்திரிகையாளர் வேலையை விட்டு பத்து வருஷமாச்சி.

19 comments:

  1. //நேற்று நடந்த ‘கண்டுபுடி கண்டுபுடி’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் மாரிமுத்து //

    அண்ணே,
    இந்த இயக்குனர் மாரிமுத்து என்று நீங்கள் சொல்வது கண்ணும் கண்ணும் இயக்குனரா?

    லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.எப்பவுமே சனி அன்று இழவு வீட்டுக்கு போனால் தொடர்ந்து மூணு வாரமும் ஏதாவது இழவு வீட்டுக்கு போக வேண்டி வரும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்...

    ReplyDelete
  3. தல... பில்லா 2 ப்ரிவியு ஷோ போகும் போது என்னையும் கூப்பிடுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ் கண்டிப்பா கூப்பிடுறேன்...

      Delete
  4. வழக்கம் போலவே கலக்கல் பாஸ்

    ReplyDelete
  5. எழுத்தில நீங்க ஒரு சந்தானம் சார்!

    ReplyDelete
    Replies
    1. நாட் ஃபேக்ட்டு நாட் ஃபேக்ட்டு நாட் ஃபேக்ட்டு நாட் ஃபேக்ட்டு

      Delete
  6. //இந்த மாதிரி பணக்கார ஹீரோக்கள் அதிகமாக ‘லாஞ்ச்’ ஆவதை முன்னிட்டு அவர்களுக்கென்றே டான்ஸ் மாஸ்டர்கள் சட்டையை ஆட்டுவது, லுங்கியை தூக்கி காட்டுவது, ஆய் போகப்போவதுபோல் பிருஷ்டத்தை ஆட்டுவது சமீபகால டான்ஸ் மூவ்மெண்ட்களில் அதிகரித்து வருவதை, எந்த மூவ்மெண்ட்டாவது கொஞ்சம் கண்டித்து வைத்தால் எதிர்கால தமிழ்சந்ததி தப்பிப்பிழைக்கும்.//

    தாங்க முடியலை நண்பா! வயித்த வலிக்குது. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த மூவ்மெண்டை நீங்கதான் ஆரம்பிக்கப்போறீங்கன்னு நினைக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் உலகநாதன் சார்..

      Delete
  7. வியாழக்கிழமை விபரீதத்தை நினைச்சா வயித்தெல்லாம் கலக்குதே... இன்னும் நாலு வாரத்தை கவனமா கடந்துட்டா, பிரிட்டிஷ் கால்வாயை கூட ஈஸியா கடந்துடலாம் போல...

    ReplyDelete
  8. அடுத்த 5 வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியே போகாதீங்க யுவா. அப்புற்ம் அந்த துஷ்ட சக்திக்கு எதிரா ஒரு யாகம் வளக்கலாமுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.த்ரிஷா, நயன் தாரால்லாம் கலந்துக்கிறாங்க. முடிஞ்சா நீங்களும் வாங்க....

    ReplyDelete
  9. //பாரதியார் சொன்ன காட்சிப்பிழை போலும்// ha ha its true..sema sema

    ReplyDelete
  10. என்னது நீங்க பத்திரிக்கையாளர் இல்லையா .....!!!!????????????செல்லாது செல்லாது ......

    ReplyDelete
  11. அண்ணே என்ன மேல அனுப்புறதுக்கு உங்களுக்கு அவ்வளவு ஆசையா? இப்ப முடியாது முடியாது.

    ReplyDelete